Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > ராமாயணத்தில் அனுமனின் முதல் ராம, சீதா தரிசனம்! A THERAPEUTIC MYTH!!

ராமாயணத்தில் அனுமனின் முதல் ராம, சீதா தரிசனம்! A THERAPEUTIC MYTH!!

print

ன்று அனுமத் ஜெயந்தி. (சில கோவில்களில் நாளை). இராமாயணத்தில் மிக முக்கியமான பாத்திரம் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயரின் என்ட்ரிக்கு பின்னர் தான் ராமருக்கும் சரி சீதைக்கும் சரி நல்ல செய்திகள் கிடைக்கத் துவங்கின. எனவே தான் அந்த பாகத்திற்கு சுந்தர காண்டம் என்று பெயர் வைத்தார் வால்மீகி.

இராமாயணத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கத்திற்கும் ஒரு பாராயண பலன் உண்டு. அதுவும் அனுமன் ராமரையும் சீதா தேவியையும் முதன்முதலில் சந்திக்கும் பகுதி மிக முக்கியமானது. (இது ஒரு THERAPEUTIC MYTH. அதாவது படிப்பதே உங்கள் துன்பங்களுக்கு மருந்து போல! எனவே கவனமாக படிக்கவும்!!)

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்

அறிவுக்கூர்மை, புகழ், துணிவு, பயமின்மை, நோயின்மை, ஊக்கம், பேச்சுத்திறன் போன்றவை அனுமனை நினைத்தவுடன் கிடைக்கின்றன!

அனுமனின் இராம தரிசனம்!

னுமன் இராமபிரானை முதன்முதலில் சந்தித்த அந்த தருணம் பற்றி முதலில் பார்ப்போம்.

இராமரும் லக்ஷ்மணனும் சீதையை தேடி காடும் மேடுமாக அலைந்து கொண்டிருந்தனர். அப்போது சுக்ரீவன் வசிக்கும் ரிஷ்யமுக பர்வதத்திற்கு வந்தனர்.

hanuman-2தெய்வாம்சம் பொருந்திய ராஜகுமார்கள் போன்ற தோற்றம் கொண்ட இருவர் கைகளில் வில்லுடன் வருவதைக் கேள்விப்பட்ட சுக்ரீவன் அச்சம் கொண்டான். ஒருவேளை தன்னுடைய சகோதரன் வாலி தான் தன்னை கொல்ல ஆட்களை அனுப்பியிருப்பானோ என்கிற பீதி அவனுக்கு ஏற்பட்டது.

உடனே அனுமனை அழைத்து, “அஜானுபாகுவான தோற்றம் கொண்ட தெய்வாம்சம் மிக்க இருவர் நம் பகுதிக்கு வந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் யாரென்று அறிந்து வா” என்று கட்டளையிட்டான்.

சுக்ரீவனின் அச்சத்தை போக்க விருப்பம் கொண்ட அனுமன் உடனே ராம லக்ஷ்மணர்கள் வந்துகொண்டிருக்கும் இடத்தை நோக்கி விரைந்தார். நினைத்த நேரத்தில் நினைத்த உருவம் எடுக்கும் வல்லமை கொண்ட அனுமன், உடனே ஒரு பிரம்மச்சாரியாக மாறினார்.

பின்பு ராமனும் லக்ஷ்மணனும் வந்துகொண்டிருந்த வழியில் சென்று அவர்களை வணங்கினார்.

“சூரிய சந்திரர்களை ஒத்த தேஜஸுடன் இருக்கும் தாங்கள் இருவரும் யார்? இந்த கானகத்தில் என்ன செய்கிறீர்கள் என்பதை அறிய எங்கள் மன்னன் சுக்ரீவன் விரும்புகிறார்” என்று விநயத்துடன் கூறினார்.

அனுமனின் பேச்சு ராமனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. வந்திருப்பது அசல் அல்ல. மாறுவேடத்தில் உள்ள ஒருவர் என்பதை உணர்ந்துகொள்கிறார். உடனே லக்ஷ்மணனை நோக்கி, “தம்பி, இந்த சொல்லின் செல்வன் யார் என்று விசாரிப்பாயாக” என்று பணித்தார்.

‘இல்லாத உலகத்து எங்கும் ஈங்கு இவன் இசைகள் கூர
கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே யார் கொல் இச் சொல்லின் செல்வன்?
வில்லார்தோள் இளைய வீர, விரிஞ்சனோ விடைவல்லானோ!’

லக்ஷ்மணன் அனுமனை நோக்கி “தாங்கள் யார் என்று நாங்கள் முதலில் அறிந்துகொள்ளலாமா?” என்று கேட்டார்.

“நான் வாயு குமாரன். அஞ்சனை மைந்தன். ஆஞ்சநேயன் என்பது என் பெயர். இந்தப் பகுதியை ஆளும் வானரர்கள் தலைவன் சுக்ரீவனின் மந்திரி. நீங்கள் யார் என்ன என்று விசாரித்து அறிந்துகொள்ள வந்தேன்! சுக்ரீவன் தன் சகோதரன் வாலியால் துன்புறுத்தப்பட்டு விரட்டுப்பட்டுள்ளார். எனவே ஒரு ஐயத்தில் தாங்கள் யார் என்று விசாரித்து வருமாறு என்னை கேட்டுக்கொண்டார். தங்களுடைய நட்பை அவர் நாடுகிறார்” என்கிறார் அனுமன்.

லக்ஷ்மணன் உடனே இராமரின் திரு அவதாரம் தொடங்கி, கைகேயி தரசரதனிடம் பெற்ற வரத்தால் வனவாசம் புறப்பட்டு வந்தது வரை அனைத்தையும் கூறினார்.

அதைக் கேட்ட அனுமன், கண்களில் நீர் பனிக்க அன்பின் மிகுதியால் நெடுஞ்சாண்கிடையாக இராமரின் கால்களில் விழுகிறார்.

“வேதம் அறிந்த மறையோனோ நீ இப்படி செய்வது தவறு. நீ என் காலில் விழலாமா?” என்கிறார் இராமர் பதறிப்போய்.

உடனே அனுமன், “ராகவா இது என் உண்மையான தோற்றம் அல்ல. நான் ஒரு வானரன். எனவே நான் உங்கள் கால்களில் விழுந்தது தவறல்ல…” என்று கூறி தனது உண்மையான உருவத்தை காண்பிக்கிறார்.

அதைக் கம்பர் மிக அழகாக வர்ணிக்கிறார்.

“மின் உரு கொண்ட வில்லோர், வியப்புற வேத நன்னூல்
பின் உரு கொண்டது என்னும் பெருமை ஆம் பொருளும் நாணப்
பொன் உரு கொண்ட மேரு புயத்திற்கு உவமை போதாத்
தன் உரு கொண்டு நின்றான், தருமத்தின் தனிமை தீர்ப்பான்

இந்தப் பூவுலகில் தர்மம் தனியாக இருக்கக்கூடாது அதற்கு துணையாக ஒருவர் இருக்க வேண்டும் என்பதற்காக வந்தவன் இந்த அனுமன் எனும்படி, வேதங்கள் எல்லாம் ஓர் உருக்கொண்டு, பொன் மயமான தேஜசுடன், பெரிய தோள்கள் பூரிக்க தன் சுய உருவைக் காட்டி வானுயர நின்றான். உலகம் மூன்றையும் தன் காலடிகளால் அளந்த புண்டரீக ஆழிப் புரவலனான, தாமரை இதழ் போன்ற கண்களும், சக்கராயுதத்தையும் கொண்ட திருமாலான இராமபிரானால்கூட அப்படி விஸ்வரூபம் எடுத்து நிற்கும் அனுமனின் குண்டலங்கள் ஒளிவீசும் முகத்தைக் காண முடியவில்லை என்றால், சூரிய பகவானிடம் கல்வி கற்ற அந்த அனுமனின் பெருமையை ஒருவரால் எடுத்துக் கூறல் ஆகுமோ?

இராமபிரான் தம்பி இலக்குவனை அழைத்து, “தம்பி! இந்த அனுமன் சாதாரணமானவன் அல்ல அப்பா! பிரளய காலத்திலும் அழிவுறாத வேதங்களும், பிரபோத ஞான நிலையுமே இப்படியொரு குரங்கு வடிவம் எடுத்து நம்முன் வந்து நிற்கிறது. தம்பி! இவன் வரவால் நமக்கு நல்ல நிமித்தம் உண்டாகியிருக்கிறது. இனி நமக்குத் துன்பங்கள் இல்லை இன்பமே நிலைபெற்றிருக்கும். இப்பேற்பட்ட அனுமன் சுக்ரீவனிடம் ஏவல் செய்பவன் என்றால், அந்த சுக்ரீவனது பெருமை எப்படி இருக்குமென்று சொல்லவும் வேண்டுமோ?”

உடனே சுக்ரீவனை காண விரைந்து சென்ற அனுமன், ராமன் லக்ஷமணர் இருவரைப் பற்றியும் சபரி மோட்சம், கபந்தன் வதம் உள்ளிட்ட இராமபிரானின் பிரதாபங்களையும் கூறி, ‘இராமனால் நமக்கு நன்மையே கிடைக்கும். வாலியும் கொல்லப்படுவான்’ என்று எடுத்துக்கூறினார். (ஒரு மந்திரி எப்படி செயல்படவேண்டும் என்பதற்கு அனுமன் மிகச் சிறந்த உதாரணம்!)

உடனே இராமனையும் இலக்குவனையும் நேரில் தரிசித்த சுக்ரீவன், அவர்களது செளந்தர்யத்தில் ஈடுபட்டு நெடுநேரம் வியப்புற்று நின்றான்.

வாலிக்கும் துந்துபிக்கும் ஏற்பட்ட மோதலால் துந்துபி கொல்லப்பட , தொடர்ந்து மதங்க முனிவரின் ஆஸ்ரமத்தில் துந்துபியின் தலை போய் வீழ்ந்ததும் மதங்க முனிவர் சினமுற்று “இந்தச் செயலை செய்தவர் இந்த பிரதேசத்தத்துக்குள் வந்தால் தலைவெடித்து சாவர்” என்று சபித்ததையும் குறிப்பிட்ட அதனாலேயே வாலிக்கு பயந்து அவன் வரமுடியாத இந்தப் பகுதியில் வாழ்வதாக கூறினான் சுக்ரீவன்.

உடனே இராமர், “உனக்கு வந்து சேர்ந்த துன்பங்களை நான் தீர்ப்பேன். இனி உனது இன்ப துன்பங்கள் என்னுடையவை. இனி இப்புவியில், வானத்தில், எல்லா இடங்களிலும் உன்னைப் பகைத்தவர் எனக்கும் பகைவர். உனது நட்புக்கு உரியவர் எனக்கும் நண்பராவர். உன் உறவினர் எனக்கும் உறவினர். என் அன்புக்கு உரிய நட்பும், சுற்றமும் உனக்கும் அவ்வண்ணமே ஆகும். நீ என் உயிர்த் துணைவன்” என்றார்.

இராமனின் வாக்கு வேத வாக்கல்லவா? உடனே அங்கே குழுமியிருந்த வானரர்கள் மகிழ்ச்சிக்கு கூத்தாடினர். தேவர்கள் வானிலிருந்து பூமாரி பொழிந்தனர். மேகங்கள் பொன் மழை பொழிந்தன. அனுமனுக்கோ உடல் சிலிர்த்தது.

========================================================

அனுமனின் சீதை தரிசனம்!

ங்கே அசோகவனத்தில் சிறைவைக்கப்பட்டிருந்த சீதை ஒரு கட்டத்தில் நம்பிக்கை இழந்து தனது உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்த நேரத்தில், அனுமன் ராம நாமம் கூறி பின்பு தனது இனிய குரலால் ராம காதை கூறினான். துயரக் கடலில் மூழ்கியிருந்த சீதையின் காதுகளுக்கு அது தேனாக பாய்ந்தது. உடனே தனது தற்கொலை எண்ணத்தை கைவிட்டாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். தேனினும் இனிய ராமநாமத்தை இந்நேரத்தில் இங்கு கூறுவது யார் என்று தேடினாள்.

hanuman-1இது தான் சமயம் என்று சீதை முன் மரத்திலிருந்து குதித்தார் அனுமன்.

தேஜோ மயமான வானரம் ஒன்று தன் முன்னே நிற்பதைக் கண்டு இதுவரை நாம் கேட்டதெல்லாம் பிரம்மையோ என்று குழப்பமடைந்தாள் சீதை.

“வானர வீரனே! நீ யார்?” என்று வினவினாள்.

சீதையின் சொற்களைத் தன் தலைமேல் கொண்ட அனுமன், தன் இரு கரங்களையும் தலைக்குமேலாகக் குவித்துக் கொண்டு பேசலானான்: “தாயே! உன்னைப் பிரிந்த பிறகு இராமனுக்கு ஒரு நண்பன் கிடைத்தான். அவன் சூரிய குமாரன், பெயர் சுக்ரீவன். வானரங்களின் தலைவன் அவன். அவனுடைய அண்ணனான வாலி முன்னர் இராவணனைத் தன் வாலில் பிணைத்து எட்டுத் திசைகளிலும் தாவி வெற்றி கொண்டவன். அவனை இராமன் ஒரே அம்பினால் கொன்றான். வாலியின் அரசை சுக்ரீவனுக்குக் கொடுத்தான் இராமன். நான் அந்த சுக்ரீவனுடைய அமைச்சன், என் பெயர் அனுமான்” என்றான்.

========================================================

Dont’ miss these articles :

அபயம் தருவான் அஞ்சனை மைந்தன் – காக்களூர் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் தரிசனம் !

அஞ்சனை செய்த தவமும் அனுமன் அவதாரமும்

ராமரின் சிவபூஜைக்கு அனுமன் கொணர்ந்த லிங்கம் என்ன ஆனது?

========================================================

இதைக் கேட்டதும் சீதை மகிழ்ச்சியடைந்தாள். ஆனந்தக் கண்ணீர் உகுத்தாள்.

“அனுமனே என் இராமர் எப்படி இருக்கிறார்?” என்றாள்.

“அன்னையே! இராமனின் திருவுருவை வர்ணிக்க வார்த்தைகள் ஏது? இருந்தாலும் சொல்கிறேன் கேளுங்கள்” என்று இராமனது திருவடி முதல் திருமுடி வரை வர்ணிக்கலானான். ஒவ்வோர் அங்கத்தையும், அதன் பெருமை அழகு முதலியவற்றைச் சொல்லி விளக்கினான். இவ்வாறு அனுமன் சொன்ன சொற்களைக் கேட்ட சீதை தீயிலிட்ட மெழுகு போல உருகினாள். அவளை அனுமன் தரையில் விழுந்து வணங்கினான்.

மேலும் ராமர் சீதாதேவி குறித்து கூறிய பல்வேறு அடையாளங்களையும் முன்பு நடைபெற்ற சம்பவங்களையும் சீதா தேவிக்கு நம்பிக்கையின் ஏற்படும் வகையில் கூறினார் அனுமன்.

இறுதியாக “வேறு எந்த அடையாளச் சொல்லும் தேவையில்லை, என் பெயர் பொறித்த இந்த மோதிரத்தை அவளிடம் காட்டு என்று இந்த கணையாழியைக் கொடுத்தார்” என்று சொல்லித் தன் மடியில் கட்டிவைத்திருந்த கணையாழியை எடுத்து அன்னையின் கைகளில் அனுமன் கொடுத்தான்.

அப்போது சீதைக்கு தோன்றிய உணர்வுகளை சொல்லில் வடிக்க முடியாது.

அதைக் கம்பர் மிக அழகாக வர்ணிக்கிறார்.

வாழ்நாளையெல்லாம் வீணாக்கியவர்கள், மறுமைப் பயனைத் தற்செயலாய் பெற்றது போல என்பேனா?

விலைமதிப்பற்ற ஓர் பொருளை தொலைத்துவிட்டு நீண்ட நாட்களுக்குப் பிறகு அது கிடைக்கும்போது வரும் மகிழ்ச்சி என்பேனா?

உற்றவர் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிர் மீண்டும், அந்த உடலை அடைந்தால் மற்றவர் படும் ஆனந்தம் என்பேனா?

கணையாழியைக் கண்ட சீதை, புற்றிலிருந்த பாம்பு தான் இழந்த மாணிக்கத்தை மீண்டும் பெற்றது போல மகிழ்ந்தாளாம். பிள்ளைப் பேறு இல்லாமல் நீண்ட காலம் வருந்தி இருந்தவளுக்குப் பிள்ளைப் பேறு கிடைக்கும் போது அடையும் மகிழ்ச்சியை அடைந்தாளாம். பார்வையிழந்த குருடனாக இருந்தவனுக்குக் பார்வை கிட்டிய போது அடையும் மகிழ்ச்சியை அடைந்தாளாம்.

சீதைக்கு அந்த கணையாழி, பசியால் துன்புற்றவனுக்குக் கிடைத்த அமுதம் போன்றது. இல்லறத்தாரைத் தேடி வந்த விருந்தினரைப் போன்றது. உயிர் போகும் தறுவாயில் ஒருவனுக்குக் கிடைத்த சஞ்சீவி மருந்து போன்றது. கணையாழியை வணங்கிப் போற்றுவோம் என்கிறான் கம்பன்.

அனுமனைப் பார்த்து ஜானகி கூறலானாள்… “உத்தமனே! எனக்கு நீ புனர் ஜென்மம் அளித்திருக்கிறாய். நான் உனக்கு எவ்வகையில் கைமாறு செய்யப் போகிறேன். நீ எனக்கு உயிர் கொடுத்த வகையில் தாயாகவும், தந்தையாகவும், தெய்வமாகவும் ஆனாய். அருளுக்கு இருப்பிடமானவனே! நீ எனக்கு இம்மைக்கும் மறுமைக்குமான இன்பத்தை அளித்தாய். வலிமைமிக்க மாருதி! துணையற்ற எனக்குத் துன்பம் நீக்கிய வள்ளலே! நீ நீடூழி வாழ்வாயாக! நான் கற்பு நெறியில் களங்கமற்றவள் என்பது உண்மையானால், யுகயுகாந்திரத்திலும், ஈரேழு பதினான்கு உலகங்கள் அழிகின்ற காலத்தும், நீ இன்று போல என்றும் சிரஞ்ஜீவியாக வாழ்வாய்!” என்று வாழ்த்தினாள்.

“என்னைத் தேடி வந்து, என் உயிரைக் காத்த நம்பி! நான் கொடுத்த அடையாளமாக இந்த சூளாமணியைப் பெற்றுக் கொள்” என்று அதை அனுமனிடம் தந்தாள் சீதை.

இப்படி அனுமனின் பிரபாவத்தை பராக்கிரமத்தை சொல்லிக்கொண்டே போகலாம். படிக்க படிக்க திகட்டாதது அனுமனின் சுந்தரகாண்டம். அதுவும் கம்பரின் கைவண்ணத்தில் அது தெவிட்டாத தேனமது. படித்து பயன்பெறுவோம்.¶¶

========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?

========================================================

Also check :

ஆங்கிலேய கலெக்டருக்கு காட்சி தந்த மதுராந்தகம் ஏரி காத்த ராமர் – முழு கவரேஜ் – ஸ்ரீ ராமநவமி SPL!

சபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்! இராமநாம மகிமை (4)

அனுமனுடன் யுத்தம் செய்த இராமர்! எங்கே? ஏன்? – இராமநாம மகிமை (3)

ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)

கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)

========================================================

Similar articles….

ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றுவதால் ஏற்படும் பலன் – அனுமத் ஜெயந்தி ஸ்பெஷல் 1

ஆஞ்சநேய பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் – கிடைப்பதர்க்கரிய ஸ்ரீஹநுமத் சுப்ரபாதம்!!

சிவன் கோவிலில் காணக் கிடைக்காத அனுமன் சன்னதியுடன் கூடிய மூல நட்சத்திர பரிகாரத் தலம்

தீராத வினை தீர்க்கும் அடியார்கள் பாத தூளி  – நம் இராமநவமி அனுபவம்!

108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!

புடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை புறநகரில் ஒரு அதிசய மலைக்கோவில்!

வரங்களை அருள்வதில் திருமலைக்கு நிகரான ‘திருநீர்மலை’ திவ்யதேசம்!

குளத்தில் கண்டெடுக்கப்பட்ட வரப் பிரசாதி போரூர் ஸ்ரீ சிவவீர ஆஞ்சநேயர்

மலை மீது ஒரு எழில் கோலம்! சென்னை புதுப்பாக்கம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்! (ஆலய தரிசனம் 1)

விருந்துண்ண சென்றவனுக்கு மருந்தும் கொடுத்தனுப்பிய என் கோதண்டராமன் – (ஆலய தரிசனம் 2)

நம் ராமநவமி தரிசனமும், பொறுமைக்கு கிடைத்த பரிசும்!

ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்! ஒரு நேரடி அனுபவம்!!

‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!

பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!

நரசிம்மரும் நாயன்மாரும் நமக்கு வழங்கியுள்ள மிகப் பெரிய பொறுப்பு!

அண்ட சராசரங்களை கிடுகிடுக்க வைத்த நரசிம்மர் ஒரு வேடனிடம் கட்டுண்ட கதை!

========================================================

[END]

2 thoughts on “ராமாயணத்தில் அனுமனின் முதல் ராம, சீதா தரிசனம்! A THERAPEUTIC MYTH!!

  1. சுந்தர் அண்ணா
    தாங்கள் இங்கே வடித்த சுந்தர காண்டம் தித்திப்பே.
    அனுமான் என்றால் ராம நாமம் என்று நினைத்தேன். சீதையோடு ராமன் என்று புரிய வைத்தது இந்த பதிவு.

    ராம ராம ராம
    நன்றி அண்ணா.

  2. Sir, can you please suggest a detailed, authentic Tamil version of Ramayana? Rajaji’s version is too short and I’m not sure of the authenticity and accuracy of a couple of other translations I came across. So, could you help me?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *