Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, February 7, 2023
Please specify the group
Home > Featured > தற்கொலை எண்ணத்தை போக்கிய மிகச் சிறந்த அன்பளிப்பு!

தற்கொலை எண்ணத்தை போக்கிய மிகச் சிறந்த அன்பளிப்பு!

print

விக்டர் ப்ராங்ள் இருபதாம் நூற்றாண்டை சேர்ந்த மிகப் பெரிய மனோதத்துவ நிபுணர். இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் படையினரின் சித்தரவதைக் கூடங்களில் இருந்து வெற்றிகரமாக தப்பித்தவர்.

அவர் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவம் இது.

mans-search-for-meaningஒரு முறை நள்ளிரவு நேரத்தில் ஒரு பெண் அவரை தொலைபேசியில் அழைத்து தான் தற்கொலை செய்துக்கொள்ள முடிவெடுத்திருப்பதாக சொன்னாள். அவள் கூறுவதை பொறுமையாக கேட்ட விக்டர் அவளுக்கு பலவிதங்களில் ஆறுதல் சொல்லி தற்கொலை என்பது கோழைத்தனமானது என்று எடுத்துக்கூறி அவள் ஏன் உயிர் வாழவேண்டும் என்பதற்கான பல்வேறு காரணங்களை அவளிடம் சொன்னார். இறுதியில் நான் தற்கொலை செய்த்துக்கொள்ள மாட்டேன் என்று அவரிடம் உறுதி கூறியவள் அந்த வார்த்தையை காப்பாற்றினாள்.

பிற்காலத்தில் அவளை சந்தித்தபோது விக்டர் ப்ராங்ள் அவளிடம் “என்ன காரணத்தினால் தற்கொலை எண்ணத்தை கைவிட்டீர்கள்? நான் கூறிய எந்த விஷயம் உங்கள் மனதை மாற்றியது?” என்று கேட்டார்.

அதற்கு அந்த பெண் , “எதுவும் இல்லை” என்றாள் .

“அப்போ வாழவேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்ததற்கு எது தான் காரணம்?” என்று ஆர்வத்துடன் கேட்டார்.

அவள் கூறிய பதில் மிகவும் சிம்பிள். “அந்த நள்ளிரவு நேரத்திலும் நான் கூறுவதை காதுகொடுத்து நீங்கள் கேட்டீர்களே அது தான் காரணம்” என்றாள்.

listen-2

நமது வலியை துன்பங்களை சொன்னால் அதைக் காது கொடுத்து கேட்பதற்கு ஒருவர் இருக்கிறாரே இது எத்தனை பெரிய வரம் என்று தோன்றியதாம் அந்தப் பெண்ணுக்கு. ஆம்… எத்தனையோ வசதிகள் இருந்தும் இந்த ஒரு வரம் இன்றி வாடுபவர்கள் உலகில் கோடிக்கணக்கில் உண்டு.

சற்று யோசித்துப் பாருங்கள்… ஒரு மனோத்தத்துவன் நிபுணர் “வாழவேண்டும்… உயிரை மாய்த்துக்கொள்ளக்கூடாது” என்று வலியுறுத்த எத்தனை விஷயங்களை, வாதங்களை கூறியிருப்பார். ஆனால் அதெல்லாம் இங்கு வேலை செய்யவில்லை. அந்தப் பெண்ணின் வார்த்தைகளை காது கொடுத்து பொறுமையுடன் கேட்டது தான் இந்த மகத்தான பணியை செய்திருக்கிறது.

எனவே சில நேரங்களில் மற்றவர்கள் கூறுவதை காது கொடுத்து கேட்பதும் கூட மிகச் சிறந்த அன்பளிப்பு தான்.

மனித வாழ்க்கை நிலையற்றது. எப்போது எந்த திசையில் போகும் என்று சொல்ல முடியாது. யாருக்கு எப்போது வேண்டுமானாலும் இன்பமும் வரலாம் துன்பமும் வரலாம். எனவே நம்மைச் சுற்றியிருப்பவர்களின் வார்த்தைகளை காது கொடுத்து கேட்போம். உங்கள் புத்தி சாதுர்யத்தை காண்பிக்கும் விவாதங்களை விட இது தான் மிக முக்கியம். ¶¶

=========================================================

Also check similar articles….

துரோகமும் சிவபக்தியும்!

சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம் – ஒரு கதையும் ஒரு சம்பவமும்!

=========================================================

நம் பாரதி விழாவுக்கு வருகை தாருங்கள்!!

மது தளத்தின் பாரதிவிழா வரும் 25/12/2016 ஞாயிறு அன்று காலை 9.00 அளவில் நவீன் மஹால் # 41, ஆற்காடு சாலை, வளசரவாக்கம் சென்னை – 600087 என்கிற முகவரியில்  நடைபெறவிருக்கிறது. அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல் உள்ளிட்ட விபரங்கள் இரண்டொரு நாளில் தளத்தில் வெளியிடப்படும். வாசகர்கள் அவசியம் குடும்பத்தோடு வந்திருந்து விழாவை சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மங்கல இசை, தேவராம், திருமுறை, பாரதி பாடல்கள், சாதனையாளர்களின் உரை என அனைத்து அம்சங்களும் இவ்விழாவில் உண்டு.

bharathi-vizha-2

மேற்படி பாரதி விழாவுக்கு வாசக அன்பர்கள் மனமுவந்து பொருளாதார உதவியை நல்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

=========================================================

Also check some important articles…

துரோகமும் சிவபக்தியும்!

நம்முடைய மதிப்பை உயர்த்துவது எது?

Think before you decide!

அள்ளிக்கொடுத்த வள்ளலும் நன்றி மறந்த புதுப்பணக்காரனும்!

வாழ்க்கையில் வெற்றி என்பது உண்மையில் என்ன?

எதுக்கு இந்த விஷப்பரீட்சை? உன்னால ஜெயிக்க முடியுமா??

யார் மிகப் பெரிய திருடன் ?

எல்லோருக்கும் பொதுவான ஒரு மிகப் பெரிய சொத்து!

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

தெய்வத்தான் ஆகா தெனினும்….

செய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம்!

வியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா?

எது உண்மையான வெற்றி? எது உண்மையான தோல்வி?

What is the real meaning of PRECIOUS ? மதிப்புமிக்கது என்றால் என்ன ?

இன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி!

பாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா?

இறைநம்பிக்கை Vs தன்னம்பிக்கை!

ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?

விதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா?

நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?

‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? –

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா?

சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ?

இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?

நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!

அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ?

நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!

மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா?

தவளையை கொன்றது எது?

================================================

Don’t miss this….

எதுக்குமே டயம் இல்லை சார்… என்ன பண்றது?

தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே!

================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *