கந்தசஷ்டி முதல் நாளின் சிறப்பு பதிவாக ‘முருகவேள் பன்னிரு திருமுறை’ பற்றி பார்ப்போம்.
சிவபெருமானுக்கு பன்னிரு திருமுறை இருப்பது போல சிவகுமாரன் முருகப்பெருமானுக்கும் பன்னிரு திருமுறைகள் இருக்கிறது தெரியுமா?
சிவனையும் சிவனடியார்களையும் பற்றி திருஞானசம்பந்தர் ஆரம்பித்து சேக்கிழார் பாடியது வரை பன்னிரு திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.
அதே போல முருகப்பெருமானுக்கும் பன்னிரு திருமுறைகள் உள்ளன என்பது பலர் அறியாதது.
1) திருப்பரங்குன்றம் திருப்புகழ் – முதல் திருமுறை
2) திருச்செந்தூர் திருப்புகழ் – இரண்டாம் திருமுறை
3) திருவாவினன்குடி திருப்புகழ் – மூன்றாம் திருமுறை
4) திருவேரகம் (சுவாமிமலை) திருப்புகழ் – நான்காம் திருமுறை
5) குன்றுதோறாடல் திருப்புகழ் – ஐந்தாம் திருமுறை
6) பழமுதிர்சோலை திருப்புகழ் – ஆறாம் திருமுறை
7) பொதுத் திருப்புகழ் பாடல்கள் – ஏழாம் திருமுறை
8) கந்தரலங்காரம், கந்தரந்தாதி – எட்டாம் திருமுறை
9) திருவகுப்பு – ஒன்பதாம் திருமுறை
10) கந்தரனுபூதி – பத்தாம் திருமுறை
11) நக்கீரர், பரிபாடல் ஆசிரியர்கள், கல்லாடர் முதலானவர்கள் பாடல்கள் – பதினோராம் திருமுறை
12) சேய்த்தொண்டர் புராணம் (முருகனடியார்கள் வரலாறு) – பன்னிரண்டாம் திருமுறை
இதைத் தொகுத்தது யார் தெரியுமா?
இன்று நாம் திருப்புகழ் பாட காரணமான ‘தணிகைமணி’ டாக்டர் வ.சு. செங்கல்வராயப்பிள்ளை அவர்கள் தான்.
==========================================================
Also check some important updates….
திருமுருகாற்றுப்படை படிக்கச் சொன்ன பெரியவா!
தன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்!
திருமுருகாற்றுப்படையும் அறுபடைவீடுகளும்! ஒரு சுவாரஸ்யமான வரலாறு!!
==========================================================
செங்கல்வராயப்பிள்ளை அவர்கள் இல்லையேல் நமக்கு திருப்புகழ் கிடைத்திருக்கவே கிடைத்திருக்காது. தமது வாழ்நாள் முழுதும் திருப்புகழ் ஏடுகளை தேடித் தேடி தொகுத்தவர் செங்கல்வராயப்பிள்ளை.
செங்கல்வராயப்பிள்ளை கல்வியை கசடறக் கற்றவர். தலைசிறந்த மேதை. அது மட்டுமா?
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்
என்கிற குறள் மொழிப்படி கேட்பவரை வசீகரிக்கும் விதம் உரையாற்றுவதிலும் வல்லவர்.
இவர் ஒரு முறை சிதம்பரத்தில் அருணகிரிநாதர் பற்றிய சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார். அதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பல அறிஞர்கள் பண்டிதர்கள் கலந்துகொண்டனர். அவர்களுள் ‘தமிழ்த் தாத்தா’ டாக்டர் உ.வே.சா அவர்களும் ஒருவர். செங்கல்வராயப்பிள்ளை பேசுவதை மெய்மறந்தபடி கேட்டுக்கொண்டிருந்த உ.வே.சா, பிள்ளையவர்கள் பேசி முடித்ததும் அவருடைய புலமையையும் பேச்சுத்திறனையும் பாராட்டி தமது இல்லத்திற்கு எழுந்தருள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இருவரும் அதன் பின்னர் சந்தித்து மகிழ்ந்தனர்.
பிற்காலத்தில் உ.வே.சா. அவர்கள் உடல்நலம் குன்றி வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது செங்கல்வராயப்பிள்ளை அவரை சந்திக்க சென்றார். இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது செங்கல்வராயப் பிள்ளையின் கைகளை எடுத்து தன் கண்களில் ஒற்றிக்கொண்டாராம் உ.வே.சா.
செங்கல்வராயப் பிள்ளை பதறிப்போனார்.
“என்னைக் காரியம் செய்தீர்கள் ஐயா?”
உவேசா சொன்னார்… “திருப்புகழையும் முருகனுடைய பெருமைகளையம் ஆராய்ந்த கரங்கள் ஆயிற்றே. அதனால்தான அந்தக் கரங்களை ஒற்றிக்கொண்டேன்!” என்று.
செங்கல்வராயப் பிள்ளை பதிலுக்கு உ.வே.சா. வின் கால்களில் விழுந்து அதை கண்களில் ஒற்றிக்கொண்டார்.
இம்முறை பதறியது உ.வே.சா.
“நீங்கள் என்ன காரியம் செய்தீர்கள் ஐயா?”
.
“சங்ககால இலக்கியங்களைத் தேடித்தேடி அலைந்த கால்களாயிற்றே!” என்றாராம் செங்கல்வராயப்பிள்ளை கண்கலங்கியபடி.
இதிலிருந்தே தெரியுமே செங்கல்வராயப்பிள்ளையின் பெருமையும் பணிவும்.
மேற்கூறிய முருகத் திருமுறை தொகுப்பில் காணப்படும் முதல் 11 திருமுறைகளை இயற்றியது யார் என்று தெரிகிறது. 12 ஆம் திருமுறையாக சேய்த்தொண்டர் புராணத்தை இயற்றியது யார்?
அது ஒரு சுவையான வரலாறு.
சிவபெருமானைப் பாடும் பன்னிரு திருமுறைகளில் பன்னிரெண்டாம் திருமுறையாக வருவது ‘பெரியபுராணம்’ என்னும் திருத்தொண்டர் புராணம்.
அதே போல் இந்த முருகத் திருமுறைகளில் பன்னிரெண்டாவதாக வரும் புராணம் ‘சேய்த்தொண்டர் புராணம்’. இது முருகனடியார்களின் வரலாற்றை சுவைப்படக்கூறும் நூல்.
சிவனுக்கு திருமுறைகள் இருக்கிறது. சிவமைந்தன் தமிழ்க் கடவுள் முருகனுக்கு இல்லையே என்று கருதிய செங்கல்வராயப்பிள்ளை முருகத் திருமுறைகளை எல்லாம் பன்னிரு திருமுறையாக தொகுத்து வரும்போது, இறுதியில் பன்னிரெண்டாம் திருமுறையாக சைவத்திருமுறையில் இருக்கும் பெரியபுராணம் போல முருகனடியார்களின் வரலாற்றை கூறும் நூல் ஒன்றை சேர்த்தால் நன்றாக இருக்குமே என்று கருதினார்.
பெரியபுராணம் பன்னிரு திருமுறைகளில் இடம்பெறுவது ஒரு கடினமான காரியமாக அப்போது இல்லை. சேக்கிழார் இயற்றிய பெரியபுராணத்தை அப்படியே 12 ஆம் திருமுறையாக சேர்த்துவிட்டனர். ஆனால், முருகத் திருமுறையில் அப்படி வைப்பதற்கு யாரும் முருகனடியார்கள் பற்றி பாடவில்லையே! பின் எப்படி, எதை சேர்ப்பது?
முருகனடியார்களின் வரலாற்றை அதாவது சேய்த்தொண்டர் புராணத்தை (சேய் என்றால் குழந்தை) இறுதியாக வைத்தால் தானே அது நிறைவுபெறும்?
செங்கல்வராயப்பிள்ளை தாமே பாடல்கள் புனைவதில் வல்லவர் தான். இருப்பினும் அவருக்கு ஒருவித தயக்கம் இருந்தது. தானே இயற்றி தானே அதை தனது தொகுப்பில் வைக்க அவரது தன்னடக்கம் தடுத்தது. எனவே நம்மைவிட பொருத்தமானவர் யாரேனும் இதை பாடினால் நன்றாக இருக்கும் என்று அவருக்கு தோன்றியது. அப்போது முருகப் பெருமானின் திருவுளப்படி அவர் கண்களில் தேனூர் வரகவி வே.செ.சொக்கலிங்கனார் என்பவர் இயற்றிய ‘சுந்தரர் உலா’ என்கிற நூல் கண்ணில் பட்டது. அதைப் படித்த செங்கல்வராயப்பிள்ளை அந்த நூலின் சொற்சுவையிலும் பொருட்சுவையிலும் சொக்கிப்போனார்.
அப்போதே முடிவு செய்துவிட்டார் முருகனடியார்களின் வரலாறான சேய்த்தொண்டர் புராணத்தையும் இயற்றவல்லவர் இவரே என்று.
உடனே சொக்கலிங்கனாருக்கு ஒரு கடிதம் எழுதி தாம் முருகத் திருமுறைகளை தொகுத்து வருவதையும் பன்னிரெண்டாம் திருமுறையாக ‘சேய்த்தொண்டர் புராணத்தை’ சொக்கலிங்கனார் இயற்றினால் நன்றாக இருக்கும் என்று தாம் கருதுவதாகவும் அதில் கூறினார்.
கரும்புத் தின்னக் கூலியா என்று குதூகலமடைந்த சொக்கலிங்கனார் அதற்கு பெருமகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.
சேக்கிழார் எப்படி பெரியபுராணத்தை ஓராண்டு எழுதி தில்லையில் அரங்கேற்றினாரோ அதே போல சொக்கலிங்கனாரும் ஓராண்டு எடுத்துக்கொண்டு ‘சேய்த்தொண்டர் புராணத்தை’ எழுதி வெளியிட்டார். 1941 ஆம் ஆண்டு துவங்கி 1942 ஆம் ஆண்டு அதை நிறைவு செய்துவிட்டார்.
இதில் ஒரு விஷேஷம் என்ன தெரியுமா?
தேனூர் சொக்கலிங்கனார் மாணிக்கவாசகரின் தீவிர அடியார். ஆனால் அவர் எழுதியது ‘சுந்தரர் உலா’. சுந்தரரால் தான் நமக்கு ‘திருத்தொண்டத்தொகை’ கிடைத்து, பின்னர் அதன் மூல நூலாக கொண்டு சேக்கிழார் இயற்றிய பெரியபுராணமும் கிடைத்தது.
சுந்தரரின் பிறப்பே தொண்டர்களின் பெருமையை பாடுவதற்கு என்றே ஏற்பட்டது என்று கூறுவர். அதே போல முருகனடியார்களின் திவ்ய சரித்திரமான ‘சேய்த்தொண்டர் புராணத்தை’ பாடுவதற்கென்றே பிறந்தவர் சொக்கலிங்கனார். எனவே தான் அவர் மாணிக்கவாசகர் உலா பாடாமல் ‘சுந்தரர் உலா’ பாடினார் என்று கருதப்படுகிறது. இதன்மூலம் அடியார்களின் வரலாற்றை முதன்முதலில் பாடிய சுந்தரரிடம் மானசீகமாக ஆசிபெற்று அதன் மூலம் ‘சேய்த்தொண்டர் புராணத்தை’ இயற்றினார் தேனூரார்.
சேக்கிழார் பெரிய புராணத்தை இயற்றியதற்கும் தேனூரார் ‘சேய்த்தொண்டர் புராணத்தை’ இயற்றியதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. சேக்கிழார் பெரிய புராணத்தை இயற்றியபோது முதலமைச்சராக இருந்தார். எனவே அவருக்கு ஊர் ஊராக சென்று தொண்டர்கள் வரலாற்றை திரட்டுவது சுலபமாக இருந்தது. மேலும் அரசன் அவரை நாட்டின் நிர்வாகப் பணியில் இருந்து விடுவித்து முழுக்க முழுங்க பெரிய புராணத்தை இயற்றுவதற்க்கென்றே நியமித்துவிட்டான்.
மேலும் சேக்கிழாருக்கு மூல நூலாக சுந்தரர் இயற்றிய திருத்தொண்டத்தொகையும் நம்பியாண்டார் நம்பி இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியையும் இருந்தது. அதை அடியொற்றி ஆராய்ச்சி செய்து பெரிய புராணம் இயற்றுவது அவருக்கு சற்று சுலபமாக இருந்தது.
ஆனால், தேனூராரின் காலம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம். 1940. ‘சேய்த்தொண்டர் புராணத்தை’ இயற்றுவதற்கு தேவையான அடியார்கள் வரலாற்றை தொகுக்க இவரே முயற்சி செய்யவேண்டியிருந்தது.
எனவே முதலில் ‘சேய்த்தொண்டத்தொகை’ என்கிற நூலையும், பின்னர் ‘சேய்த்தொண்டர் திருவந்தாதி’யும் இயற்றி பின்னர் அதிலிருந்து சேய்த்தொண்டர் புராணத்தை இயற்றினார் தேனூர் சொக்கலிங்கனார்.
மொத்தம் 3333 பாடல்களை கொண்டது சேய்த்தொண்டர் புராணம். முருகனருள் இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்குமா?
சுந்தரர் எப்படி திருத்தொண்டத்தொகையை திருவாரூரை அடியொற்றி பாடினாரோ அதே போல, தேனூரார் திருத்தணியை அடியொற்றி சேய்த்தொண்டர் புராணத்தை பாடியிருக்கிறார். சேய்த்தொண்டர் புராணத்தின் ஒவ்வொரு பாடலும் ‘எம்மான்எந் திருத்தணிகை அம்மானுக்காளே’ என்று தான் முடியும்.
(தணிகைமணி டாக்டர் வ.சு. செங்கல்வராயப்பிள்ளை, தேனூர் வரகவி வே. செ. சொக்கலிங்கனார் ஆகியோரைப் பற்றி தனித்தனியாக பதிவுகள் வரும். பல புதிய தகவல்களுடன்!)
==========================================================
இந்த தளத்தை தொய்வின்றி நடத்திட வாசகர்களின் பங்களிப்பு அவசியம் தேவை!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.
Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
Kindly drop in mail to editor@rightmantra.com once you transfer your fund or message me at 9840169215
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
Also check :
தன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்!
‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்!
மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…
“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா!”
சின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா?
நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!
அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் !
மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!
களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!
முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!
செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!
சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!
முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2
ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?
கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1
தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!
காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!
“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே!”
==========================================================
வள்ளிமலை அற்புதங்கள் தொடரின் … DON’T MISS!
வள்ளி தவப்பீடத்தில் அருள்பாலிக்கும் அறுபடை முருகன் – வள்ளிமலை அற்புதங்கள் (4)
வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (3)
சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)
புத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா? வள்ளிமலை அற்புதங்கள் (1)
==========================================================
[END]
அற்புதமான தகவல்.
டியர் ஜி,
இதற்கெல்லாம் நேரம் எங்கே கிடைக்கிறது தங்களுக்கு?
அருமையான பதிவு!
ஓம் சரவண பவ!
அன்பன்,
நாகராஜன் ஏகாம்பரம்