பெரிய புராணத்தில் திருவாரூரின் சிறப்பை சொல்ல முற்பட்ட சேக்கிழார் “நீதி நெறி தவறாத மனுநீதி சோழன் ஆண்ட பூமி இது!” என்று அடைமொழி கொடுத்து மனுநீதி சோழன் கதையை சொல்லி பின்னர் தான் பெரிய புராணத்தையே தொடங்குகிறார். அப்படியெனில் மனுநீதிச் சோழனின் சிறப்பை பார்த்துக்கொள்ளுங்கள்.
திருவாரூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழ நாட்டை ஆண்ட சோழ மன்னர் பலருள் மனுநீதிச் சோழன் என்பவனும் ஒருவன். அவன் நீதியிலும் நேர்மையிலும் சிறந்து விளங்கினான். எல்லா உயிர்களுக்கும் கண்போல் விளங்கினான்; அவ்வுயிர்களையெல்லாம் தன்னுயிர் போல் காத்து வந்தான்.
பகை மன்னர்களை வென்று வீரத்தில் மேம்பட்டுத் திகழ்ந்தான். மேகத்தைப் போலக் கைம்மாறு கருதாமல், யார் எது கேட்டாலும் இல்லையென்று சொல்லாமல் கொடுத்து வந்தான். இவ்வளவு நற்குணங்களையும் பெற்றிருந்த மனுநீதிச் சோழன் கடவுள் பக்தியிலும் சிறந்து விளங்கினான். ஒவ்வொரு நாளும், திருவாரூரில் கோயில் கொண்டிருக்கும் வீதிவிடங்கப் பெருமானைச் சென்று வணங்கி வந்தான்.
எல்லா நலமும் இனிதுறப் பெற்ற மனுநீதிச் சோழனுக்கு ஒரேயொரு குறை இருந்தது. தனக்குப் பின் தன் பெயரைச் சொல்வதற்கு மகன் ஒருவன் இல்லையே என்ற கவலை அவனை வாட்டியது. தன்னுடைய குறையைத் தீர்க்குமாறு இறைவனை நாள்தோறும் வேண்டிக் கொண்டான். பல நாட்களுக்குப் பிறகு இறைவனது திருவருளால் மனுநீதிச் சோழனுக்கு மகனொருவன் பிறந்தான். அவனுக்கு வீதிவிடங்கன் என்று பெயரிட்டு அரசன் அகமகிழ்ந்தான்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வீதிவிடங்கன் வளர்க்கப்பட்டு வந்தான். அரசியலைப் பற்றியும், நீதி நூல்களையும் பழுதறக் கற்றான். குதிரையேற்றம், யானையேற்றம், விற்போர், மற்போர், வாட்போர் முதலிய அனைத்தையும் தேர்ந்து வீரனாக விளங்கினான். எல்லாத் துறையிலும் வல்லவனாக விளங்கிய வீதிவிடங்கன் வளர்மதி போலவும், செஞ்ஞாயிறு போலவும் வளர்ந்து இளவரசனுக்குரிய தகுதியை அடைந்தான்.
தன் மகனின் திறமையை உணர்ந்த மனுநீதிச் சோழன் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தான்.
‘தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது’
அல்லவா?
ஒருநாள், வீதிவிடங்கன் தன்னைப் படைகள் சூழ்ந்து வரத் தேரேறிப் புறப்பட்டான். அரண்மனையை விட்டுப் புறப்பட்ட தேர் பல வீதிகள் வழியே சென்றது. அரசிளங்குமரனைக் கண்ட நகர மக்களெல்லாம், அவனை வணங்கி வாழ்த்தினர். வீதிவிடங்கன் இவ்வாறு வீதிகளை எல்லாம் தேரில் சுற்றிக்கொண்டு வரும்போது, ஓரிடத்தே பசுங்கன்று ஒன்று, கூட்டத்தைக் கண்டு மருண்டு அங்குமிங்கும் ஓடியது. ‘இளங்கன்று பயமறியாது’ என்பதற்கிணங்க அங்குமிங்கும் ஓடிய கன்று, இறுதியில் வீதிவிடங்கனது தேர்ச் சக்கரத்திலே அகப்பட்டுக் கொண்டது.
வீதிவிடங்கன் எவ்வளவோ முயன்று பார்த்தும் குதிரைகளை தக்க நேரத்தில் நிறுத்த முடியவில்லை. கட்டுக் கடங்காமல் குதிரைகள் சென்றமையால், கன்றானது, தேர்ச் சக்கரத்திலே அகப்பட்டுத் துடிதுடித்துச் செத்தது.
தன்னால் ஓருயிர் போய்விட்டதே என்று அறிந்த வீதிவிடங்கன் உளம் பதைத்தான். தாய்ப்பசு படுகின்ற துன்பத்தைக் கண்டு கண்ணீர் விட்டான். இறந்து கிடந்த கன்றினைப் பார்த்து இரங்கி அழுதான். என்ன செய்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை, தேரிலிருந்தபடியே கீழே விழுந்தான்.
இதுவரையிலும் ஒரு பழியுமில்லாமல் அரசாண்டு வந்த தன் தந்தைக்குத் தன்னால், இப்பொழுது பெரும்பழி ஏற்பட்டு விட்டதை எண்ணியெண்ணி வருந்தினான். தன் தந்தையின் செவிகளில் இச் செய்தி விழுவதற்கு முன்னே, தான் செய்த குற்றத்திற்குத் தண்டனை அடைய விரும்பினான். தான் செய்த குற்றத்திற்குத் தண்டனை இன்னதென்பதை அறிவதற்காக அந்தணர்களைத் தேடிச் சென்றான்.
கன்றை இழந்த தாய்ப்பசு கதறியது; அங்குமிங்கும் ஓடியது. கடைசியில் மனுநீதிச் சோழனின் அரண்மனையை அடைந்தது. குற்றங் குறைகளைத் தெரிவிப்பதற்காக அரண்மனையின் வெளியில் ஆராய்ச்சி மணியொன்று கட்டப்பட்டிருந்தது. அதனை அசைத்தால், மணியொலி கேட்டு அரசன் அங்கு வருவான். வந்தவரின் குறைகளைக் கேட்டு அறிந்து நீதி வழங்குவான்.
ஆனால், மனுநீதிச் சோழனது அரசாட்சியில் இதுவரையிலும் அந்த மணியை யாரும் அசைத்ததில்லை. அவ்வளவுக்கு அவனது ஆட்சி குற்றங் குறையில்லாமல் நடந்து வந்தது. கண்ணீர் விட்டுக் கதறிய தாய்ப்பசு, தனது கொம்புகளால் மணியை அசைத்து ஓசை யெழுப்பியது.
தன்னுடைய வாழ்நாளில், இதுவையிலும் கேளாத மணியோசை இப்போது ஒலித்தைச் செவியேற்ற மனுநீதிச் சோழன் நடுநடுங்கினான். தனது செங்கோலாட்சியில் குற்றம் நேர்ந்துவிட்டதோ என்று பதறினான். ஆராய்ச்சி மணி கட்டப்பட்டிருந்த இடத்திற்கு ஓடோடி வந்தான். கண்ணீர் விட்டுக் கதறி நின்ற தாய்ப்பசுவைப் பார்த்து அப்படியே மலைத்து நின்றான்.
அமைச்சர்களில் ஒருவர், நடந்த நிகழ்ச்சிகளைப் பணிவோடு அரசனுக்கு அறிவித்தார். தன் மகன் குற்றம் புரிந்தவன் என்பதை அறிந்ததும் அரசனது மனம் அளவில்லாத வேதனை யடைந்தது. மனுநீதிச் சோழன் அமைச்சர்களையெல்லாம் கூட்டினான். தன் மகன் செய்த குற்றத்திற்கு என்ன தண்டனை விதிக்கலாமென்று ஆலோசனை கேட்டான். அமைச்சர்கள், அந்தணர்கள் கூறும் பிராயச்சித்தத்தைச் செய்வதே முறையாகும் என்று கூறினர். ஆனால், மனுநீதிச் சோழன் அதற்கு ஒப்பவில்லை.
தன் மகனுக்கு ஒரு நீதி, பிறருக்கு ஒரு நீதி என்றால், உலகம் தன்னைப் பழிக்குமே என்று அஞ்சினான். அதனால், ‘கன்றினை இழந்த தாய்ப்பசு எவ்வாறு துன்புறுகிறதோ, அது போலவே தானும் துன்பமடைவதுதான் முறையாகும்’ என்று சொன்னான். உடனே, தன் அருமை மகனை அங்கே அழைத்துவரச் செய்தான்.
அரசனது முடிவைக் கண்ட அமைச்சர்கள் அஞ்சினர். எனினும், அரசனது கருத்தை மாற்ற அவர்களால் முடியவில்லை. வீதிவிடங்கன், தந்தை முன்னே வந்து நின்றான். உடனே, அரசன், அமைச்சருள் ஒருவரை அழைத்தான். தன் மகனை வீதியில் நிறுத்தி அவன் மீது தேரினை ஓட்டுமாறு கட்டளையிட்டான்.
அதுகேட்ட அமைச்சர் நடுங்கினார். அரசன் கட்டளையையும் தட்ட முடியாது. எனவே, அமைச்சர் அரசன் மகனைக் கொல்வதற்குப் பதிலாகத் தம்முயிரையே போக்கிக் கொண்டார். அமைச்சரது செயலைக் கண்டும் அரசன் மனம் மாறவில்லை. தானே தேரினை ஓட்டித் தன் மகனைக் கொல்லத் தீர்மானித்தான்.
தனக்கு இருப்பவன் ஒரே மகன் என்பதையும் அரசன் கருதவில்லை. தன் மைந்தனை வீதியில் படுக்கச் செய்தான். மன உறுதியுடன் தேரினை மகன் மீது செலுத்தினான்.
மனுநீதிச் சோழனது நீதி போற்றும் தன்மையைக் கண்ட மக்களெல்லாரும் வியந்து போற்றினர்; தேவர்கள் பூமாரி பொழிந்தனர். மகன் இறந்ததும் மனங் கலங்காமல் நின்ற மனுநீதிச் சோழனது தன்மையைக் கண்டு சிவபெருமான் காட்சி கொடுத்தார்.
மனுநீதிச் சோழன் சிவபெருமானை வணங்கி வழிபட்டான். உடனே, இறந்த கன்றும், அமைச்சனும், மகனும் தூக்கத்திலிருந்து விழித்தெழுவதைப் போல எழுந்ததைக் கண்டு அரசன் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தான்.
இறைவனுடைய அருளை எண்ணி மேலும் வணங்கினான். அந்நிலையில் இறைவன் மறைந்தார். நீதி போற்றும் அரசர்களுக்குக் கடவுளும் துணை செய்யுமென்பது இதிலிருந்து விளங்குகிறதல்லவா?
நன்றி : சங்கத் தமிழ் இலக்கியம் வலைப்பக்கம்
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலக மெல்லாம்!
* அவசரம் மற்றும் நாட்டின் சூழல் கருதி இந்த பிரார்த்தனை நாளை பிப்ரவரி 18 காலை 7.30 am & பிப்ரவரி 19 ஞாயிறு மாலை 5.30 pm – 6.00 pm இரண்டு முறை நடைபெறும்.
==========================================================
புகைப்பட எடுத்து அனுப்பிய நண்பர்!
“மனுநீதி சோழன் பற்றிய பதிவை இன்று அளிக்கப்போகிறேன். திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் இருக்கும் மனுநீதி சோழன் சரித்திரத்தை விளக்கும் தேரை படமெடுத்து நமக்கு அனுப்பவேண்டும்” என்று நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க திருவாரூரை சேர்ந்த நமது நண்பர் திரு.ரமேஷ் பன்னீர்செல்வம் அவர்கள் தனது நண்பரை அனுப்பி மேற்படி தேரை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து புகைப்பம் எடுத்து நமக்கு அனுப்பினார். இருவருக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றி! அரிதினும் அரிய சிவபுண்ணியம் இது என்று சொல்லவும் வேண்டுமா?
==========================================================
கயவர் கூட்டத்திடம் சிக்கிக் கதறும் தமிழகம்!
இப்படி மனுநீதி சோழன் போன்றவர்கள் ஆட்சி செய்த தமிழகம் இன்று ஒரு கயவர் கூட்டத்திடம் சிக்கி தவிக்கிறது. மக்களின் கருத்துக்களுக்கு செவிமெடுக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகளோ பணத்திற்கு விலைபோனதோடு மக்களாட்சியின் மாண்பையே கேலி செயகிறார்கள்.
நாளை தமிழக சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற விருக்கும் சூழலில் இந்த அரசு நிச்சயம் தோற்கவேண்டும். எத்தனை கோடிகள் செலவானாலும் சரி மக்கள் புதிய தேர்தலுக்கு தயாராக இருக்கிறார்கள்.
மக்கள் விரும்பாத, 95% மக்களின் வெறுப்பிற்கு ஆளாகியிருக்கும் ஒரு அரசு ஆட்சிக்கு கட்டிலில் நீடித்திருப்பது சரியல்ல.
இது போன்ற கேவலமான ஒரு பதவியேற்பு இதுவரை நடந்ததில்லை எனுமளவுக்கு பதவியேற்புக்கு சென்ற அமைச்சர்களையும் எம்.எல்.ஏ.க்களையும் மக்கள் புழுதி வாரி தூற்றிய காணொளியை கண்டோம். நம் மக்களுக்கு ஒரு பிரச்னையில் இது போல ஒருமித்த உணர்வுகள் வெளிவருவது அபூர்வம். மக்களின் உணர்வுகளை இந்த நிகழ்வு தூண்டிவிட்டு ஒருங்கிணைத்துள்ளது. அது எந்தளவு தமிழகத்தின் நலனுக்கு உதவப்போகிறது என்று போகப் போக தான் தெரியும்.
அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அன்றே
செல்வத்தை தேய்க்கும் படை (565)
குறள் விளக்கம் : கொடுமையான ஆட்சியின் துன்பந்தாங்காமல் மக்கள்விடும் கண்ணீரே அம்மன்னன் ஈட்டிய செல்வம் புகழ் அனைத்தையும் அழிக்கும் பெருங்கருவியாக அமையும்.
எதன் மீது நம்பிக்கை இருந்தாலும் இல்லையென்றாலும் தெய்வப் புலவனின் வார்த்தை மீது நம்பிக்கை இருக்கிறது. பார்ப்போம்.
இந்நிலையில் சராசரி பொதுமக்கள் நம்மால் ஆக்கப்பூர்வமாக செய்யக்கூடியது என்ன?
பிரார்த்தனை ஒன்று தான்!
இந்த அரசு அகன்று ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு புதிய அரசு அமையவேண்டும். அது நல்லாட்சியை தரவேண்டும்.
அதற்காகவே இந்த பிரார்த்தனையை தமிழகத்தின் எதிர்காலத்திற்கு என்றே தனியாக ஒதுக்கியிருக்கிறோம்.
இந்த பிரார்த்தனை சற்று வித்தியாசமானது என்பதால் வழக்கமாக தலைமை ஏற்கும் அருளாளர்கள் தலைமை ஏற்கமுடியாது. எனவே எப்போதுமே நமது பிரார்த்தனைகளை இறைவனிடத்து கொண்டு செல்லும் மகா பெரியவாவிடமே ஒப்படைத்துவிட்டோம். தமிழக மக்கள் மீது அவருக்கு அபரிமிதமான பிரியம், பாசம் உண்டு. நாம் எத்தனை தவறு செய்த போதிலும், அதை பொருட்படுத்தாத தாயுள்ளம் அவருக்கு உண்டு.
அவர் கேட்பது எல்லாம் அவரின் பத்து கட்டளைகளை இயன்றவரை அனைவரும் கடைப்பிடிக்கவேண்டும் என்பது தான். (Please check : நிம்மதியான நல்வாழ்வுக்கு மஹா பெரியவரின் கட்டளைகள் பத்து!)
மற்றபடி இந்த பிரார்த்தனைக்கு அவர் செவிமெடுத்து “ததாஸ்து” என்று ஆசி வழங்கினாலே போதும் நிச்சயம் இது நடந்துவிடும். அவர் வாக்கு சத்திய வாக்கு. சாட்சாத் அந்த காமாட்சியே அவர் திருவாக்கிலிருந்து வெளிப்படுகிறாள் என்பதை நாம் அவர் குறித்த பல்வேறு பதிவுகளில் பார்த்திருக்கிறோம்.
அனைவரும் வேண்டுவோம். சற்று தாமதமானாலும் நல்லதே நடக்கும்.
நல்லாட்சி மலர சிவராத்திரி விரதம் இருப்போம்!
அடுத்து வரும் பிப்ரவரி 24 சிவராத்திரி வரவிருக்கிறது. அன்று அனைவரும் விரதமிருந்து (இயலாதவர்கள் அன்ன ஆகாரம் தவிர்த்து வயிற்றை காயப்போட்டு) ஒரு கால பூஜையாவது சிவாலயம் சென்று சுவாமியை தரிசிக்கவேண்டும். மேலும் அந்த விரதத்தின் பலனை நல்லாட்சி ஏற்பட ஈஸ்வரனுக்கு அர்பணித்துவிடவேண்டும். நாம் அனைவரும் இதைச் செய்தால் நிச்சயம் பேயாட்சி அகன்று நல்லாட்சி மலரும் என்பதில் ஐயமில்லை.
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே!
* அவசரம் மற்றும் நாட்டின் சூழல் கருதி இந்த பிரார்த்தனை நாளை பிப்ரவரி 18 காலை 7.30 am & பிப்ரவரி 19 ஞாயிறு மாலை 5.30 pm – 6.00 pm இரண்டு முறை நடைபெறும்.
வழக்கமான பிரார்த்தனை கிளப் பதிவு அடுத்த வாரம் அளிக்கப்படும்!
==========================================================
நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…
முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!
‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!
==========================================================
நமது பிரார்த்தனை கிளப்புக்கு பிரார்த்தனை சமர்பித்துள்ள பிரார்த்தனையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் பிரார்த்தனை இடம் பெற்ற பிரார்த்தனையோடு நிறுத்திவிடாமல் ஒவ்வொரு வாரமும் நீங்கள் இந்த கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்று ஒரு பத்து நிமிடம் (பிரதி ஞாயிறு 5.30 PM – 6.௦௦ PM வரை உங்களுக்கு எந்த பத்து நிமிடம் சௌகரியமோ அந்தப் பத்து நிமிடம்) மற்றவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்து வரவேண்டும். உங்கள கோரிக்கைகள் தானே நிறைவேறும்.
==========================================================
மக்களின் விருப்பத்திற்கு மாறாக அமைந்துள்ள இந்த அரசு ஒழிந்து மக்களால் புதிதாக தேர்ந்தேடுக்கப்பட்டதொரு நல்லாட்சி மலர பிரார்த்திப்போம்.
நமது பிரார்த்தனைகளை இவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.
கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.
நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!
பிரார்த்தனை நாள் : நாளை பிப்ரவரி 18 காலை 7.30 AM & ஞாயிறு பிப்ரவரி 19 மாலை 5.30 pm – 6.00 pm
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
==========================================================
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை….
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.
Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!
Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215 | E-mail : editor@rightmantra.com
==========================================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
==========================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E : editor@rightmantra.com | M : 9840169215 | W:www.rightmantra.com
==========================================================
பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131
==========================================================
சென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : சிவத்திரு. வேதகிரி ஐயா
சென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது?
சென்ற பிரார்த்தனைக்கு தலைமையேற்ற சங்கர் வேதகிரி ஐயா அவர்கள் சைதை சுந்தரேஸ்வரர் கோவில் உட்பட பல கோவில்களில் தான் சொற்பொழிவு செய்த இதர் கோவில்களில் நமக்காக அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தார். நாமும் சென்ற பல கோவில்களில் பிரார்த்தனை செய்தோம். அது குறித்து தனிப் பதிவை அளிக்கிறோம். !
ஈசனருளும் குபேர சம்பத்தும் பெற ‘அடியார்க்கு நல்லான்’ காட்டும் பாதை – Rightmantra Prayer Club
==========================================================
[END]
very must timely prayer for all of us, you posted now!! thank you so much to give chance to pray for our state! we are already praying but if it comes in our site, it will be a powerful joint prayer! Let us wait for good result with prayers and confidence on God! Regards!
Earlier posting about rudhratsham is also wonderful and useful for all of our site members!