தளத்தின் சர்வரில் ஏற்பட்ட பிரச்சனையால் சில நாட்கள் தளம் வேலை செய்யவில்லை. ஓரளவு அனைத்தும் சரிசெய்யப்பட்டுவிட்டது. (தளம் வளர வளர இது போன்ற பிரச்சனைகள் யதார்த்தம். DUE TO HEAVY CONTENT & DATABASE).
அண்மையில் நாம் சென்ற வேலூர், தஞ்சை, வேதாரணியம், நடுக்காவிரி பயணம் நல்லபடியாக முடிந்து கடந்த ஞாயிறு சென்னை திரும்பினோம். வழக்கம் போல எல்லாம் வல்ல ஈசன் உடனிருந்து வெற்றிகரமாக பயணத்தை நடத்திக்கொடுத்தான். இல்லையெனில் இந்த எளியோனுக்கு பல விஷயங்கள் சாத்தியப்பட்டிருக்காது. காவிரிக்கரை பிரசன்ன கணபதி கோவிலுக்கும் முதல் கட்ட புனரமைப்பு நிதி கொடுத்தாகிவிட்டது. நிறைய பேசவேண்டும். மீண்டும் சந்திப்போம். நன்றி!
**********************
அச்சம் என்பது மடமையடா, அதிலும் பாதி உனது கற்பனையடா!!
ஒரு நாள் மாலை கிருஷ்ணரும் அவர் சகோதரர் பலராமரும் ஒரு காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் இருளில் நடக்கமுடியவில்லை. எனவே இருவரும் ஒரு இடத்தில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு பின்னர் தங்கள் பயணத்தை தொடர்வது என்று தீர்மானித்தார்கள்.
அது கொடிய விலங்குகள் வாழும் காடு என்பதால் ஒருவர் உறங்கும்போது மற்றொருவர் விழித்தபடி காவல் காக்கவேண்டும் என்று தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.
அந்த ஒப்பந்தத்தின் படி முதலில் கிருஷ்ணர் படுத்துக்கொள்ள பலராமர் விழித்துக்கொண்டு காவல் புரிந்தார்.
சில மணிநேரங்கள் சென்றது. கிருஷ்ணர் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டார்.
அப்போது சற்று தூரத்தில் யாரோ உறுமும் சத்தம் கேட்டது. கேட்பதற்கே மிகவும் பயங்கரமாக இருந்தது அது. அந்த சப்தம் வந்த திக்கு நோக்கி பலராமர் சில அடிகள் தூரம் சென்று என்ன ஏது என்று பார்த்தார்.
அப்போது ஒரு மிகப் பெரிய பூதம் போன்ற உருவம் தன்னை நோக்கி வருவதை கண்டார். இவரைப் பார்த்ததும் மறுபடியும் அந்த உருவம் பெரிய உறுமல் செய்ய, பலராமர் நடுங்கியே விட்டார். (அக்காலங்களில் கானகங்களில் ராட்சதர்கள் வசிப்பார்கள். காட்டு விலங்குகளை கொன்று புசிப்பார்கள்!).
ஒவ்வொரு முறையும் அவர் நடுங்க நடுங்க அந்த பூதத்தின் உருவம் இரு மடங்காக பெரிதாகிக்கொண்டே சென்றது. இப்போது பலராமருக்கு முன்னே அந்த உருவம் நின்றுகொண்டிருந்தது. மறுபடியும் ஒரு உறுமல் செய்ய, ஏற்கனவே அச்சத்தில் நடுங்கியபடி இருந்த பலராமர் “கிருஷ்ணா….” என்று குரல் எழுப்பிய படி மூர்ச்சித்து கீழே விழுந்தார்.
பலராமனின் குரலைக் கேட்டு எழுந்த கிருஷ்ணர், சத்தம் வந்த திக்கு நோக்கி சென்றார். அங்கே கீழே படுத்துக்கொண்டிருந்த பலராமரைக் கண்டு, “தற்போது அண்ணனின் முறை. அவனுக்கு தூக்கம் வந்துவிட்டது போல. இனி நாம் காவல் இருப்போம்” என்று செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி காவல் இருக்க ஆரம்பித்தார்.
தூக்கம் வராமலிருக்க முன்னும் பின்னும் ஏதோ சிந்தித்தபடி நடந்துகொண்டிருந்தார்.
சற்று நேரத்தில் அந்த காரிருளில் தனக்கு அருகில் பூதம் போன்ற ஒரு மிகப் பெரிய உருவம் நின்றுகொண்டிருப்பதை கிருஷ்ணர் கண்டுபிடித்துவிட்டார்.
கிருஷ்ணரை பார்த்து அது மிகப் பெரிய உறுமல் செய்ய, கிருஷ்ணரோ சிறிதும் அச்சப்படாமல் “நீ யார்?” என்று கேள்வி கேட்டார்.
உடனே அதன் உருவம் பாதியாக குறைந்தது.
“இங்கு என்ன செய்கிறாய்?” என்று தொடர்ந்து கிருஷ்ணர் கேட்க, இம்முறை அதன் உருவம் இன்னும் பாதியாக குறைந்தது.
“என்ன வேண்டும் உனக்கு?” கிருஷ்ணர் தனது கேள்விக்கணைகளை அச்சப்படாமல் தொடுக்க, அந்த ராட்சஸனின் உருவம் இன்னும் பாதியாக குறைந்தது.
இப்படி கிருஷ்ணர் கேள்விக்க கேட்டபடி இருக்க அந்த ராட்சஸ பூதத்தின் உருவம் குறைந்துகொண்டே வந்தது. கடைசியில் அது இரண்டு அங்குல உயரத்திற்கு குறுகிவிட்டது. பார்க்க ஏதோ ஒரு பொம்மை போல ஆழகாக வேறு இருந்தது.
கிருஷ்ணர் உடனே அதை எடுத்து தனது ஆடையில் முடிந்து வைத்துக்கொண்டார்.
இரவு சென்றது. மறுநாள் காலை பலராமர் விழித்தார். கிருஷ்ணர் தனக்கு முன்பாக நிற்பதைக் கண்டு, ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்று உற்சாகக் குரல் எழுப்பினார்.
“என்னாயிற்று அண்ணா ஏன் இத்தனை பரபரப்பாக இருக்கிறீர்கள்?”
==========================================================
Like our website? Kindly extend your support!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. We are striving to sustain. Help us. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break or Donate us liberally.
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
==========================================================
தளத்தில் இதற்கு முன்பு வெளியான மகாபாரதக் நீதிக்கதைகள் :
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா விளக்கிய ஒரு வியக்கவைக்கும் கணக்கு!
மகாபாரதத்திலேயே மிக நல்லவன் யார்? MUST READ
கீதை பிறந்த இடம் – ஒரு சிறப்பு பார்வை!
தற்காலிக சோகங்களுக்காக வருந்துவானேன்? தங்கக் கதவை திறப்பதற்கே இரும்புக் கதவு மூடப்படுகிறது!
எத்தகைய பூஜையை சிவபெருமான் ஏற்றுக்கொள்கிறார்?
கர்வத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம் ?
கடவுளின் டிக்ஷனரியில் இரு வார்த்தைகள்
கொடையாளிகள் பலர் இருக்க கர்ணனுக்கு மட்டும் பெயரும் புகழும் கிடைப்பது ஏன்?
தீராத வினை தீர்க்கும் அடியார்கள் பாத தூளி – நம் இராமநவமி அனுபவம்!
108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!
புடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை புறநகரில் ஒரு அதிசய மலைக்கோவில்!
வரங்களை அருள்வதில் திருமலைக்கு நிகரான ‘திருநீர்மலை’ திவ்யதேசம்!
சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி… “இதோ எந்தன் தெய்வம்” – (4)
==========================================================
Also check :
உழைப்புக்கேற்ற கூலியும் மந்திர மரக்காலும்!
ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு!
சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்! நெகிழ வைக்கும் வரலாறு!!
உருவுகண்டு எள்ளாமை வேண்டும்! சமையற்காரர் படைத்த காவியம்!!
“நான் உனக்காக காத்திருக்கிறேன்!”
ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!
அரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்!
ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்!
==========================================================
[END]
ஆழ்ந்து யோசிக்க வைக்கும் அற்புதமான கதை
வாழ்க்கையில் பிரச்சனையை இருக்கலாம் ஆனால் பிரச்சையே வாழ்க்கையாகிவிடக்கூடாது
நம் அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் பதட்டம் இல்லாமல் நிதானமாக கையாண்டு எதை எப்படி கையாளவேண்டுமோ அதை அப்படி கையாண்டால் வெற்றி நம் வசப்படும்
அனுபவத்தைப்போல் ஒரு மிகசிறந்த ஆசிரியர் இந்த உலகினில் இல்லை
தோல்விகளை படிக்கட்டுகளாக எண்ணுவோம்
துக்கத்தை மனப்பக்குவத்திற்கான பயிற்சியாக கருதுவோம்
விடாமுயற்சியுடன் நம் இலக்கை நோக்கி பயணிப்போம்
எல்லாம் செய்வனே முடிய பரம்பொருளின் துணையை என்றென்றும் வேண்டுவோம்
வாழ்க வளமுடன்
மிக அருமையான கதை, அதே போல் உழைப்பை திருடுபவர்களுக்கு இறுதி அத்தியாயத்தில் நல்ல அடி கொடுத்து உள்ளீர்கள்
One of the best posts of Right Mantra!
Konjam Thiramai Niraya Dhairiyam – We can win!… 100% true…