தமிழகம் முழுக்க எண்ணற்ற தொன்மை வாய்ந்த தலங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தலத்தின் பின்னேயும் அந்த தல வரலாற்றை தவிர வேறு சில சுவையான வரலாறுகளும் உண்டு. அதே போல ஒவ்வொரு தலத்திற்கும் தல ரகசியம் என்று ஒன்று உண்டு. அவை ஈசனருள் பெற்ற சைவ சமயக் குரவர்களுக்கு மட்டுமே தெரியும். அவர்களும் அந்த ரகசியங்களை தங்களிடையே மட்டும் வைத்து பூட்டிக்கொள்ளாமல், தங்களது பதிகங்களில் மறைப்பொருளாக வைத்து பாடிவிட்டு சென்றிருக்கின்றனர்.
சில சமயங்களில் தேவார பாடல்கள் ஏதோ சம்மதமில்லாமல் இருப்பது போல தோன்றும். ஆனால், சற்று உற்று பார்த்தால் தான் தெரியும் அது ஒரு தல ரகசியம் என்று.
சுந்தரர் பாடல்களில் இத்தகய ரகசியங்கள், நிகழ்வுகள் பல காணப்படுகின்றன.
காவிரியில் அரசன் தவற விட்ட முத்துமாலை, திருஆனைக்காவில் ஜம்புகேஸ்வரர் சன்னதியில் கிடைத்தது பற்றி நாம் ஒரு சம்பவம் கூறியிருந்தது நினைவிருக்கலாம். சர்வம் சிவார்ப்பணம் – ஆனைக்கா அண்ணலின் அற்புதம்!!
அதை சுந்தரமூர்த்தி சுவாமிகள் தனது பதிகத்தில் அழகாக பதிவு செய்த்துவைத்திருப்பார்.
தாரமாகிய பொன்னித் தண்டுறையாடி விழுத்து
நீரினின்றடி போற்றி நின்மலாக் கொள்ளென வாங்கே
ஆரங்கொண்ட வெம்மானைக் காவுடையாதியைநாளும்
எனவும் , திருஞானசம்பந்தப்பெருமான்
ஆரம் நீரோ டேந்தினா னானைக்காவு சேர்மினே!
இதே போல திருப்புன்கூரில் ஈசன் நிகழ்த்திய லீலை ஒன்றை பார்ப்போம்.
திருப்புன்கூர் என்றாலே அனைவருக்கும் நந்தனாருக்காக நந்தி விலகிய சம்பவம் தான் நினைவுக்கு வரும்.
ஆனால், இன்னொரு சம்பவமும் உண்டு.
நந்தனார்க்காக நந்தியைச் ‘சற்றே விலகியிரும் பிள்ளாய்’ என்று பணித்த ஈசன் அவ்வூரில் நிகழ்த்திய மற்றொரு அற்புதச் செயல் தேவாரத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
ஒருகால் சோழ நாட்டிலே வானம் பொய்த்தது; வயல் காய்ந்தது; தண்ணீர் இன்றி மக்கள் கண்ணீர் சொரிந்தனர். அப்போது அவ்வூருக்கு வந்தருளினார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். ஆலயத்தில் அவரைக் கண்டு தமது குறையை முறையிட்டனர் திருப்புன்கூர் மக்கள்.
கயிலாச நாதன் அருளால் காலத்தில் மழை பெய்யுமாயின் 12 வேலி நிலம் ஆலயத்திற்குத் தருவதாக வாக்களித்தார்கள்.
அந்நிலையில் வானம் கறுத்தது; மேகம் திரண்டது; மின்னொளி கண்ணொளியைப் பறித்தது; பெருமழை பிடித்தது. நாள் முழுவதும் விடாமல் பெய்தது.
ஆற்றிலே வெள்ளம் பொங்கிற்று; நிலமெல்லாம் நீரிலே மூழ்கிற்று. அச்சமுற்ற குடிகள் மீண்டும் ஆலயத்திற்கு வந்து மழையை நிறுத்த வேண்டும் என்று மாதேவனிடம் முறையிட்டார்கள்.
அழிவு செய்யாமல் மழை நின்றுவிட்டால், மேலும் 12 வேலிநிலம் தருவதாக ஒப்புக் கொண்டார்கள். அப்போது மழை நின்றது; வெள்ளம் வடிந்தது.
வேளாண்மை சிறந்தது. வாக்களித்த நிலம் சிவலோகநாதனைச் சேர்ந்தது.
நாம் வேண்டியதை அவன் நிச்சயம் தருவான். தனக்கு வேண்டியதை இறைவன் எப்படியாகிலும் பெற்றுக்கொள்வான்.
திருவருளால் நிகழ்ந்த இச்செயலைத் தெரிவிக்கின்றது ஒரு தேவாரப் பாட்டு.
“வையக முற்றும் மாமழை மறந்து
வயலில் நீரிலை மாநிலம் தருகோம்
உய்யக் கொள்கமற் றெங்களை என்ன
ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந்து எங்கும்
பெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்து
பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும்
செய்கை கண்டுநின் திருவடி அடைந்தேன்
செழும்பொழில் திருப்புன் கூர்உ ளானே”
நந்தி விலகத் தரிசித்த திருநாளைப்போவார் கோயிலின் மேற்புறமுள்ள ரிஷபதீர்த்தத்தை வெட்டிச் சீர்ப்படுத்த எண்ணினார். ஆனால் தனக்குத் துணை யாருமில்லாததால் மனம் வருந்தி இறைவனை வேண்ட, இறைவன் அவருக்குத் துணையாகுமாறு கணபதியை அனுப்பினார். அவர் துணையால் அத்தீர்த்தத்தை வெட்டிச் சீர்ப்படுத்தினார் நந்தனார். அதுவே கணபதிதீர்த்தம் என்றும் பெயர் பெற்றது. எனவே இங்குள்ள விநாயகர் ‘குளம் வெட்டிய விநாயகர்’ என்றழைக்கப்படுகிறார்.
இதே போன்று திருவையாற்றிலும் ஒரு சம்பவமும் உள்ளது.
காவிரியாற்றில் சிவபெருமானுக்குரிய துறைகள் பல இருந்தாலும் ‘காவிரிக்கோட்டம்’ என்று சிறப்பித்து சொல்லப்படுத்துவது திருவையாறு ஆகும்.
ஒரு சமயம் தஞ்சை நாட்டில் கடும்மழை பெய்தது. காவிரியாற்றில் புதுவெள்ளம் பொங்கியெழுந்து. இரு கரைகளையும் தழுவியபடி சென்ற காவிரியை கண்டு அஞ்சினர் மக்கள் அனைவரும்.
அப்போது அங்கு வந்தார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். ஆற்றைக் கடந்தால் தான் திருவையாற்றை அடையமுடியும்.
“ஐயாறுடைய இறைவா ஓலம்…” என்று அழுது அரற்றினார் சுவாமிகள்.
பொங்கிப் பெருகிய வெள்ளம் உடனே வடிந்தது. அடியார்களின் மனமும் குளிர்ந்தது.
திருவையாற்றை சுற்றி வந்து கைகூப்பி தொழுதார். வாயார ஐயாறப்பரை தொழுதார்.
ஒரு காலத்தில் இருகரைகளையும் அணைத்தபடி பாய்ந்தோடிய காவிரி இன்று நாட்டில் பருவமழை பொய்த்து பாலைவனமாய் வறண்டதற்கு மிக முக்கிய காரணம் காவிரி வடகரை மற்றும் தென்கரைத் தலங்கள் பலவற்றில் முறைப்படி பூஜைகள் நடக்காததும் ஆலயத்தின் சொத்துக்கள் ஆக்ரமிப்பு செய்யப்பட்டதுமே ஆகும்.
சிவாலயங்களில் பூஜைகள் முறைப்படி நடைபெற்றால் அவ்வூரில் பசி, பஞ்சமிருக்காது, பசுமை தழைக்கும். பசுக்கள் நிரம்ப பால் தரும். மக்கள் இன்புற்று வாழ்வார்கள்.
பிழைத்த பிழையொன் றறியேன்நான்
பிழையைத் தீரப் பணியாயே
மழைக்கண் நல்லார் குடைந்தாட
மலையும் நிலனுங் கொள்ளாமைக்
கழைக்கொள் பிரசங் கலந்தெங்குங்
கழனி மண்டிக் கையேறி
அழைக்குந் திரைக்கா விரிக்கோட்டத்
தையா றுடைய அடிகேளோ !
ஈசனருள் ஒன்றே இந்த உலகில் சாஸ்வதமானது.
==========================================================
தொடர்புடைய பதிவுகள் :
நந்தனாருக்காக விலகிய நந்தி – திருப்புன்கூர் ஒரு நேரடி தரிசனம்!
நமது பிறவிப் பிணியும் திருப்பதி, திருவண்ணாமலை தரிசனமும்!
சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!
==========================================================
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்…
Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally. Your contribution really makes a big difference.
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
Also check :
சர்வம் சிவார்ப்பணம் – ஆனைக்கா அண்ணலின் அற்புதம்!!
அமிழ்தினும் உயர்ந்த அன்னையின் ‘வாயூறுநீர்’ நிகழ்த்திய அற்புதம்!
அன்புக்கு அவள் அடிமை – உருகவைக்கும் உண்மை சம்பவம்!
பொன்மழையில் நனைந்த ஏழை பிரம்மச்சாரி – ஸ்ரீஸ்துதி புரிந்த மகிமை!
திருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்!
அன்னையின் அருள் வெளிப்பட்ட ‘தை அமாவாசை’ – திருக்கடையூர் கோவில் குருக்கள் கூறும் தகவல்கள்!
எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும் ? ஆடி ஸ்பெஷல் !
அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!
ஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி! சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!
அன்னையின் அருள் வெளிப்பட்ட ‘தை அமாவாசை’ – திருக்கடையூர் கோவில் குருக்கள் கூறும் தகவல்கள்!
சிவன் துவக்கிய ஆனந்தலஹரி, சங்கரர் முடித்த சௌந்தர்யலஹரி – காலடி பயணம் (4)
உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!! – நவராத்திரி SPL 1
திருமுறை, திருப்புகழ் விளக்கை அனைவருக்கும் ஒளிரச் செய்யும் ஓர் அன்னை!
வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!
==========================================================
[END]