Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 8, 2024
Please specify the group
Home > Featured > வான்மழையா அருள்மழையா? ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஜயந்தி SPL

வான்மழையா அருள்மழையா? ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஜயந்தி SPL

print

ன்று சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் ஜயந்தி. திருவண்ணாமலை என்றால் நினைவுக்கு வருபவர் பகவான் ஸ்ரீ ரமணர். ரமணருக்கும் மூத்தவர் சேஷாத்திரி சுவாமிகள். மஹா பெரியவா சேஷாத்ரி சுவாமிகள் மீது பெரும் பக்தி கொண்டிருந்தார். பல முறை பக்தர்களிடம் சுவாமிகள் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் தொடர்ந்து வலியுறுத்துவது எல்லாம், மனதை எப்பொழுதும் இறைவனோடு வைத்திருக்க வேண்டும், சிந்தனைகள் சிதறக்கூடாது என்பதுதான். கடந்த சில அத்தியாயங்களில், நாம் படித்த அவரது அறிவுரைகள், நமது முயற்சிக்குப் பேருதவியாக இருக்கும், மனதை ஒழுக்கமாக ஒருநிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்றால் உண்மையான பக்தியும், முழுசரணாகதியும் தேவை. ஸத்குருநாதரிடம் வாழ்க்கையை ஒப்படைத்து, சரணாகதி செய்த பின்பு, அவர் பிறப்பிக்கும் ஆணைகளை உண்மையாக பயபக்தியுடன், ஒவ்வொரு சீடரும் நிறைவேற்ற வேண்டும். மக்களுக்கு உதவி செய்வதே மகானின் விருப்பம். அந்த மகேசனின் வாக்குப்படி நடப்பதே, நமது வாழ்க்கையைத் திருப்பும். அவருடைய அறிவுரைப்படி நாம் உண்மையாக நடந்தால் , உண்மையான பேரானந்தம் மிக்க பெருவாழ்விற்குக் கதவுகள் திறக்கப்படும் என்பது சத்தியம்.

வான்மழையா அருள்மழையா?

சுவாமிகள் சித்தியடைவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட அபூர்வ படம் இது.

நெருப்புக் கோளம் போல மலை இருப்பதால், திருவண்ணாமலையில், உஷ்ணம் அதிகமாக இருக்கும். கோடைகாலத்தில் மிகவும் உஷ்ணமாக இருப்பதுடன், தண்ணீர் இக்கோடைகாலத்தில், கிடைப்பதே மிகவும் அரிதாகும். தாங்கமுடியாமல், உஷ்ணம் அதிகமாகும்போது, மக்கள் சேஷாத்ரி ஸ்வாமிகளை, உஷ்ணத்தைத் தவிர்க்குமாறு இறைஞ்சுவர். அப்பொழுது, அந்த மகான் வானத்தை நோக்கிப் பார்த்தவுடன், சில நிமிடங்களிலே மழைபெய்து தண்ணீர் பெருகும். இது பொதுவாக நடக்கும் ஒரு நிகழ்ச்சியாகும்.

திரு.அர்த்தநாரி அய்யர் என்பவர் மிகுந்த உஷ்ணத்தைப்பற்றிப் பிரஸ்தாபித்தார். அப்பொழுது அந்த மகான் அதற்கு, ”உன்னுடைய துணிகள் எல்லாம் ஈரமாகப் போகிறது. நீ வேறு உடைதான் மாற்ற வேண்டும்” என்று கூறினார். சிறிதுநேரத்தில் அவர் சொன்னதன் பொருள் விளங்கியது. தெளிவாக, இருண்ட மேகங்களே இல்லாமல், நிர்மலமான வானத்திலிருந்து கனமழை பெய்தது. இது மூன்று மணி நேரம் விடாமல் பெய்தது. திரு. அர்த்தநாரி அய்யரின் துணி எல்லாம் முழுவதுமாக நனைந்து விட்டது. ஸ்வாமிகள் ஒரு பக்தர் வீட்டின் வராந்தாவில் அமர்ந்து மழையை இரசித்துக்கொண்டு இருந்தார். இந்த அற்புதம், அவருக்குச் சிறு குழந்தை விளையாடுவது போன்றது. மனப் புழுக்கம் ஆனாலும், உடல் உஷ்ணமானாலும் மகானிடம் முறைப்படி முறையிட்டால் சரத்காலச் சந்திரனில் ஒளிபோல், குளிரச் செய்து விடுவார்.

அதோ விட்டோபா போகிறார்

இதேபோல் இன்னொரு நிகழ்ச்சியும் நடந்தது. விட்டோபா ஸ்வாமி ஒரு சந்யாசி ஆவார். அவர் போளூர் என்னும் ஊரில் வாழ்ந்தார் ஸ்வாமிகளுக்கு விட்டோபாவின்மேல் தீவிரமான பக்தியும், அன்பும் உண்டு மனித குலத்தின்மேல், விட்டோபாவிற்கு இருக்கும் அன்பைக் கண்டு நம் ஸ்வாமிகளுக்கு அவரை மிகவும் பிடிக்கும். ஒரு நாள் காலை ஆறு மணிக்குச் சேஷாத்ரி ஸ்வாமிகள் வானத்தைச் சுட்டிக் காண்பித்து, ”அதோ விட்டோபா போகிறார்” என்று கூறினார். அவரைச்சுற்றி இருந்தவர்களுக்கு அவர் சொன்னதன் பொருள் அப்பொழுது புரியவில்லை என்றாலும், பதினோரு மணிக்குத் தபால் தந்தி மூலம் அந்தச் செய்தி கிடைத்தது. அதில் விட்டோபா ஸ்வாமி, அன்று காலை ஆறுமணிக்கு இறந்து விட்டார் என்ற வாசகம் அந்தத் தந்தியில் இருந்தது. எங்கிருந்தோ இந்த உலகத்தின் ஒரு பகுதியிலிருந்து, ஒளிபரப்பும் நிகழ்ச்சியைத் தொலைக்காட்சிப் பெட்டியில், நாம் காண்பது போல, சகல ஜீவராசிகளுக்கும் தலைவனான சிவன், நமது ஸ்வாமியின் உருவமாக இருப்பதால், எதையும் தொலைநோக்குப் பார்வையில் அவரால் பார்க்க இயலும்!

சமதிருஷ்டி பாவம்!

சமதிருஷ்டி பாவம் சேஷாத்ரி ஸ்வாமிகளின் தனிச்சிறப்பு. ஏழை, பணக்காரன், படித்தவர்கள், பாமரர்கள், மனிதன், விலங்கு மற்றும் இன வேறுபாடு என்று ஆயிரக்கணக்கான பாகுபாடுகள் நிறைந்த இவ்வுலகத்திலே, எல்லாவற்றையும் மறந்து, ஒரே ஆத்மாவாக, சமரச சன்மார்க்க நிலையைக் கடைப்பிடித்துப் பார்க்க வேண்டும் என்று கூறுவார். பலதரப்பட்ட மக்களை, எவ்வித பாகுபாடும் இன்றி நடத்தும், ஸ்வாமிகளின் இந்த உயரிய குணத்தைப் பற்றி, சென்ற அத்தியாயத்தில் விவரமாகக் கூறியிருக்கிறோம்.

ஒருசமயம், ஸ்வாமிகளுக்கு என்று வைத்திருந்த பாலை, பூனை ஓன்று குடித்துவிட்டது. குடித்த பால்கிண்ணத்தை எடுப்பதற்குள், சேஷாத்ரி ஸ்வாமிகள் அங்கே வந்து, மீதியிருந்த பாலைக் குடித்து விட்டார். அங்கு சுற்றி நின்றிருந்த பக்தர்களும் எல்லோரும் தடுத்தபோது, ஸ்வாமிகள், ”எல்லா உயிர்களும் ஓன்று தான். மனித மனம் தான் அதை வேறுபடுத்துகிறது,” என்று அமைதியாகக் கூறினார்.

ஒரு சர்ப்பத்தைப்பற்றிய நிகழ்ச்சியை இங்கு கூறவேண்டும். ஒருநாள் ஸ்வாமிகள் உட்கார்ந்து இருக்கும்பொழுது, பக்கத்திலிருந்த சுவரிலிருந்து, சர்ப்பம் ஓன்று அவருடைய கழுத்தைச் சுற்றி வந்து அவருடைய முகத்திற்குக் குடைபிடித்தது. பீதி அடைந்த மக்கள், அதைத் துரத்த முயலும்பொழுது, அதைத் தொடக்கூடாது என்றும், அதை ஒன்றும் செய்யவேண்டாம்” என்றும் கூறினார். எல்லா விலங்கினங்களிடமும் ஸ்வாமிகளுக்கு ஒரேவிதமான அன்புதான்.

ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

– ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் மகாத்மியம்

========================================================

உங்களுக்காக உங்களை நம்பி ஒரு தளம்…

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.
Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

==========================================================

நல்வாழ்வுக்கு சில டிப்ஸ் – 29

அழுகிய தேங்காய் அபசகுனம் அல்ல!

– சுராஜ் ஹிந்து

பகவானால் படைக்கப்பட்ட முக்கியப் பொருள் தேங்காய். ஒரு கண், இரண்டு கண், மூன்று கண் என தேங்காய் உண்டு. கண் நரம்பு இல்லாத தேங்காய் கிடைக்காததால் கன்னியாகுமரி பகவதி அம்மன் திருமணம் ஆகாமல் நிற்பதாக சாஸ்திரம் கூறுகிறது. ஆகவே

ஒரு கண் தேங்காய் பிரம்மனாகவும், இரண்டு கண் தேங்காய் லஷ்மியாகவும், மூன்று கண் தேங்காய் சிவனாகவும் போற்றப்படுகிறது.

இறைவனுக்கு நம் உள்ளத்தின் சுத்தத்தைக் காண்பிக்க தேங்காயில் சில சகுனங்கள் உண்டு.

தேங்காய் உடைக்கும் பொழுது அழுகி இருந்தால் தேவையில்லாத பயம், குழப்பம், கலக்கம் & ஏமாற்றம் அடைந்ததாக எண்ணிக்கொள்வாா்கள்

ஒரு சிலா் நடக்கக்கூடாதது நடந்துவிட்டதை போல தானும் பயந்து மற்றவா்களையும் பயமுறுத்துவாா்கள். ஆனால் அழுகிய தேங்காய் ஆனந்தத்தின் அறிகுறி. அழுகிய அனைத்து தேங்காயும் காரிய சித்தி ஆவதன் அறிகுறி. ஒரு துணி எடுத்து நீரில் நனைத்து அழுக்கை துடைத்து பிழிந்தால் அழுக்கு நீர் தான் வரும் அதே போல தான் உங்கள் பீடை, சரீர பீடை, துா்சொப்னங்கள், கண்திருஷ்டி, ரோகம், ஆகியவை அனைத்தும் பிராா்த்தனை செய்து உடைக்கும் தேங்காயில் விலகியதன் அறிகுறியை காட்டுகிறது.

முழு கொப்பரையாக இருந்தால் : சுபகாரியம் உண்டாகும், புத்திர பாக்யம் உண்டாகும், பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்

பூ இருந்தால் : ரோக நாஸ்தி, எதிர்பாராத வரவு, சொர்ண லாபம்.

நீங்கள் உங்களையோ அல்லது இறைவனையோ முழுமையாக நம்பினால் போதும் மற்றவை அனைத்தும் நல்லபடி சுபமாகவே நடக்கும்.

டிப்ஸ் தொடரும்…

==========================================================

Earlier articles on Seshadri Swamigal…

அது சாதாரண கை அல்ல தங்கக்கை!

குரு அடித்தாலும் அணைத்தாலும் அது கருணை தானே? – ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் லீலை!!

“எதற்கும் கவலைப்படாதே. உன்னுடைய மேலதிகாரியால் உனக்கு எந்த விதத் தொந்தரவும் ஏற்படாது!”

யாரை குருவாக ஏற்றுக்கொள்வது? உண்மையான குருவை எப்படி அடையாளம் காண்பது?

“மூன்று முறை அழைத்தால் போதும், இந்தப் பிச்சைக்காரன் ஓடி வந்து உதவி செய்வான்!” – யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி SPL

========================================================

Also check from our archives…

காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!

தீயவர்கள் சுகப்படுவதும் நல்லவர்கள் துன்பப்படுவதும் ஏன்?

தீராத வினைகளை தீர்க்கும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் – A must visit place!

பித்தனாகியும் பரமனைப் பாடிய ஸ்ரீ அப்பைய தீட்சிதர் திவ்ய சரிதம் + அதிஷ்டான தரிசனம்!

ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்! ஒரு நேரடி அனுபவம்!!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

பொருள் தெரியாமல் ஒரு ஸ்லோகத்தை உச்சரிப்பதால் பலன் உண்டா? MUST READ

திருவாரூர் தந்த திருஞானசம்பந்தருடன் நம் தியாகேசர் தரிசனம்!

ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)

உருகிய பக்தை… வீட்டுக்கே வந்த நடராஜர்! உண்மை சம்பவம்!!

ஆங்கிலேயே கலெக்டருக்கு அருள்புரிந்த அன்னை மீனாக்ஷி! சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

சிவபெருமான் தன் பக்தனுக்கு காட்டிய கண்ணனின் ராசலீலை (உண்மை சம்பவம்)!

வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

ஆருத்ரா தரிசனம் – சிவபெருமானின் திருநடனத்தை காண ஆதிசேடனை அனுப்பிய திருமால்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்! – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்!

‘என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே!’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி UPDATE!

வாழ்வுக்கு வழிகாட்டும் 27 நட்சத்திரங்களுக்குரிய பரிகாரத் திருத்தலங்கள்!

உங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியுமா?

பிறந்தநாளன்று நாம் செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதவை என்ன?

எங்கே ‘தேடல்’ உள்ளதோ அங்கே தோல்வியில்லை!

சிவன் கோவிலில் காணக் கிடைக்காத அனுமன் சன்னதியுடன் கூடிய மூல நட்சத்திர பரிகாரத் தலம்

ஜொலிக்கப்போகும் சிங்கீஸ்வரர் – ஓரடி எடுத்து வைத்தவர்களிடம் நூறடி எடுத்து வைத்த ஈசனின் பெருங்கருணை!!

பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!

கைமேல் பலனைத் தந்த ‘வேல்மாறல்’ பாராயணம் — யாமிருக்க பயமேன்? (Part 4)

இழந்த வாழ்க்கையை மீட்டுத் தந்த ‘வேல்மாறல்’ — யாமிருக்க பயமேன்? (Part 3)

வினைகளை தகர்க்கும் ‘வேல்மாறல்’ எனும் மஹாமந்த்ரம் — யாமிருக்க பயமேன்? (Part 2)

வேல் தீர்க்காத வினை உண்டா? உண்மை சம்பவம்! — யாமிருக்க பயமேன்? (Part 1)

உன்னை தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்!

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

கருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் ? தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2

ஏற்பது இங்கே இகழ்ச்சியல்ல!

நல்லதை நினைத்தால் போதும்… நடத்திக்கொள்ள ஆண்டவன் தயார்!

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

ஏழை திருமணத்துக்கு உதவிய வள்ளல் & வாரியாரின் வாழ்வும் வாக்கும் – தமிழ் புத்தாண்டு SPL & வீடியோ!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

==========================================================

[END]

One thought on “வான்மழையா அருள்மழையா? ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஜயந்தி SPL

  1. Nice datshan of swamy. Good narration. The tips on coxunut is wonderful. It explains be positive. If god is with us who can be against us. Wonderful ji

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *