எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம்முயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடமென நான் தெரிந்தேன்…
அந்த வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என்
சிந்தைமிக விழைந்ததாலோ!
– வள்ளலார்
பகவான் ஸ்ரீ ரமணர், சத்குரு சேஷாத்ரி சுவாமிகள், ஞானானந்தகிரி சுவாமிகள், மகா பெரியவா போன்ற ஞானிகள் எப்படி வாழ்ந்தார்கள் என்று கூறும் வரிகள் இவை.
இன்று ஸ்ரீ ரமண ஜயந்தி. எல்லாரும் மற்றவர்களை ஆராய முற்பட்ட காலத்தில், ‘நான் யார் என்று உன்னை நீயே கேட்டுப் பார். உன் பிறப்புக்கு அர்த்தம் புரியும். அதன் பின்னர் உனது பாதையும் பயணமும் சுலபமாகும்’ என்று சொன்னவர் பகவான் ஸ்ரீ ரமணர். ஒரு அப்பழுக்கற்ற துறவியாய், எளிமையாய் வாழ்ந்தவர் பகவான்.
‘ஆன்ம விசாரம்’ என்பது வாழ்வில் ஒரு மிக முக்கிய அங்கம். இதை செய்யாதவன் பிறப்பின் அர்த்தம் என்னவென்று கடைசிவரை அறியாமலே போய்விடுகிறான். பள்ளியில் சேர்பவன் எழுதப் படிக்க தெரியாமல் பள்ளியிறுதியை விட்டு வெளியேறுவதைப் போலத் தான் இது.
ரமண மகரிஷி தொடர்புடையப பதிவுகள் பார்க்க சாதரணமாகத் தான் தெரியும். ஆனால் ஒவ்வொன்றிலும் ஒளிந்திருக்கும் அர்த்தமும் ஆழமும் அப்பப்பா… இந்தப் பதிவில் முக்கனிகள் போல மூன்று சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
பதிவைப் படித்துவிட்டு மீண்டும் துவக்கத்தில் நாம் அளித்திருக்கும் வள்ளலாரின் பாடலை படியுங்கள். பதிவின் அர்த்தமும் புரியும். பாடலின் அர்த்தமும் புரியும்.
பசங்களுக்கு ரேஷன்
ஒருநாள் ஆசிரமத்தில் முறுக்குகள் செய்து பக்தர்கள் அனைவருக்கும் விநியோகித்து பகவானுக்கும் கொடுத்தார்கள். பகவான் அவைகளை சாப்பிட்டுவிட்டு தண்ணீர் பருகினார். பிறகு கொஞ்சம் வெளியே சென்று திரும்பினார். இதற்குள் சோபா பக்கத்தில் உள்ள ஜன்னல் அருகில் சில குரங்குகள் வந்து நின்றன.
பகவான் அவைகளை பார்த்து, “பசங்க வந்துட்ட, முறுக்கு கொடுத்தா நன்னா சாப்பிடுவா, போய்க் கொண்டு வாங்கோ” என்றார்.
ஸ்டோர் ரூம் சென்று திரும்பிய சேவகர், “குரங்குக்கெல்லாம் முறுக்கு கொடுக்குறது எப்படி முடியும்?” என்று திருப்பி அனுப்பியதாகக கூறினார்.
“ஓஹோ… நமக்கு கொடுக்கிறது மட்டும் எப்படி முடியறதாம்?” என்று கேட்டார் பகவான்.
ஒரு பக்தர், ‘ரேஷன் காலமில்லையா?” என்றார்.
பகவான், “ரேஷன் காலமா இருந்தா என்ன ஒய், நமக்கு மாதரம் இருக்கே! ஏன் அவாளுக்கு இல்லை ரேஷன். வேணுமின்னா அவாளுக்கும் ரேஷன் போடுங்கோ. நம்மைவிட அவா தான் ஜாஸ்தி ரசிச்சு சாப்பிடுறா. அவாளுக்கு இல்லாமல் நமக்கு மாத்ரம் எதுக்கு?
எல்லாரும் சாப்பிடறப்போ அந்த குழந்தைங்க எப்படி பாத்துக்கொண்டே இருக்கா பாருங்கோ!” என்றார்.
சிறிது நேரத்தில் அவர்கள் பங்கு வந்து சேர்ந்தது. அன்று முதல் அவர்கள் பங்கை டப்பைல் எடுத்து வைத்த பிறகே பகவான் எதையும் ஏற்றுக்கொள்ளலானார்.
========================================================
Don’t miss this :
தெய்வங்களாலும் முடியாததை யார் சாதிப்பார்கள்?
யாரை குருவாக ஏற்றுக்கொள்வது? உண்மையான குருவை எப்படி அடையாளம் காண்பது?
========================================================
உனக்கு பகவான் எனக்கு இது
அப்போது ரேஷன் காலம். ஆசிரமத்தில் இரவில் எல்லோருக்கும் அரிசி சாதம் வழங்கமுடியவில்லை. அரிசி சாதத்திற்கு பதிலாக கோதுமை சாதம் அனைவருக்கும் பரிமாறினார்கள். பகவானுக்கும் கோதுமை சாதமே பரிமாறப்பட்டது. சில நாட்கள் சென்றபின் ஒருமுறை இரவு பகவானுக்கு அரிசி சாதம் பரிமாறினார்கள்.
பகவான் அங்கிருந்த சின்னசுவாமியைக் கூப்பிட்டு ”ஏன் இதுக்கு மட்டும் அரிசி சாதம், மத்தவா எல்லோருக்கும் கோதுமை சாதம்?” என்று கேட்டார். ‘கோதுமை சூடு உங்களுக்கு ஆகாது’ என்றார் சின்னசுவாமி. பகவான் ”ஓஹோ நீ பெரிய டாக்டரோ! எல்லோருக்கும் என்னவோ அதே இதுக்கும் போடு. இந்த பேதம் பாக்கறத இத்தோட விட்டுடு” என்றார் கடுமையாக.
மோட்ச மந்திரம்
‘நூல் திரட்டு’ வெளிவந்தபோது பெரிய விஷேசமாக இருந்தது. எல்லோரும் மகிழ்வுடன் அப்புத்தகத்தை வாங்கினார்கள். ஹாலில் எல்லோர் கையிலும் புத்தகம் இருந்தது. சின்னசுவாமி நிர்வாக விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவர். ஒருவருக்கும் ஓசி கொடுக்கமாட்டார். ஆசிரமத்தில் சேவை புரிபவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. எல்லோரும் காசு கொடுத்துத் தான் வாங்க வேண்டும்.
‘நூல் திரட்டு’ வெளிவந்த தினத்தன்று பகவான் தன்னிடம் இருந்த ஒரு நோட்டுப் புத்தகத்தில் நூல் திரட்டை எழுதத் தொடங்கினார். அச்சுப் போன்ற கையெழுத்தில் மெதுவாக நேரம் வாய்க்கும் போதெல்லாம் எழுதிய வண்ணம் இருந்தார். யாருக்கும் ஏன் என்று புரியவில்லை. பகவானும் கூறவில்லை. ”நூல் திரட்டு” நிறைவுக்கு வந்ததும் பகவான் தன்னுடைய சேவகர் சிவானந்தத்தைப் பார்த்து, ”சிவானந்தம்! இங்கே வா! நீ காசுக்கு எங்கே போவே? நானே இதை எழுதியிருக்கிறேன். வச்சுக்கோ!” என்றார்.
மற்ற சேவகர்கள் எல்லோரும் பணம் இருந்ததால் ‘நூல்திரட்டு’ வெளி வந்த அன்றே வாங்கியிருந்தனர். சிவானந்த சுவாமியால் வாங்க இயலவில்லை. சிவானந்த சுவாமி கிராமத்துக்காரர் ஆனதால் ஆத்மீக சாதகராக யாரும் அவரைப் பார்ப்பதில்லை. பகவான் கைப்பட தன்னுடைய உபதேசம் முழுவதையும் எழுதித் தந்து அவரது ஆத்மீகத் தன்மையை மதித்தது சிவானந்த சுவாமியை உணர்ச்சி வசப்பட வைத்தது.
மிகவும் உணர்ச்சி வசத்துடன் சிவானந்த சுவாமி பகவானிடம் நோட்டைப் பெற்றுக்கொண்டு, ‘பகவானே! எனக்கு மோட்சம் கிடைக்கற மாதிரி விசேசமா ஒரு மந்திரம் உபதேசம் பண்ணுங்க. நான் எப்பவும் அதை ஜெபம் பண்றேன்’ என்றார்.
”உனக்கு நீயே உண்மையாய் இரு” என்றார் பகவான்.
– ரமண திருவிளையாடற் திரட்டு ¶¶
=========================================================
உழவாரப்பணி அறிவிப்பு!
நமது தளத்தின் வைகுண்ட ஏகாதசி சிறப்பு உழவாரப்பணி குன்றத்தூர் அடிவாரத்தில் உள்ள திருஊரகப் பெருமாள் கோவிலில் ஜனவரி 7, 2017 சனிக்கிழமை அன்று நடைபெறும். (காலை 7.00 – 12.30 வரை). பணியில் பங்கேற்க விரும்பும் அன்பர்கள் நமக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். வரவிரும்புகிறவர்கள் காலை 7.30 க்குள் நேரடியாக ஆலயத்திற்கு வந்துவிடவேண்டும். நன்றி.
விபரங்களுக்கு : ரைட்மந்த்ரா சுந்தர் | M : 98401 69215 | E : editor@rightmantra.com
=========================================================
வாசகர்களின் பங்களிப்பை கொண்டே இத்தளம் நடத்தப்படுகிறது!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Support us in our mission. Donate us liberally.
Our A/c Details
Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?
==========================================================
For earlier episodes…
குரு வார்த்தையே துன்பம் தீர்க்கும் அருமருந்து!
ஞானிகளை சரணடைவதால் நம் தலையெழுத்து மாறுமா?
குழந்தைகளின் தவிப்பும் குருவின் கருணையும்
”இதுக்கு பதிலா ஒங் குழந்தையைத் தந்துடறியா?”
ஒன்றுக்கும் உதவாதது அனைவரும் மெச்சும்படி உயர்ந்தது எப்படி?
“நான் யாருக்கும் நமஸ்காரம் பண்ணமாட்டேன். என்னை கட்டாயப்படுத்தக்கூடாது”
ரமணர் ஏன் ஆஸ்ரம கோ-சாலையை பெரிதாக கட்டச் செய்தார்?
ரமணர் விளக்கிய கிரி பிரதட்சண மாண்பு!
அன்னபூரணிக்கு முதல் நைவேத்தியம்!
காக்கா குருவிக்கு ஏது ஓய் உக்கிராணம்?
ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…
எந்த கண்களில் பார்வை இருக்கிறது? எதில் இல்லை?
பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!
ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!
பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!
==========================================================
Also Check :
ஆட்கொண்ட அருணாச்சலேஸ்வரர் – பள்ளி மாணவர்களுக்கு பாடமான நமது தளத்தின் நோட்டீஸ்!
“தன்னைப் போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே!” .
கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!
மழை பொழியுது – பாத்திரத்தை முதல்ல நேரா வைங்க!
=========================================================
ரமணர் தொடர்புடைய பதிவுகளுக்கு : http://rightmantra.com/?s=ரமணர்
=========================================================
[END]
ரமணா – ஒற்றை சொல்லே ஆயிரம் தத்துவம் தரும் என்று புரிந்து கொண்டோம்.
பதிவின் ஆரம்பமே அதிரடி தான்.நான் யார் என்று கேட்டு ஆத்ம விசாரம் செய்ய உதவும் படியான குரு விளையாடல்.
சாதாரண பதிவின் மூலம் அசாதாரண கருத்துக்கள்
மூன்றும் முத்தான சம்பவங்கள்.உயிர்களிடத்து அன்பு வேணும் என்று முதல் சம்பவம். அன்பை எப்படி காட்டுவது என்று
நிகழ்த்தினார்.
யாவரையும் சமமாக பாவிக்க வேணும் – இரண்டாம் தத்துவம்.
உனக்கு நீயே உண்மையாய் இரு – மூன்றாம் தத்துவம்.
ரைட்மந்த்ரா எங்களுக்கு நான் யார் என்று யோசிக்க தூண்டுகிறது.
நன்றி அண்ணா
ஒரு பொருளை தியானிப்பது என்பது ஒருபோதும் உதவாது. தியானிப்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒன்றே என்பதை உணர வேண்டும். –ரமண மொழி–
பாரதத்தின் அரும் பெருமைகள் ஓன்று ஸ்ரீரமணர்.