இந்த நவீன ஃபாஸ்ட் புட் உலகத்தில் அனைத்துமே சுருங்கிவிட்டது. விரைவாகிவிட்டது. கோவில்களில் அர்ச்சனை மட்டும் விதிவிலக்கா?
சுமார் 20 – 25 வருடங்களுக்கு முன்பு கோவில்களில் அர்ச்சனை செய்யச் சென்றால் குருக்கள் சங்கல்பம் செய்துவிட்டு சன்னதிக்கு சென்றால் வெளியே வர இருப்பது நிமிடங்களாகும்.
இன்று?
ஓரிரு மந்திரங்கள் கூறிவிட்டு வந்துவிடுகிறார்கள்.
இது அவர்கள் தவறு அல்ல. காலம் அப்படி மாறிவிட்டது.
இந்த சூழ்நிலையில், கோவில்களில் அர்ச்சனை செய்யும்போது சிலர் ஏதோ பெரிய தியாகம் செய்வதாக நினைத்து “சுவாமி பெயருக்கே செய்யுங்கள்” என்கிறார்கள். இது தவறு.
(இதெல்லாம் மாணிக்கவாசகர், தாயுமானவர், வள்ளலார் போன்ற துறவு நிலை எய்திய மகான்களுக்கு பொருந்தும். சம்சாரிகளுக்கு அல்ல!)
இந்த சங்கல்பத்தின்போது உங்கள் பெயரைச் சொல்லலாம், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை சொல்லலாம் அல்லது உங்கள் உற்றார் உறவினர்கள் பெயர்களை சொல்லலாம். அல்லது உங்கள் பிரார்த்தனை தேவைப்படும் யாருக்கோ செய்யலாம். நம் ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்பில் பிரார்த்தனை சமர்பித்திருக்கும் வாசகர்களுக்கு செய்யலாம்.
அவர்கள் ராசி, நட்சத்திரம் தெரியாவிட்டால் பெயரைக் குறிப்பிட்டு ஜென்ம ராசி, ஜென்ம நட்சத்திரம் என்று கூறி சங்கல்பம் செய்யலாம்.
நான்கைந்து பெயர்கள் போதும். பல பெயர்களை சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், கடிதம் எழுதி ஓரிருவர் தானே கையொப்பமிடவேண்டும்?
(இந்த விதி நாம் செய்து வரும் அர்ச்சனைக்கு பொருந்தாது. கூட்டுப் பிரார்த்தனை கோரிக்கைகள் என்பதால் பலருக்கு சங்கல்பம் செய்யவேண்டியிருக்கும்!)
சங்கல்பம் செய்த பிறகு நமது பிரார்த்தனையை சுவாமிக்கு தெரிவித்து, லோக சமஸ்தா சுகினோ பவந்து என்று நிறைவாக வேண்டிக்கொள்ளவேண்டும்.
எமக்கு அர்ச்சனை பாட்டேயாகும் என்று இறைவன் சொல்லயிருக்கிறபடியால், திருமுறை, திருப்புகழ் அல்லது திவ்ய பிரபந்தம் இவற்றிலிருந்து ஒரு பாடல் பாடவேண்டும்.
கூட்டத்திற்கு ஏற்றாற்போல இதை செய்யவேண்டும். கூட்டம் அதிகமாக இருக்கையில் சன்னமாகவும் கூட்டம் இல்லாதபோது சப்தமாகவும் பாடலாம். அர்ச்சகரிடம் பிரசாதத்தை பெற்றுக்கொண்ட பின்னர் சன்னதியில் ஒரு ஓரமாக அமர்ந்து மீதி பாடல்களை பதிகங்களை படிக்கலாம், பாடலாம் அல்லது பாடியபடி வலம் வரலாம்.
இது தான் முறை.
==========================================================
உழவாரப்பணி அறிவிப்பு!
எல்லாம் வல்ல ஈசனருளால் நமது தளத்தின் அடுத்த உழவாரப்பணி சென்னை திருமழிசை – பட்டாபிராம் சாலையில் அமைந்துள்ள ‘சித்துக்காடு’ என்னும் ஊரில் உள்ள தாத்திரீஸ்வரர் கோவிலில் வரும் ஞாயிறு பிப்ரவரி 19, 2017 அன்று நடைபெறும் நடைபெறும். ஐயப்பன்தாங்கல் பேருந்து நிலையத்திலிருந்து வேன் புறப்படும் நேரம் காலை : 6.45 AM. மதிய உணவு உண்டு. பணியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் நம்மை தொடர்புகொள்ளவும். நன்றி.
– ரைட்மந்த்ரா சுந்தர் | M : 9840169215 | E : editor@rightmantra.com
==========================================================
*********************
கோவில்களில் சுவாமி தரிசனம் செய்யும்போது சொல்ல சில எளிமையான தமிழ் பாக்கள்…
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
– மாணிக்கவாசகர்
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே !
– திருஞானசம்பந்தர்
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
– கச்சியப்பசிவாச்சாரியார்
ஏறுமயி லேறி விளையாடு முகம் ஒன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறுமடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரனை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே
– அருணகிரிநாதர்
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்றுணை பூட்டியோர் கடலிற் பாச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே
– திருநாவுக்கரசர்
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
– அபிராமி பட்டர்
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே.
– கம்பர்
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயின எல்லாம்
நிலம்தரம் செயும் நீள்விசும்பு அருளும்
அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலம்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்
– திருமங்கையாழ்வார்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு
அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே
– பெரியாழ்வார்
You can download the below file and take print-out.
==========================================================
இந்த மாத விருப்ப சந்தா செலுத்தி விட்டீர்களா?
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.
Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
Kindly drop in mail to editor@rightmantra.com once you transfer your fund or message me at 9840169215
உங்களை நம்பி உங்களுக்காகவே இந்த தளம் நடத்தப்படுகிறது.
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
Also check கர்மா Vs கடவுள் earlier episodes…
கர்மாவை வென்ற காருண்யம் – கர்மா Vs கடவுள் (5)
விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)
கர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)
நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)
ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)
==========================================================
இல்லற வாழ்வில் மக்கள் எளிதாகக் கடைப்பிடிக்கக் கூடிய தர்மங்கள் என்னென்ன?
புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !
மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!
உங்கள் கணக்கை பதிக்க வேண்டிய ஏடு எது தெரியுமா?
சுவாமியின் குறை தீர்ப்பு முகாம்!
ஆலய தரிசனம் என்னும் அருமருந்து!
அமங்கலமான சொற்களா? விளையாட்டுக்கு கூட வேண்டாமே!
இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை!
விடியும் வரை காத்திரு! துன்பத்தை சற்று பொறுத்திரு!!
அமங்கலமான சொற்களா? விளையாட்டுக்கு கூட வேண்டாமே!
சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்!
‘எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்!’ MUST READ
நாளும் கிழமையும் நன்றாய் செல்ல மருந்தொன்று இருக்குதப்பா…!
தீயவர்கள் சுகப்படுவதும் நல்லவர்கள் துன்பப்படுவதும் ஏன்?
எதிர்பாராத பிரச்சனைகளும் நமது பிரார்த்தனையும்!
Where there’s a will, there’s a way!
==========================================================
[END]