ஒரு முறை ஐந்து விரல்களும் தங்களுக்குள் பேசிக்கொண்டன.
நடுவிரல் முதலில் ஆரம்பித்தது. “நம் அனைவரிலும் பெரியவன் நான் தான். உயரமானவன். அழகானவன்….” என்றது.
இதைக் கேட்ட மோதிர விரல் சொன்னது, “நீ உயரமானவனாக இருக்கலாம். ஆனால் விலை உயர்ந்த மோதிரத்தை என் கைகளில் போட்டுத் தான் அழகுப் பார்க்கிறார்கள். எனவே தான் என் பெயரே மோதிர விரல். உங்கள் அனைவரையும் விட மதிப்பு மிக்கவன் நான் தான்” என்றது.
ஆட்காட்டி விரல் சும்மாயிருக்குமா?
“நீங்கள் எல்லாம் வேஸ்ட். இருப்பதிலேயே உபயோகமானவன் நான் தான். ஒன்றை சுட்டிக்காட்ட நான் தான் பயன்படுகிறேன். மேடைப் பேச்சுக்களில் தலைவர்கள் என்னைத் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்….” என்றது.
கட்டைவிரல் குரலை உயர்த்தியது…. “நான் ஒருவன் இல்லையேல் உங்கள் யாருக்கும் வேலையே கிடையாது. நான் இல்லாமல் உங்களால் எந்த வேலையும் செய்ய முடியாது என்பதை மறக்காதீர்கள். நான் தனித்து நிற்பவன். தனித்தன்மையுடன் இருப்பவன். எனவே தான் நான் உங்களுடன் சேராமல் தனியாக படைக்கப்பட்டிருக்கிறேன். மேலும் ஒரு செயல் வெற்றிகரமாக நிறைவேறியது என்று குறிப்பிட என்னையே உயர்த்தி காண்பிக்கிறார்கள் அனைவரும்!!” என்றது.
சுண்டுவிரலுக்கு இப்படிச் சொல்ல எதுவும் இல்லை.
மற்ற நான்கு விரல்களும் சுண்டுவிரலை கேலி செய்தன.
“நீ ஏன் அமைதியாக இருக்கிறாய்?… ஓ… உன்னால் தான் இந்தப் பயனும் இல்லையே… நீ இருப்பதே வீண் தான்… ஹா…ஹா..ஹா…”
சுண்டுவிரல் ஆறுதல் சொல்லக்கூட யாருமின்றி தனித்து விடப்பட்டது.
தன் நிலையை நினைத்து அழுதது. “அவர்கள் கேட்பது சரி தானே? என்னை ஏன் இப்படி ஒன்றுக்கும் உபயோகமில்லாமல் படைத்தாய் இறைவா?”
அன்றிரவு சுண்டுவிரல் கனவில் கடவுள் தோன்றினார்.
“குழந்தாய் அழாதே. என் படைப்பில் ஒவ்வொன்றும் அர்த்தம்மிக்கது. யாரும் தாழ்ந்தவர் கிடையாது.”
“அப்படியானால் என் பயன் தான் என்ன?”
“நேற்று கோவிலுக்கு வந்தபோது என்னை அனைவரும் இரு கரம் கூப்பி வணங்கினார்கள் அல்லவா? அப்போது முதலில் இருந்தது நீ தானே? என்னை என் பக்தர்கள் வணங்கும்போது முதலில் இருப்பது நீ தானே? உனக்குத் தானே அந்த பெருமை உள்ளது. வேறு எந்த விரலுக்கும் கிடையாதே…”
அப்போது தான் சுண்டுவிரல் சிந்தித்தது. ‘அட… ஆமாம்… கடவுளை வணங்கும்போது நாம் தானே முதலில் இருக்கிறோம்…’
கடவுள் தொடர்ந்து பேசினார்… “ஒருவருக்கொருவர் மரியாதையுடன் வணக்கம் தெரிவிக்கும்போது, முதலிடம் உனக்குத் தானே? இதைவிட வேறு பெருமை என்ன வேண்டும்?” என்று கூறிவிட்டு கடவுள் மறைந்தார்.
மறுநாள் காலை அனைவரும் கோவிலுக்கு செல்ல நேர்ந்தது. சுவாமி சன்னதியில் நின்ற போது மற்ற விரல்களின் காதுகளில் விழும்படி சுண்டு விரல் பெருமையுடன் சொன்னது “இறைவா உன்னை வணங்கும்போது முதலிடம் எனக்கு தந்தாயே அந்த ஒரு பெருமை எனக்கு போதும்!”
மற்றவிரகள் சுண்டுவிரல் சொன்னதைக் கேட்டு பெருமூச்சு விட்டன.
எளியனாக இருப்பதில் எந்த தகுதிக்குறைவும் இல்லை. இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தனித்தன்மையும் சிறப்பும் மிக்கவரே.
வாழ்வில் சில எளிய விஷயங்கள் தான் நம் வலிமைக்குக் காரணமாக இருக்கின்றன.
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா…!
……………………………………………………………………………………………….
நமது நடுக்காவிரி பிள்ளையார் கோவில் கைங்கரியத்துக்கு நிதி உதவி வேண்டி சமீபத்தில் பதிவிட்டிருந்தோம். வாசகர்கள் மனமுவந்து நிதியளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தொடர்ந்து நம் பணிகளுக்கு நிதி அளித்து வரும் சில வாசகர்கள் மற்றும் அவரவர் சக்திக்கு ஏற்ப ‘விருப்ப சந்தா’ செலுத்தி வரும் வாசகர்கள் (இவர்களால் தான் இந்த தளமே நடக்கிறது) மாதச் சம்பளக்காரர்கள் என்பதால் இந்த மாதம் 27 ஆம் தேதி நாம் நிதியை ஒப்படைக்க நடுக்காவிரி செல்வதற்குள் நாம் எப்படி செலுத்துவது என்று யோசிக்கிறார்கள். ஏனெனில் ஒவ்வொரு வாரமும் முதல் ஏழு நாட்களுக்குள் அந்த மாதத்திற்கு உரிய சம்பளத்தை பெற்று, குடும்ப செலவுகளுக்கு ஒதுக்கி, நம் தளத்திற்கும் இயன்றதை செய்துகொண்டு ‘வாழ்’பவர்கள் பலர். அவர்களுக்கு இனி அடுத்த மாதம் முதல் வாரம் தான் நிதி கொடுக்கமுடியும்.
கவலைவேண்டாம்… முதல் தவணையை அளிக்கத்தான் நாம் 27 ஆம் தேதி செல்கிறோம். பணிகள் துவக்கப்பட்டால் அது நிறைவடைய குறைந்த பட்சம் மூன்று / நான்கு மாதங்கள் ஆகும். இடையே மீண்டும் சில முறை பணிகளை மேற்பார்வையிட நாம் செல்லவேண்டியிருக்கும். எனவே இப்போது நிதி அளிக்க முடியாதவர்கள் அடுத்த மாதம் கொடுக்கலாம். கவலை வேண்டாம்.
என்ன தான் சிக்கனமாக இந்த திருப்பணியை செய்தாலும் பட்ஜெட் திட்டமிட்டதைவிட சற்று கூடவே செல்லும் என்று நாம் கருதுகிறோம். எனவே வாசகர்களின் பங்களிப்பு அவசியம் தேவைப்படும். எனவே கவலை வேண்டாம்.
இன்னொரு விஷயம்… நம் தளத்திற்கு உதவுவதைத் தவிர வேறு எந்த அறப்பணியும் செய்ய இயலாத வாசகர்கள் பலர் உள்ளனர். நமக்கு தெரிந்து, “கோவில்களுக்கு செய்வதைவிட ரைட்மந்த்ராவுக்கு செய்வதே எனக்கு நிறைவாக இருக்கிறது சார். இதுவும் ஒரு கோவில் தான்” என்ற மனப்பான்மையில் நம் தளத்திற்கும் பணிகளுக்கும் உதவுவதைத் தவிர வேறு ஏதும் அறியாத செய்யாத வாசகர்கள் பலர் உள்ளனர்.
அவர்களுக்கு இந்த புண்ணியத்தில் பங்கு தரவேண்டியது நம் முக்கிய கடமையல்லவா?
(நமக்கு தெரிந்த ஒரு வாசகி தான் பணிபுரியும் அலுவலகத்தில் கொடுக்கும் டீயை வேண்டாம் என்று கூறி அதற்கு பதில் காசாக கொடுங்கள் என்று கூறி அந்தக் காசை மிச்சம் பிடித்து அவ்வப்போது அனுப்புவார்!!!!)
எனவே இந்த அரும்பெரும் தொண்டில் அவர்கள் பங்கும் இருக்கவேண்டும் என்பதற்காக அவர்கள் அனைவரின் சார்பாக ஒரு நல்ல தொகையை பிள்ளையார் சுழி போல இந்த பணிக்கு முதல் தொகையாக கொடுக்கவிருக்கிறோம். (இந்த மாத விருப்ப சந்தாவில் வரும் தொகையில் சிறிய பகுதியை தனியாக எடுத்து வைத்து வருகிறோம்.)
எனவே ஏற்கனவே நமது தளத்திற்கும் தளத்தின் பணிகளுக்கும் உதவி வரும் வாசக அன்பர்கள் இந்த பணிக்கு நிதி அளிக்க இயலவில்லையே என வருந்தவேண்டாம். உங்கள் பங்கே இதில் பிரதானம். உங்கள் அனைவரின் சார்பாகவே நாம் முதல் தொகையை அளிக்கவிருக்கிறோம். நிச்சயம் ஆனைமுகன் அருள் உங்களுக்கு உண்டு. திருநீலகண்டம்.
ஒரு செயலின் புண்ணியத்தின் தன்மை அது செய்யப்படும் சூழல், செய்பவரின் நிலை, பெறுபவரின் நிலை இவை அனைத்தையும் வைத்தே கணக்கிடப்படுகிறது. வசதிமிக்கவர்கள் அளிக்கும் லட்சங்களைவிட சராசரி வாழ்க்கையில் போராடும் ஒரு சாமானியன் மனப்பூர்வமாக அளிக்கும் ஒரு சிறு தொகை பன்மடங்கு புனிதமானது. புண்ணியம் தரவல்லது. அவரவர்க்கு அவரவர் நிலை தெரியும். எனவே வசதி குறைந்தவர்கள் தாங்கள் செய்யும் உதவி பற்றி வருந்தத் தேவையில்லை. வசதிமிக்கவர்கள் தாங்கள் செய்யும் உதவிகள் பற்றி கர்வப்படத் தேவையுமில்லை.
மற்றபடி யார் யாரெல்லாம் முடியுமோ அவர்கள் இந்த கைங்கரியத்திற்கு முன்னர் கூறியதைப் போல உதவலாம். இது போன்ற ஆன்மீகப் பணிகளில் தாரளமாக உதவ முன் வருகிறவர்கள் அனைத்திற்கும் ஆணிவேராக விளங்கும் நம் தளத்தையும் ஏறெடுத்து பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
==========================================================
நடுக்காவிரி பிள்ளையார் தொடர்பான முந்தைய பதிவுகள்
காத்திருக்கிறார் காவிரிக்கரை கணபதி!
தேடி வந்து துயர் துடைத்த தெய்வம்!
========================================================
உங்களுக்காக உங்களை நம்பி ஒரு தளம்…
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.
Our A/c Details
Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
==========================================================
இவை ஒவ்வொன்றும் மிக முக்கிய பதிவுகள்…
எல்லாம் மாறும் உன் மனம் மாறினால்!
நாளும் கிழமையும் நன்றாய் செல்ல மருந்தொன்று இருக்குதப்பா…!
‘பிரசாத புத்தி’ யாருக்கெல்லாம் இருக்கு?
========================================================
Also check…
எனக்கு ஒரு பிரச்சனை – தப்பு தப்பு – ‘சவால்’!
‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?
ஒரே ஷாட் – பந்தயத்தில் வென்ற சுவாமி விவேகானந்தர் – Must Read!
‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்?’ – விவேகானந்தர் கூறிய பதில்!
களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!
“பிச்சையிடும் பணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது?” – விவேகானந்தர் கூறிய பதில்!
பசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் !
அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன?
ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70
வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67
யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? — ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்!
இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை..!
ஆறறிவு மனிதனுக்கு மரம் கற்றுத் தரும் குறள்
நிலம், கடல், வானம் இவற்றை விட பெரியது எது தெரியுமா ?
==========================================================
[END]