Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 8, 2024
Please specify the group
Home > Featured > சிம்மாசனமும் அதற்கு மேல் தொங்கும் கத்தியும்!

சிம்மாசனமும் அதற்கு மேல் தொங்கும் கத்தியும்!

print

சும்மா வந்தோமா, ஆன்மிகம், பக்தின்னு ஒரு பதிவு படிச்சோமா போனோமா என்பது மட்டும் நம் வாசகர்களின் குறிக்கோளாக இருக்கக்கூடாது. அதற்க்கு மேலும் சில நல்ல விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டும். வாழ்க்கை  எப்போதும் ஒரே சீராக இருக்காது. துன்பமும் இன்பமும் மாறி மாறி வரும். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அத்தகைய சூழலை எதிர்கொண்டே ஆகவேண்டும். எல்லாவற்றுக்கும் கடவுளை தொந்தரவு செய்யக்கூடாது.  அது போன்ற நேரங்களில் சமயோசிதமாக நடந்துகொள்ளவேண்டும். கடவுளுக்கும் அது தான் பிடிக்கும்.

நீண்ட நாட்களுக்கு முன்னர்  ஒரு வார இதழில் படித்த  ஒரு அற்புதமான அர்த்தம் பொதிந்த ஒரு கதையை இங்கு தருகிறோம்.

throne

சிம்மாசனமும் அதற்கு மேல் தொங்கும் கத்தியும்!

சிசிலித் தீவு, இத்தாலியின் தென் முனையில் இருக்கிறது. அதை டயனாசியஸ் என்ற அரசன் ஆண்டு வந்தான். அந்த சமயத்தில் டெமாக்கிள்ஸ் என்ற அறிஞன் ஒருவனும் அந்த நாட்டில் இருந்தான். அரசனின் ராஜபோக வாழ்க்கையைப் பற்றிக் குத்தலாகப் பேசுவது அவன் வழக்கம்.

அரசனை பார்க்கும்போதெல்லாம் “உனக்கென்னப்பா… நாட்டுக்கே நீ ராஜா. உனக்கு ஏதாவது கவலை இருக்கா. சொல்றதெல்லாம் செய்றதுக்கு வேலைக்காரங்க… அரண்மனை, சுகபோகங்கள், செல்வங்கள்… நீ நினைச்சு நடக்காத ஏதாவது ஒன்னு உண்டா?” இப்படி கேட்டு வந்தான். இதில் எரிச்சலான மன்னன், டெமாக்கிள்ஸுக்கு பாடம் கற்பிக்க நினைத்தான்.

தன் சேவகர்களை அவரிடத்தில் அனுப்பி, “நீங்கள் ஒரு நாள் அரண்மனைக்கு வர வேண்டும். மன்னர் உங்களுக்கு விருந்து வைப்பார். அன்று ஒரு நாள் மட்டும் நீங்கள் இந்த நாட்டின் மன்னராக இருக்கலாம். அரசன் அனுபவிக்கும் அத்துணை சுக போகங்கள் உங்களுக்கு உண்டு. சிம்மாசனம் உட்பட!” என்று அழைப்பு விடுத்தான். டெமாக்கிள்ஸ் அதற்கு ஒப்புக்கொண்டார்.

damocles-sword

குறிப்பிட்ட நாளில் டெமாக்கிள்ஸ் வந்தார். சொன்னபடியே ராஜ மரியாதைதான். மன்னருக்கான உடைகள் அணிவிக்கப்பட்டன. அரச மண்டபத்தில் டயனாசியஸுக்கு சமமாக டெமாக்கிள்ஸ் உட்காரவைக்கப்பட்டார். தனக்குத் தரப்பட்ட மரியாதையில் நெகிழ்ந்து பொங்கிப் போனார். தான் உட்கார்ந்திருந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தார். திடீரென மேலே பார்த்தார். தலைக்கு மேலே பெரிய கத்தி ஒன்று தொங்கிக்கொண்டு இருந்தது, எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில்! குதிரையின் வாலில் இருந்து எடுக்கப்பட்ட ஒற்றை முடியில் அது ஊசலாடிக்கொண்டு இருந்தது. அதன் கூர்மை கண்களை பறித்தது.

அதை பார்த்தத் பிறகு இவருக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. எந்த நேரமும் தலை போய்விடும் என்ற சூழ்நிலையில், உல்லாசமாவது உற்சாகமாவது. அதற்குப் பிறகு சாப்பாடு, சந்தோஷம் எதுவும் உள்ளே போகவில்லை டெமாக்கிள்ஸுக்கு. மன்னன் எப்போதும்போல உற்சாகமாகவே இருந்தார். டெமாக்கிள்ஸின் நினைப்பெல்லாம் தலைக்கு மேல் தொங்கும் வாள் மீதே! மன்னரிடம் பேசக்கூட முடியவில்லை.

எழுந்து ஓடலாம் என்று முடிவு செய்து அதற்க்கு தயாராகியும் விட்டார். ஆனால் அந்த முயற்சியில் ஏதாவது அதிர்ச்சி ஏற்பட்டு குதிரை முடி அறுந்துவிட்டால் என்ன செய்வது. உறைந்து போய் சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்துவிட்டார்.

“என்னாச்சு நண்பா? ஏன் இப்படி பதட்டத்துடன் இருக்கிறாய்?”

“அந்த கத்தி… அந்த கத்தி… ” என்றார் திக்கித் திணறி.

மன்னன் சொன்னான்… “அதிகாரம் என்பது நீங்கள் எட்டி நின்று பார்க்கிற மாதிரி சுகமானது அல்ல. எந்த நேரமும் எதுவும் நடக்கும்… கண்ணுக்குத் தெரியாத ஒரு கத்தி தொங்கிக்கொண்டே இருக்கும். நிம்மதிக்கே வழி இல்லை! அதை நான் தினந்தோறும் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறேன். அது எப்போதும் ஏன் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டு தானிருக்கிறது. ஏதாவதோ யாராவதோ அதை அறுத்துவிடும் சூழல் எப்போதும் இருக்கிறது. சொல்லப்போனால்  என் நண்பர்கள் கூட சில சமயம் என் மீது பொறாமை கொண்டு, என்னை கொல்ல முயற்சிப்பர். அல்லது சில சமயம் என்னை பற்றி தவறான கருத்துக்களை வதந்திகளை பரப்பி எனக்கெதிராக என் மக்களை திசை திருப்ப முயற்சிப்பர். அல்லது எதிரி திடீரென படையெடுத்து வரலாம். அல்லது என் வீழ்ச்சிக்கு நானே காரணமாகும் வகையில் நான் ஏதாவது தவறான முடிவு எடுக்கலாம். நீ தலைவனாக சிம்மாசனத்தில் உட்கார ஆசைப்பட்டால், நீ எதற்கும் தயாராக இருக்கவேண்டும். அதிகாரம் வரும்போதும் இவையும் கூடவரும். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவை தெரியாது” என்றான்.

“இப்போது நான் புரிந்துகொண்டேன். என்னை மன்னித்துவிடு. உனது செல்வத்துக்கும் செல்வாக்கிற்கும் பின்னால் இத்துனை விஷயங்கள் இருப்பது இப்போது தான் புரிந்தது. என்னை வீட்டிற்கு போக அனுமதி கொடு” என்றாராம் டெமாக்கிள்ஸ்.

‘டெமாக்கிள்ஸ் ஸ்வார்டு’ என்ற வார்த்தையே இந்தக் கதையில் இருந்துதான் பிரபலம் ஆனது!

பிரபலங்கள் மற்றும் அண்ணாந்து நாம் பார்த்து பொறாமைப்படும் பலரின் உண்மை பின்னணி மேற்கூறிய கதையில் உள்ள சிம்மாசனம் போல தான் இருக்கும். ஒரு மிகப் பெரிய இலக்கை அடைவதைவிட அதை தக்க வைத்துகொள்வது தான் மிகவும் கஷ்டம். 

நம் நாட்டில் பதவி ஏற்கையில் சத்தியப் பிரமாணம் எடுக்கும்போது, கூடவே இந்த கதையையும் படிக்கவேண்டும் என்று சட்டமியற்றினால் மிக நன்றாக இருக்கும். பதவி இருக்கிறதே என்று எண்ணி ஆட்டம் போடுவது குறையும்.

=========================================================

நம் பாரதி விழாவுக்கு வருகை தாருங்கள்!!

மது தளத்தின் பாரதிவிழா வரும் 25/12/2016 ஞாயிறு அன்று காலை 9.00 அளவில் நவீன் மஹால் # 41, ஆற்காடு சாலை, வளசரவாக்கம் சென்னை – 600087 என்கிற முகவரியில்  நடைபெறவிருக்கிறது.வாசகர்கள் அவசியம் குடும்பத்தோடு வந்திருந்து விழாவை சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மங்கல இசை, தேவராம், திருமுறை, பாரதி பாடல்கள், சாதனையாளர்களின் உரை என அனைத்து அம்சங்களும் இவ்விழாவில் உண்டு.

Bharathi Vizha

மேற்படி பாரதி விழாவுக்கு வாசக அன்பர்கள் மனமுவந்து பொருளாதார உதவியை நல்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

=========================================================

Also check…

வெற்றுப் படகுகளை கண்டால் என்ன செய்வீர்கள்?

நம்முடைய மதிப்பை உயர்த்துவது எது?

Think before you decide!

அள்ளிக்கொடுத்த வள்ளலும் நன்றி மறந்த புதுப்பணக்காரனும்!

வாழ்க்கையில் வெற்றி என்பது உண்மையில் என்ன?

எதுக்கு இந்த விஷப்பரீட்சை? உன்னால ஜெயிக்க முடியுமா??

யார் மிகப் பெரிய திருடன் ?

எல்லோருக்கும் பொதுவான ஒரு மிகப் பெரிய சொத்து!

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

தெய்வத்தான் ஆகா தெனினும்….

செய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம்!

வியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா?

எது உண்மையான வெற்றி? எது உண்மையான தோல்வி?

What is the real meaning of PRECIOUS ? மதிப்புமிக்கது என்றால் என்ன ?

இன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி!

பாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா?

இறைநம்பிக்கை Vs தன்னம்பிக்கை!

ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?

விதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா?

நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?

‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? –

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா?

சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ?

இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?

நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!

அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ?

நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!

மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா?

தவளையை கொன்றது எது?

================================================

Don’t miss this….

எதுக்குமே டயம் இல்லை சார்… என்ன பண்றது?

தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே!

================================================

[END]

One thought on “சிம்மாசனமும் அதற்கு மேல் தொங்கும் கத்தியும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *