Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, December 6, 2024
Please specify the group
Home > Featured > ஈசனருளும் குபேர சம்பத்தும் பெற ‘அடியார்க்கு நல்லான்’ காட்டும் பாதை – Rightmantra Prayer Club

ஈசனருளும் குபேர சம்பத்தும் பெற ‘அடியார்க்கு நல்லான்’ காட்டும் பாதை – Rightmantra Prayer Club

print
துரை நகரில் அடியார்க்கு நல்லான் என்ற வேளாளன் ஒருவன் இருந்தான். மதுரையில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுள் மீது பெரும் பக்தியும் அன்பும் செலுத்தி வாழ்ந்து வந்த அவன், ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல ஊதியம் இல்லை உயிர்க்கு’ என்னும் குறள்நெறிப்படி பலவித தான தருமங்களைச் செய்து வந்தான். அவன் மனைவி தருமசீலை கணவனுக்கு ஏற்ற மனைவியாக  அன்பிலும், அருளிலும், கற்பிலும் சிறந்தவளாக திகழ்ந்தாள்.

உழவுத் தொழில் செய்து வந்த அடியார்க்கு நல்லான், ஆறில் ஒரு பங்கை அரசனுக்கு அளித்துவிட்டு, மீதியை சிவனடியார்க்கு உணவு அளிப்பதற்கே செலவிட்டதால், அவனுடைய செல்வம் மேலும் பெருகியது.

ஊரார் அனைவரும் அவன் ஈகைத் திறத்தையம் சிவனடியார்கள் பால் அவன் வைத்துள்ள அன்பையும் உணராமல், “அவனுக்கென்ன வசதியிருக்கு தான தர்மம் செயகிறான்” என்று பேசுவாராயினர்.

செல்வம் குறைந்து விட்டாலும் அடியார்க்கு நல்லான் தன்னுடைய இனிய பண்பிலிருந்து தவற மாட்டான் என்ற உண்மையை சோமசுந்தரம் பெருமான் உலகுக்கு உணர்த்த விரும்பினார்.

அதனால் அவனுடைய நன்செய் நிலங்களில் விளைச்சல் குறையும்படி செய்தார். எனவே அடியார்க்கு நல்லானால் முன்பைப் போல அடியார்க்கு உணவு படைக்க முடியவில்லை.

இருப்பினும் நல்லான் சிறிதும் கவலைப்படாமல் வட்டி கொடுத்து கடன் வாங்கி, சிவனடியார்க்கு உணவு படைத்தான்.

சில நாட்களில் கடன் வாங்கவும் வழியில்லாமல் போனதால், சிவனடியார்களுக்கு உணவு அளிக்க இயலவில்லை. அதனால் மிகவும் வருத்தமடைந்த அடியார்க்கு நல்லான் சாப்பிடாமல் மனைவியுடன் பட்டினி கிடந்தான்.

பிறருக்கு உதவ இயலாத நிலையையே ஒப்புரவாளர்கள் வறுமை என்று கருதுவார்களாம். வாழ்வாங்கு வாழ்ந்த அடியார்க்கு நல்லான் ஒரு வேளை சோறு கூட உண்ண முடியாத நிலைக்கு வந்தபோது கூட வருந்தவில்லை. ஆனால், நம்மால் அடியார்களுக்களு அமுது படைக்க இயலவில்லையே என்று தனது இயலாமையை நினைத்துத் தான் வருந்தினான்.

பொருள் வற்றியபோது கூட தான் வறுமையடைந்தோம் என்று நினைக்காத அடியார்க்கு நல்லான் தன்னை நாடி யாசகம் கேட்டு வருவோருக்கு எதுவும் கொடுக்க முடியாத இந்த நிலையையே வறுமையாக கருதி துயறுற்றான்.

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை (குறள் 230)

சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை. ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச்சாதலும் இனியதே என்ற குறள் கூறும் கருத்துப்படி அடியார்க்கு நல்லான் ஒரு நாள் ஒரு முடிவு மேற்கொண்டான்.

”இந்த உடம்பு ஒரு நாள் அழிய வேண்டிய உடம்புதான். தரும காரியம் செய்யாமல் இந்த உடம்பு இருந்து என்ன பயன்? மனைவியுடன் எம்பெருமானிடம் சென்று முறையிட்டுவிட்டு, உயிர் விடுவதே சிறந்தது” என்று உறுதி கொண்டு அடியார்க்கு நல்லான் மனைவியுடன் மதுரையில் எழுந்தருளிருக்கும் சோமசுந்தரக் கடவுளின் ஆலயம் சென்றான்.

”அமுதம் போல் விஷத்தை உண்டு, தேவர்களைக் காத்த பெருமானே! நிலங்களில் விளைச்சல் குறைந்து விட்டதால், சிவனடியார்களுக்கு உணவு அளிக்க இயலவில்லை. கடன் தருவதற்கும் எவரையும் காணோம். கடன் கொடுப்பவர்களைத் தேவரீரே காட்டியருள வேண்டும். இல்லாவிடில் உன் சன்னிதி முன்னே எங்கள் உயிரை விட்டுவிடுவோம்” என்று முறையிட்டான்.

அவனது ஈகைத் திறத்தையும் பக்தியையும் கண்டு மனமிரங்கிய சோமசுந்தரப் பெருமான், அசரீரியாக தோன்றி, ”வேளாளப் பெருந்தகையே! பயப்படாதே! உன் வீட்டில் நாம் உலவாக்கோட்டை ஓன்று வைத்துள்ளோம். எடுக்க எடுக்கக் குறையாத அந்த உலவாக்கோட்டையிலிருந்து, தேவையான அரிசி எடுத்து, சிவனடியார்க்கு உணவு அளிப்பதுடன், மற்ற தருமங்களையும் நீ செய்யக் கடவாய். இறுதியில் உனக்கு சிவலோகப் ப்ராப்தி அளிப்போம்!”

அதைக்கேட்டு மிகுந்த ஆனந்தமும் வியப்பும் அடைந்த அடியார்க்கு நல்லான் மனைவியுடன் வீட்டை அடைந்தான். அங்கு, எடுக்க எடுக்கக் குறையாதிருக்குமாறு எம்பெருமான் அருளிய அரிசிக்கோட்டை இருப்பது கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தான்.

உலவாக்கோட்டையை நாள்தோறும், மலர், சந்தனம், தூபதீபம் ஆகியவற்றால் வழிபட்டுப், பின்னர் உணவு சமைப்பதற்காகவும், காய்கறிகள் வாங்குவதற்காகவும் தேவையான அரிசியை எடுத்துக் கொள்வான்.

சிவனடியார்க்கும், அந்தணருக்கும், தென்புலவர்களுக்கும், தெய்வங்களுக்கும், சுற்றத்தாருக்கும், விருந்தினர்களுக்கும், நண்பர்களுக்கும், கணக்கில்லாமல் அள்ளிக் கொடுத்தான். ஈஸ்வர பிரசாதமும் அருளும் கிடைத்தபடியால் அதன் பின்னர் வறுமையின்றி குபேரனைப் போல் வாழ்ந்த வந்தான் அடியார்க்கு நல்லான்.

இவ்வாறு அடியார்க்கு நல்லான் பலவருடங்கள் தருமங்கள் செய்து, பின் தன் மனைவி, சுற்றத்தார் ஆகியோருடன் சிவரூபம் பெற்றுச் சிவனடியை அடைந்தான்.

– திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘உலவாக்கோட்டை அருளல்’ படலம் இது.

இந்த ஒரு கதையில் தான் எத்தனை எத்தனை நீதி… அப்பப்பா… மலைக்க வைக்கிறது அடியார்க்கு நல்லான் வரலாறு? பெயரே எத்தனை அழகாக இருக்கிறது பாருங்கள்.

இந்த ஒரு பதிவில் மட்டும் நம்மால் பத்துக்கும் மேற்பட்ட திருக்குறளை உதாரணம் காட்ட இயலும். அப்படி ஒரு திருக்குறள் வாழ்வு அடியார்க்கு நல்லான் வாழ்ந்தது. அதனால் தான் எம்பெருமான் உலாவக்கோட்டையையே அவனுக்கு அருளியிருக்கிறார்.

மேலும் தனது பசியையும் தீர்த்து அடியார்கள் பசியையும் தீர்த்த அந்த உலவாக்கோட்டையை அவன் எவ்விதம் பயபக்தியோடு ஆராதித்தான் என்பதையும் பார்க்கவேண்டும். மேலும் தேவையான அளவே அவன் அந்த உலவாக்கோட்டையிலிருந்து அரிசியை எடுத்தான் என்பதையும் கவனிக்கவேண்டும்.

அன்பும் அருளும் இருக்கும் இடத்தில் ஈசனருளுக்கு குறைவேது?

அடியார்க்கு நல்லான் என்னும் உழவனின் கதை இந்தப் பதிவில் மிகப் பொருத்தமாக இடம்பெற்றிருப்பது ஈஸ்வர ஆஞ்ஞையே தவிர வேறில்லை. காரணம் இன்ன கதை தான் இடம்பெறவேண்டும் என்று பதிவு தயாரிக்க அமர்ந்தபோது முடிவு செய்யவேயில்லை. இருப்பினும் அடியார்க்கு நல்லான் கதையே அமைந்திருப்பது அவனருள் தான்.

அடியார்க்கு நல்லானுக்கு ஈசன் அருள் புரிந்த இந்த வரலாற்றை படிக்கும் யாவருக்கும் அடியார்க்கு நல்லான் போலவே குறைவற்ற செல்வமும், ஈஸ்வர அனுக்கிரகமும் கிடைக்கும் என்பது உறுதி.

வேண்டத்தக்கது அறிவாய் நீ
வேண்ட முழுதுந் தருவோய் நீ
வேண்டும் அயன் மாய்கரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயாதருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டினல்லால்
வேண்டும் பரிசொன்றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே
– மாணிக்க வாசகர்

==========================================================

நமது பிரார்த்தனை பதிவின் கட்டமைப்பு! MUST READ

பிரார்த்தனை பதிவுகள் ஒரு வகையில் THERAPEUTIC MYTH போல. இவற்றை படிப்பதே சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து படிப்பவர்களுக்கு விடுதலை அளிக்கக்கூடும். அந்த வகையில் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவும் கவனமாக தயாரிக்கப்படுகிறது.

1) முதலில் இறைவனின் பெருமையை கூறும் கதை அல்லது புராணச் சம்பவம்.

2) கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கு ஏற்ப, ஒரு கோவிலின் கோபுரத்தின் படம்.

3) நம் திருமுறையிலிருந்து ஒரு பாடல்!

4) அடுத்து பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் அருளாளரைப் பற்றிய குறிப்பு.

5) அதற்கு அடுத்து சமர்பிக்கப்படும் பிரார்த்தனைகள்.

6) அதற்கு பிறகு, பொதுப் பிரார்த்தனை. நமது கூட்டுப் பிரார்த்தனையை வலிமையுள்ளதாக ஆக்கும் அம்சங்களில் இது முக்கியமான ஒன்று. காரணம், நமது பிரச்னைகளுக்காக மட்டுமல்லாது பொதுப் பிரச்சனைகள் மற்றும் தேசத்தின் நலன் குறித்தும் பிரார்த்தனை செய்வதால் கூட்டுப் பிரார்த்தனைக்கு உண்மையான அர்த்தம் கிடைத்துவிடும்.

7) அதற்கு பிறகு CONFESSION. இதுவரை நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு, இனி அதை செய்யாதிருக்கும் வண்ணம் இறைவனின் திருவருளை வேண்டுவது.

ஆக, இத்தனை மகத்துவமான விஷயங்களை ஒருவர் படித்தாலே அவருக்கு பாதிப் பிரச்சனைகள் தீர்ந்தது போல. மேற்கூறிய பிரார்த்தனையை சமர்பித்துள்ள வாசகர்கள் தவிர, பிறர் இதை படிக்கும்போதும் அவர்கள் பிரார்த்தனை செய்யும்போதும் அவர்களுக்கும் நன்மை விளையும் என்று சொல்லவேண்டுமா என்ன?

நீங்களும் இந்த பிரார்த்தனையில் பங்கேற்று, உங்கள் சுற்றம் மற்றும் நட்பு வட்டங்களிலும் இதை கொண்டு சென்று இந்த அரிய இறைத்தொண்டில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.

==========================================================

ஒரு முக்கியமான விஷயம்!

பிரார்த்தனை கோரிக்கை அனுப்பும் வாசகர்கள் அவசியம் தங்கள் கோரிக்கையை ஓரிரு வரிகளில் அனுப்பாமல் சற்று விரிவாக அனுப்பவும். அவசியம் பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் இவற்றை குறிப்பிடவும். (ராசி, நட்சத்திர விபரங்கள் தளத்தில் பிரசுரிக்கப்படமாட்டாது. கோவிலில் அர்ச்சனை செய்யவே இந்த விபரங்கள் கேட்கப்படுகிறது!)

கோரிக்கை குறித்த சந்தேகங்கள் எழும்போது பதிவை தயாரிக்க சிரமமாக உள்ளது. எனவே அலைபேசி எண்ணை அவசியம் குறிப்படவேண்டும். அலைபேசி எண் இன்றி வரும் எந்த பிரார்த்தனை கோரிக்கையும் / மின்னஞ்சலும் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 

நன்றி!

==========================================================

நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…

முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : திருப்புகழ் & திருமுறை சொற்பொழிவாளர் சிவத்திரு. வேதகிரி அவர்கள்.

தேவாரமும் திருப்புகழும் இரு கண்களாக கொண்டவர் வேதகிரி அவர்கள். வேதகிரி ஐயாவைப் பற்றிய அறிமுகம் நம் வாசகர்களுக்கு தேவையில்லை. இவரைப் பற்றி தனிப் பதிவே அளித்திருக்கிறோம். நமது பாரதி விழாவுக்கு தலைமை ஏற்றவர்.

தேவாரம், திருப்புகழ் பற்றிய விளக்கவுரை மற்றும் சொற்பொழிவுகளில் பிரமாதப்படுத்தி வரும் வேதகிரி ஐயா அவர்கள் அடிப்படையில் ஒரு வைணவர். இதுவரை பல்வேறு இடங்களில் ஐயா நிகழ்த்திய சொற்பொழிவுகளின் எண்ணிக்கை மட்டும் 2500 ஐ தாண்டும். பழகுதற்கு எளியவரும், பண்பில் சிறந்தவருமான வேதகிரி ஐயா அவர்கள் நமக்கு கிடைத்த சைவக் கருவூலம் என்றால் மிகையாகாது.

இந்த வார பிரார்த்தனை கிளப்புக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது மகிழ்ச்சியுடன் இசைந்தார்.

அடுத்து மூன்று வாரங்களுக்கு இந்த பிரார்த்தனை ஆன்லைனில் இருக்கும். ஐயா அவர்கள் பிரார்த்தனையை பிரார்த்தனை நேரத்தில் கோவிலில் செய்வதோடு அனைவரின் பெயர்களுக்கு அர்ச்சனை செய்வதாகவும் கூறியிருக்கிறார்.

அவருக்கு நம் நன்றி.

வரும் ஜனவரி 20 ஆம் தேதி உழவு செழிக்க பசுமை தழைக்க ஐயாவை வைத்து சைதை சௌந்தரேஸ்வரர் கோவிலில் ஒரு திருப்புகழ் நிகழ்ச்சி எளிமையாக ஏற்பாடு செய்திருக்கிறோம். (விபரங்கள் பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ளது!) அது சமயம் இங்கு பிரார்த்தனை சமர்பித்திருக்கும் பிரார்த்தனையாளர்களுக்கும் பிரார்த்தனை செய்யப்படும்.

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே!

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருப்பவர்கள் பற்றிய சிறு அறிமுகம்…

முதல் பிரார்த்தனையை சமர்பித்திருக்கும் அன்பர் பாலமுரளி அவர்கள் சமீபத்தில் தான் நமக்கு அறிமுகமாகியிருக்கிறார். அவருடைய கோரிக்கைகளை படிக்கும்போதே கண்களில் நீர் பனிக்கிறது. அவருடைய நல்ல மனமும் அவரது கோரிக்கைகளில் தென்படுகிறது. விரைவில் அவர் கோரிக்கைகள் நிறைவேறி அவர் சௌக்கியமாக சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டுகிறோம்.

அடித்து சத்யபாமா என்பவர் அளித்திருக்கும் கோரிக்கை அவர் அக்காள் மகனுக்காக. நமது தளத்தின் பேரம்பாக்கம் நரசிம்மர் கோவில் பற்றிய பதிவை பார்த்துவிட்டு நமது தளத்திற்கு வாசகரானார். பிரார்த்தனை கிளப் பற்றி தெரிந்ததும் சற்று தாமதமானாலும் பலன் கிடைக்கட்டும் என்கிற நோக்கில் அனுப்பியிருக்கிறார். விரைவில் ரோஹித் நலம் பெற்று முன்னைவிட அற்புதமாக வலம் வருவான் என்பதில் ஐயமில்லை.

அடுத்தவர் மதுரையிலிருந்து மீனாக்ஷி சுந்தரம் என்பவர். நல்ல கல்வி காற்றும் படிப்புக்கேற்ற வேலை இவருக்கு கிடைக்கவில்லை. இவருக்கும் திருமணமாகவில்லை. இவரது தங்கைக்கும் ஆகவில்லை என்பதை அறிந்தபோது மிகவும் வேதனைப்பட்டோம். இருப்பினும் எஞ்சியுள்ள வாழ்நாளையாவது அண்ணனும் தங்கையும் மனநிம்மதியுடனும் தேக ஆரோக்கியத்துடனும் சுபிக்ஷத்துடனும் கழிக்க இறைவன் அருள்புரியவேண்டும்.

நண்பர் நாகராஜன் ஏகாம்பரம் நம்மை கௌரவித்தபோது…

அடுத்த கோரிக்கை நண்பர் நாகராஜன் ஏகாம்பரம். நாகராஜன் ஏகாம்பரம் அவர்கள் நமது நண்பர், நமது உழவாரப்பணிக் குழு உறுப்பினர். சித்துக்காட்டில் சுந்தரராஜ பெருமாள் கோவில் உழவாரப்பணியில் மிக அதிக நேரம் செலவிட்டார். நாமெல்லாம் பணியை முடித்துவிட்டு மதியம் கிளம்பிவிட இவருக்கு மட்டும் மாலை ஆறு மணிக்கு மேல் ஆனது. எலக்ட்ரிக்கல் பணிகளை இவர் வசம் ஒப்படைத்திருந்தோம். அருகே இருந்து எலக்ட்ரீஷியனை வேலை வாங்கவேண்டும் என்கிற சூழல் ஏற்பட்டபோது நான் முழுமையாக இருந்து பணியை முடிக்கிறேன் என்று கூறி சொன்னபடி அன்று முழுதும் கோவிலில் இருந்தார். நண்பர் முல்லைவனம் போலவே ஐவரும் பசுமைக்காக பாடுபட்டு வருகிறார். பசுமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் இவர் மரம் நடுவதன் அவசியத்தை அனைவருக்கும் கூறி வருகிறார். ஒரு என்.ஜி.ஓ.வும் நடத்தி வருகிறார். “இவ்வளவு செயகிறீர்களே… உங்களுக்கு ஏதாவது செய்யவிரும்புகிறேன்” என்று கூறி நமது சமீபத்திய பாரதி விழாவில் மேடையேறி நம்மை கௌரவித்தார்.

இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் வேலை திருப்தி அளிக்காததால் நல்ல உத்தியோகம் வேண்டி இங்கு பிரார்த்தனை கோரிக்கை சமர்பித்திருக்கிறார். இவர் இந்த கோரிக்கை பற்றி நம்மிடம் தெரிவித்தபோது நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, திருச்சி திருவெறும்பூர் சென்று ஏறும்பீஸ்வரரை தரிசித்துவிட்டும் வந்திருக்கிறார். நல்ல வேலைக்காக பிரார்த்தனை கோரிக்கை சமர்பித்திருக்கும் அனைவருக்கும் நாம் இதையே கூறுகிறோம். (Please check : நல்லதொரு வேலை; இனியில்லை கவலை! இதோ ஒரு அருமையான பரிகாரத் தலம்!!)

அடுத்த கோரிக்கை சென்ற பிரார்த்தனையிலும் இடம் பெற்ற கோரிக்கைகளுள் ஒன்று தான். அதை சமர்பித்திருக்கும் நண்பர் கணேஷ்குமார் அவர்களை பற்றி போனவாரம் விரிவாக விளக்கியிருக்கிறோம். சில காரணங்களால் இந்த பிரார்த்தனையிலும் சேர்த்திருக்கிறோம்.

இங்கே பிரார்த்தனை சமர்பித்துள்ள பிரார்த்தனையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் பிரார்த்தனை இடம் பெற்ற இந்த பிரார்த்தனையோடு நிறுத்திவிடாமல் ஒவ்வொரு வாரமும் நீங்கள் இந்த கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்று ஒரு பத்து நிமிடம் (பிரதி ஞாயிறு 5.30 PM – 6.௦௦ PM வரை உங்களுக்கு எந்த பத்து நிமிடம் சௌகரியமோ அந்தப் பத்து நிமிடம்) மற்றவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்து வரவேண்டும். உங்கள கோரிக்கைகள் தானே நிறைவேறும்.

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

1) முடக்குவாத நோய் தீரவேண்டும்  புத்திர பாக்கியம் வேண்டும்!

ரைட்மந்த்ரா ஆசிரியர் சுந்தர் அவர்களுக்கு வணக்கம்

தாங்கள் முகநூலில் வெளியிடும் கருத்துக்கள் மற்றும் பணியை பார்த்து வருகிறேன். மிக்க சந்தோசம் தாங்கள் இறைபணி தொடர வாழத்துக்கள்.

தாங்கள் கூறியபடி கோரிக்கை அனுப்பியுள்ளேன். தயைகூர்ந்து எனக்காகவும் எனது மனைவிக்காகவும் குடும்ப அமைதிக்காகவும் உலகமக்கள் நன்றாயிருக்கவும் பிரார்த்திக்கவும்.

பெயர் : பாலமுரளி

வயது 37

8 வயது முதல் முடக்குவாத நோய் பாடாய்படுத்துகிறது. அவ்வப்போது நோய் உச்சமாகி படுத்தபடுக்கையாகி சாவின் விளிம்பை தொட்டு விட்டு தொட்டு விட்டு வருகிறேன். உடம்பில் நோயும் மனதில் பயமும் உள்ளது. நோயோடு போராடி போராடி மனதில் நம்பிக்கையே வற்றி விட்டது.

கோரிக்கை – நோய் தீர. தீர்காயுள் மனவலிமை மற்றும் தீராத கவலை விடுபட.

பெயர் : சிவசங்கரி

வயது 34

கோரிக்கை – குழந்தை பாக்கியம் வேண்டி

S.பாலமுரளி
மதுரை

2) Sister’s son injured in bike accident

Rightmantra friends and Prayer club members,

My sister’s son Rohith Kumar, age 20 years met with bike accident near Kanchipuram and in global hospital from March 11, 2016. He is ok now…but has to recover quickly. He is showing some improvement. Could you kindly pray for his recovery.

Thank you so much in advance.

With pranams
Sathyabama

3) Struggling for life and prosperity

Sir,

I am Meenakshi Sundaram from Madurai. I am B.Sc chemistry, M.A. English B.Ed English

I am sixth three years  old. Now suffering a lot financially. I am now seeking job. However I tried my best I could not get success

I am bachelor and my younger sister also unmarried.

We are two in our family. For day to day requirement I am suffering a lot. No income. Pl advise me how to get success to get job

If you are kind enough to guide me I will be thankful to you for my entire life

Thanking you

Meenakshi Sundaram,
Madurai

4) Want good job and growth

Dear Ji,

Greetings from Nagarajan Ekambaram!

This introduction is for RM readers. I am an ardent reader of Rightmantra and also member of our Uzhavarappani group. And trying to follow Rightmantra articles sincerely in daily life.

As the situation is not conducive here to continue in the present organisation, request you to add my name in this week’s prayer. Please pray for me to get a decent job with peacefulness in mind even after getting the same.

Nagarajan Ekambaram,
Avadi

5) மகனுக்கு நல்ல வேலை வேண்டும்!

சுந்தர்ஜி அவர்களுக்கு என் நமஸ்காரங்கள்.

ரைட்மந்த்ரா படிக்க ஆரம்பித்ததிலிருந்து பல நல்ல மாற்றங்கள் என் வாழ்வில் ஏற்பட்டிருக்கிறது. உங்கள் நூல்கள் அற்புதம். இத்துடன் என்னுடைய பிரார்த்தனை ஒன்றை சமர்பிக்கிறேன்.

என் மகன் செல்வன் பிரவீன் குமார்  (வயது 21) பி.டெக் கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்துவிட்டு நல்ல வேலைக்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு விரைவில் நல்ல ஊதியத்துடன் அவன் திறமைக்கேற்ற ஒரு நல்ல வேலை கிடைக்க பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
கணேஷ்குமார்,
செம்பொனார் கோவில்,
நாகை மாவட்டம் – 609305

* தாங்கள் கோரிக்கை அனுப்பி அது இன்னும் நம் மன்றத்தில் வெளியாகவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வாசக அன்பர்கள் மீண்டும் அந்த கோரிக்கையை – அதே மின்னஞ்சலை – அனுப்பவும். அல்லது நம்மை தொடர்புகொள்ளவும். நன்றி.

** அலைபேசி எண் இன்றி வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.

==========================================================

பொதுப் பிரார்த்தனை!

பசுமை தழைக்க வேண்டும்; விவசாயம் செழிக்க வேண்டும், விவசாயி வாழ வேண்டும்!

தமிழகத்தில் தினசரி செய்திகளாகி வரும் விவசாயிகள் தற்கொலை நிகழ்வுகள் ஏனோ மனதை மிகவும் பாதிக்கின்றன.

விவசாயிகளுக்காக ஆக்கப்பூர்வமாக என் அளவில் ஏதேனும் செய்ய நினைக்கிறேன். முன்பு செய்தும் இருக்கிறேன். நம் Rightmantra Prayer Club கூட்டுப் பிரார்த்தனையில் அடிக்கடி விவசாயிகள் நலன் மற்றும் உழவு குறித்த பிரார்த்தனைகள் நடைபெற்றதுண்டு.

ஆனால் தற்போதைய சூழ்நிலை மிகவும் கவலைக்குரியது. நம்மால் இயன்றதை ரைட்மந்த்ரா சார்பாக செய்ய முடிவு செய்திருக்கிறோம்.

நமக்கு மட்டுமல்ல நம் மக்கள் அனைவருக்கும் சோறிடும் விவசாயி அவன் நிம்மதியாக இல்லை. மழை பொழியவில்லை. கடன் வாங்கி விவசாயம் செய்தான் கடன் கட்ட வழியின்றி செத்து மடிகிறான்.

இதுவான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலக மெல்லாம்!

நம் பொது பிரார்த்தனை!

==========================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgதங்களுக்கும் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு உடற்பிணி, வேலை வாய்ப்பு, புத்திர சம்பத்து, நல்வாழ்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இங்கு சமர்பித்திருப்பவர்கள் அனைவருக்காகவும் இறைவனை வேண்டுவோம்.

நமக்கு சோறிடும் விவசாயியின் வாழ்க்கை சிறக்கவும் பசுமை தழைக்கவும், அவன் துயர்கள் யாவும் தீரவும் வான்முகில் வழாது பெய்யவும் இறைவனை வேண்டுவோம்.

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் சிவத்திரு வேதகிரி அவர்களின் தொண்டு சிறக்கவும், அவர் புகழ் பரவவும், அவரும் அவர் குடும்பத்தாரும், மகனும் எல்லா வளமும் நலனும் பெற்று வாழ அனைத்தும் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : 2017 ஜனவரி 8, 15 & 22 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 6.00 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

==========================================================

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை….

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

==========================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

==========================================================

Rightmantra Prayer Club

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

==========================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W:www.rightmantra.com

==========================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

==========================================================

சென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : ராமேஸ்வரத்தை சேர்ந்த தம்பி சங்கர் கணேஷ் சாஸ்திரி அவர்கள்!

சென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது?

சென்ற பிரார்த்தனைக்கு தலைமையேற்ற சங்கர் கணேஷ் சாஸ்திரி அவர்கள் முதல் வாரம் பிரார்த்தனை செய்ய இயலாத ஒரு நிலை. உறவினர் ஒருவர் மறைவின் காரணமாக வெளியூர் சென்றுவிட்டார். அடுத்த வாரம் திருநெல்வேலியில் உள்ள ஒரு பெருமாள் கோவிலிலும் அதற்கு அடுத்த வாரம் இராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்திலும் நமது பிரார்த்தனையாளர்களுக்காக பிரார்த்தனை செய்தார்.

ஸ்ரீ கொடியிடை நாயகி சமேத மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில், திருமுல்லைவாயல்

நாமும் இடையே சென்ற பல கோவில்களில் பிரார்த்தனையும் அர்ச்சனையும் செய்தோம். அது பற்றி வேறு ஒரு பதிவில் விரிவாக விளக்குகிறோம்.

அதற்கு முந்தைய பிரார்த்தனை தனிப்பதிவே அளிக்கும் அளவிற்கு குன்றத்தூர், கன்னியாகுமரி, சுசீந்திரம், ராமேஸ்வரம், தேரூர், அவினாசி உள்ளிட்ட பல தலங்களில் நடைபெற்றது. கீழ்கண்ட பதிவில் அதை விளக்கியிருக்கிறோம். அவசியம் அனைவரும் படிக்கவும். நன்றி!

குமரி முதல் ராமேஸ்வரம் வரை –  ஒரு பிரார்த்தனை பதிவின் பயணம்!

==========================================================

[END]

2 thoughts on “ஈசனருளும் குபேர சம்பத்தும் பெற ‘அடியார்க்கு நல்லான்’ காட்டும் பாதை – Rightmantra Prayer Club

  1. அடியார்க்கு நல்லான் வரலாறு, தன்னலம் கருதா சேவை, அன்னதானம் – பெருமைகளை அழகாக உணர்த்துகிறது.
    நமது கர்மவினை நீக்கும் சிறந்த வழி – நம்மால் இயன்றவரை தர்மமும், பிரார்த்தனையும் செய்வதே. பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கைகள் அனுப்பியவர்கள், மனக்கவலை நீங்கி வாழ்வில் வளம் பெற இறைவனை வேண்டுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *