Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > அப்பன் விறகு சுமந்தான். பிள்ளை என்ன செய்தான் தெரியுமா?

அப்பன் விறகு சுமந்தான். பிள்ளை என்ன செய்தான் தெரியுமா?

print

ன்று ஆங்கிலத் தேதிப்படி நம் பிறந்தநாள். பொதுவாக தமிழ் மாதத்தில் ஜென்ம நட்சத்திரப்படி வரும் பிறந்தநாளைத் தான் நாம் கொண்டாடுவது வழக்கம். அது ஆன்மாவுக்கு. இது ஊர் உலகிற்கும் உங்களைப் போன்ற நண்பர்களுக்கும். உங்கள் வாழ்த்துகள் மேன்மேலும் இந்த எளியோனின் பணியை சிறக்க செய்யவேண்டும். அதுவே நம் பிரார்த்தனை.

kundrathur-murugan
குன்றத்தூர் முருகன் – உற்சவர்

இன்று பெற்றோரிடம் ஆசி, ஆலய தரிசனம், பின்னர் நம் கடமை – இவை தான் நமது ஷெட்யூல். மாலை விழித்திறன் சவால் கொண்ட  மாணவியர் பயிலும் ‘விழிகள்’ அமைப்பின் அலுவலகம் சென்று அங்கு அவர்களுடன் சிறிது நேரம் செலவிட்டுவிட்டு பின்னர் சிந்தாதிரிப்பேட்டை சிவன் கோவிலில் நடைபெறும் செந்தழிமரசு திரு.கி.சிவக்குமார் அவர்களின் சொற்பொழிவுக்கு சென்று ஈசனின் பெருமையை சிரவணம் செய்யவிருக்கிறோம்.

இத்துடன் அளித்திருக்கும் பதிவில் நமது தளத்தின் ஓவியர் ஐயா சசி அவர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவியம் இடம்பெற்றுள்ளது. இக்கதையின் கருவை முன்பே அவரிடம் கூறி ஓவியம் தயாராகிக்கொண்டிருந்தது. ஆனால் என்று இந்த பதிவை அளிக்கவேண்டும் என்று திட்டமிடவில்லை. இருப்பினும் நம் பிறந்த நாளான இன்று முருகப்பெருமானின் பெருமையை பேசாவிட்டால் பிறந்து என்ன பயன்? எனவே முருகப்பெருமானின் திருவிளையாடல் ஒன்றை விசேஷ பதிவாக தருகிறோம். நேற்று சசி அவர்களை சந்தித்து இந்த ஓவியத்தை நிறைவு செய்து பெற்றுக்கொண்டு வந்தோம். இன்று முருகனை அவசியம் சிந்திக்கவேண்டும் என்று கருதி இப்பதிவை விசேஷமாக எழுதினோம்.

”நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே!”

திருச்செங்கோடு மலை ‘ஸர்ப்ப கிரி’ என்றால் ஏன் படமெடுத்து ஆடவில்லை?

கொங்கு நாட்டு தலங்களுள் தனிச்சிறப்பு பெற்றது திருச்செங்கோடு. செந்நிறத்தில் அமைந்த மலையின் உச்சியில் கிழக்கு நோக்கி செங்கோட்டு வேலவர் சன்னதி உள்ளது. மேற்கு நோக்கி அர்த்தநாரீஸ்வரர் எனப்படும் ‘மாதொரு பாகர்’ சன்னதி அமைந்துள்ளது. மாதொரு பாகர் லிங்க வடிவில் அல்லாமல் ஆறு அடி முழு திருமேனியுடன் காட்சியளிக்கிறார். பாதி புடவை – பாதி வேட்டி அலங்காரத்துடன் மூலவர் (சிவன்) காட்சி தருகிறார். முழு வடிவமும் வெள்ளைப் பாஷாணத்தால் ஆனது.
thiruchengode

இம்மலைக்கோயில் சிவனுக்குரியதாக சொல்லப்பட்டாலும் இங்கு திருமாலுக்கும் கோயில் உள்ளது. இங்குள்ள ஆதிகேசவ பெருமாள் சன்னிதி, நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டதாகும். இம்மலை மீது ஏற 1250 படிக்கட்டுகள் கொண்ட பாதை உள்ளது. இங்கு முதலில் அமைந்தது முருகனுக்கான கோயில் ஆகும். அதையொட்டியே இந்நகரின் பெயர் அமைந்துள்ளதை கவனிக்கலாம்.

இந்த தலத்தில் குணசீலன் என்கிற அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். திருச்செங்கோடு முருகப்பெருமானுக்கு பூக்கள் பறித்து மாலை சூட்டும் திருந்தொண்டை புரிந்து வந்தார்.

பாண்டிய நாட்டில் உள்ள வைணவத் தலம் திருக்குருகூர். இது பாண்டிய நாட்டு நவதிருப்பதிகளுள் ஐந்தாம் தலம் ஆகும். இந்த ஊரில் பிரதிவாதி பயங்கரன் என்கிற பண்டிதன் வாழ்ந்து வந்தான். பலருக்கு இவன் பேரைக் கேட்டாலே அதிருது ரகம் தான். அந்தளவு வாதம் செய்வதில் வல்லவன். போட்டிக்கு வலுக்கட்டாயமாக அழைத்து அவர்களை தோற்கடித்து பயங்கர தண்டனையையும் கொடுத்து அனுப்புவான். அதனால் மெத்த படித்த பண்டிதர்கள் கூட இவன் பெயரைக் சொன்னாலே பதறியடித்துக் கொண்டு ஓட்டமெடுப்பார்கள்.

==========================================================

Also check some important updates….

இல்லற வாழ்வில் மக்கள் எளிதாகக் கடைப்பிடிக்கக் கூடிய தர்மங்கள் என்னென்ன? – கந்தசஷ்டி SPL 4

‘ஆண்டவன் பிச்சி’ என்னும் அதிசயப் பிறவி – கந்தசஷ்டி SPL 3!

‘உள்ளம் உருகுதையா’ தந்த ஆண்டவன் பிச்சி என்கிற மரகதம் – கந்தசஷ்டி SPL 2

சிவபெருமானைப் போல முருகனுக்கும் பன்னிரு திருமுறை உண்டு தெரியுமா? கந்தசஷ்டி SPL 1

திருமுருகாற்றுப்படை படிக்கச் சொன்ன பெரியவா!

தன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்!

திருமுருகாற்றுப்படையும் அறுபடைவீடுகளும்! ஒரு சுவாரஸ்யமான வரலாறு!!

==========================================================

ஒருமுறை திருச்செங்கோட்டுக்கு இவன் வந்தபோது பிரதிவாதி வந்திருக்கிறான் என்று தெரிந்துகொண்டு பல அறிஞர்கள் ஓட்டமெடுத்தனர்.

போட்டியில் பங்கேற்று வாது புரிய யாரும் கிடைக்காது ஏமாற்றமடைந்த பிரதிவாதி பயங்கரனின் பார்வையில் அதுசமயம் முருகனின் திருத்தொண்டுக்காக பூக்களை பறித்துக்கொண்டிருந்த குணசீலர் பட்டார்.

அவரிடம் சென்று “உங்கள் ஊரில் அறிஞர்கள் படித்தவர்கள் என்று யாருமே இல்லையா?” என்று கேட்டார்.

குணசீலர், “ஐயா படித்தவர்கள் என்று யாரை நீங்கள் கருதுகிறீர்கள்? யாராக இருந்தாலும் கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு என்பதன்றோ சான்றோர் வாக்கு” என்றார்.

இதை கேட்ட பிரதிவாதி பயங்கரன் துணுக்குற்று, “என்ன… நான் ஒரு கேள்வி கேட்டால் நீ ஒரு பதில் கூறுகிறாய்? இறுமாப்போ?” என்றான் சற்று கோபமாக.

குணசீலர் : “இல்லை ஐயா பெரியோர் கூறியதை சொன்னேன்”

பிரதிவாதி பயங்கரன் : “உங்கள் ஊரில் கற்றவர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். ஆனால் ஒருவரையும் காணோம். பார்க்க பண்டாரம் போல இருக்கும் நீ எனக்கு பதிலளித்துக்கொண்டிருக்கிறாய்…” என்றார்.

“ஐயா… நான் எங்கே பதிலளிக்கிறேன். உங்களை கேட்கச் செய்வது அந்த செங்கோட்டு வேலன். என்னை பதில் அளிக்கச் செய்வதும் அந்த செங்கோட்டு வேலன்.”

“அப்படியென்றால் நாளை மறுநாள் நடக்கும் வாதுப் போட்டியில் பங்கேற்று என் கேள்விகளுக்கு பதில் சொல். என்னை ஜெயித்துக்காட்டு. இல்லையென்றால் திருச்செங்கோட்டில் கற்றறிந்த சான்றோர்களே யாரும் இல்லை என்று நான் செல்லுமிடமெல்லாம்  தண்டோரா போடுவேன்” என்றான்.

“முருகன் திருவுளப்படி நடப்பது நடக்கட்டும்” என்றார் குணசீலர்.

பிரதிவாதி அங்கிருந்து போனவுடனே குணசீலரை சூழ்ந்துகொண்ட ஊர் மக்கள் சிலர் “என்ன காரியம் செய்த்துவிட்டீர் குணசீலரே? அவனை வாதில் வென்றவர் யாருமே கிடையாது. சூது வாது அறிந்தவன் அவன். நீ தோற்றுவிட்டால் என்ன வேண்டுமானாலும் செய்வான்… பேசாமல் இரவோடு இரவாக எங்கேனும் ஓடிப்போய்விடு…” என்றனர்.

“எந்தை முருகனிருக்க எனக்கென்ன கவலை?” என்று கூறிய குணசீலர் நேரே செங்கோட்டு வேலன் சன்னிதி சென்று குகனின் பாதம் பணிந்து முறையிட்டார்.

அன்றிரவு குணசீலரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான் “அன்பனே கவலை வேண்டாம். உன் பகைவனை நாம் வென்று உனது துயரை தீர்ப்போம்” என்று கூறிவிட்டு மறைந்தார்.

போட்டிக்கு முந்தைய நாள் காலையில் பிரதிவாதி பயங்கரன் வெண்குடை தாளமேள கண்டிகையுடன் பல்லக்கில் திருச்செங்கோடு மலையை சுற்றிப்பார்க்க புறப்பட்டான்.

மலைக்கு சமீபமாய் வருகையில் அம்மலையை பார்த்து “இது ஸர்ப்ப சயிலம் (பாம்புமலை) என்றால் இம்மலை ஏன் படமெடுத்து ஆடவில்லை?” என்று பொருள் படும்படி, கட்டளைக் கலித்துறையில்

”சமரமுகத் திருச்செங்கோடு சர்ப்பசயில
மென்ன அமரில் படம்விரித்து ஆடாதது என்?”

என்று ஒரு கவியை புனைந்து பாடினான். பாடினானே தவிர அதை முடிக்கத் தெரியவில்லை. மேற்கொண்டு அதை என்ன பாடி அதை முடிப்பது என்று தெரியாமல் திணறினான்.

thiruchengode-gunaseelar

அப்போது அங்கு ஆடுமேய்த்துக்கொண்டிருந்த சிறுவன்,

“முருகனது மயில் வாகனம் கொத்துமென்று படமெடுத்தாடவில்லை அரவம்” என்ற பொருள்படும்படி,

”…..அஃதாய்ந்திலையோ நமரன் குறவள்ளி பங்கன் எழுகரை நாடுயர்ந்த
குமரன் திருமருகன் மயில் வாகனம் கொத்துமென்றே!”

என்று பதிலிறுத்தான் இடைசிறுவன்.

ஒரு ஆடுமாடு மேய்க்கும் பொடியன் இப்படி பிரமாதமாக கவி புனைகிறானோ என்று வியந்த பிரதிவாதி பயங்கரன், “என் கேள்விக்கு இத்தனை பொருத்தமாக பதில் சொன்ன நீ யாரப்பா?” என்று கேட்க, “ஐயா… இந்த ஊரில் வாழும் முருகனடியார் குணசீலரின் கடை மாணாக்கன் நான். அவரிடம் இசை கற்று வந்தேன். ஒரு முறை அவர் சுட்டிய வினா ஒன்றுக்கு பதில் சொல்லவியலாது திணறினேன். ஆசுகவி பாடுவதில் உனக்கு புலமை இல்லை. பேசாமல் மாடு மேய்க்கப் போ” என்று என்னை விரட்டிவிட்டுவிட்டார். அது முதல் ஆடு மாடுகளை மேய்த்து பிழைத்து வருகிறேன்” என்றான்.

குணசீலரிடம் பாடம் கற்று தேர்ச்சி பெறாத ஒரு கடை மாணவருக்கே இத்தனை புலமை என்றால் குணசீலரின் புலமையை பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாதே என்று கருதிய பிரதிவாதி பயங்கரன் தனது பரிவாரங்களோடு இரவோடிரவாக திருச்செங்கோட்டை விட்டு ஓட்டமெடுத்தான்.

இப்படியாக குணசீலரிடம் போட்டிக்கு வரும் முன்பே திருச்செங்கோட்டு இடையனிடம் தோற்று ஓடிப்போனான் பிரதிவாதி.

ஆட்டிடையனாக வந்து பிரதிவாதி பயங்கரனின் செருக்கை அறுத்தது முத்தமிழ்க் கடவுளான அந்த முத்துக்குமரன் என்று சொல்லவும் வேண்டுமா என்ன?

அன்று மதுரையில் பாணபத்திரருக்காக விறகு சுமந்தான் தகப்பன். இங்கு திருச்செங்கோட்டில் ஒரு ஏழை அடியாருக்காக ஆடுமாடுகள் மேய்த்தான் பிள்ளை.

முருகப்பெருமானின் இந்த திருவிளையாடலையும் பிரதிவாதி பயங்கரன் இரவோடு இரவாக திருச்செங்கோட்டை விட்டு நீங்கியது பற்றியும் கேள்விப்பட்ட குணசீலர் செங்கோட்டு வேலர் சன்னதி முன்பு சென்று காதலாகி கசிந்துருகி கதறினார்.

“கந்தா… கடம்பா… கதிர்வேலா… தேவாதி தேவர்களும் உன் கடைக்கண் பார்வைக்காக காத்துக்கொண்டிருக்க நீயோ இந்த ஏழைக்காக இரங்கி ஆடு மாடுகளை மேய்த்தனையோ? என்னே உன் கருணை? என் ஆவி உள்ளவரை உனக்கு திருத்தொண்டு செய்ய அருள்புரியவாயாக” என்று பலவாறாக வணங்கித் துதித்தார்.

சொன்னபடியே தனது ஆயுள் உள்ளவரை முருகப்பெருமானுக்கு மலர் பறித்து மாலை சூட்டும் திருத்தொண்டு புரிந்த குணசீலர் இறுதியில் குக சாயுஜ்ஜியப் பதவியை அடைந்தார்.

இந்த வரலாறு திருச்செங்கோட்டு புராணத்திலும் ‘கொங்கு மண்டல சதகம்’ செய்யுளிலும் உள்ளது.

ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறு செய் தனிவேல் வாழ்க் குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்!

==========================================================

இந்த தளத்தை தொய்வின்றி நடத்திட வாசகர்களின் பங்களிப்பு அவசியம் தேவை!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

Kindly drop in mail to editor@rightmantra.com once you transfer your fund or message me at 9840169215

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

Also check :

தன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்!

‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்!

மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…

“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா!”

சின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா?

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!

அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் !

 மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!

களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே!”

==========================================================

வள்ளிமலை அற்புதங்கள் தொடரின் … DON’T MISS!

வள்ளி தவப்பீடத்தில் அருள்பாலிக்கும் அறுபடை முருகன்  – வள்ளிமலை அற்புதங்கள் (4)

வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (3)

சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)

புத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா? வள்ளிமலை அற்புதங்கள் (1)

==========================================================

[END]

4 thoughts on “அப்பன் விறகு சுமந்தான். பிள்ளை என்ன செய்தான் தெரியுமா?

  1. Amazing inputs Sundar Ji. Wishing u a birthday of health, prosperity to u & ur family. Continue ur zeal in working for the benefit, wellbeing of our Motherland especially the downtrodden ones.God’ s blessings with u forever 🙂

  2. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுந்தர் ஐயா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *