Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, February 28, 2024
Please specify the group
Home > Featured > உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!

print

ண்டுதோறும் பருவ மழைகள் பொய்த்து வரும் சூழ்நிலையில் இந்த ஆண்டும் பருவ மழை பொய்த்ததால் தமிழகம் முழுக்க கடும் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டு விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

கண்மாய்கள், நீர்நிலைகள் வறண்டு விட்டன. மழையை நம்பி மானாவாரி சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கேள்விக்குறியாகி உள்ளது.

தென்மாவட்டங்களில் 2012ல் நீடித்த கடும் வறட்சி 2016 மற்றும் 2017 துவக்கத்திலும் தொடர்கிறது. கிணற்று நீர் பாசனம் மூலம் சொற்ப அளவிலேயே விவசாயம் ஆங்காங்கு நடக்கிறது. சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் வெண் பருத்தி அதிகம் சாகுபடி செய்யும் ஊர்களில் பயிரிடப்பட்ட அனைத்து தானியங்கள், பயறுகள், பருத்தி செடிகள் மழையின்றி முழுமையாக கருகி விட்டன. உழவடை, அறுவடை கூலி கூட கிடைக்காமல் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

நமது அலுவலகத்தில் ‘கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி’ – விவசாயிகள்!

நமக்கு சோறிடும் விவசாயிகள் நித்தம் நித்தம் தற்கொலை செய்துகொள்ளும் செய்திகளை செய்தித் தாள்களில் பார்க்கும்போது நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது…!

மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக வாட்ஸாப்பிலும் ஃபேஸ்புக்கிலும் பொங்குவதும் மீம்ஸ்களை பகிர்வதும் தான் சமூக அக்கறை என்று பலர் நினைக்கிறார்கள். அது மிகவும் தவறு.

உழவுத் தொழில் செழிக்கவும் பசுமை தழைக்கவும் விவசாயத்தையே நம்பியிருக்கும் விவசாயிகள் காப்பாற்றப்படவும்

நமது பங்கிற்கு நாம் ஏதாவது செய்யவேண்டும். அதுவும் ஆக்கப்பூர்வமாக செய்யவேண்டும் என்று சிந்தித்தோம்.

இதையடுத்து நமது சென்ற பிரார்த்தனைக்கு தலைமை ஏற்ற சிவத்திரு வேதகிரி ஐயா அவர்களைக் கொண்டு ஒரு பாரம்பரியம் மிக்க தொண்மையான சிவாலயத்தில் திருப்புகழ் சொற்பொழிவும் பாடல் நிகழ்ச்சிகளும் (ஜனவரி 20, 2017, வெள்ளிக்கிழமை அன்று) ஏற்பாடு செய்வதென முடிவு செய்தொம்.

திருப்புகழ் ஓதப்பட்டால் நிச்சயம் மழை பொழியும் பசுமை செழிக்கும் என்பது ஐதீகம். அதுவும் திருப்புகழ் குறித்த விளக்கவுரையுடன் பாடல் நிகழ்ச்சி என்றால் எப்படி இருக்கும்? எனவே திருப்புகழ் நிகழ்ச்சி இறுதி செய்யப்பட்டது.

சென்ற அக்டோபர் மாதம் காவிரி பிரச்சனைக்காக கடையடைப்பு நடைபெற்றபோது, ‘கடையடைப்பினால் அனைவருக்கும் வருவாய் இழப்பும் அரசுக்கு வரி இழப்பும் தான் ஏற்படும். கடைகளை அடைத்துவிட்டு பெரும்பாலானோர் தொலைகாட்சி பெட்டிகளுக்கு முன்னர் தான் முடங்கிப் போகின்றனர். அதனால் யாருக்கு என்ன பயன்? அன்று கூடுதல் பணி செய்து அன்றைய வருவாயை விவசாயிகளுக்கு கொடுப்போம்’ என்று நமது பர்சனல் முகநூலில் கூறியிருந்தோம்.

அதை செயல்படுத்த ஒரு அருமையான வாய்ப்பு இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்தது.

பந்த் அன்று ஒரு விவசாயியை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அந்த தொகையை அளித்து கௌரவிக்கவிருக்கிறேன் என்று கூறினாலும் அது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. காரணம் தெருவுக்கு ஒன்றுக்கு உதவாமல் பத்து என்ஜினீயர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பாதி பேர் விவசாயிகளுக்கு எங்கே போவது?

ஒரு காலத்தில் இந்தப் பக்கம் மீனம்பாக்கம் – அந்தப்பக்கம் வளசரவாக்கம் – தாண்டினால் சாலையின் இருபக்கமும் வயல்வெளிகள் தான். ஆனால் இன்றைக்கு சென்னைக்கு அறுபது கிலோமீட்டர் வெளியே சென்றால் தான் வயல்வெளிகளையே பார்க்கமுடியும்.

எனவே விவசாயிகளை தேடிப்பிடிக்க நாம் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. நண்பர் முல்லைவனம் அவர்கள் வழிகாட்டுதலில் ஒன்றுக்கு இருவராக நமக்கு கிடைத்தார்கள்.

அவர்களை தொடர்புகொண்டு நமது திருப்புகழ் நிகழ்ச்சி பற்றி கூறி, விவசாயிகளை அந்நிகழ்ச்சியில் கௌரவிக்க விரும்புவது பற்றியும் கூறினோம்.

மிகவும் சந்தோஷப்பட்டார்கள். நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று முன்கூட்டியே நமது அலுவலகத்துக்கு வரவேண்டும் நம்முடன் அவர்களின் நேரத்தை செலவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

இதையடுத்து கடந்த ஜனவரி 20 அன்று நமது அலுவலகத்துக்கு இருவரும் வந்திருந்தார்கள்.

அவர்களை வரவேற்று காபி, பலகாரம் கொடுத்து உபசரித்து பேசிக்கொண்டிருந்தோம்.

செங்கல்பட்டை சேர்ந்த திரு.கன்னியப்பன், திரு.முருகன் (!) இருவருக்குமே நினைவு தெரிந்த நாள் முதலே விவசாயம் தான் உயிர் மூச்சு. தற்போது தங்கள் நிலத்தில் நிலக்கடலை, உளுந்து பயிரிட்டிருக்கிறார்கள்.

விவசாயத் தொழிலில் உள்ள சிரமங்கள் மற்றும் சவால்கள் குறித்து நம்மிடம் ஆதங்கத்துடன் கூறினார்கள். நகரமயமாதல், விவசாயக்கூலி உயர்வு இரண்டும் இவர்களுக்கு முன் உள்ள மிகப் பெரிய சவால்கள். போதாக்குறைக்கு பருவ மழை வேறு வஞ்சித்துவிட்டது.

இவரிடமும் மேலும் பல விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தோம். மாலை ஐந்தை நெருங்கியதும் மூவரும் புறப்பட்டு சைதை சௌந்தரேஸ்வரர் கோவிலுக்கு சென்றோம்.

வேதகிரி ஐயா அவர்களிடம் இருவரையும் அறிமுகப்புத்துவைத்தோம். அப்போது அங்கே நிகழ்ச்சியில் உதவும் பொருட்டு வந்திருந்த நம் நண்பர்கள் உழவாரப்பணி குழு உறுப்பினர்கள் ராஜ்குமார் மற்றும் ராகேஷ், விஜயஸ்ரீ ஆகியோரிடமும் அறிமுகப்படுத்தினோம்.

முன்னதாக சௌந்தரேஸ்வரர் சன்னதியில் அர்ச்சனை கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. நமது அந்த வாரத்தின் பிரார்த்தனை பதிவு சுவாமியிடம் வைத்து அர்ச்சிக்கப்பட்டது.

அதற்குள் நேரம் 6.30 தொட்டுவிட, நிகழ்ச்சி துவங்கியது.

தனது வெண்கலக் குரலால் வள்ளி உமாபதி நம்ம கடவுள் வாழ்த்து பாடியபின்னர் விவசாயிகளை கௌரவிக்க முடிவு செய்தோம்.

நிகழ்ச்சி முடியும் வரை அவர்களை காத்திருக்க வைக்க முடியாது. அன்று பந்த் வேறு நடைபெற்றபடியால் பேருந்துகள் இயங்கவில்லை. எனவே இருவரும் செங்கல்பட்டிலிருந்து டூ-வீலரில் நிகழ்சிக்கு வந்திருந்தனர். எனவே அவர்களை சீக்கிரம் அனுப்பவேண்டியது அவசியம்.

அந்நேரம் அங்கு குழுமியிருந்த பக்தர்களிடம் இருவரம் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் விவசாயிகளும் கௌரவிக்கப்பட்டனர்!

அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நம் தளத்தின் சார்பாக அரிசி + வெல்லம் + ரொக்கம் வைத்து சபை மரியாதையுடன் பரிசு வழங்கப்பட்டது. உழவின் பெருமை குறித்தும் விவசாயிகளின் அருமை குறித்தும் அவர்கள் முன்னிலையில் நாம் கொஞ்சம் பேசினோம்.

விவசாயிகள் இருவரும் பேசும்போது, “எதிர்பாராத இந்த பரிசால், கௌரவத்தால் தாங்கள் மகிழ்ச்சியில் மனநிரையில் திக்குமுக்காடி போயிருப்பதாகவும் இதுவரை யாருமே தங்களுக்கு இப்படி ஒரு கௌரவத்தை கொடுத்ததில்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் நன்றி” என்றும் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

இருவரும் புறப்பட்டு செல்லும்போது, நமது கைகளை பற்றி “நன்றி சார்.. எங்களை ரொம்ப பெருமைப் படுத்திடீங்க… எங்கள் வாழ்க்கையிலேயே இதை மறக்கமாட்டோம்” என்று கூறியது நம் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒன்று.

ஒவ்வொருவரும் இது போல அவரரவர் சக்தி ஏற்ப கஷ்டப்படும் ஒரு விவசாயியை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தால், யோசித்துப் பாருங்கள்… விவசாயிகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்வார்கள?

“விவசாயம் அழிகிறது… விவசாயிகள் சாகிறார்கள்…” என்று முகநூலிலும் வாட்ஸ்ஆப்பிலும் மீம்ஸ்களை பகிர்ந்து பொழுதை போக்குவதற்கு பதில், இப்படி ஒவ்வொருவரும் அவரவர் இல்ல நிகழ்ச்சிகளில், பொது நிகழ்ச்சிகளில், ஆன்மீக நிகழ்ச்சிகளில் ஓரிரண்டு விவசாயிகளை தேர்ந்தேடுத்து அவர்களுக்கு அவரவர் சக்திக்கு ஏற்ப உதவிகளை செய்தாலே போதும்.

நாம் செய்வது எவ்வளவு என்பதோ அதன் மதிப்பு எவ்வளவு என்பதோ விஷயமில்லை. நம்மைப் பற்றியும் கவலைப்படக் கூட ஒரு சிலர் இருக்கிறார்களே என்கிற ஒரு நன்றியுணர்ச்சி அந்த விவசாயிகளிடம் வரும். அது போதும். உழுபவன் மனம் குளிர்ந்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் நாடும் வீடும் சுபிக்ஷமாக இருக்கும்.

தொடர்ந்து திருமதி.வள்ளி உமாபதி அவர்களின் திருப்புகழ் பாடல் நிகழ்ச்சியும் திரு.வேதகிரி அவர்களின் திருப்புகழ் விரிவுரையும் நடந்தது.

நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின்னர் இருவரையும் நமது வாசகர்களைக் கொண்டு கௌரவித்தோம்.

அன்று பந்த் என்றபோதிலும் ஓரளவு மெய்யன்பர்கள் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி நடைபெற்ற நாளன்றே தென்மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய துவங்கியது. அடுத்து வந்த 27 ஆம் தேதி நாம் தஞ்சை சென்றபோது தஞ்சை மற்றும் டெல்டா மாவட்டங்கள் முழுக்க நல்ல மழை. (இந்த மார்ச் மாதம் எதிர்பாராத வகையில் தமிழகம் முழுக்க பரவலாக பெருமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர் மேன் அறிவித்திருகிறார்!)

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!

நிதி வேண்டும் ஏழைக்கு – மதி வேண்டும் பிள்ளைக்கு
நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்!

(உலகங்கள் யாவும் உன்)

மனம் உள்ளவர் குணம் உள்ளவர் – மனதுக்குச் சுகம் வேண்டும்!
தனம் உள்ளவர் அதில் பாதியை – பிறருக்குத் தர வேண்டும்!

ஆறெங்கும் நீர் விட்டு – ஊரெங்கும் சோறிட்டு
பாரெங்கும் நலம் காண வரம் வேண்டுமே!
உந்தன் வரம் வேண்டுமே!

(உலகங்கள் யாவும் உன்)

பாடு பட்டவன் பாட்டாளி – அவன் மாடிக்கு வர வேண்டும்!
பஞ்சம் என்பதே இல்லா வாழ்வைப் – பாரதம் பெற வேண்டும்!

நாடெங்கும் சேமங்கள் – வீடெங்கும் லாபங்கள்
நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே! – முருகா
அருள் வேண்டுமே! – திருவருள் வேண்டுமே!
முருகனருள் வேண்டுமே!

========================================================

இந்த தளத்தை நடத்திட வாசகர்களின் பங்களிப்பு அவசியம் தேவை!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

Kindly drop in mail to editor@rightmantra.com once you transfer your fund or message me at 9840169215

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

========================================================

Similar articles…

நல்லோர் தரிசனம் பாப விமோசனம்!

ஜீவகாருண்யம் செய்த அறுவடை!

எது உண்மையான தர்மம்?

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

இனிதே நடைபெற்ற பாரதி விழா & ரைட்மந்த்ரா 5ம் ஆண்டுவிழா – a small update!

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை!

விதியை வெல்லலாம் – வழியுண்டு வாங்க!

விடியும் வரை காத்திரு! துன்பத்தை சற்று பொறுத்திரு!!

தீயவர்கள் சுகப்படுவதும் நல்லவர்கள் துன்பப்படுவதும் ஏன்?

விதி என்ன செய்யும் வினை என்ன செய்யும்… உறுதியுடன் நீ இருந்தால்? கண்ணதாசன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்!

எதிர்பாராத பிரச்சனைகளும் நமது பிரார்த்தனையும்!

Where there’s a will, there’s a way!

நம்பிக்கை!

==========================================================

Also check கர்மா Vs கடவுள் earlier episodes…

கர்மாவை வென்ற காருண்யம் – கர்மா Vs கடவுள் (5)

விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)

கர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)

நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)

ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)

==========================================================

[END]

3 thoughts on “உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!

  1. Super Sundar ji. Importance of Agriculture going down day by day. You have did the right thing at right time! Please continue to supporting Agriculturists!!

  2. arumaiyaana yosanai sundar ji
    ungal padhivai nichchayam engal natpuvattaaraththil pagirndhu engalaal yiyandra udhaviyai oorukku unavalippavargalukku seivom
    idhil edhenum udhavi thevaippattaal ungalai kandippaaga thodarbhukolgirom
    ungal muyarchikku engal vaalthukkal
    ella uyirgalum inbhuttrukka vendivom

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *