Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 8, 2024
Please specify the group
Home > Featured > நல்லோர் தரிசனம் பாப விமோசனம்!

நல்லோர் தரிசனம் பாப விமோசனம்!

print

கோவிலுக்கு போவது சுவாமி தரிசனம் செய்வது விரதமிருப்பது பதிகங்கள் ஓதுவது தான் நன்மையைத் தரும் என்று எண்ணிவிடக்கூடாது. நல்லவர்கள் சத்சங்கம் மிகவும் முக்கியம். நல்லோர் தரிசனம் பாப விமோசனம்.

எனவே தான் வள்ளுவரும் ,

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல் – குறள் 442

(வந்த துன்பத்தை நீக்கி இனி துன்பம் வராமல் முன்னதாகவே காக்கும் தன்மையுடையவரைப் போற்றி நட்பாக்கி கொள்ளவேண்டும்!)

என்று கூறினார்.

நமது பாரதி விழாவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணகர்த்தா, விழாவுக்கு தலைமையேற்ற சிவத்திரு.வேதகிரி ஐயா அவர்கள்.

சாட்சாத் பார்வதி பரமேஸ்வரன் போல தம்பதி சமேதராய் நம் விழாவுக்கு குறித்த நேரத்தில் வந்து அற்புதமான ஒரு உரையை கொடுத்து கடைசி வரை இருந்து சிறப்பித்தார்.

தேவாரம், திருப்புகழ் என பட்டையை கிளப்பி வரும் ஐயா அடிப்படையில் ஒரு வைணவர் என்பது பலர் அறியாதது.

dsc00552

ஐயா அவர்களை நமக்கு முன்பே தெரியும் என்றாலும் அவருடைய உரையை முதன்முதலாக சில மாதங்களுக்கு முன்னர் குறுங்காலீஸ்வரர் கோவிலில் தான் கேட்டோம். ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஐயா அங்கு தேவாரத் திருத்தலங்கள் என்கிற தலைப்பில் உரை நிகழ்த்துகிறார். நாம் சென்ற நாளன்று மாலை சென்னையில் அப்படி ஒரு மழை. எப்போதும் கோவிலுக்கு உள்ளே இருக்கும் நாலுகால் மண்டபத்தில் நடைபெறும் சொற்பொழிவு மழை காரணமாக உள்ளே நடைபெற்றது.

dsc08574

அந்த நேரத்திலும் அந்த மழையிலும் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட அடியார்கள் அங்கு அமர்ந்து அவரது உரையை ஆர்வமுடன் கேட்டனர். ஐயா பேசிய தலைப்பு : இராமனதீச்சுரம். (நன்னிலம் அருகவே உள்ள இது இராமர் சிவபூஜை செய்த தேவார பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று.) ஐயா ஆற்றிய சுமார் 45 நிமிடங்கள் உரையில் ஏகப்பட்ட புதுப் புது தகவல்களை அடியேன் அறிந்துகொள்ள முடிந்தது. அத்தனை அற்புதம். அதியற்புதம்.

dsc00566

நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் ரைட்மந்த்ரா சார்பாக ஐயாவை கௌரவித்தோம். முன்னதாக ஐயா ஆற்றிவரும் திருமுறை தொண்டை குழுமியிருந்தோரிடம் குறிப்பிட்டு, அனைவரும் பயன்படுத்திக்கொண்டு உய்வு பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

சென்ற வாரம் ஒரு நாள் அவரை தொடர்பு கொண்டு பாரதி விழா அழைப்பிதழ் கொடுக்க அவரை சந்திக்க விரும்புவதாக சொன்னோம். அப்போது, அடிக்கடி கிளம்பும் புயல் பற்றிய செய்திகள், அரசியல் தலைவர் ஒருவரைப் பற்றிய வதந்திகள் போன்றவைகளால் விழாவை எப்படி நடத்தப்போகிறோம் என்கிற கவலையில் நாம் இருப்பதை குறிப்பிட்டோம். ஒரு முறை விழாவை ஒத்திவைத்துவிட்ட நிலையில் ஏதாவது நஷ்டம் ஏற்பட்டால் அதை நிச்சயம் என்னால் தாங்கிக்கொள்ளமுடியாது என்பதையும் அவரிடம் சூசகமாக தெரிவித்தோம்.

ஆனால் வேதகிரி ஐயா நம்பிக்கை அளித்தார்… “எல்லாம் நல்லபடியாக நடக்கும். மாலை நீங்கள் சௌந்தரேஸ்வரர் கோவிலுக்கு வாருங்கள். அழைப்பிதழை சுவாமியிடம் வைத்து அர்ச்சனை செய்யலாம்” என்றார்.

விழா அன்று மஹா பெரியவா ஆராதனை தேதியும் வருவதால் நம் விழாவில் மகா பெரியவா குறித்த ஏதாவது சேர்க்கவேண்டும் என்றோம். “மாலை வாருங்கள் பேசிக்கொள்ளலாம். வேறு ஒருவரையும் அறிமுகப்படுத்தி வைக்கிறேன்” என்று கூறினார்.

அன்று மாலை சைதை சௌந்தரேஸ்வரர் கோவிலுக்கு சென்றேன். கோவில் வாசலில் அர்ச்சனைப் பொருட்கள் கிடைக்கவில்லை. இன்று பைரவ வழிபாடு நடைபெற்றுக்கொண்டிருந்தபடியால் கோவிலில் இருந்த கூட்டம் அனைத்தும் பைரவர் சன்னதியில் தான் இருந்தது. அர்ச்சகர்கள் யாரும் பிரதான சன்னதியில் இல்லை.

இன்னும் அரைமணி நேரம் ஆகும் என்று ஐயா கூறினார். உடனே நாம்… “காரணீஸ்வரர் கோவில் சென்று அங்கு தேங்காய் பூ பழம் வாங்கிக்கொண்டு வரலாம்… நீங்களும் வேண்டுமானால் உடன் வாருங்கள்… வழியில் காபி சாப்பிட்டுவிட்டு வரலாம் ஐயா” என்று அவரிடம் கூறினேன். (அவரை உபசரிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தவே அவ்வாறு சொன்னோம்!)

அவரை பைக்கில் அழைத்துக்கொண்டு காரணீஸ்வரர் கோவிலுக்கு வந்து அர்ச்சனை செட் வாங்கிக்கொண்டு காரணீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள கௌரி நிவாஸ் ஹோட்டலுக்கு ஐயாவை அழைத்துச் சென்று SNACKS ஆர்டர் செய்து சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே அவருக்கு அறிமுகமான அப்பகுதி நண்பர்கள் (அடியார்கள்) சிலர் அங்கு வர, பரஸ்பர வணக்கங்களை பரிமாறிய பின்னர் நம்மை அறிமுகப்படுத்தி வைத்து நமது பாரதி விழா பற்றி அவர்களிடம் கூறினார்.

சிறிது நேரம் கழித்து நாங்கள் புறப்பட்டபோது அவர்களுக்கும் சேர்த்து நாம் பணம் தரலாம் என்று நினைத்தால் எங்கள் பில்லையும் சேர்த்து அவர்கள் செட்டில் செய்து வைத்து போய்விட்டிருந்தனர். ஐயாவையும் அடியார்களையும் உபசரிக்கும் அந்த சிறு பாக்கியத்தை நாம் தட்டிக்கலாம்னு பார்த்தா நமக்கு முன்னால அவங்க தட்டிட்டு போய்ட்டாங்க…!

பின்னர் கோவிலுக்கு வந்து சில நிமிடங்கள் காத்திருந்தோம். குருக்கள் வந்த பின்னர் அழைப்பிதழை சுவாமியிடம் வைத்து நமது பெயருக்கு அர்ச்சனை செய்தோம். வேதகிரி அவர்கள் திருப்புகழ் ஓதினார். தொடர்ந்து பிரசாதம் பெற்றுக்கொண்டு பிரகாரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

dsc05423-copy

அப்போது ஐயா ராமச்சந்திர ஷர்மா என்கிற ஒரு இளைஞரை அறிமுகப்படுத்தினார். காஞ்சி மடத்தில் வேதம் படித்தவர். தற்போது சௌந்தரேஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக உள்ளார். வேதத்தில் மேற்படிப்பு படித்துக்கொண்டிருக்கிறார். வைதீகம் மற்றும் வேத பாராயணம் உள்ளிட்டவற்றுக்கு சென்றுகொண்டிருக்கிறார். காஞ்சி மடத்திலேயே வேதம் படித்ததால் பெரியவா பற்றி பல அரிய தகவல்களை தெரிந்துவைத்திருக்கிறார்.

அவரை நம் விழாவுக்கு அழைத்து வேதகோஷம் செய்யவைக்கலாமா என்று யோசித்தோம். ஆனால், விழா அன்று பெரியவா ஆராதனையில் வேதம் ஓத பல இடங்களில் கமிட் ஆகியிருப்பதாக சொன்னார். சரி அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டோம். ஐயாவும் மஹா பெரியவாவைப் பற்றி தானே தனது உரையில் பேசுவதாக கூறினார். அதுவே போதும் என்று கருதி நன்றி சொன்னோம்.

img_20161221_194048-copy

சான்றோர்களை அறிவில் சிறந்தோர்களை எங்கே பார்த்தாலும் ஏதோ நம்மால் இயன்றளவு எளிமையாக பதிகம் பாடி கௌரவிப்பது நமது வழக்கம். இதை ஒரு தொண்டாகவே கருதி செய்து வருகிறோம்.

வேதகிரி ஐயா மற்றும் ராமச்சந்திர ஷர்மா இருவரையும் ஒரே நேரத்தில் கௌரவித்து விழாவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தோம். அவர் பின்னர் தனது பள்ளியறை பூஜையில் மும்முரமாகிவிட நாமும் ஐயாவும் சுவாமியுடன் பிரகாரத்தை வலம் வந்து தரிசித்துவிட்டு புறப்பட்டோம்.

dsc_9832-copy

நமது வாட்டம் போகவில்லை இன்னும் முகத்தில் இருப்பதை உணர்ந்த வேதகிரி “நான் சுவாமியிடம் தினமும் பிரார்த்திக்கிறேன். இத்துடன் இந்த கவலையை விடுங்கள். விழா மிகச் சிறப்பாக நடைபெறும்!” என்று ஆணித்தரமாக கூறினார். அவர் வாக்கு பலித்தது. (*இதுவரை ஐயா தேவாரம் / திருப்புகழ் பற்றி 2500 சொற்பொழிகள் நிகழ்த்தியிருக்கிறார்!)

ஆம்… எளியவர்கள் சேர்ந்து கட்டிய கோவிலுக்கு கும்பாபிஷேகம் களை கட்டியது போல நமது விழா மிக மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

dsc_0054-copy

வேதகிரி ஐயா மிகச் சிறப்பாக விழாவை தலைமை ஏற்று நடத்திச் சென்றதோடல்லாமல் விழாவையும் வெற்றி பெறச் செய்த்துவிட்டார். அவர் உரை அத்தனை அருமையாக யதார்த்தமாக பயனுள்ள வகையில் அமைந்தது. முதலில் வந்து கடைசியாக சென்றார் ஐயா.

நண்பர் பாலு மகேந்திரன் அவர்கள் விழாக்குழு சார்பாக வேதகிரி அவர்களை வரவேற்ற போது...
நண்பர் பாலு மகேந்திரன் அவர்கள் விழாக்குழு சார்பாக வேதகிரி அவர்களை வரவேற்ற போது…

உண்மையைச் சொல்லப்போனால் அன்று இரவு தான் நீண்டநாட்களுக்கு பின்னர் நான் நன்றாக தூங்கினேன்.

தோண்ட தோண்ட கிடைக்கும் தங்கச் சுரங்கம் போல, வற்றாத ஜீவநதியாய் சைவ ஞானத்துடன் இருக்கும் வேதகிரி ஐயா எளிமையின் உருவம். பண்பின் சிகரம். இவரை நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இவரைப் பார்ப்பதே புண்ணியம் என்பதே நம் கருத்து.

dsc_0195-copy

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று!

மேற்கூறிய பாடலை நம் தளத்தில் பல முறை மேற்கோள் காட்டியிருக்கிறோம். பாடலின் ஒவ்வொரு வரியும் ஒரு கல்வெட்டு என்றால் மிகையாகாது! ஆனால் இன்னும் சிலர் இதன் பொருளை உணரவில்லை என்பதே உண்மை! ¶¶

========================================================

குறிப்பு : தமிழகத்தில் மழையின்றி பயிர்கள் வாடுவதால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் செய்தி பத்திரிக்கைகளில் அடிக்கடி படிக்க நேர்கிறது. மனம் என்னவோ செய்கிறது. வேதகிரி ஐயாவை வைத்து உழவு செழிக்க ஒரு திருப்புகழ் சொற்பொழிவும் பாடல்கள் நிகழ்ச்சியும் ஏதேனும் ஒரு கோவிலில் மிக மிக எளிமையாக நடத்தலாமா என்று யோசித்து வருகிறோம். இறுதி செய்யப்படும் பட்சத்தில் வாசகர்கள் வந்திருந்து ஆதரவு நல்கவேண்டும்.

========================================================

இந்த தளத்தை தொய்வின்றி நடத்திட வாசகர்களின் பங்களிப்பு அவசியம் தேவை!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

Kindly drop in mail to editor@rightmantra.com once you transfer your fund or message me at 9840169215

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

========================================================

Similar articles…

இனிதே நடைபெற்ற பாரதி விழா & ரைட்மந்த்ரா 5ம் ஆண்டுவிழா – a small update!

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை!

விதியை வெல்லலாம் – வழியுண்டு வாங்க!

விடியும் வரை காத்திரு! துன்பத்தை சற்று பொறுத்திரு!!

தீயவர்கள் சுகப்படுவதும் நல்லவர்கள் துன்பப்படுவதும் ஏன்?

விதி என்ன செய்யும் வினை என்ன செய்யும்… உறுதியுடன் நீ இருந்தால்? கண்ணதாசன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்!

எதிர்பாராத பிரச்சனைகளும் நமது பிரார்த்தனையும்!

Where there’s a will, there’s a way!

நம்பிக்கை!

==========================================================

Also check கர்மா Vs கடவுள் earlier episodes…

கர்மாவை வென்ற காருண்யம் – கர்மா Vs கடவுள் (5)

விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)

கர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)

நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)

ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)

==========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *