Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > இழந்த அனைத்தையும் மீட்டுத் தந்த சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் -16

இழந்த அனைத்தையும் மீட்டுத் தந்த சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் -16

print

சிவபுண்ணியக் கதைகள் உணர்த்தும் நீதிகள் ஒவ்வொன்றும் சிலிர்க்க வைப்பவை. சிந்திக்க வைப்பவை. பாவங்களை பொசுக்க இப்படி ஒரு மார்க்கம் உண்டா என்று வியக்க வைப்பவை. எத்தகைய சிறு செயல்கள் கூட சிவபுண்ணியம் தரும் என்பதை உணர்ந்து பொருளுக்கு அலைந்திடும் இந்த வாழ்க்கையில் இடையிடையே அருளையும் தேடிக்கொள்ளவேண்டும். நாளை ஒரு அமயம் சமயம் என்றால் உங்களுக்கும் சரி உங்கள் பிள்ளைகளுக்கும் சரி உதவிக்கு வரப்போவது இந்த சிவபுண்ணியம் தான்.

மேலும் சிவபுண்ணியத் தொடரை படிக்கும் முன் முந்தைய அத்தியாயத்தை அவசியம் படிக்கவும். தனித்தனியாக படித்தாலும் புரியும் என்றாலும் ஒன்றுக்கொன்று சங்கிலி போன்ற தொடர்புடையது இந்த சிவபுண்ணியக்கதைகள். எனவே முந்தைய அத்தியாயத்தை படிப்பது பதிவில் ஒன்ற உதவும்.  (Check : சாபத்தை பொசுக்கிய சிவபுண்ணியம் – அகஸ்தியர் சொன்ன கதை – சிவபுண்ணியக் கதைகள் -15)

sivapunniyam-1

புண்ணியங்களை ஈட்டுவது மற்றும் திருவருளை பெறுவது யுகந்தோறும் மாறுபடும். முந்தைய யுகங்களில் இறைவனின் அருளை பெறுவது என்பது அத்தனை சுலபமல்ல. கிருதயுகத்தில் கடுந்தவம் செய்யவேண்டும். திரேதாயுகத்தில் தானங்கள் மற்றும் யாகாதி கர்மாக்கள் வேள்விகள் முதலானவற்றை செய்யவேண்டும். துவாபர யுகத்தில் அர்ச்சனை பூஜைகள் இவற்றை செய்யவேண்டும். கலியுகத்தில் இறைவனின் பெருமையை சொல்வதாலும் கேட்பதாலும் படிப்பதினாலும் அடைந்து விடலாம்! ஆனால் அனைத்திற்கும் மேலான சிவபுண்ணியத்தை பொருத்தவரை எல்லா யுகங்களிலும் எளிமையாகத் தான் இருந்துள்ளது. இந்த தொடரின் பல்வேறு அத்தியாயங்களில் நாம் பார்த்த பல்வேறு கதைகளிலேயே அது புரிந்திருக்கும்…

இறுதிக் காலத்தில் சிவநாமத்தை உச்சரித்து உய்வு பெற்றான் ஒருவன், திருடிய பசுவை சிவாலயத்தில் விட்டுச் சென்று அது பொழிந்த பாலில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெற்ற காரணத்தால் உய்வுபெற்றான் ஒருவன், தனது மகன் சிறுவர்களுடன் சேர்ந்து மணலால் சிவலிங்கம் செய்து விளையாட்டாய் பூஜை செய்த காரணத்தால் உய்வு பெற்றான் ஒருவன்… இப்படி எளிமையான செயல்கள் மூலமே மகத்தான சிவபுண்ணியத்தை பெறமுடியும்.

பலப் பதிவுகளில் நாம் சொல்லிய கருத்து தான்…. மீண்டும் சொல்கிறோம். எல்லாருக்கும் சிவனை வணங்கும் பாக்கியம் கிடைக்காது. சிவபக்தியும் வாய்க்காது. சிவபக்தி என்பது ஒரு பிறவியில் வருவதல்ல. அது பல பிறவிகள் தொடர்புடையது. கலியுகத்தில் புண்ணியம் சேர்ப்பது எளிது. பாபங்கள் சேர்ப்பது அதையும்விட எளிது. சேர்க்கும் புண்ணியத்தைவிட சேர்க்கும் பாபம் அதிகமாகவே அனைவருக்கும் இருக்கும். அந்தப் பாபச் சுமைகளை பஞ்சுப்பொதியில் பட்ட தீப்பொறி போல எரித்து பஸ்பமாக்குவது சிவபுண்ணியம் ஆகும்.

சிவபுண்ணியம் மிக மிக எளிமையான விஷயம் தான். ஆனால் அதற்கும் புத்தி போகவேண்டுமே… இதுவரை படித்த கதைகளிலேயே அது புரிந்திருக்கும். எனவே தான் பல யுகங்களுக்கு முன் நடந்த சம்பவங்களை கதைகளாக இங்கு அளித்துவருகிறோம். கவனமாக படிக்கவும். இதை படிப்பதும் கூட ஒரு சிவபுண்ணியம்.

  • ‘தொடர்ந்து தவறுகளே செய்தாலும் சிலர் சிவாலயம் பக்கம் எட்டிக்கூட பார்க்கும் வழக்கம் இல்லாதவர்களாக இருந்துகொண்டு ஆனால் பல தலைமுறைக்கு நன்றாக சொத்து பத்துக்கள் சேர்த்துகொண்டு சுகமாக வாழ்கிறார்களே எப்படி?’ என்று உங்களுக்கு தோன்றலாம். அதற்கு காரணம் அவர்கள் பெற்றோர்கள் பாட்டன்மார்கள் உள்ளிட்ட முன்னோர்கள் செய்த சிவபுண்ணியம் தான். அது ஸ்டாக் தீர்ந்தால் அடுத்த நொடி அதள பாதாளத்தில் விழவேண்டியது தான். (சொத்துக்கள் எப்படி பரம்பரை பரம்பரையாக வருகிறதோ சிவபுண்ணியமும் அப்படித் தான் வரும்!)

சரி இந்தப் பதிவின் கதைக்கு செல்வோம்…

எருமை மாடு செய்த சிவபுண்ணியம்!

முன்கதைச் சுருக்கம்

கோசல நாட்டு மன்னன் அஜன் தனது புத்திரிகள் நால்வருக்கு திருமணம் செய்து வைத்தபோது, மணமக்கள் கொண்டாட்டத்தின் உச்சியில் இருந்த சமயத்தில் விஸ்வாமித்திர மகரிஷி அங்கே வருவதை கவனிக்காமல் இருந்துவிட அதன் விளைவாக அவர்களின் நாடு நகரம் உட்பட அனைத்தும் எரிந்து சாம்பலாகும்படி சபித்து அவர்களையும் காட்டில் திரியும் ஆதிவாசிகளாக மாறும்படி சபித்துவிடுகிறார் விஸ்வாமித்திரர். அப்போது அவர்களை கண்ட அகஸ்திய மகரிஷி இரக்கங்கொண்டு கீசகபுரத்தில் சாதாரணன் என்னும் அரசன் ஒருவன் முன்பொரு முறை வசிஷ்டரின் சாபத்திற்கு ஆளாகி பின்னர் தனது மனைவியுடன் சேர்ந்து காட்டில் இருந்த சிவாலயம் ஒன்றில் உழவாரப்பணி செய்து சாபவிமோச்சனம் பெற்ற கதையை கூறி, சகல பாபங்கள் மற்றும் தோஷங்கள் மற்றும் சாபங்கள் ஆகியவற்றிலிருந்து நீக்கவல்லது சிவபுண்ணியம் என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறி, அங்கே அப்போது வந்த சிவபக்தர் ஒருவருக்கு பூஜைகளில் உதவும்படி கூறிவிட்டுப் செல்கிறார்.

இனி இந்த அத்தியாயத்தில்…

தைத் தொடர்ந்து நான்கு அரசகுமாரர்களும் அந்த அடியாரை வணங்கி, “எங்களை இந்த சாபத்திலிருந்து நீங்கள் தான் விடுவிக்கவேண்டும்” என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறார்கள்.

அவர்களை தேற்றும் அந்த சிவபக்தர், “பக்தர்களை என்றும் காக்கும் பரமேஸ்வரன் இருக்க நீங்கள் கவலைப் படவேண்டாம். காஸ்யப முனிவர் சீடர் முத்கலர். அவர் ஒரு முறை தனது குருதேவரின் அருகில் அமர்ந்து பாடங்களை படித்துக்கொண்டிருந்தபோது தவறுதலாக எச்சில் காஸ்யபர் மீது பட்டுவிடுகிறது.

காஸ்யபர் கடுங்கோபங்கொண்டு தனது சீடனை எருமையாக மாறும்படி சபித்துவிடுகிறார்.

sivapunniyam-2

உடனே முத்கலர் எருமையாக மாறி சுற்றித் திரிகிறார். ஒரு முறை அந்த எருமையானது அந்த ஊரின் எல்லையில் உள்ள சக்தீஸ்வரர் ஆலயத்திற்குள் சென்று அங்கிருக்கும் புற்களையும், இலை, தழை உள்ளிட்ட இதர குப்பைகளையும் மேய்ந்துகொண்டிருந்தது. அப்படி மேயும்போது மேய்ச்சலின் காரணமாக அந்தக் கோவில் பிரகாரத்தை தன்னையுமறியாமல் சில முறை சுற்ற நேர்ந்தது. அப்போது கோவில் பிரகார சுவற்றின் மீது முளைத்திருந்த சில செடிகளையும் மேய்ந்தது. பின்னர் தல விருட்சத்தின் அடியில் இருந்த ஒரு சன்னதி அருகே வந்து அமர்ந்தது. அப்போது அது சுயவுருவை பெற்றது. முத்கலர் மீண்டும் சுயவுருவை பெற்றார்.

எருமையாய் இருந்த போதே சிவாலயத்தை வலம் வந்தவர் இப்போது சும்மாயிருப்பாரா?

மேலும் சில முறை ஆலயத்தை வலம் வந்து வணங்கினார்.

அது சமயம் அங்கே இருந்த அனைவரும் இந்த அதிசயத்தை கண்டவுடன் வியப்புடன் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

ஐந்தறிவு விலங்கான எருமை சிவாலய புற்களை மேய்ந்தபடி ஆலயத்தை வலம் வந்ததால் சாபம் நீங்கி புனர்ஜென்மம் பெற்றது என்றால் சிவபுண்ணியத்தின் மகத்துவம் தான் என்ன என்று வியந்து போற்றினார்கள்.

எனவே அரசகுமாரர்களே நீங்களும் சிவபுண்ணியத்தை செய்து உங்கள் சாபத்தை நீக்கிக்கொள்ளுங்கள்…!” என்று கூறினார் அந்த சிவபக்தர்.

“ஐயா… நாங்கள் என்ன செய்யவேண்டும்… எப்படி செய்யவேண்டும்…. என்று நீங்கள் எடுத்துக்கூறினால் நாங்கள் அதை செய்ய சித்தமாக இருக்கிறோம்….”

==========================================================

Don’t miss these articles :

பரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்? MUST READ

சாபம் என்றால் என்ன, தோஷம் என்றால் என்ன? MUST READ

நமது பிறவிப் பிணியும் திருப்பதி, திருவண்ணாமலை தரிசனமும்!

==========================================================

“நீங்கள் நால்வரும் உடனே இந்த சிவாலயத்தை வலம் வந்து வணங்கவேண்டும். உங்கள் பத்தினிகளில் ஒருத்தி ஈசனின் சன்னதியை பெருக்கி, கழுவி, துடைத்து சாணம்தெளித்து மெழுகவேண்டும். மற்றவள் அபிஷேகத்திற்கு நீர் (சுத்த ஜலம்) கொண்டு வரவேண்டும். மற்றுமொருவள் பூஜைக்கு நறுமணம் மிக்க மலர்களை பறித்து வரவேண்டும். நான்காமவள் நைவேத்தியத்திற்கு தேவையான காய் கனிவகைகளை திரட்டிக்கொண்டு வரவேண்டும்.”

“அப்படியே செய்கிறோம் ஐயா” என்று கூறிய அவர்களை அழைத்துக் கொண்டு அந்த ஆலயத்திற்கு சென்று ஈஸ்வரனை தரிசனம் செய்வித்தார்.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும், அவர்கள் அவருடன் சேர்ந்து முன்பு சொன்னது போல பல்வேறு பணிகளை செய்து ஈஸ்வர பூஜைக்கு உதவி செய்துவரலானார்கள்.

நாட்கள் சென்றது. சரியாக இருபத்தியொரு நாட்கள் சென்றபின்னர் அவர்களுக்கு மெல்ல மெல்ல சுயஉருவம் தோன்றியது. சிவபுண்ணியத்தின் மகிமையை போற்றி வியந்து மேலும் சிரத்தையுடன் பூஜைக்கு உதவி செய்து வர, முன்பு போல நாடு நகரம் உட்பட அனைத்து சைன்யங்களும் தோன்றின.

sivapunniyam-3

மேலும் நாட்கள் செல்ல, அனைவரும் பேரெழிலும் முன்னைக் காட்டிலும் வனப்பும் பெற்றனர்.

இவ்வாறாக சிவபுண்ணியத்தின் மகிமையால் இழந்த அனைத்தையும் முன்னைக்காட்டிலும் பொலிவுடன் பெற்றனர்.

தங்களுக்கு சாபவிமோச்சனம் பெற உதவிய சிவனடியார் கால்களில் வீழ்ந்து “உங்களால் தான் எங்களுக்கு இந்த சாப விமோச்சனம் கிடைத்தது” என்று தங்கள் நன்றியை தெரிவித்தனர்.

“அனைத்திற்கும் காரணம் நீங்கள் இதுவரை செய்து வந்த சிவபுண்ணியம் தான். சிவபுண்ணியம் ஒன்றினால் மட்டுமே சாபங்களில் கொடிய சாபமான ரிஷிகளின் சாபத்திலிருந்து விடுதலை பெற்று தரமுடியும். இனி தொடர்ந்து தவறாமல் சிவபுண்ணியச் செயல்களை செயதுவாருங்கள்….” என்று ஆசி கூறினார்.

தொடர்ந்து அந்த ஆலயத்தில் இந்த அரசகுமாரர்களும் அவர்களின் பத்தினிகளும் அங்கிருந்த அம்ருதேஸ்வர சுவாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் செய்வித்து மகிழ்ந்தார்கள். பிறகு அங்கிருந்த காட்டை திருத்தி ஒரு அழகான பட்டினமாக அதை மாற்றி அதற்கு தங்கள் குருவின் பெயரையே சூட்டினார்கள்.

பின்னர் அம்ருதேஸ்வரருக்கு மண்டபங்கள், கோபுரங்கள் முதலியவற்றை கட்டி ஏராளமான நிபந்தங்களையும் (நன்கொடை) அளித்து பல்வேறு உற்சவங்கள் செம்மையாக நடக்குமாறு செய்தார்கள்.

* அக்காலங்களில் கோவில் கட்டுபவர்கள் அக்கோவிலில் பூஜைகள் செம்மையாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டுத் தான் சென்றார்கள். அவர்கள் ஏற்பாட்டின்படி பல ஆயிரம் வருஷங்கள் அந்த ஆலயத்திற்கு பூஜைகள் தடையின்றி செய்யமுடியும். ஆனால் இங்கே சிலர் அரசியல்வாதிகளாக மாறி, சிவன் சொத்தை தாங்கள் கைப்பற்றி அதை முறைகேடாக அனுபவித்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் குடும்பம் என்னாகும் தெரியுமா? (Please check : சிவன் சொத்து…. ஒரு கண்கலங்க வைக்கும் உதாரணம்!)

பின்னர் தங்கள் நாட்டை அடைந்து அதற்கு பின் எந்தவித துன்பமும் இன்றி ஆட்சியில் செலுத்தி இன்புற்று வாழ்ந்தார்கள்.

(இத்தோடு நின்றதா… அது தான் இல்லை. இவர்களுக்கு பிறக்கும் புதல்வர்களுக்கு இது தொடர்பான சிவபுண்ணியக் கதை இருக்கிறது. அதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்!)

பிணியுடை யாக்கை தன்னைப் பிறப்பறுத் துய்ய வேண்டில்
பணியுடைத் தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றி னாலே
துணிவுடை யரக்க னோடி யெடுத்தலுந் தோகை யஞ்ச
மணிமுடிப் பத்தி றுத்தார் மாமறைக் காட னாரே .
– அப்பர் 

==========================================================

சிவனடியார்கள் அனைவரும் ஒரே குலம்!

சிவபுண்ணியக் கதைகள் விளக்கும் மற்றுமொரு மிகப் பெரிய உண்மை என்னவென்றால் சிவபக்தர்களுக்கிடையே பேதம் கிடையாது என்பதே. தேவர்கள், அசுரர்கள், ராட்சர்கள், யக்ஷர்கள், கந்தவர்கள், நாகர்கள், முனிவர்கள், மனிதர்கள், அந்தணர்கள், ஷத்திரியர்கள் இன்னும் இது போன்ற எல்லா பிரிவினரிலும் சிவபக்தர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு வர்ணாசிரம (குலதர்ம) கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. இவர்கள் அனைவரும் சிவபெருமானை சேர்ந்தவர்கள் என்றே கருதப்படுகிறார்கள். இவர்களை வேதங்கள் அனைத்தின் மூலமாக ‘அதிவர்ணாசிரமிகள்’ என்றே அங்கீகரிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு வெளிப்புற அடையாளங்கள் பத்தும் உட்புற அடையாளங்கள் மூன்றும் உண்டு. (அது பற்றி பின்னர் பார்ப்போம்.)

இன்றும் நீங்கள் திருத்தொண்டர் வரலாறான பெரியபுராணத்தில் பல்வேறு சமுதாய பிரிவைச் சேர்ந்தவர்களும் நாயன்மார்களாக இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.

==========================================================

பாரதி விழா தேதி மாற்றம்!

அண்மையில் சென்னையை தாக்கிய வார்தா புயலால் இங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வரும் டிசம்பர் 18, 2016 அன்று நடைபெறுவதாக இருந்த நம் தளத்தின் பாரதி விழா ஒரு வாரம் ஒத்திவைக்கப்படுகிறது.

சென்னையில் பல இடங்களில் மின்சாரம் இன்னும் வரவில்லை. அலைபேசிகள் வேலை செய்யவில்லை. பொருளாதாரம் முடங்கிப் போயிருக்கிறது. இயல்பு நிலை இந்த வார இறுதிக்குள் திரும்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் விழாவை நாம் நடத்த இயலாது. எனவே விழாவை டிசம்பர் 25, ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்திவைத்திருக்கிறோம். எல்லாம் நன்மைக்கே….!

நிகழ்ச்சி நடத்தும் அரங்கிற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்ட நிலையில் இது எதிர்பாராமல் நடந்திருக்கிறது. சிரமங்களை பொறுத்துக்கொண்டு வாசகர்கள் மற்றும் நண்பர்கள் வந்திருந்து சிறப்பிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மற்ற விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். விழா எளிமையாக அதே சமயம் பயனுள்ள வகையில் நடைபெறும்.

திருவருள் துணைக்கொண்டு எதிர்காலத்தில் நம் தளத்தின் விழா கோடை விடுமுறையில் தான் நடத்தப்படும்.

அயல்நாடுகளில் வெளிமாநிலங்களில் வசிக்கும் வாசக அன்பர்கள் விழாவிற்கு தங்களால் இயன்ற பொருளுதவியை நல்கும்படி கேட்டுக்கொள்கிறோம். நமது ஆண்டுவிழாவும் இந்த பாரதி விழாவுடன் சேர்த்து நடத்தப்படுவதால் தேவாரம், திருபுகழ் என அனைத்து அம்சங்களும் இந்த விழாவில் உண்டு.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056. IFSC Code : UTIB0001182

நமச்சிவாயம்!

– ரைட்மந்த்ரா சுந்தர், ஆசிரியர், Rightmantra.com | E : editor@rightmantra.com | M : 9840169215

==========================================================

சிவபுண்ணியக் கதைகள் முந்தைய பாகங்களுக்கு…

சாபத்தை பொசுக்கிய சிவபுண்ணியம் – அகஸ்தியர் சொன்ன கதை – சிவபுண்ணியக் கதைகள் (15)

கனவிலும் செய்யக்கூடாத சிவாபராதங்கள் சில! – சிவபுண்ணியக் கதைகள் (14)

தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்ட எமதர்மன்! ஏன்? எதற்கு? – சிவபுண்ணியக் கதைகள் (13)

வீசியெறிந்த ஓலைச்சுவடியும் கீழே கொட்டிய அரிசியும் – சிவபுண்ணியக் கதைகள் (12)

சிவபூஜைக்கு வெற்றிலை வாங்க உதவியவன் கதை – சிவபுண்ணியக் கதைகள் (11)

‘சாகுற நேரத்தில சங்கரா’ – பழமொழியின் பொருள் என்ன? சிவபுண்ணியக் கதைகள் (10)

இடையன் செய்த சிவபுண்ணியமும் கிருஷ்ணாவதாரமும் – சிவபுண்ணியக் கதைகள் (9)

உழவாரப்பணி என்னும் உன்னத தொண்டு – சிவபுண்ணியக் கதைகள் (8)

ருத்ராக்ஷம் தந்த புது வாழ்வு – சிவபுண்ணியக் கதைகள் (7)

கயிலை அலங்கரிக்கப்பட்டது யாரை வரவேற்க தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (6)

திருடிய நெய்யும் சிவபுண்ணியமும் – சிவபுண்ணியக் கதைகள் (5)

வாழைப்பழ திருடனுக்கு கிடைத்த பேறு – சிவபுண்ணியக் கதைகள் (4)

பசுவின் பால் கொடுத்த சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (3)

தந்தையை காத்த, தனயனின் சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (2)

கூற்றுவன் அஞ்சுவது யாரைக் கண்டு தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (1)

==========================================================

Also check கர்மா Vs கடவுள் earlier episodes…

கர்மாவை வென்ற காருண்யம் – கர்மா Vs கடவுள் (5)

விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)

கர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)

நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)

ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)

==========================================================

Similar articles…

சிவபெருமானின் முக்கண் எவை தெரியுமா?

ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!

கபாலீஸ்வரருடன் ஒரு பொன்மாலைப் பொழுது!

‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!

பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?

சிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது? – சிவராத்திரி SPL 5

கிரக லட்சணம், கோ சம்ரட்சணம்!

சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!

ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!

Thalaivar is always great!

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

மனதில் ஏற்பட்ட திடீர் குழப்பம் – கற்பகாம்பாளுடன் தோன்றி விடை சொன்ன கபாலீஸ்வரர்!

தண்டியடிகளுக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த இடம் – ஒரு நேரடி ரிப்போர்ட்!

பதிகங்கள் புரியாத அதிசயம் உண்டா?

தலைவருடன் ஒரு சந்திப்பு!

நாள் கிழமை விஷேடங்களின் போது ஏன் அவசியம் ஆலயத்திற்கு செல்லவேண்டும்?

கேட்காமலே அள்ளிக் கொடுப்பவனிடம் கேட்க என்ன இருக்கிறது?

==========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *