Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 1, 2024
Please specify the group
Home > Featured > அன்புக்கு அவள் அடிமை – உருகவைக்கும் உண்மை சம்பவம்!

அன்புக்கு அவள் அடிமை – உருகவைக்கும் உண்மை சம்பவம்!

print

ன்று தைப்பூசம். அகிலாண்ட கோடி பிரும்மாண்ட நாயகன் முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த நாள். முருகப் பெருமான் குறித்து ஏற்கனவே அளித்த பதிவை அளிக்காமல் புதிதாக ஏதேனும் அளிக்க விரும்பினோம். முருகனைப் பற்றி எழுதினாலே வினைகள் அறுபடும். (படிக்கும் உங்களுக்கும் தான்). இந்நிலையில் தளம் வேலை செய்யாததால் பணியில் மனம் ஒன்றவில்லை. (அதை ஏன் கேக்குறீங்க. These days were horrible). இன்று தற்காலிகமாக தளம் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சென்ற வாரம் தயார் செய்து வைத்திருந்த ஒரு பதிவை அலங்கரித்து இன்று அளிக்கிறோம்.

அன்னையின் புகழை கேட்க விரும்பாத பிள்ளை இருக்க முடியுமா?

எனவே இந்தப் பதிவு தான் முருகனுக்கு நாம் அளிக்கும் தைப்பூசப் பரிசு!

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த்தாள் எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா முத்தியானந்தமே!!
– அபிராமி பட்டர் 

==========================================================

முருகப் பெருமானைப் பற்றிய சில பதிவுகள்…

தன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்!

சூலையும் முத்துமாலையும் – இது முத்துக்குமார சுவாமி திருவிளையாடல்!

அப்பன் விறகு சுமந்தான். பிள்ளை என்ன செய்தான் தெரியுமா?

திருமுருகாற்றுப்படையும் அறுபடைவீடுகளும்! ஒரு சுவாரஸ்யமான வரலாறு!!

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்!

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!

ஆண்டவன் பிச்சி’ என்னும் அதிசயப் பிறவி – கந்தசஷ்டி SPL 3!

சிவபெருமானைப் போல முருகனுக்கும் பன்னிரு திருமுறை உண்டு தெரியுமா? கந்தசஷ்டி SPL 1

==========================================================

அம்பாளின் அருள் விளையாட்டு !

சிவபூஜை என்பது மிக மிக சிரத்தையாக சுத்தமாக செய்யவேண்டிய ஒன்று. ஆனால், கண்ணப்ப நாயனார் வாயால் கடித்து ருசி பார்த்து எச்சில் செய்து படைத்த உணவுகளை சிவபெருமான் ஏற்றுக்கொள்ளவில்லையா? அவன் கொப்புளித்து துப்பிய நீரை அபிஷேகமாக ஏற்றுக்கொள்ளவில்லையா?

அதே போல திருநீலநக்க நாயனாரின் மனைவி சுவாமியின் திருமேனி மீது இருந்த சிலந்தியை விரட்டப்போய் அவர் எச்சில் லிங்கத்தின் மீது தவறுதலாக பட்டுவிட, இது கண்டு கொதித்த திருநீலநக்கநாயனார் தன் மனைவியை ஒதுக்கிவைத்துவிடுகிறார். அன்றிரவு நாயனாரின் கனவில் தோன்றிய ஈசன் “இங்கே பார்.. உன் மனைவியின் எச்சில் பட்ட இடத்தை தவிர மற்ற இடங்கள் கொப்புளமாக உள்ளது” என்று காட்டவில்லையா?

காரணம் என்ன?

ஆச்சார அனுஷ்டானங்களை விட அடியார்களின் அன்பையே ஈசன் பிரதானமாக பார்க்கிறான். அதற்காக ஆச்சா அனுஷ்டானங்கள் கூடாது என்பதல்ல. காட்டில் வசிக்கும் கண்ணப்பருக்கு சிவபூஜை எப்படி செய்வது என்று தெரிந்திருக்க நியாயமில்லை. அவருக்கு ஈஸ்வரன் மேல் இருந்தது அன்பு ஒன்றே. எனவே ஈசன் அதை அங்கீகரித்தான்! திருநீலநக்கநாயனாரின் மனைவி விஷயத்தில், உங்கள் குழந்தையின் மீது சிலந்தி விழுந்துவிட்டால் அதை எப்படி உடனே பதறிப்போய் விரட்ட முயற்சிப்பீர்களோ அப்படியே செய்தார் அந்த அன்னை. இறைவன் செயல்களை பார்ப்பிப்பதில்லை. செயல்களின் பின்னே உள்ள நோக்கத்தை தான் பார்ப்பான். பெரியபுராணத்தில் அடிப்படை கருத்தே இது தான்.

அப்பன் இப்படி என்றால் அன்னை மட்டும் சளைத்தவளா என்ன?

சுவாமியை போல அம்பாளுக்கும் அனந்த கல்யாண குணங்கள் உண்டு. அதில் ஒன்று அடியவர்கள் மேல் அவள் செலுத்தும் தாயன்பு.

ஒரு எளியவன் தன் மீது துப்பிய எச்சிலைக் கூட அர்ச்சனை மலராக அவள் ஏற்றுக்கொண்டு அருள் செய்த திறம் தான் என்ன! படிக்கும்போதே உங்கள் கண்கள் காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கும் என்பது உறுதி.

தாயானவள் சேயை தூக்கும்போது அவள் மீது குழந்தையின் தேறல் (உமிழ்நீர்) பட்டு வழிந்தால் எப்படி அசூயைப் படாமல் சந்தோஷப்படுவாளோ அப்படி சந்தோஷப்படுகிறாள் அன்னை.

வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே, புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யானுன்னை வாழ்த்துவனே.
– அபிராமி பட்டர்

விளக்கம் : அபிராமி அன்னையே… விடத்தை உண்டு கறுத்த கழுத்தையுடைய ஈசனது இடப்பாகம் அமர்ந்த பொன்னே… தம் அடியார்கள் வெறுக்கும் படியான செயல்களைச் செய்தாலும் பெரியோர்கள் அவர்களது செயல்களைப் பொறுத்து அன்பு செய்யும் வழக்கம் புதியது அல்லவே… நான் நீ வெறுக்கும்படியான செயல்களைச் செய்து உன்னை விட்டு விலகிப்போனாலும் நீ வெறுக்கும்படியான செயல்களைச் செய்தாலும், உன்னையே வாழ்த்துவேன்…அன்னையே எவ்வழி சென்றாலும் நான் உன்னையே வாழ்த்துவேன்.. நீ என்னை மன்னித்து அருளிச் செய்வது உனது பெருந்தன்மை!

எத்தனை அழகாக அம்பிகையை பற்றி சொல்லியிருக்கிறார் அபிராமி பட்டர் என்று பார்த்தீர்களா?

அம்பாளின் சேலையில் எச்சில்…!

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விக்ரமசிங்கபுரத்தில் பிறந்தவர் நமச்சிவாயக் கவிராயர். மாதவ சிவஞான யோகியின் தந்தையாகிய ஆனந்தக்கூத்தரின் உடன்பிறந்தவர். பாபநாசத்தில் எழுந்தருளியிருக்கும் பாபநாசநாதர் மற்றும் உலகம்மை மீதும் பெரும்பக்தியும் பேரன்பும் செலுத்திவந்தார். குறிப்பாக உலகம்மை மீது அவருக்கு அத்தனை அன்பு. உலகம்மை மீது பேரன்பு கொண்டு நாள்தோறும் வழிபட்டுவந்தார். அன்பெனும் பிடியில் அகப்படும் கருப்பொருள் அல்லவா அம்பிகை?

ஒருமுறை உலகம்மை அவருடைய மகளாக வந்து உணவு படைத்தாளாம். கவிராயர், நோய்வாய்ப்பட்டு தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றபோது, உலகம்மை தடுத்து அருள்புரிந்தார் என்றும் கூறுவர். இவர், உலகம்மை பிள்ளைத்தமிழ், உலகம்மை கலித்துறை அந்தாதி, கொச்சகக் கலிப்பா, சந்தவிருத்தம், சிங்கை சிலேடை வெண்பா முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

அவர் வாழ்வில் நடைபெற்ற அதிசயத்தை பார்ப்போம் :

நமச்சிவாயர் நாள்தோறும் பாபநாசம் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் உலகம்மையை (உலகநாயகி) வழிபாடு செய்து வருவது வழக்கம்.

இப்படி இருந்த காலகட்டத்தே ஒரு நாள் தந்தையின் கட்டளைப்படி, திருமணம் புரிந்து கொண்டு, இல்லற வாழ்வில் ஈடுபட்டு, அறநெறியில் நின்றார். ஒரு பெண் மகவைப் பெற்று இனிது வாழும் போது, ஒரு சோதனை ஏற்பட்டது.

ஒரு நாள் இரவு, வழக்கம் போல பாபநாசம் சென்று உலகம்மையைத் தொழுதுவிட்டு இல்லத்திற்குத் திரும்பும்போது, உலகம்மையைப் புகழ்ந்து கவிதை பாடிக்கொண்டே வந்தார்.

பக்தன் பாடும் கவிதையை கேட்க ஆவல் கொண்ட உலகம்மை, அர்ச்சகர் அலங்கரித்த அலங்காரத்தோடு, கவிராயரை பின் தொடர்ந்து வந்தாள். அம்பிகை வருவதை அறியாத கவிராயர், வெற்றிலை தரித்து போட்டுக்கொண்டு வாய்விட்டுப் பாடி வந்தார். மெய்ம்மறந்து பாடியபோது அவருமறியாமல் தெறித்த எச்சில் துளிகள் தேவியின் மேல்பட்டன. அத்திருக்கோலத்தோடு உலகம்மை கோயிலில் மீண்டும் எழுந்தருளினாள்.

மறுநாள் காலையில், கோயிலைத் திறந்து பார்த்த அர்ச்சகர், உலகம்மையின் சேலையில் தெரிந்த எச்சில் துளிகளைக் கண்டு திடுக்கிட்டார். மனம் வருந்தினார். யாரோ விஷமி செய்த வெளியாகத் தான் இது இருக்கவேண்டும். இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்று கருதி அவ்வமயம் இறைவழிபாட்டுக்குப் பாபநாசம் வந்திருந்த அரசனிடம் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டது.

மன்னன் வேதனையுற்றான். எச்சில் துளிகள் பட்டதால் ஏற்பட்ட தூய்மையற்ற நிலை நீங்கத்தக்க சடங்குகள் செய்யப் பணித்து, பூசை நடக்க ஆவண செய்த வேந்தன், “தவறிழைத்தவரைக் கண்டுபிடித்துக் தக்க தண்டனை அளிப்பேன்” என்று சூளுரைத்துவிட்டு அரண்மனை திரும்பினான்.

இன்றும் நீங்கள் பாபநாசம் சென்றால் உலகம்மையின் கைகளில் அந்த செண்டை காணலாம்.¶¶¶

==========================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Mobile : 9840169215

==========================================================

அம்பிகையைப் பற்றி வெளியான பதிவுகள் சில…

அமிழ்தினும் உயர்ந்த அன்னையின் ‘வாயூறுநீர்’ நிகழ்த்திய அற்புதம்!

எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும் ? ஆடி ஸ்பெஷல் !

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!

ஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி! சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

அன்னையின் அருள் வெளிப்பட்ட ‘தை அமாவாசை’ – திருக்கடையூர் கோவில் குருக்கள் கூறும் தகவல்கள்!

சிவன் துவக்கிய ஆனந்தலஹரி, சங்கரர் முடித்த சௌந்தர்யலஹரி – காலடி பயணம் (4)

உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!! – நவராத்திரி SPL 1

திருமுறை, திருப்புகழ் விளக்கை அனைவருக்கும் ஒளிரச் செய்யும் ஓர் அன்னை!

வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

================================================================

சர்வம் சிவார்ப்பணம் – ஆனைக்கா அண்ணலின் அற்புதம்!!

பொன்மழையில் நனைந்த ஏழை பிரம்மச்சாரி – ஸ்ரீஸ்துதி புரிந்த மகிமை

================================================================

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

================================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *