நமது பாரதி விழாவில் திரு.நந்தகுமார் ஐ.ஆர்.எஸ். (வருமானவரி இணை ஆணையர்) அவர்கள் ஆற்றிய பங்கு மகத்தானது. அவரது எளிமையும், பண்பும், அபாரமான உரையும், வாசகர்களுக்கு அவர் அளித்த உத்வேகமும் அனைவரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது.
நமஸ்தே பகவான் தத்தாத்ரேய ஜகத்பதே |
சர்வ பாத ப்ரசமனம் குரு சாந்தி ப்ரயச்ச மே ||
********************************************************************
யார் இந்த நந்தகுமார்?
‘கற்றலில் குறைபாடு’ காரணமாக பள்ளிப் படிப்பை ஆறாம் வகுப்போடு நிறுத்த நேர்ந்த இவர் அதன் பிறகு லாட்டரி விற்பது, ஐஸ்க்ரீம் விற்பது, டூ-வீலர் மெக்கானிக், சவுண்ட் சர்வீஸ் என பல வேலைகள் செய்துவந்தார். பின்னர் ஆர்வம் உந்தித் தள்ள விடாமுயற்சியோடு எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ என அனைத்து தேர்வுகளையும் ப்ரைவேட்டாகவே எழுதி பாஸ் செய்து, அம்பேத்கர் கல்லூரியில் இளங்கலையும், ப்ரெசிடென்சி கல்லூரியில் முதுகலையும் வெற்றிகரமாக முடித்து இறுதியில் சிவில் சர்வீசஸ் (ஐ.ஏ.எஸ்.) தேர்வும் எழுதி மாநிலத்திலேயே முதலாவதாக வந்தார். திரு.வி.நந்தகுமார் IRS, தற்போது சென்னை மண்டலத்தில் வருமான வரித்துறை ஆணையாளராக பணிபுரிகிறார். எதற்கெடுத்தாலும் துவண்டு போகும் இளைஞர்களுக்கும் சிறு பிரச்சனை என்றால் கூட ஜோதிடர்களை நோக்கி ஓடுபவர்களுக்கும் இவர் ஒரு பாடம். வாழ்வில் சாதிக்கத் துடிப்பவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம். மொத்தத்தில் ஒரு ரோல்மாடல்.
Please check : Mr.NANDAKUMAR, I.R.S. – ஒரு சிலிர்க்க வைக்கும் சாதனை சரித்திரம்! MUST READ
********************************************************************
விழாவை முதலில் நடத்த திட்டமிட்டிருந்த தேதி டிசம்பர் 18. வார்தாவின் தாண்டவத்தால் விழாவை ஒரு வாரம் வேறு வழியின்றி ஒத்திவைக்க முடிவு செய்தேன். மறுபடியும் நந்தகுமார் அவர்களின் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்குமா என்கிற சந்தேகம் இருந்தது. காரணம் அவர் பணியின் தன்மை மற்றும் அவரது பிஸியான ஷெட்யூல்.
நம்மை பற்றியும் நமது பணிகளை பற்றியும் கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் நன்கறிவார். இருந்தாலும் இந்த முறை பார்தி விழாவுக்கு தேதி கொடுத்ததே பெரிய விஷயம்.
2012 ல் ரைட்மந்த்ரா தளம் துவக்கப்பட்ட ஆண்டில் இதே போல டிசம்பரில் நடைபெற்ற விழாவுக்கும் அவர் வந்திருந்தார். இந்த இடைப்பட்ட காலகட்டங்களில் பல படிகள் மேலே அவர் போய்விட்டார். (அன்று துணை ஆணையர். இன்று இணை ஆணையர்!) எனவே மீண்டும் வர ஒப்புக்கொள்வாரா என்கிற சந்தேகம் இருந்தது. இருப்பினும், பாரதியின் பெயரைச் சொன்னவுடன் நந்தகுமார் அவர்கள் தனது பல்வேறு பர்சனல் கமிட்மெண்ட்ஸ் இடையிலும் வருகை தர ஒப்புக்கொண்டார். அப்படிப்பட்ட நிலையில் விழாவை ஒரு வாரம் ஒத்திவைத்திருக்கிறேன் என்று எப்படி சொல்வது?
ஆனாலும் நாம் விழா ஒரு வாரம் ஒத்தி வைக்கப்பட்டது பற்றி கூறி பெருந்தன்மையுடன் மீண்டும் தேதி தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். இம்முறையும் ஒப்புக்கொண்டார். அதற்கு பிறகு விழா பணிகளில் நாம் மும்முரமாகிவிட ஒரு வாரம் ஓடியே விட்டது.
சொன்னாரே தவிர வருவது சந்தேகம் தான் என்று நினைத்தபடி இருந்தேன். இடையே எஸ்.எம்.எஸ். மூலமும் மின்னஞ்சல் மூலமும் நினைவூட்டிக்கொண்டே இருந்தேன். ஒரே ஒரு முறை “ஓ.கே. சுந்தர்” என்று பதில் வந்தது. இவரைப் போன்றவர்களிடம் இருந்து வரும் ஒற்றை வார்த்தை கூட எத்தனை சத்தியமானது என்று எனக்கு தெரியும். எனவே நம்பிக்கையுடன் இருந்தேன்.
விழாவுக்கு சரியாக வந்து நிகழ்ச்சிகளை அமர்ந்து ரசித்து கடைசி வரை இருந்து எங்களை திக்குமுக்காடச் செய்துவிட்டார்.
வேஷ்டி சட்டையுடன் விழாவுக்கு வந்து பட்டையை கிளப்பிவிட்டார் நந்தகுமார் அவர்கள்.
“சார் நீங்கள் SCHOOL DROP-OUT ஆக இருந்து பின்னர் எப்படி CIVIL SERVICES EXAM எழுதி ஐ.ஏ.எஸ். (Indian Revenue Services) ஆனீர்களோ அந்த நிஜக்கதையை சொல்லுங்கள். எங்கள் வாசகர்கள் உங்கள் வாயால் அதை கேட்க ஆசைப்படுகிறார்கள்” என்றேன்.
அலங்கார வார்த்தைகள், பார்மாலிட்டிகள் இவற்றிலெல்லாம் நேரத்தை வீணாக்காமல் பேச்சை துவக்கியவர் தனது பயணத்தை பற்றி குறிப்பிடும்போது “வச்ச கண் வாங்காம” என்கிற கருமமே கண்ணாயினார் என்கிற பொருளில் பேசினார். மேடையின் நுனியில் நின்று அவர் பேசிக்கொண்டிருக்கும்போது நாம் தான் சற்று பதட்டப்பட்டோம்.
மிக மிக அருமையாக பேசி அசத்தியவர் உடனே புறப்பட்டுச் செல்லாமல் விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளையும் அமர்ந்து ரசித்து இறுதி வரை உடனிருந்து புகைப்படம் எடுக்க ஆசைப்பட்ட அனைத்து வாசகர்கள் மற்றும் நண்பர்களுடனும் சலிக்க சலிக்க சிறிதும் முகம் சுளிக்காமல் புகைப்படம் எடுத்து அனைவரையும் பரவசப்படுத்தினார்.
நாம் அப்போது இருந்த வாசகர்கள் நண்பர்கள் அனைவரையும் அவர் கைகளால் விழாவில் வெளியிடப்பட்ட காலண்டரை அனைவருக்கும் அளித்தோம். அனைவருக்கும் அத்தனை சந்தோஷம். நிஜ ஹீரோ அல்லவா? சினிமாவாக எடுத்தால் கூட இவர் கதையை யாரும் நம்பமாட்டார்கள்.
திரு.நந்தகுமாரிடம் நாம் கவனித்த மற்றுமொரு விஷயம்… ஊக்கப்படுத்துவது. உற்சாகப்படுத்துவது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களையும் கலைஞர்களையும் அழைத்து பாராட்ட தவறவில்லை. சின்ன சின்ன விஷயங்களையும் அவர் நோட் செய்த விதம்… அது அது தான் நமக்கும் அவரைப் போன்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம்!
வாசகர்களின் குழந்தைகளையும் சரி நமது உழவாரப்பணி குழு உறுப்பினர்களையும் சரி அறிமுகப்படுத்தும் அவர்கள் பெயர் என்ன என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் கேட்டு தெரிந்துகொண்டார். ஏற்கனவே மேடையில் அவர்கள் கைகளால் சான்றிதழ் பெற்றுக்கொண்ட குழந்தைகளை அறிமுகப்படுத்தும் அவர்கள் பெயர்களை மறக்காமல் குறிப்பிட்டது மிகப் பெரிய ஆச்சரியம்.
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல் (குறள் 441)
அவரை வழியனுப்ப சென்றபோது தான் கவனித்தேன் அவரது பர்சனல் காரில் (சாண்ட்ரோ என நினைக்கிறேன்) தான் வந்திருந்தார். அதுவும் அவரே செல்ப் டிரைவ் செய்துகொண்டு. “ஞாயிற்றுக்கிழமைகளில் மற்றும் பர்சனல் விஷயங்களுக்கு செல்லும்போது நான் OFFICIAL CAR பயன்படுத்துவதில்லை சுந்தர்” என்றார்.
மொத்தத்தில் புயலைப் போல நம் விழாவுக்கு வந்து பட்டையை கிளப்பிவிட்டு சென்றார் நந்தகுமார். ஆனால் இந்தப் புயல் மனங்களை புரட்டிப்போட்ட புயல். நம்மாலும் சாதிக்கமுடியும் என்று அனைவருக்கும் உணர்த்திவிட்டுச் சென்ற புயல்.
நந்தகுமார் அவர்கள் நம் விழாவில் ஆற்றிய பங்கைப் பற்றி ஒரே பதிவில் சொல்ல இயலாது. மேலும் சில பதிவுகள் வரும்.
=========================================================
ஸகல கன ஸமாபம்
பீமதம்ஷ்ட்ரம் த்ரிநேத்ரம்
புஜகதரம கோரம்
ரக்த வஸ்த்ராங்க தாரம்
பரசு டமரு கட்கம்
கேடகம் பாணச்சாயை
திரிசிகநர கபாலை
விப்ரதாம் பாவயாமி
=========================================================
நமஸ்தே பகவான் தத்தாத்ரேய ஜகத்பதே |
சர்வ பாத ப்ரசமனம் குரு சாந்தி ப்ரயச்ச மே ||
========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break.
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?
========================================================
மேலும் பல ரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்புக்களுக்கு check …
ஒதுக்கிய உலகத்தைத் தன் திறமையால் ஜெயித்துக் காட்டிய நர்த்தகி நடராஜ் – மகளிர் தின சிறப்பு பதிவு!
ட்ரீ பேங்க் முல்லைவனம் – பசுமைக்கு பாடுபடும் ஒரு ஒன்மேன் ஆர்மி!
மரங்களின் தந்தை முல்லைவனம் – நம்மை வெட்கப்படவைக்கும் ஒரு நிஜ ஹீரோ!
கடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா ?
கீழே விழும்போதெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒரு வீரனின் கதை!
அன்று எடுபிடி – இன்று பல கோடிகளுக்கு அதிபதி – மும்பையை கலக்கும் ஒரு சாதனைத் தமிழன்!
50 காசுகள் to லட்சங்களை புரட்டும் சங்கிலி தொடர் உணவகங்கள் – ஒரு மெழுகுவர்த்தியின் பயணம்!
“கண் போனால் என்ன? கால் போனால் என்ன?” – தேவாரத் திருப்பணியில் அசத்தும் ஞானப்பிரகாசம்!
ராதாபாய் – விழியிழந்தும் பிறருக்கு வழிகாட்டும் பாரதி கண்ட புதுமைப் பெண்!
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் என உணர்த்தும் தன்னம்பிக்கை சிகரம் கண்ணப்பன்!
பாரதி கண்ட புதுமைப் பெண் – பாஸிட்டிவ் கௌசல்யா!
“அக்கா… அக்கா… எங்களுக்கெல்லாம் நீங்க தான் ரோல் மாடல்” – பிரேமாவை மொய்த்த பள்ளி மாணவிகள்!
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும் – மகளிர் தின சிறப்பு பதிவு!
முடக்கி போட்ட விதி; ஜெயித்து காட்டிய மதி !
ஆதரவற்றவர்களின் ஆலமரம் – இதோ வடலூரில் ஒரு வாழும் வள்ளலார்!
வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல் – இவரைப் போல!
இவரை பார்க்க நேர்ந்ததே புண்ணியம் தான் !
ஒரு நிஜ ஹீரோவின் கதையை கேளுங்கள்! Part 1
ஒரு நிஜ ஹீரோவின் கதையை கேளுங்கள்! Part 2
ஒரு கவர்ச்சி நடிகையின் மறுப்பக்கம்!
==========================================================
Motivational articles & stories …
தோல்வி என்றால் உண்மையில் என்ன? MONDAY MORNING SPL 87
ஒரு சாதாரண மனிதனை சாதிக்க வைத்தது எது ?
தேவை : வாழ்வில் சாதிக்க துடிக்கும் சில இளைஞர்கள் !
==========================================================
[END]
Rightmantra வில் ஒரு ரியல் சினிமா.பிரம்மாண்டமான விழாவில் நிஜ ஹீரோவின் வாழ்வியல் யதார்த்தம்
கண்கவரும் வண்ணப் படங்கள்…நம் உறவை கண்டு மகிழ்கின்றோம்
நம் தளத்தின் புத்தாண்டு செய்தியும் இதுவாம் என்று தோன்றுகிறது. திரு.நந்தகுமார் அய்யா ஆற்றிய உரையினை
இங்கே எதிர்பார்க்கின்றோம்
நன்றி அண்ணா
Nice post anna
I like it So much .
வணக்கம்
பாரதி விழா காலை தொடங்கி முடியும் வரை கண்ணுக்கும் கருத்துக்கும் பல நிகழ்ச்சிகள்.
அனைத்தும் எங்களுக்கு இனிமையாகவே இருந்தது.
நேரம் விறுவிறுப்பாக ஓடிவிட்டது.
குடும்ப விழா என்பது நம் விழாவுக்கு தான் மிக பொருத்தமாக இருக்கும்
நன்றி
சின்ன சின்ன தோல்விகளுக்கெல்லாம் துவண்டு போகிறவர்களுக்கு திரு நந்தகுமார் IRS அவர்களின் வாழ்க்கை ஒரு மிக சிறந்த பாடமாகும். அவரை கண்டுணர்ந்து எங்களுக்கு அறிமுக படுத்தியதின் மூலம் அனைவரின் வாழ்விலும் அறியாமை நீக்கும் விளக்கினை ஏற்றி விட்டீர். மிக்க நன்றி.
தங்களது இவ்வகை பணி மென்மேலும் சிறக்க ஆண்டவனை ப்ரார்த்திருக்கின்றோம்.
வாழ்க வளமுடன்.