ஒரு திருமணத்தின் மாண்பு என்பது எது எத்தனை விமரிசையாக நடைபெறுகிறது எவ்வளவு செலவு செய்யப்படுகிறது எத்தனை வி.ஐ.பி.க்கள் வந்தார்கள் என்பதில் இல்லை. அந்த மணமக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது.
திருமணத்தை பிரமாண்டமாக நடத்திவிடுவதால் அது வெற்றி என்கிற அர்த்தம் இல்லை. ஒருவருக்கொருவர் எந்தளவு அணுசரணையாக விட்டுக்கொடுத்து வாழ்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது.
திருமணங்களில் ஆடம்பரங்களை தவிர்த்து கூடுமானவரை எளிமையாக நடத்தி, பணத்தை மிச்சம் பிடித்து அந்தப் பணத்தில் அன்று பலர் வயிறும் மனமும் குளிரும்படி செய்தால் அந்த மணமக்கள் சீரோடும் சிறப்போடும் வாழ்வார்கள் என்பது ஆன்றோர் கண்ட வழிமுறை. இதன்பொருட்டு தான் கல்யாணத்தன்று போஜனம் செய்விக்கும் வழக்கமே ஏற்பட்டது. ஆனால் இன்று அதுவே ஆடம்பரத்தை பறைசாற்றும் ஒரு சாதனமாக மாறி, திகட்ட திகட்ட உண்ண முடியாத அளவு எண்ணற்ற பதார்த்தங்கள் பரிமாறி, பலர் அவற்றை முழுமையாக உட்கொள்ளாமல் வீணடிப்பதை பார்த்து வருகிறோம்.
இன்று பல திருமணங்களில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமோ அதற்கு கொடுக்காமல் ஆடம்பர செலவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
நம் காஞ்சி மகா சுவாமிகள் திருமணங்களில் ஆடம்பரத்தையும் வீண் செலவையும் தவிர்க்க வேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்துவதுண்டு. ஜானவாச ஊர்வலமே அனாவசியமானது, சாஸ்திரத்தில் இல்லாத ஒன்று என்பது அவர் கூற்று. திருமாங்கல்யம் தவிர வேறு எதுவும் தங்கத்தில் இருக்கவேண்டியதில்லை. புடவை கூட சாதாரண கூரைப் புடவையாக இருந்தால் போதும் என்பது அவர் கருத்து.
“இப்போது கல்யாணத்தில் நடக்கிற ஆடம்பரங்களும் வரதக்ஷிணை வாங்குவதும் சீர் செனத்தி கேட்பதும் சாஸ்திர ஸம்மதமானதல்ல. செலவழிப்பதற்கு பெண் வீட்டுக்காரன் என்று ஒருத்தன் ஏற்பட்டிருக்கிறான் என்பதால் அவனிடம் ஒட்டக் கறக்க வேண்டும் என்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டது போல தோன்றுகிறது!” – மகா பெரியவா
மிகப் பெரிய கோடீஸ்வரர்களும் அரசியல் பிரபலங்களும் தங்கள் செல்வாக்கை காட்ட தங்கள் வாரிசுகளுக்கு மிக ஆடம்பரமாக திருமணம் செய்து வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதை விட அறிவின்மை வேறு இல்லை. இதனால் அந்த திருமணம் ஒன்றிரண்டு நாள் பேசப்படுமே தவிர மணமக்களின் இனிமையான குடும்ப உறவுக்கோ வாழ்க்கைக்கோ எள்ளளவும் பயன்படாது.
********************************************************************
Also check :
பிள்ளைகளுக்கு என்ன சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்?
உலகே வியந்த கணித மேதை ராமானுஜன் தனக்கு வேண்டும் என்று கேட்டது என்ன தெரியுமா? MUST READ
சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்!
நண்பர் வீட்டு திருமண விருந்து vs தெய்வச் சேக்கிழார் குருபூஜை விருந்து!
********************************************************************
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவுரங்காபாத்தை சேர்ந்த அஜய் முனோத் என்னும் தொழிலதிபர் தனது மகள் திருமணத்தில் ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொண்டு அந்தப் பணத்தில் வீடில்லா ஏழைகள் 90 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு வீடுகளை பரிசளித்து இன்பஅதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறார்.
தனது மகளின் திருமணத்திற்காக சுமார் ஒரு கோடி வரை செலவிட விருந்த அஜய் தேவையற்ற செலவுகளை வெட்டிவிட்டு தேவையான இந்த அரும்பெரும்செ காரியத்தை செய்திருக்கிறார்.
அவருடைய நண்பரும் உள்ளூர் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான பிரஷாந்த் பம்ப் என்பவர் கொடுத்த யோசனையும் உறவினர்கள் கொடுத்த உற்சாகமுமே இந்த திட்டத்தை செயல்படுத்த காரணம் என்று கூறியிருக்கிறார்.
“இதே போன்று வசதி படைத்தவர்கள் அனைவரும் செய்ய முன்வரவேண்டும் என்பதே என் ஆசை” என்கிறார் அஜய் முனோத்.
அஜய்யின் மகளும் மணமகளுமான ஷ்ரேயா “என் தந்தை என் திருமணத்திற்கு கொடுத்த மிகப் பெரிய பரிசு இது” என்று பூரிப்புடன் கூறுகிறார்.
இந்த 90 வீடுகளின் மொத்த மதிப்பு ரூ.1.5 கோடியாகும். சரியான பயனாளிகளை தேர்ந்தெடுக்காவிட்டால் நோக்கமே சிதறிவிடும் என்பதால் பயனாளிகளை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்திருக்கிறார் அஜய்.
இதுவரை சுமார் 40 குடும்பங்கள் இந்த வீடுகளில் குடியேறி இருக்கின்றனர். மீதி உள்ள வீடுகளுக்கு விரைவில் வேறு பலர் குடியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து சோயிப் அலி கான் என்னும் பயனாளி கூறுகையில் : “நான் நான்கைந்து வீடுகளில் வீட்டு வேலை செய்து பிழைத்து வருகிறேன். இதற்கு முன் நாங்கள் இருந்த வீட்டில் மின்சார வசதியோ குடிநீரோ கிடையாது. ஆனால் மாதாமாதம் வாடகை கொடுக்கவேண்டியிருந்தது. தற்போது அந்த தொல்லையிலிருந்து இவர்களால் விடுதலை கிடைத்திருக்கிறது.” என்றார்.
மற்றொரு பயனாளி கூறுகையில் : “நாங்கள் ஸ்ரீ அஜய் குடும்பத்தினர் செய்த இந்த உதவியை என்றென்றும் மறக்கமாட்டோம்” என்றார்.
இதைவிட பெரிய வாழ்த்து உண்டா? ஆசீர்வாதம் உண்டா?
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள் 212)
சிந்திப்பீர்!
=======================================================
Video – Businessman donates 90 houses to homeless poor
=======================================================
பாரதி விழா தேதி மாற்றம்!
வார்தா புயலால் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் ஞாயிறு 18 டிசம்பர் அன்று நடைபெறுவதாக இருந்த நம் பாரதிவிழா + ஆண்டுவிழா ஒரு வாரம் ஒத்திவைக்கப்படுகிறது. டிசம்பர் 25 காலை அதே நேரத்தில் அதே இடத்தில் நடைபெறும். வாசகர்கள் தங்கள் மேலான ஒத்துழைப்பையும் உதவிகளையும் நல்கி விழா சிறக்க உதவிடவேண்டும்.
நன்றி!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest.
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
========================================================
Also check :
‘எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்!’ MUST READ
ஒரு நடிகைக்கு தந்தை எழுதிய கடிதம்! MUST READ
ஒரு கோடீஸ்வரரின் மகன் வேலை தேடி அலைந்த கதை – MUST READ
ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?
கார்பரேட் அடிமைக்கு கிடைத்த ‘பளார்’ – ஒரு உண்மை சம்பவம்!
ஆன்லைனிலும் அமேசானிலும் ‘கிடைக்காத’ ஒன்று !
“விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்!” – பாரதியின் மனைவி செல்லம்மாளின் வானொலி உரை!
“தயவுசெய்து மனைவியிடம் பேசுங்கள்!”- ஒரு கணவனின் வாக்குமூலம்!
உங்கள் வெற்றிக்கும் தோல்விக்கும் யார் பொறுப்பு?
‘வாழ்க்கைத் துணை’ (LIFE PARTNER) என்றால் என்ன?
‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?
மும்பை to பெங்களூரு to சான் ஃபிரான்சிஸ்கோ!
ரெக்கை கட்டி பறந்த ஒரு சைக்கிள் வியாபாரி! சந்தையை புரட்டிப்போட்ட ‘நிர்மா’!
ஒரு வடை வியாபாரியும் வாழ்க்கை பாடமும்!
========================================================
[END]