– சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றில் கண்ட சில வரிகள்…
சென்ற பிரார்த்தனைக்கு (அனுதினமும் நாம் வணங்கும் இறைவன் நம்மை உண்மையில் ரட்சிக்கிறானா ? Rightmantra Prayer Club) கோரிக்கை அனுப்பியவர்கள் யாவரும் அதிர்ஷ்டசாலிகள் என்று தான் சொல்வோம். காரணம், எப்போதும் இல்லாத வகையில் இந்த மூன்று வாரமும் சுமார் பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட திருத்தலங்களை தரிசிக்கும் பாக்கியம் நமக்கு கிடைத்ததால் பிரார்த்தனையாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு அத்தலங்களில் பிரார்த்தனையும் அர்ச்சனையும் செய்யும் பாக்கியம் கிடைத்தது. மேலும் அடுத்தடுத்த பணிகளால் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் அளிக்கப்படும் பிரார்த்தனை பதிவை சென்ற வாரம் அளிக்கமுடியவில்லை. எனவே முந்தைய பிரார்த்தனை மூன்று வாரங்கள் (இந்த வாரத்தோடு சேர்த்து நான்கு வாரம்) ஆன்லைனில் இருந்தது. எல்லாம் நன்மைக்கே.
சென்ற மாதம் (அக்டோபர்) 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தான் நாம் கடைசியாக பிரார்த்தனை பதிவை அளித்தோம். அன்று மாலையே மூன்று நாள் பயணமாக எட்டையபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் பின்னர் திருப்பராய்த்துறை ஆகிய ஊர்களுக்கு புறப்பட்டோம். (தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்ஸில் மாலை பயணம்).
வெள்ளிக்கிழமை பிரார்த்தனை பதிவை அளித்தால் மறுநாள் சனிக்கிழமை சம்பந்தப்பட்ட சிறப்பு விருந்தினருக்கு நேரில் சென்று பிரார்த்தனை விபரத்தை தெரிவித்து பிரிண்ட்-அவுட் அளித்துவிடுவோம். ஆனால் இந்த முறை வெளியூர்
புறப்படுவதால் பிரார்த்தனை விபரத்தை எப்படி தலைமை ஏற்கும் ஸ்ரீ ராகவன் பட்டரிடம் சேர்ப்பது? யோசித்து கடைசியில் பிரார்த்தனை பதிவை பிரிண்ட்-அவுட் எடுத்து பிரார்த்தனைக்கு தலைமை ஏற்ற ஸ்ரீ ராகவன் பட்டர் அவர்களுக்கு அது மறுநாள் கிடைக்கும் வண்ணம் கூரியர் அனுப்பிவிட்டோம்.
அவரிடம் விபரத்தை கூறி ‘மறக்காமல் பிரார்த்தனை செய்யுங்கள். நான் தூத்துக்குடி செல்கிறேன். அங்கிருந்தும் நினைவுபடுத்துகிறேன். திருவருளால் சென்னை திரும்பியவுடன் உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன்’ என்றோம்.
அவரும் நிச்சயம் பிரார்த்தனையும் அர்ச்சனையும் செய்வதாக சொன்னார். ‘பிரார்த்தனை நேரத்தில் பிரசாதம் செய்யவேண்டுமா?’ என்று கேட்டார்.
அடடா இப்படி ஒரு பாக்கியமா என்று கருதி, ‘நிச்சயம் செய்யுங்கள். சென்னை திரும்பியவுடன் நேரில் வந்து அதற்குரிய தொகையை கொடுத்து விடுகிறேன்’ என்றோம். அவர் சர்க்கரைப் பொங்கல் & சுண்டல் செய்து சுவாமிக்கு நிவேதனம் செய்து அனைவருக்கும் கொடுப்பதாக சொன்னார். போனஸாக அந்த நேரத்தில் வரும் அன்பர்களை கொண்டு விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணமும் செய்வதாக கூறி நம்மை திக்குமுக்காட வைத்தார்.
கடமையை கச்சிதமாக முடித்துவிட்ட திருப்தியில் அன்று இரவு தூத்துக்குடி (எட்டையபுரம்) புறப்பட்டுவிட்டோம். தூத்துக்குடியில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீக்ஷிதர் நினைவு இல்லத்தில் சுவாமியிடமும் அம்பாளிடமும் பிரார்த்தனை கோரிக்கைகளை வைத்து பிரார்த்தனை செய்தோம். தொடர்ந்து அன்று மாலை தூத்துக்குடியில் உள்ள தொன்மை வாய்ந்த பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலுக்கு சென்றோம். பிரார்த்தனைக் கோரிக்கைகளை சுவாமி பாதத்தில் வைத்து பிரார்த்தனையாளர்கள் அனைவரின் பெயர்களுக்கும் அர்ச்சனை செய்தோம். அன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் கூட்டம் அலைமோதியது. (அருகிலேயே பெருமாள் கோவிலும் உண்டு!)
==========================================================
நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…
முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!
‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!
==========================================================
மறுநாள் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றபோது, அங்கு ஸ்ரீ ஆண்டாளையும் ரங்கமன்னாரையும் தரிசித்துவிட்டு ஆண்டாள் அவதரித்த துளசி வனத்தில் இருக்கும் அவரது கோவிலில் ஆண்டாள் திருப்பாதத்தில் பிரார்த்தனை கோரிக்கைகளை வைத்து அங்கும் அனைவரின் பெயர்களுக்கும் அர்ச்சனை செய்தோம். பிரதான கோவிலில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்த சூழ்நிலையில் அங்கு அர்ச்சனை செய்யமுடியவில்லையே என்கிற நமது ஏக்கம் தீரும் விதமாக இங்கு அது அமைந்தது. இது மிகப் பெரும் பாக்கியம் என்று தான் சொல்வோம்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நமது மற்ற பணிகளை முடித்துவிட்டு அங்கிருந்து இரவு புறப்பட்டு மறுநாள் அதிகாலை திருச்சி வந்து அறை எடுத்து தங்கி கொஞ்சம் நேரம் ஓய்வுக்கு பின்னர் மீண்டும் தயாராகி திருப்பராய்த்துறை புறப்பட்டோம்.
இங்கு நடைபெற்ற காவிரி துலா ஸ்நானத்தில் ஸ்வாமியுடனும் அம்பாளுடனும் பங்கேற்றுவிட்டு பின்னர் தாருகாவனத்தில் எழுந்தருளியிருக்கும் பராய்த்துறை நாதரை வணங்கிவிட்டு இங்கு அம்பாள் சன்னதியில் பிரார்த்தனை கோரிக்கைகளை வைத்தோம். இங்கு துலா ஸ்நானத்தையொட்டி கூட்டம் அதிகமாக இருந்தபடியால் அர்ச்சனை செய்ய முடியவில்லை.
எனவே வெளியே பிரகாரத்தில் இருந்த மண்டபத்தில் உள்ள திருஞானசம்பந்தரின் திருவுருவச் சிலையில் அவரது திருப்பாதத்தில் பிரார்த்தனை கோரிக்கைகளை வைத்து நமக்கு தெரிந்த திருமுறை பாடல்கள் சிலவற்றை பாடி பிரார்த்தனை செய்தோம். இதுவும் பெறற்கரிய வாய்ப்பு தான்.
சென்னை திரும்பிய பிறகு பிரார்த்தனைக்கு தலைமை ஏற்ற வைகுண்டவாசப் பெருமாள் கோவில் ஸ்ரீ ராகவன் பட்டரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க பேரம்பாக்கம் சென்றோம்.
செல்லும் வழியில் மப்பேடு சிங்கீஸ்வரரையும் அன்னை புஷ்பா குஜாம்பாளையும் தரிசித்தோம். அங்கும் அனைத்து பிரார்த்தனையாளர்களுக்கும் அர்ச்சனை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. சுவாமியிடம் பிரார்த்தனை கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
தொடர்ந்து பேரம்பாக்கம் வைகுண்ட வாசப்பெருமாள் தரிசனம். அங்கு வைகுண்டப் பெருமாளை தரிசித்து பிரார்த்தனை கோரிக்கைகளை சுவாமி பாதத்தில் வைக்கச் சொல்லி கேட்டுக்கொண்டோம். ஆனால் நாம் கூரியரில் அனுப்பியதே இன்னும் சுவாமி பாதத்தில் தான் இருப்பதாக சொல்லி அதை காண்பித்தார் பட்டர்.
தொடர்ந்து ராகவன் பட்டரை நமது தளம் சார்பாக கௌரவித்தோம். அவருக்கு வஸ்திரம், தாம்பூலம் உள்ளிட்டவை வைத்து வழங்கப்பட்டது.
அவருக்கு மீண்டும் நன்றி தெரிவித்துவிட்டு அடுத்து நரம்பு ஸ்பெஷலிஸ்ட் சோளீஸ்வரரை தரிசிக்கக் சென்றோம். நமது பிரார்த்தனை கிளப்பில் நரம்பு சம்பந்தப்பட்ட கோரிக்கைக்காக தாமதமாக பிரார்த்தனை அனுப்பியிருந்த வாசகி ஒருவரின் பெயருக்கு அங்கு அர்ச்சனை செய்துவிட்டு ராஜா குருக்கள் அவர்களுக்கு முந்தைய பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றமைக்கு நன்றி தெரிவித்துவிட்டு வந்தோம்.
அதற்கு அடுத்து சில நாட்களில் காஞ்சி பயணம். நமக்கு தெரிந்த ஒரு குடும்பத்தினரை மகா பெரியவா அதிஷ்டானம் அழைத்துச் செல்லவேண்டியிருந்தது. எனவே காஞ்சி சென்று அன்னை காமாட்சியை தரிசித்துவிட்டு தொடர்ந்து மகா பெரியவா அதிஷ்டானத்தில் பெரியவாவை தரிசித்துவிட்டு மதிய உணவை அங்கேயே முடித்துக்கொண்டு சற்று ஓய்வெடுத்துக்கொண்டு பிற்பகல் 3.30 pm அளவில் கூழமந்தல் பேசும் பெருமாள் கோவிலுக்கு சென்றோம்.
இங்கு ஜீயரை நாம் நமது பிரார்த்தனை கிளப்புக்கு தலைமை ஏற்கச் செய்ய அவரது இசைவு பெறவேண்டி சந்திக்க வேண்டியிருந்தது. ஏற்கனவே இவரை வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு பிப்ரவரி மாதம் சென்றபோது சந்தித்திருக்கிறோம். கூழமந்தல் பேசும் பெருமாள் பேசாத குழந்தைகளை பேச வைப்பதில் வல்லவர். இது ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு அற்புதமான பரிகாரத் தலம். விரைவில் விரிவான பதிவு வரவிருக்கிறது.
இங்கும் பெருமாள் சன்னதியில் அவரது திருப்பாதத்தில் கோரிக்கைகளை சமர்ப்பித்து அனைத்து பிரார்த்தனையாளர்களின் பெயர்களுக்கும் அர்ச்சனை செய்தோம். பிரார்த்தனையும் செய்தோம். தொடர்ந்து ஜீயரை சந்தித்து ஆசிபெற்று அவருடன் அளவளாவினோம். (அதற்கான பதிவில் அது பற்றிய விபரம் வரும்).
இதற்கு சில நாள் கழித்து கந்த சஷ்டி துவங்கியது. போரூர் பாலமுருகன் கோவிலுக்கு தினசரி சென்று முருகனின் தரிசித்தோம். கடைசி நாள் குன்றத்தூர் சென்று சுப்ரமணியசுவாமியை தரிசித்து இங்கும் பிரார்த்தனை கோரிக்கைகளை முருகன் திருப்பாதத்தில் சமர்ப்பித்து அர்ச்சனை செய்தோம்.
இப்படி ஒரு வாய்ப்பு இதுவரை நடைபெற்ற எந்தப் பிரார்த்தனைக்கும் அமையவில்லை. அந்த வகையில் சென்ற பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கை சமர்ப்பித்த அனைவருக்கும் திருவருள் பெருமழையாய் பொழிந்திருக்கிறது எனலாம்.
இன்னும் பல ஆலயங்கள் புகைப்படங்கள் விடுபட்டுப் போயிருக்கின்றன. இந்த மூன்று வாரமும் பல ஆலயங்களை தரிசித்தது மட்டுமல்ல சுமார் நூறு பதிவுகளுக்கான விஷயங்களை திரட்டிக்கொண்டு வந்திருக்கிறோம். அந்தவகையில் நமக்கு ஜாக்பாட்.
பிரார்த்தனை சமர்ப்பித்த அனைவருக்கும் நிச்சயம் அனைவருக்கும் நல்லதே நடக்கும்.
இதை எதற்கு தனிப் பதிவாக அளிக்கிறோம் என்றால் இதெல்லாம் உங்களுக்கு தெரியாமலே போய்விடக்கூடாது என்பதால் தான். மேலும் இவை அனைத்தும் சாத்தியப்பட்டதன் காரணம் முழுக்க முழுக்க திருவருள் தான்.
பல பிரார்த்தனைப் பதிவுகள் இப்படி பல்வேறு கோவில்களில் சமர்ப்பிக்கப்பட்டு நடந்திருக்கின்றன. பிரார்த்தனை பதிவின் இறுதியில் முந்தைய பிரார்த்தனை எப்படி நடந்தது என்று தெரிவிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை கோவில்கள் அதிகம் என்பதால் பதிவாகவே அளித்துவிட்டோம்.
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே!
==========================================================
உங்கள் கவனத்திற்கு….
நமது பிரார்த்தனை மன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ள பல கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரை – அதற்கு பிறகும் கூட – நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.
பிரார்த்தனை கோரிக்கை அனுப்பும் வாசகர்கள் அவசியம் தங்கள் கோரிக்கையை ஓரிரு வரிகளில் அனுப்பாமல் சற்று விரிவாக அனுப்பவும். அவசியம் பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் இவற்றை குறிப்பிடவும். (ராசி, நட்சத்திர விபரங்கள் தளத்தில் பிரசுரிக்கப்படமாட்டாது. கோவிலில் அர்ச்சனை செய்யவே இந்த விபரங்கள் கேட்கப்படுகிறது!)
கோரிக்கை குறித்த சந்தேகங்கள் எழும்போது பதிவை தயாரிக்க சிரமமாக உள்ளது. எனவே அலைபேசி எண்ணை அவசியம் குறிப்படவேண்டும். அலைபேசி எண் இன்றி வரும் எந்த பிரார்த்தனை கோரிக்கையும் / மின்னஞ்சலும் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
நன்றி!
==========================================================
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை….
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.
Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!
Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215 | E-mail : editor@rightmantra.com
==========================================================
Some articles on Power of prayer :
எதிர்பாராத பிரச்சனைகளும் நமது பிரார்த்தனையும்!
வெற்றிகரமான பிரார்த்தனைக்கு ஒரு வழிகாட்டி!
உங்கள் பிரார்த்தனைகள் சுலபமாக நிறைவேற வேண்டுமா?
“தன்னைப் போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே!”
இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன?
ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் – வாருங்கள் விதியை மாற்றுவோம்!
==========================================================
[END]