Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, October 10, 2024
Please specify the group
Home > Featured > ‘உள்ளம் உருகுதையா’ தந்த ஆண்டவன் பிச்சி என்கிற மரகதம் – கந்தசஷ்டி SPL 2

‘உள்ளம் உருகுதையா’ தந்த ஆண்டவன் பிச்சி என்கிற மரகதம் – கந்தசஷ்டி SPL 2

print
ந்த சஷ்டியின் சிறப்பு தொடரின் இந்த இரண்டாம் நாள் பதிவை தயாரிப்பது மிக மிக சவாலாக இருந்தது. நதிமூலமும் ரிஷிமூலமும் கண்டுபிடிப்பது அத்தனை சுலபமா என்ன? இருப்பினும் கிடைத்த ஆதாரத்தை உறுதி செய்து கொள்ள பிராட்வேயில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கே நேற்று நேரில் சென்றுவிட்டோம்.

இந்த தொடரின் முதல் பாகத்திலேயே நாம் சொன்னது நினைவிருக்கிறதா? இந்த தொடர் சற்று கடினமான பணி தான். அதை நிறைவேற்றித் தரவேண்டியது அந்த முருகனின் பொறுப்பு! இப்படி அவன் மீது பாரத்தை போட்டதால் தப்பித்தோம். இல்லையெனில் இந்த பதிவை அளித்திருக்கவே முடியாது.

பதிவின் இடையில் இது பற்றி விரிவாக பார்ப்போம்… இப்போதைக்கு பதிவுக்குள் செல்வோம்.

பிரபல பாடகரும் முருக பக்தருமான டி.எம்.எஸ். அடிக்கடி பழனி சென்று தண்டாயுதபாணியை வழிபடுவது வழக்கம். காரணம் திரை இசைப்பாடல்களை பாடிக்கொண்டிருந்தவரை பக்தி இசை நோக்கி திருப்பியது பழனி முருகன் தான். அதாவது சுருக்கமாக சொன்னால் டி.எம்.எஸ். அவர்களை தடுத்தாட்கொண்டது பழனி முருகன்.

palani-copy

டி.எம்.எஸ். ஒவ்வொரு கிருத்திகைக்கும் பழனி சென்று தண்டாயுதபாணியை தரிசிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். அப்படி செல்லும் சமயம் பழனியில் அவர் தங்கிய ஓட்டலில் பணியாற்றும் ஒரு இஸ்லாமிய சிறுவன், ‘உள்ளம் உருகுதையா’ என்றொரு பாடலை அவனுக்கு தெரிந்த ஒரு ராகத்தில் முணுமுணுப்பதை கேட்டார். ஏனோ அந்த பாடல் அவரை சுண்டியிழுக்க அவனை அழைத்து அப்பாடலை திரும்பப் பாடும்படி கேட்டு அதை ரசித்தார். அதன் சுவையில் லயித்தார்.

tmsஅந்த பாடலை யார் இயற்றியது? எப்படி அவனுக்கு தெரியும்? என்று மேற்கொண்டு விசாரித்தபோது அவனுக்கு அது பற்றி எதுவும் சொல்ல தெரியவில்லை.

அப்போதைக்கு அவனை மீண்டும் மீண்டும் அதைப் பாடும்படி கேட்டுக்கொண்டு அந்த வரிகளை மறக்காமல் நோட் செய்துகொண்டு வந்தார்.

பின்னர் அந்த பாடலில் ‘அடா’ என்று வரும் இடத்தில் எல்லாம் மரியாதை கருதி ‘ஐயா’ என்று மாற்றிவிட்டார். இருப்பினும் அதன் சுவை குன்றவில்லை. பின்னர் அதை டி.எம்.எஸ். அவர்கள் தனது தேமதுரக் குரலில் பாட, தமிழகம் முழுக்க அப்பாடல் பிரபலமானது. இந்தப் விபரத்தை டி.எம்.எஸ். அவர்களே தான் கச்சேரி செய்த சில மேடைகளில் கூறியிருக்கிறார்.

==========================================================

திரு.டி.எம்.எஸ். அவர்களுடனான நமது பிரத்யேக சந்திப்பு குறித்த பதிவுக்கு…

“ஒன்றென்றிரு.. தெய்வம் உண்டென்றிரு…” – ஏழிசை வேந்தர் திரு.டி.எம்.எஸ். அவர்களுடன் ஒரு பிரத்யேக சந்திப்பு!

==========================================================

இதற்கிடையே பல ஆண்டுகள் கழித்து டி.எம்.எஸ். அவர்களை பற்றி ஆவணப் படத் தயாரிப்பில் விஜயராஜ் என்பவர் ஈடுப்பட்ட சமயம் அதற்கு பூஜை போடுவதற்கு சென்னை தம்பு செட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு திரு. டி.எம்.எஸ். அவர்களும் டி.எம்.எஸ். இயக்குனர் திரு.விஜய்ராஜும் சென்றிருந்தார்கள்.

அப்போது குருக்கள் இவர்களுக்கு தரிசனம் செய்துவைத்துவிட்டு பின்னர் இவர்களை அம்பாள் சன்னதி பக்கவாட்டு சுவர் அருகே அழைத்துச் சென்று அங்கு ஒரு கல்வெட்டை காண்பிக்க, அங்கு பார்த்தது இவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

andavan-pichi-stone-engraving

எந்த பாடலை ஊனும் உள்ளமும் உருகி உருகி பாடிவந்தாரோ, எந்த பாடலை யார் இயற்றினார் என்று தேடிவந்தாரோ அந்தப் பாடல் அங்கே முழு வடிவில் செதுக்கப்பட்டிருந்தது. அதை இயற்றியவர் ‘ஆண்டவன் பிச்சி’ என்ற விபரத்துடன்.

அதைக் கண்டு வியந்தவர்கள் யார் இந்த ‘ஆண்டவன் பிச்சி’ என்ற ஆராய்ச்சியில் இறங்கியபோது கிடைத்த தகவல்கள் வியக்கவைத்தன.

இது தான் நமக்கு கிடைத்த தகவல்.

உள்ளம் உருகுதைய்யா…. பாடல் காணொளி  

***************************

தைப் பற்றி கேள்விப்பட்டவுடன் நமக்கு உடனே காளிகாம்பாள் கோவில் சென்று சம்பந்தப்பட்ட கல்வெட்டு இருப்பது உண்மைதானா என்று உறுதிப்படுத்திக்கொண்டு அப்படியே உங்களுக்கும் படம்பிடித்து காட்டவேண்டும் என்ற ஆசை அரும்பியது. இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி அப்படியே கமடேஸ்வரரையும் அன்னையையும் தரிசிக்கலாம் என்று கருதினோம். காளிகாம்பாளை தரிசிக்க யாருக்கு தான் ஆசை இருக்காது.

இது புறநகர்க் கோவிலோ ஆட்கள் அரிதாக வரும் கோவிலோ அல்ல. நகரின் பிரதான வணிகப் பகுதியான பிராட்வேயில் இருக்கிறது. சம்பந்தப்பட்ட கல்வெட்டு கோவிலுக்கு உள்ளே வேறு இருக்கிறது. அதை எப்படி படமெடுப்பது? அது சுலபமான காரியமாக இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. எதற்கும் இருக்கட்டும் என்று நண்பர் ஒருவரின் REFERENCE வாங்கிக்கொண்டோம்.

முருகன் மேல் பாரத்தை போட்டுவிட்டு நேற்று மாலை காளிகாம்பாள் கோவில் புறப்பட்டோம்.

கோவிலை அடைந்தபோது மணி மாலை 5.00 இருக்கும். அந்தத் நேரத்திலும் கோவில் பரபரப்பாக இருந்தது. ஆனால் கூட்ட முதலில் உள்ள சென்றவுடன் முருகன் சன்னதி தான் நம்மை வரவேற்றது. கந்தசஷ்டியை முன்னிட்டு உற்சவரை அலங்கரித்து முன்னே வைத்திருந்தார்கள். தரிசித்துவிட்டு அடுத்து அன்னையை தரிசிக்க சென்றோம்.

==========================================================

Also check some important updates….

திருமுருகாற்றுப்படை படிக்கச் சொன்ன பெரியவா!

தன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்!

திருமுருகாற்றுப்படையும் அறுபடைவீடுகளும்! ஒரு சுவாரஸ்யமான வரலாறு!!

==========================================================

அதியற்புதமான தரிசனம். அன்னையை சற்று பொறுமையாக தரிசித்துவிட்டு வெளியே வரும்போது கமடேஸ்வரர் சன்னதி அருகே சிவாச்சாரியார் ஒருவர் மந்திரித்த கயிறு கொடுத்துகொண்டிருந்தார். ஒரு கயிறு பத்து ரூபாய். நம் வாசகர்கள் சிலர் தங்கள் உடல்நிலை குறித்தும் தங்கள் பிள்ளைகளின் உடல் நிலை குறித்து நம்மிடம் கவலையை பகிர்ந்துகொண்டு ஏதாவது உபாயம் இருந்தால் சொல்லுங்கள் என்று முந்தைய தினம் கூறியது நினைவுக்கு வந்தது. சரி அவர்களுக்காக இந்த கயிறு ஒரு நான்கைந்து வாங்கிக்கொள்வோம் என்று கருதி நம் கைகளிலும் ஒன்றைக் கட்டிக்கொண்டு நாமும் ஒரு சில கயிறும் குங்குமப் பிரசாதமும் வாங்கிக்கொண்டு வெளியே வந்தோம். பிரகாரத்தை சுற்றி வந்தபோதே நாம் தேடிய அந்த கல்வெட்டு கண்ணில் பட்டது.

kalikambal

உடனே அதை நமது காமிராவில் படமெடுத்தோம். சற்று டென்ஷனாகத் தான் இருந்தது. யார் எங்கேயிருந்து வந்து காமிராவை பறிப்பார்களோ என்கிற பயம் தான். நடப்பது நடக்கட்டும் என்று முருகனின் மீது பாரத்தை போட்டுவிட்டு வேண்டிய மட்டும் படமெடுத்துவிட்டு பின் நமது மொபைலிலும் அந்தக் கல்வெட்டு முன் நாம் நிற்பது போல ஒரு படம் எடுத்துக்கொண்டோம். நாம் படமெடுத்த பகுதிக்கு நேரெதிரே ஒரு வாட்ச்மேன் அமர்ந்திருந்தார். சற்று தள்ளி அலுவலக அர்ச்சனை சீட்டுக்குள் விற்கும் கவுண்டர் அதில் ஒருவர் அமர்ந்துகொண்டிருந்தார். இன்னும் பார்க்கும் இடங்களில் எல்லாம் செக்யூரிட்டிக்கள் போய்க்கொண்டும் வந்துவிடும் இருந்தார்கள். ஒருவித அச்சத்துடன் தான் எடுத்தோம். ஆனால் நம் நேரம் யாரும் எதுவும் சொல்லவில்லை. அனைத்தும் மிகச் சுலபமாக அமைந்தது. ஏதோ ஒரு மந்திரத்துக்கு கட்டுப்பட்டு அனைத்தும் நடப்பது போல இருந்தது. இத்தனைக்கும் கோவில் முழுக்க ஆங்காங்கே சி.சி.டி.வி. காமிராக்கள்.

படத்தை எடுத்து முடித்துவிட்டு பிரகாரத்தை பிரதட்சிணம் வந்துவிட்டு கொடிமரத்தின் கீழ் நமஸ்கரித்துவிட்டு வெளியே வந்தோம். வெளியே வந்தபோது கனவு போல இருந்தது. நிச்சயம் இது முருகன் திருவுளம் தான். பரபரப்பான காளிகாம்பாள் போன்ற சிறிய ஆலயத்தில் இது சான்ஸேயில்லை. எப்படியோ அவனருளால் அனைத்தும் சுலபமாக முடிந்தது.

பின்னர் போரூருக்கு வந்து ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டிக்கு தரிசிக்கும் போரூர் பாலமுருகனை தரிசித்தோம். காளிகாம்பாள் கோவிலில் பெற்ற கயிறுகளை இங்கே மீண்டும் அம்பாள் பாதத்தில் வைத்துப் பெற்றுக்கொண்டோம்.

மறுநாள் அலுவலகம் வந்து இந்த தொடர் தொடர்பான பணிகளில் மூழ்கினோம். எழுதினோம். எழுதினோம். எழுதிக்கொண்டே இருந்தோம்.

பரந்து விரிந்த சமுத்திரத்தை அள்ளி ஒரு குடத்துக்குள் அடக்குவது போல இருந்தது ஆண்டவன் பிச்சி அவர்களின் சரிதத்தை ஒரே பதிவுக்குள் அடக்குவது.

andavan-pichai-amma
ஆண்டவன் பிச்சி என்கிற மரகதவள்ளி

யார் இந்த ஆண்டவன் பிச்சி?

நம்மைச் சுற்றி எத்தனையோ மகான்கள் இறையருள் பெற்று ஏன் இறைவனையே நேரில் தரிசித்தும் அது பற்றிய விளம்பர வெளிச்சம் இன்றி வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அவர்கள் புகழ் வெளிச்சத்திற்கு ஆசைப்பட்டதில்லை. அதன் பின்னே சென்றதுமில்லை.

ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானை சகோதரனே

என்று அருணகிரிநாதர் கூறுவதைப் போல இறைவனை பாடுவதை மட்டுமே வரமாக கேட்டுப் பெற்று வாழ்ந்தவர்கள் பலர்.

அநுபூதி பெற்றவர்களுக்கு அதைவிட பெரியது ஏதேனும் கிட்டமுடியுமா என்ன? (* அநுபூதி = இறைவனைக் கண்ட அனுவத்தில் பூரிப்பது). அப்படி அநுபூதி பெற்று நம்மிடையே புகழ் வெளிச்சம் இன்றி வாழ்ந்து மறைந்தவர் தான் ‘ஆண்டவன் பிச்சி’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட மரகதவள்ளி / மரகதம்.

1899 ஆம் ஆண்டு கபாலீஸ்வரர் ஆட்சி செய்யும் திருமயிலையில் சங்கரநாராயண சாஸ்திரி – சீதாலட்சுமி தம்பதியினருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு முருகனின் கரம் பிடித்த வள்ளியின் நினைவாக மரகதவள்ளி என்கிற பெயரை சூட்டினர். சங்கரநாராயண சாஸ்திரி குடும்பம் பண்டிதர்கள் தோன்றி தழைத்த குடும்பம். ஆனால், மரகதவள்ளிக்கோ சிறுவயது முதலே கல்வியில் நாட்டமில்லை. இருப்பினும் அறிவிற் சிறந்து விளங்கினார்.

மரகதவள்ளிக்கு அக்கால வழக்கப்படி, எட்டு வயதிலேயே திருமணம் செய்துவைத்தனர். கல்வியிலோ ஏன் விளையாட்டில் கூட நாட்டமில்லா மரகதவள்ளியை பந்தத்திற்குள் திணித்தனர்.

மரகதவள்ளியின் பாட்டிக்கு மட்டும் (அப்பாவின் அம்மா) தனது பேத்தி மேல் கொள்ளை பிரியம். அவள் சாதாரண பிறவியில்ல என்பதை உணர்ந்திருந்தார். “என் பேத்திக்கு நல்ல அறிவையும் ஆற்றலையும் கொடுப்பாய் முருகா” என்று திருத்தணி முருகனிடம் இடைவிடாமல் வேண்டி வந்தார். முருகன் குறித்த பல கதைகளை வள்ளிக்கு சொல்வார்.

மரகதம் புக்ககத்திற்கு சென்ற பின்னர் ஒரு நாள் அவள் கனவில் தோன்றிய முருகன் அவள் நாவில் தனது வேலால் பிரணவ மந்திரத்தை எழுதி, “மரகதம், இனி எம்மைப் பாடுவதே நாம் உமக்கு இட்ட பணி” என்று கட்டளையிட்டு மறைய, பள்ளிக்கூடம் பக்கமே எட்டிப் பார்க்காத மரகத வள்ளி ஆசுகவி போல பல பக்திப் பாடல்களை முருகன் மேல் பாடினார்.

பக்தி நெறிப்படி வாழ்ந்தாலும் இல்லறத்தில் இருந்ததால் அடுத்தடுத்து ஒன்பது குழந்தைகளுக்கு தாயானாள் இந்த சேய். சம்சாரத்தில் உழன்றாலும் தாமரை இலை மேல் நீர் போல ஒட்டாமல் வாழ்ந்தார். அவர் உடல் இல்லறத்தில் திளைத்தாலும் உள்ளம் திருத்தணிகை முருகனையே சுற்றி சுற்றி வந்தது.

அது ஒரு கந்த சஷ்டி சமயம். ஐந்தாவது குழந்தையை கருவில் சுமந்துகொண்டிருந்தாள் மரகதம். முந்தைய பிரசவம் போலல்லாமல் இது சற்றும் கடினமாக இருந்தது. “முருகா… முருகா” என்று அரற்றியபடி வலியில் துடித்துக்கொண்டிருந்தாள் மரகதம். சரியாக சூரசம்ஹாரத்தத்துக்கு இரண்டு நாட்கள் முன்பு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. கந்தசஷ்டி அன்று மாலை அனைவரும் கந்தசஷ்டி விழாவைக் காண சென்றுவிட்டனர்.

muruga

தனியாக ஜுரத்தில் நடுங்கியபடி இருந்த மரகதத்தின் கனவில் பாலமுருகனாய் தோன்றிய திருத்தணிகை முருகன் “மரகதம் வா என்னை வந்து எடுத்துக்கொள்” என்று கெஞ்சினான். உடனே ஓடிச் சென்று அக்குழந்தையை அள்ளி அனைத்து உச்சிமோந்து மரகதம் “நீ யாரப்பா?” என்று வினவ, “நானா… நான் தான் மால் மருகன்” என்றான்.

தாயன்பில் மரகதம் திளைத்துக்கொண்டிருந்த வேளையில் “எனக்காக ஒரு தாலாட்டு பாடுவாயா?” என்று கேட்டு மறைந்துவிட்டான்.

அவ்வளவு தான் எங்கிருந்து தான் அந்த தெம்பு வந்ததோ மரகதத்திற்கு பேப்பரும் பென்சிலும் எடுத்து பாடல்களாக எழுதி குவித்துவிட்டார்.

குழந்தையைக் கூட கவனிக்காமல் மரகதம் எப்போது பார்த்தாலும் பென்சிலும் பேப்பருமாய் இருப்பதை பார்த்த மரகதத்தின் மாமியார் வெகுண்டு எழுந்தார்.

“அந்த ஆண்டியை இந்த ஆண்டி பாடுறாளாம்.. உன்னால இந்த குடும்பமே நடுத்தெருவுக்கு வரப்போகுது. இனிமேல் முருகனைப் பாடமாட்டேன்  என்று உன் கணவர் மீதும் குழந்தை மீதும் சத்தியம் செய்து கொடு” என்று மிரட்ட, பயந்துபோன மரகதம் அப்படியே செய்தாள்.

பின்னர் மாமியார் மரகதம் பாடல்கள் எழுதிய அனைத்து தாள்களையும் பறித்து ஒரு பெட்டியில் போட்டு பூட்டி விட்டார்.

இது நடந்து பல ஆண்டுகள் கழித்தே மரகதத்தின் மாமியார் இயற்கை எய்தினார். இந்த காலகட்டங்களில் மாமியாருக்கு செயதுகொடுத்த சாத்தியத்தின்படி முருகன் மீது பாடவோ எழுதவோ செய்யவில்லை. முருகன் மீதான தனது காதலை உள்ளுக்குள்ளேயே வைத்திருந்தார்.

மரகதத்தை வேண்டி விரும்பி பணிக்கொண்ட முருகன் சும்மாவிடுவானா?

ஒரு நாள் மரகத்தின் உறவுப் பெண்மணி ஒருவர் தான் நடத்தும் பத்திரிகை ஒன்றுக்கு பாடல் எழுதித் தரும்படி மரகதத்திடம் கேட்டுக்கொண்டாள்.

“நான் பாடுவதையோ எழுதுவதையோ நிறுத்தி பல வருடங்கள் ஆகின்றதே…” என்றாள் கண்கலங்கியபடி.

“முருகன் மீது தான் பாடல் கேட்கிறேன்… கொஞ்சம் எழுதிக்கொடேன்” என்று அப்பெண்மணி வற்புறுத்த, “இரு எதற்கும் நான் முன்பு எழுதிய பாடல்கள் இருக்கின்றனவா?” என்று பார்க்கிறேன் என்று கூறி, தனது அத்தை தான் எழுதிய பாடல்களை பூட்டிவைத்த பெட்டியை உடைத்துப் பார்த்தார்.

என்ன ஆச்சரியம்… பெட்டிக்குள் இருந்த பழைய ரூபாய் நோட்டுக்குள், காகிதங்கள், தஸ்தாவேஜுகள் அனைத்தும் செல்லரிக்கப்பட்டிருந்தன. மரகதம் பாடல் எழுதிய காகிதங்கள் மட்டும் அப்படியே இருந்தன.

அதை அப்படியே எடுத்து அப்பெண்மணியிடம் கொடுத்து “வேண்டியதை வேண்டும் அளவு நீயே போட்டுக்கொள்” என்று கூறிவிட்டாள்.

அன்றிரவு மரகதத்தின் கனவில் தோன்றிய முருகன் “மரகதம், எழுதிய பாடல்கள் அனைத்தையும் கொடுத்துவிட்டாயே… மீண்டும் என்னை பாடேன்” என்று கேட்டுக்கொண்டான். இது நடந்தது 1949 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி.

கணவர் மீதும் குழந்தைகள் மீது இட்ட சத்தியத்தை நினைத்து தயங்கினாள் மரகதம். “கைகள்தான் உன்னுடையது. அதை இயக்குவது நானல்லவா? என்ன தயக்கம்?” என்று கூறி மறைந்தான் மாலவன் மருகன்.

அன்று மீண்டும் துவங்கி 108 பாடல்களை எழுதிமுடித்தார். அதுவே ‘ஆத்ம போதம்’ என்ற பாடல் தொகுப்பாக வெளிவந்தது.

சிறிது காலத்தில் மஹா சுவாமிகளால் ‘திருப்புகழ் மணி’ என்று அழைக்கப்பட்ட கிருஷ்ணசாமி அய்யரின் அறிமுகம் கிடைத்தது. மரகதம் அம்மாள் தான் பாடிய பாடல்களை அவரிடம் காட்டியபோது அதன் சொற்சுவையிலும் சந்தத்திலும் வியந்த கிருஷ்ணசாமி அவர்கள் அதை தனது திருப்புகழ் பஜனைகளில் பாட ஆரம்பித்தார்.

ஒரு முறை மரகதம் அம்மாள் தனக்கு தெரிந்த பெண்களுடன் திருவண்ணாமலை சென்றிருந்தார். இவர் சென்ற நேரம் அர்த்தஜாம பூஜை முடிந்து சன்னதி அடைக்கப்பட்டுவிட்டது. அவ்வளவு தூரம் சென்றும் அருணைக் கடவுளை காணமுடியவில்லையே என்று வருந்தினார் அம்மா.

kambathu-ilaiyanar-sannadhi

அப்போது அங்கு வந்த ஒரு அந்தணச் சிறுவன், “என் கூட வாங்கோ… நான் சுவாமி தரிசனம் செயதுவைக்கிறேன்” என்று கூறி அழைத்துச் சென்று மூலவரை அர்ச்சித்து பிரசாதமும் வழங்கினான்.

“உன் பேர் என்னப்பா?” என்று மரகதம் அம்மாள் வாஞ்சையுடன் கேட்க, “தண்டபாணி… நான் இங்கே தான் இருப்பேன்” என்று கூறி கம்பத்து இளையனார் சன்னதியை (அருணகிரிநாதருக்கு முருகன் காட்சி கொடுத்த இடம்) காட்டிவிட்டு இருளில் மறைந்து சென்றான் சிறுவன்.

மறுநாள் கோவில் அர்ச்சகர்களிடம் இது பற்றி விசாரித்தபோது அந்த பெயரில் அப்படி யாரும் இந்த ஆலயத்தில் இல்லை என்று சொன்னார்கள்.

அப்போது ரமணர் உடல்நலமின்றி இருந்தார். எனவே மரகதம் பகவானையும் பார்த்துவிட்டு வரலாம் என்று ரமணாஸ்ரமம் சென்றார். அவரை பார்த்து புன்முறுவல் செய்த பகவான் எடுத்த எடுப்பிலேயே “என்ன தண்டபாணி தரிசனம் ஆச்சா?” என்று கேட்க, மரகதம் உடனே “முருகா….’ என்று கதறிவிட்டார்.

“நீ என் கையைப் பிடித்து இழுத்துச் சென்று இங்கு தான் இருப்பேன் என்று உன் சன்னதியை காட்டியும் கூட உன்னை உணராமல் போனேனே இந்த பாவி” என்று கதறினார்.

இவர் ரிஷிகேஷ் சென்று சுவாமி சிவானந்தரை சந்தித்து அவர் மூலம் துறவறத்தை தழுவினார். ஒரு இல்லறத்து பெண்ணாக ரிஷிகேஷ் சென்ற ஆண்டவன் பிச்சி அம்மாள், சந்நியாசினியாக 1954 ஆம் ஆண்டு சென்னை திரும்பினார்.

1954 முதல் 1968 வரை சென்னையில் ஒரே இடத்தில் தங்கி இருந்தார். 1968 ஆம் ஆண்டு திருமுல்லைவாயல் சென்றதாக தெரிகிறது.

மரகதம் அம்மா பழநி ஆண்டவன் மீது பாடிய ஒரு பாடல் இதோ:

“புழுவெனப் பிறப்பினில் உழலுறும் எனக்குறு
பழவினை தொலைத்திடும் வடிவேலா
கழுவினிலுறச் சமணரை விடு கவித்துவ

கவுணிய குலத்துவப் பெரு வாழ்வே
மழுபிடி சுரத்தவர் தருகுஹ! குறத்தியை
மகிழ்வுடன் அணைத்தருள் முருகோனே!
தொழுமடியவர்க்கருள்புரி கர விருப்பொடு
பழனியில் உதித்திடும் பெருமாளே.”

கோவில் கோவிலாக சென்று முருகன் மீதும் அம்பிகை மீதும் எண்ணற்ற பகுதி பாடல்களைப் பாடி பின் முதுமையில் தனது 89 ஆம் வயதில் (1990 நவம்பர்) முருகனடி சேர்ந்தார்.

இத்தோடு முடிந்ததா? அது தான் இல்லை. இப்போது தான் நாம் ஆண்டவன் பிச்சி அவர்கள் சரிதத்தின் ஒரு பகுதியை பார்த்த்திருக்கிறோம்…

அடுத்த பாகத்தில் தொடர்வதற்கு முன் ஒரு முக்கிய விஷயம்….

Exif_JPEG_420

பிச்சையா, பிச்சியா? எது சரி? 

மரகதவள்ளி என்கிற மரகதம் அம்மாளின் பெயர் ‘ஆண்டவன் பிச்சை’ அல்ல ‘ஆண்டவன் பிச்சி’.

பிச்சி என்றால் பித்து என்று பொருள். அதாவது ஆண்டவன் மீது பித்துக்கொண்டவள். (ஆண்டவன் பைத்தியம்). முருகனின் மீது பித்துக்கொண்டவள் என்ற பொருளில் அன்னைக்கு அந்தப் பெயர் ஏற்பட்டது. காலப்போக்கில் பிச்சி என்பது மருவி பிச்சை என்றாகிவிட்டது. அவ்வளவே. காளிகாம்பாள் கோவில் கல்வெட்டை பாருங்கள். உண்மை புரியம்.

அடுத்த பாகத்தில்….

‘ஆண்டவன் பிச்சி’ – சில சந்தேகங்கள் சில விளக்கங்கள் சில அதிசயங்கள்!

  • to be continued in next part

==========================================================

இந்த தளத்தை தொய்வின்றி நடத்திட வாசகர்களின் பங்களிப்பு அவசியம் தேவை!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

Kindly drop in mail to editor@rightmantra.com once you transfer your fund or message me at 9840169215

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

Also check :

சிவபெருமானைப் போல முருகனுக்கும் பன்னிரு திருமுறை உண்டு தெரியுமா? கந்தசஷ்டி SPL 1

தன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்!

‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்!

மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…

“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா!”

சின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா?

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!

அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் !

 மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!

களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே!”

==========================================================

வள்ளிமலை அற்புதங்கள் தொடரின் … DON’T MISS!

வள்ளி தவப்பீடத்தில் அருள்பாலிக்கும் அறுபடை முருகன்  – வள்ளிமலை அற்புதங்கள் (4)

வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (3)

சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)

புத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா? வள்ளிமலை அற்புதங்கள் (1)

==========================================================

[END]

 

3 thoughts on “‘உள்ளம் உருகுதையா’ தந்த ஆண்டவன் பிச்சி என்கிற மரகதம் – கந்தசஷ்டி SPL 2

  1. முருகா! குமரா! குஹா!

    அன்பன்
    நாகராஜன் ஏகாம்பரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *