குலதெய்வ வழிபாடு தொடர்பாக மகா பெரியவா தன்னை நாடிவரும் பக்தர்களிடம் எத்தனையோ முறை வழிகாட்டியிருக்கிறார். அது ஏதோ அவர்களுக்கு மட்டுமே காட்டியதாக எண்ணக்கூடாது. நமக்கும் சேர்த்து தான்.
ஏற்கனவே குலதெய்வ வழிபாட்டின் அவசியம் குறித்து மகா பெரியவா விளக்கியது பற்றிய விரிவான பதிவை சில ஆண்டுகளுக்கு முன்னர் அளித்திருந்தோம். இதோ தற்போது மேலும் இரண்டு சம்பவங்கள்.
ஒவ்வொன்றிலும் ஒரு நீதி!
==========================================================
Don’t miss this…
குல தெய்வ வழிபாடு குறித்து மகா பெரியவா சொல்வது என்ன?
==========================================================
குலதெய்வத்தை மறந்தால்….?
ஒரு பக்தர் ஸ்ரீ மடத்தினுள்ளே நுழைந்ததுமே மிகவும் தள்ளாடினார். அதைப் பார்த்தவர்கள் அவரைப் பிடித்துக் கொள்ள முயலும்போதே, அவர் வாந்தி எடுத்து விட்டார். ரத்த வாந்தி. எல்லோருக்கும் பயம் வந்துவிட்டது. இந்தக் களேபரம்,கூச்சல் பெரியவா செவிகளுக்கு எட்டி விட்டது. “என்ன, சத்தம்?” என்ற குறிப்புத் தோன்ற அணுக்கத் தொண்டரைப் பார்த்தார்கள்.
”ஒரு பக்தர் ரத்த வாந்தி எடுத்துட்டார்” என்று சொன்னார், மானேஜர்.
‘பக்தரின் சொந்த ஊர், இப்போது எங்கேயிருந்து வருகிறார்?’ என்பன போன்ற விவரங்களைக் கேட்கச் சொன்னார்கள்.
பக்தருக்கு திருச்சி அருகில் ஒரு கிராமம். சிதம்பரம் சென்று ஸ்ரீ நடராஜாவைத் தரிசனம் செய்துவிட்டு காஞ்சீபுரம் வந்திருக்கிறார் என்பது தெரியவந்தது.
அருகிலுள்ள ஒரு டாக்டரிடம் அவரை அழைத்துப் போகச் சொன்னார்கள், பெரியவா.
‘ரத்தவாந்தி எடுத்தார்’ என்பதைக் கேட்டவுடன், டாக்டருக்கு ‘ஹெமர்ரேஜாக இருக்குமோ?’ என்ற சந்தேகம் வந்துவிட்டது. ‘ஹாஸ்பிட்டல்லே அட்மிட் பண்ணிடுங்கள்ளேன்’ என்று அறிவுரை கூறினார்.
விஷயம் பெரியவாளிடம் தெரிவிக்கப்பட்டது.
”இது haemorrhage இல்லை. பாட்டியம்மாவைக் கேட்டால் உஷ்ண ஆதிக்கம் என்பாள்!… சில பேர்கள், திருஷ்டி தோஷம் என்பார்கள்.
”எனக்கு ஓன்று தோன்றுகிறது… இவர்களுக்கு சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் குலதெய்வம். இப்போதெல்லாம் யாருக்குமே குலதெய்வம் ஞாபக்கமிருப்பதில்லே.லட்சியம் பண்றதில்லே.உடனடியா காஞ்சீபுரம் காளிகாம்பாள் கோயில்லே அர்ச்சனை பண்ணி பிரசாதம் கொண்டு வாங்கோ.
சிதம்பரத்தில் தில்லைக் காளியைத் தரிசனம் செய்யாமல் வந்திருக்கார். அது குற்றம் இல்லையா? அதோடு இவர் வீட்டில் காளிபூஜை இருக்கு. அப்படிப்பட்டவர்,தில்லைக் காளிக்கு அர்ச்சனை செய்திருக்க வேண்டாமோ?… சரி, இவர் உடம்பு சரியானவுடன் சிதம்பரம் போய் தில்லைக் காளியைத் தரிசனம் செய்யணும்.
”டாக்டர் எழுதிக் கொடுத்திருக்கிறபடி இவருக்கு High B.P. அதனால் தான் ரத்த வாந்தி. இவர் இனிமே உப்புக்குறைவா சேர்த்துக்கணும்” என்றெல்லாம் பல கட்டுப்பாடுகளைச் சொன்னார்கள்.
காளிகாம்பாள் பிரசாதம் கொண்டு வந்து நெற்றியில் இட்டு, மடத்து ஹாலில் படுக்க வைத்தார்கள். பெரியவா சொற்படி, ஐஸ் தண்ணீர் மட்டும் கொஞ்சங் கொஞ்சமாகக் கொடுக்கப்பட்டது.
இரவு நன்றாக தூங்கினார் அந்த அன்பர். காலையில் தெம்பாகப் பேசினார். பெரியவாளிடம் பிரசாதம் பெற்றுக்கொண்டு மானேஜருக்கு நன்றி கூறிவிட்டு ஊருக்குச் சென்றார்.
அப்புறம் தனக்கு எந்த விதமான உடல் தொந்தரவும் இல்லை என்று மானேஜருக்குக் கடிதம் எழுதினார். ‘இனி குலதெய்வத்தை மறக்க மாட்டேன் என்று பெரியவாளிடம் விண்ணப்பிக்கவும்’ என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
‘சிதம்பரத்தில் தில்லைக் காளியைத் தரிசிக்காமல் காஞ்சீபுரம் வந்துவிட்டேன்’ என்ற விஷயம் பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது என்பது தான் இன்றுவரை எனக்கு விளங்காமல் இருக்கிறது!’
நமக்கும் தான் விளங்கவில்லை!
==========================================================
Don’t miss this…
ஞானிகளை சரணடைவதால் நம் தலையெழுத்து மாறுமா?
==========================================================
அடிக்கடி வாகன விபத்து ஏன்….?
பட்டுக் கோட்டையிலிருந்து ஒரு பிரமுகர் பெரியவா தரிசனத்துக்கு வந்தார்.
”நான் ஒரு கார் வாங்கியிருக்கேன். அது வாங்கிய நாளிலிருந்து பல தடவை ஆக்ஸிடெண்ட் ஆயிடுத்து. ஜோஸ்யர்கள் அறிவுரைப்படி சில பரிகாரம் செய்தேன். அப்படியும் பயன் ஏற்படலே..” என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டார்.
பெரியவா சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். பின்னர், ”உங்க ஊருக்குப் பக்கத்திலே, கன்யா குரிச்சின்னு கிராமம் இருக்கோ?” என்று கேட்டார்கள்.
பிரமுகர் தெளிவான விடை கூற முடியாமல் தத்தளித்தார்.
”அங்கே ஒரு மஹாமாயா (மாரியம்மன்) கோயில் இருக்கு. ரொம்ப சக்திவாய்ந்த அம்மன். அம்பாள் அபிஷேகத்துக்கு அம்பது ரூபா அனுப்பு- கார் முன் பக்கத்திலே- ”கன்பா குரிச்சி அம்மன் துணை ” என்று எழுத்து…”
பிரமுகர் திகைத்துப் போய்விட்டார்.
”எங்களுக்குக் கன்யாகுரிச்சி அம்மன் தான் குலதெய்வம். எங்க அப்பா -அம்மா,வருஷா வருஷம் அந்தக் கோயிலுக்குப் போவார்கள். அம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள். குடும்பத்தில் குழந்தைகளுக்கு முதல் முடி இறங்குவதற்கு அங்கே போவது தான் வழக்கம்… எப்படியோ எங்களுக்கு எங்கக் குடும்பப் பழக்கம் மறந்து போச்சு! நல்லவேளை, பெரியவா ஆக்ஞையிட்டு, நினைவுபடுத்தியிருக்கா…”
அந்தக் காருக்கு இதற்குப் பின்னர் எவ்விதமான விபத்தும் ஏற்படவில்லை.எப்படி ஏற்படும்? மஹாமாயா அல்லவா பாதுகாத்துக் கொண்டிருக்கிறாள்!
– எஸ்.கோதண்ட ராம சர்மா | ஸ்ரீமடம் பாலு | ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’
==========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us. ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
For more information click here!
==========================================================
Also check – ரைட்மந்த்ராவின் ஆலய தரிசனப் பதிவுகள்
நந்தனாருக்காக விலகிய நந்தி – திருப்புன்கூர் ஒரு நேரடி தரிசனம்!
பட்டினத்தார் கோவில் – அன்றும், இன்றும்!
==========================================================
Also check our earlier articles on Maha Periyava
ஆத்தா கருமாரி கண் பாத்தா போதும்… பவித்ராவின் அண்ணனுக்கு பேச்சு வந்த கதை!!
இந்த குரு பார்க்க கோடி நன்மை உண்டு!
குழந்தைகளின் தவிப்பும் குருவின் கருணையும் – குரு பூர்ணிமா SPL
“கடமையை செய், பன்மடங்கு பலனை எதிர்பார்” – இது பெரியவா கீதை!
தப்புக்கு பெரியவா சொன்ன பிராயச்சித்தமும் தங்கக்காசும்!
பெயர் பொருத்தம் பார்த்து பெரியவா செய்து வைத்த கல்யாணம்!
”வா சங்கரா, இப்படி வந்து உட்கார்” – திருவாய் மலர்ந்த தெய்வம்!
தன் புண்ணியத்தை ஈந்து நம் பாவத்தை கரைக்கும் கருணைக்கடல்!
சேற்றுக்குள் மறைந்திருந்த ஸ்ரீ அனந்த பத்மநாப ஈஸ்வரர்! விசேஷ புகைப்படங்கள்!!
குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….
http://rightmantra.com/?cat=126
==========================================================
[END]
Super messages. Thank you very much.
you ஹவ் ஒபெனிட் தி ஐஸ் போர் ஆல். தேங்க்ஸ்
வணக்கம் குலதைவ வழிபாடு பற்றிய பெறியவாளின் அறிவுரை நல்ல படஇப்பினையை டந்ததஉ