Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, October 8, 2024
Please specify the group
Home > Featured > அவமானப்படுத்த நினைத்தவர்களை வெட்கப்பட வைத்த லிங்கன் – லிங்கன் பிறந்த நாள் சிறப்புரை!

அவமானப்படுத்த நினைத்தவர்களை வெட்கப்பட வைத்த லிங்கன் – லிங்கன் பிறந்த நாள் சிறப்புரை!

print
ப்ரஹாம் லிங்கன் அவர்கள் மீது நமக்கு எப்போதும் பெரு மதிப்பும் அன்பும் உண்டு. லிங்கனை பற்றி நினைக்கும்போதெல்லாம் “இப்படியும் ஒரு மனிதர் இந்த பூமியில் இருந்திருக்கிறாரா? வாழ்ந்தும் இருக்கிறாரா?? நாமெல்லாம் ஒரே ஒரு தோல்வி வந்தாலே நொறுங்கிப் போய்விடுகிறோமே? மனிதர் எப்படி இத்தனை தோல்விகளையும் பர்சனல் வாழ்க்கையின் துயரங்களையும் தாங்கிக்கொண்டு சாதித்திருக்கிறார்” என்று வியப்பு மேலிடும்.

நம்முடைய ரோல் மாடல்களில் ஒருவர் அவர். (நம் விசிட்டிங் கார்டில் நாம் பொறித்திருக்கும் உருவங்களில் லிங்கன் தான் பிரதானமாக இடம் பெற்றிருக்கிறார் தெரியுமா?)

அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு நம் தளம் சார்பாக  கடந்த ஞாயிற்றுக் கிழமை பிப்ரவரி 10 ஆம் தேதி நடத்தப்பட்ட ‘மகா பெரியவா மகிமைகள்’ நிகழ்ச்சியில் ஒரு சிறப்புரையை நிகழ்த்தினேன். நாம் எதிர்பார்த்ததற்கும் மேலாக வந்திருந்த பார்வையாளர்கள் திரு.லிங்கனை பற்றிய உரை கேட்டு ரசித்து கைதட்டினார்கள் என்றால் லிங்கனின் பெருமையை என்னவென்று சொல்வது?

“இந்த சிறிய வயதில் உன் மனம் கடவுளைவிட பதவியைத்தான் விரும்புகிறதா?”

அமெரிக்காவில் ஒரு தேவாலயத்தில் பாதிரியார் ஒருவர் “நாம் அனைவரும் சொர்க்கம் செல்வதற்காக தினமும் பிரார்த்தனை செய்ய வேண்டும்” என்று போதனை செய்தார். அவர் தன் உரையை முடித்தவுடன் “யாரெல்லாம் சொர்க்கம் செல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார். அனைவரும் கை தூக்கினர். ஒரு ஏழை சிறுவனைத்தவிர.

உடனே அந்த பாதிரியார் அந்த சிறுவனிடம் “தம்பி நீ சொர்க்கம் செல்ல விரும்பவில்லையா? நரகம் தான்  செல்ல விரும்புகிறாயா?” என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன் “நான் சொர்க்கத்தையும் விரும்பவில்லை. நரகத்தையிம் விரும்பவில்லை. நான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக விரும்புகிறேன்” என்றான்.

உடனே கோபம் கொண்ட அந்த பாதிரியார் “இந்த சிறிய வயதில் உன் மனம் கடவுளைவிட பதவியைத்தான் விரும்புகிறதா?” என்று கேட்டார். அந்த சிறுவனோ அமைதியாக “இங்கே கறுப்பு இன மக்களை நாயைவிட கேவலமாக -கொடுமையான முறையில் – நடத்துகிறார்கள். அவர்களை விடுதலை செய்ய அமெரிக்க ஜனாதிபதி என்ற அதிகாரம் தான் சரியான இருக்கும்” என்று கூறினான்.

முதலில் அவன் மீதும் கோபப்பட்ட பாதிரியார் அவன் உயர்ந்த உள்ளத்தை புரிந்துகொண்டு, “நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்” என புன்னகையுடன் ஆசி வழங்கினார். (இதே வாக்கியத்தை சொன்ன மற்றொரு பிரபலம் யார் தெரியுமா? சுவாமி விவேகானந்தர்!)

அந்த சிறுவன் சொன்னதோடு மட்டுமல்லாமல் செய்தும் காட்டினான்.

அந்த சிறுவன் தான் 16 வது அமெரிக்க ஜனாதிபதி திரு.ஆபிரகாம் லிங்கன். நேற்று பிப்ரவரி 12, செவ்வாய்க் கிழமை அவரது பிறந்த நாள்.

(நேற்றைய தினமே இந்த பதிவு அளிக்கப்படுவதாக இருந்தது. வினோதினியின் மறைவுச் செய்தியை தொடர்ந்து ஒரு நாள் இந்த பதிவை ஒத்திவைத்து, அவர் மறைவு தொடர்பான பதிவுகளை நேற்று அளித்தோம்.)

ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாக பிறந்து அமெரிக்க ஜனாதிபதியான லிங்கனின் வாழ்க்கை நமக்கு நிச்சயம் தன்னம்பிக்கை ஊட்டுவதாக இருக்கும்.

1809ம் வருடம் அமெரிக்காவின் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்தார் லிங்கன். பிறந்ததிலிருந்தே அவர் வாழ்க்கை போராட்டமாகத் தான் இருந்தது.  பிறந்த சில வருடங்களிலேயே தாயை இழந்தார். 9 மைல் காடுகளுக்கிடையே நடந்து சென்று தான் அவர் பள்ளிக்கூடத்திற்கு செல்லவேண்டும்.

ஒரு கடையில் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டே இரவு நேரங்களில் மட்டும் பள்ளிப் பாடத்தை ஆர்வத்துடன் படித்தார்.

அவர் தந்தை தச்சு வேலை முதல் செருப்பு தைப்பது வரை பல வேலைகள் செய்து வந்தார். லிங்கனும் அவரது தந்தையின் பணிகளில் உதவி வந்தார்.

இளைஞனாகி, ஒரு நாள் பக்கத்து நகருக்குப் போனபோது, அங்கே அடிமைகளை வியாபாரம் செய்யும் மனிதச் சந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கறுப்பர்களின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அவர் கேள்விப்பட்டு இருந்தாலும் காய்கறி போல மனிதர்கள் விற்கப்படுவதை நேரில் கண்டதும் ரத்தம் சூடேறியது. சந்தையில் விற்கப்படும் அடிமைகளை பல்வேறு விதங்களில் சோதித்து பார்த்து தான் வாங்குவார்கள். அவர்களது உணர்ச்சியை சோதித்து பார்ப்பது, அவர்களை கிள்ளி பார்ப்பது, சுமை தூக்கிக்கொண்டு ஓடச் செய்வது, கசையடி கொடுப்பது இப்படி பல்வேறு சோதனைகளுக்கு பிறகே வாங்க வேண்டிய அடிமையை முடிவு செய்வார்கள். இந்த சோதனைகளில் இருந்து பெண்கள் கூட தப்பவில்லை.

[button size=”medium” bg_color=”#ff0000″]சந்தையில் விற்கப்படும் அடிமைகளை பல்வேறு விதங்களில் சோதித்து பார்த்து தான் வாங்குவார்கள். அவர்களது உணர்ச்சியை சோதித்து பார்ப்பது, அவர்களை கிள்ளி பார்ப்பது, சுமை தூக்கிக்கொண்டு ஓடச் செய்வது, கசையடி கொடுப்பது இப்படி பல்வேறு சோதனைகளுக்கு பிறகே வாங்க வேண்டிய அடிமையை முடிவு செய்வார்கள். இந்த சோதனைகளில் இருந்து பெண்கள் கூட தப்பவில்லை.[/button] தான் அமெரிக்க ஜனாதிபதியாகி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் தான் இந்த அவலத்தை அகற்ற முடியும் என்று தெரிந்ததும், அவசரமாக தனது 22வது வயதில் ஒரு நகராட்சி தேர்தல் வேட்பாளராக களம் இறங்கி, படுதோல்வி அடைந்தார். இந்த நேரத்தில், சொந்தமாகத் தொழில் தொடங்கி, அதில் பெரும் கடனாளியாக மாறியிருந்தார்.

சோர்ந்து போயிருந்த லிங்கனை ஒரு போராளியாக மாற்றியது, அவரது வளர்ப்புத் தாய் சாராபுஷ். ‘ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்றால், ஆசைப்படுவதைப் பெறுவதற்கான தகுதிகளை முதலில் வளர்த்துக்கொள்’. “நீ எதுவாக விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!” என்றார் சாரா புஷ். முன்பு தேவாலயத்தில் பாதிரியார் சொன்னதும் இதையேத் தான்.

இப்போது லிங்கனுக்குத் தன் இலக்குப் புரிந்தது. மனதில் தெளிவு பிறந்தது. அடிமை வியாபாரத்தை சட்டம் போட்டுத்தானே ஒழிக்க முடியும்? எனவே, முழுமூச்சுடன் சட்டம் படிக்கத் தொடங்கினார் லிங்கன். மக்கள் மனதை மாற்றினால் மட்டுமே சட்டத்தை சுலபமாக அமல்படுத்த முடியும் என்பதால், சட்டப்படிப்புடன் பேச்சுத் திறமையையும் வளர்த்துக் கொண்டார். அடிமை ஒழிப்பைப் பற்றி ஊர் ஊராகக் கூட்டம் போட்டுப் பேசினார். ஒரு தலைவருக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு, 1834ல் நடந்த நகராட்சி உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதன்பின் நகராட்சித் தலைவர், மாமன்ற உறுப்பினர், செனட் உறுப்பினர், உபஜனாதிபதி, எனப் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டு சில வெற்றிகளையும், பல தோல்விகளையும் சந்தித்து 1860ம் வருடம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். ஆம், எதுவாக மாற நினைத்தாரோ, அதுவாகவே ஆனார் லிங்கன்! (1865 ஆம் ஆண்டு நாடகம் பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட நிறவெறி பிடித்த நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார் லிங்கன்!)

லிங்கன் தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை.

பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகளை தருகிறேன் பாருங்கள்….

*தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.*

*பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.*

*வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.*

*பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.*

*சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.*

*மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.*

*குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.*

*அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.*

*தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.*

இப்படி லிங்கனின் சொல் செயல் அனைத்திலும் வித்தியாசம் இருந்தது.

WINNERS DON’T DO DIFFERENT THINGS. THEY DO THINGS DIFFERENTLY அல்லவா?

 சேற்றில் சிக்கிய பன்றி…

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆப்ஹாம் லிங்கன் தேர்ந்தெடுக்கப்பட்ட சமயம்… முதல் முறையாக நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நன்றாக உடை உடுத்திக் கொண்டு காரில் சென்று கொண்டிருந்தார் ஆப்ரஹாம் லிங்கன்.காரை அவ்ரே ஓட்டினார்.

ஓரிடத்தில் சாலையோரத்தில் சேறு நிறைந்த ஒரு பள்ளத்தில் ஒரு பன்றிக்குட்டி சிக்கி வெளியே வரமுடியாமல் தவித்து கொண்டிருப்பதைப் பார்த்தார்.

உடனே காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார்.. நாடாமன்றக் கூட்டத் தொடரை விட அந்தப் பன்றிக் குட்டியைத் துன்பத்திலிருந்து விடுவிப்பது அவருக்கு முக்கியமானதாகத் தோன்றியது.

சேறு நிறைந்த பள்ளத்தில் இறங்கினார்.. ஷுக்கள் ஆடைகள் அனைத்திலும் சேறு பட்டது

அருவருப்பான அந்த சூழ்நிலையைக் கண்டு சிறிது கூட முகம் சுழிக்காத அவர் சேற்றில் சிக்கியிருந்த பன்றிக்குட்டியைக் காப்பாற்றினார்.அது மிகுந்த சந்தோஷத்துடன் துள்ளி குதித்து ஓடியது.

முழு நிம்மதி பெற்ற ஆப்ஹாம் லிங்கன், சேறு படிந்த அந்த ஆடைகளோடு காரில் ஏறினார்..அப்படியே சென்று நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டார்.

சபையோர் சேறு படிந்த அவரது உடைகளை கண்டு முகம் சுழித்து கொண்டு குழப்பத்தோடு பார்த்தனர்.

அவர்களது பார்வையில இருந்த அர்த்ததை புரிந்து கொண்டு.. விஷயத்தை சொன்னார்..அதை கேட்டதும் சபையே அவரை பாரட்டியது.

தற்கு ஆப்ரஹாம் லிங்கன் “இதற்கு பாரட்ட வேண்டிய அவசியமில்லை.. துன்பத்தில் போராடும் உயிரை காப்பற்றுவது மனிதனின் கடமை.. அதைத் தான் ஜனாதிபதி ஆகிய நான் செய்தேன்.” என்றார் பெருந்தன்மையோடு.

மிஸ்டர் லிங்கன் ரொம்ப பெருமைப்பட்டுக்காதீங்க…

ஆபிரஹாம் லிங்கனின் தந்தை ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி. ஆனால் தமது உழைப்பாலும் முயற்சியாலும் அமெரிக்க ஜனாதிபதியானார் லிங்கன். அவரை அவமானப்படுத்தும் எண்ணத்துடன் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் ஒருவர் பேசினார். “மிஸ்டர் லிங்கன், உங்களை இங்கு பலர் பாராட்டிப் பேசினார்கள். அது குறித்து நீங்கள் மகிழ்ந்துவிட வேண்டாம். உங்கள் பழைமை, வறுமை குறித்து நான் நினைவூட்ட வேண்டும். உங்கள் அப்பா தைத்துக் கொடுத்த ஷூ இன்னும் என் காலில் இருக்கிறது. ஞாபகம் இருக்கட்டும்.” என்று லிங்கன் தந்தை செருப்புத் தைப்பவர் என்று குத்திக் காட்டினார் ஒருவர்.

ஆபிரஹாம் லிங்கனோ பதற்றப்படாமல் “நண்பரே, என் தந்தை மறைந்து பலகாலம் ஆயிற்று. ஆனால் அவர் தைத்துக் கொடுத்த காலணி இன்னும் உங்களிடம் உழைக்கிறது என்றால் என்ன பொருள்? அவர் எவ்வளவு சிறந்த தொழிலாளி என்பது தெரிகிறது அல்லவா? அப்படி ஒரு சிறந்த தொழிலாளியின் மகனாகப் பிறந்தது குறித்து நான் பெருமை அடைகிறேன். அது மட்டுமல்ல, இப்போது உம் செருப்பு கிழிந்து போனாலும் என்னிடம் கொடுங்கள். நான் அதைச் சரி செய்து தைத்துத் தருவேன். அந்தத் தொழிலையும் நான் நன்கு அறிவேன்.” என்று ஒரு போடு போட்டார்.

எனவே நம் பெற்றோரோ அல்லது நம்மை சார்ந்தவர்களோ வறுமை நிலையில் இருப்பதையோ அல்லது வசதியற்றவர்களாக இருப்பதையோ ஒரு போதும் நாம்  தாழ்வாக  கருதக்கூடாது. அந்த நிலையிலும் நாம் லட்சியத்தை உறுதியாக பற்றியிருந்து அடைகிறோம் என்றால் அது தான் உண்மையான பெருமை. உண்மையான சாதனை.

உதாரணத்திற்கு அகில இந்திய அளவில் சி.ஏ தேர்வில் முதலிடம் பெற்றிருக்கும் பிரேமாவை எடுத்துக்கொள்வோம். அவரது பேட்டியை கூட நமது தளத்தில் வெளியிட்டிருந்தோம். அவர் தந்தை ஒரு ஆட்டோ டிரைவர் தான். ஆனால் அது குறித்து அவர் கவலைப்படவில்லை. சோர்ந்துபோகவில்லை. தனது அயராத உழைப்பால் படித்து இன்று அகில இந்திய அளவில் அனைவரும் திரும்பிப் பார்க்கும் வகையில் முதலிடம் பெற்று தமது பெற்றோருக்கு பெருமை சேர்த்திருக்கிறார். அதே ஆட்டோவில் தனது பெற்றோருடன் அமர்ந்து சாதனை போஸ் கொடுக்கிறார். இது தானே வாழ்க்கை?

“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ அதுவாக மாறுவாய்” என்பது ஆபிரஹாம் லிங்கனுக்கு மட்டுமல்ல… நம் எல்லோருக்கும் பொருந்தும்.

நல்லவற்றையே நினைப்போம்.

நல்லவற்றையே செய்வோம்.

நல்லதே நடக்கும்.

(மேலே நாம் கூறியிருக்கும் லிங்கன் பற்றிய செய்திகள், லிங்கன் பிறந்தநாள் சிறப்புரையில் உரையில் நாம் சொன்னவை!)

[குறிப்பு : ஆப்ரஹாம் லிங்கனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு – பிரபல இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் இயக்கத்தில் – ‘லிங்கன்’ என்கிற திரைப்படம் அண்மையில் ரிலீசாகியிருக்கிறது. குழந்தைகளுடன் அவசியம் சென்று (தியேட்டரில்) பாருங்கள். வார இறுதியில் நண்பர்களுடன் நாம் செல்லவிருக்கிறோம்.]

நமது மகா பெரியவா மகிமைகள் நிகழ்ச்சி பற்றிய பதிவுகள் அடுத்தடுத்து வரும்….. அதில் விழாவில் நடைபெற்ற மற்ற சுவாரஸ்யமான நிகழ்சிகளை பார்ப்போம்.

11 thoughts on “அவமானப்படுத்த நினைத்தவர்களை வெட்கப்பட வைத்த லிங்கன் – லிங்கன் பிறந்த நாள் சிறப்புரை!

  1. சாதித்த பல பேர் பட்ட அவமானங்களை பார்க்கும் போது ,இன்றைய நவ்வென உலகத்தில் பல பேர் எவ்வளவோ இருந்தும் இன்னும் சாதிக்க மனம் இல்லாமல் லட்சியம் கூட இல்லாமல் நிறைய பேர் இருகிறார்கள் அவர்களுக்கு எல்லாம் கண்டிப்பாக சாதனையாளர்களின் சரித்திரத்தை கொடுக்கவும் படிக்கவும் இந்த தளம் ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன்

    எப்பொழுது ஒருவன் தன் மீது சுமத்தப்படும் அவமானங்களை தான்கிகொள்ளும் அளவுக்கு பக்குவபடுகிறானோ அவனே மிக பெரிய சாதனையாளன் ஆவான்

  2. Great men like Abraham Lincoln always had a vision and worked on a mission. Others will always have suspicion and confusion over their motive and strength. But due to the approach of passion and compassion leading to successful implementation of their noble vision, the society finally gives recognition and applauds in admiration. Thanks Sundar, for remembering this great man by putting a fitting article in our site.

  3. தன்னம்பிக்கை தரும் அருமையான பதிவு. தோல்வியால் துவண்டு போகாமல் இருக்க இது போன்ற நிகழ்வுகளை நாம் எப்போதுமே மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். மனிதாபிமானம் – அப்படினா என்னனு கேக்கற மக்கள் தா இப்ப நிறைய பேர் இருக்காங்க. எல்லோருமே சுயநலமா தான் இருக்காங்க. லிங்கன் படம் பாத்துட்டு வந்து சொல்லுங்க. இன்னும் இது போன்ற நல்ல பதிவுகள், நல்ல விஷயங்கள் பகிர்ந்துக்கோங்க. மிக்க நன்றி.

  4. சார் உண்மையிலேயே நீங்க ரொம்ப கிரேட் . இந்த அவசர யுகத்தில் தாங்கள் இவ்வளவு பேரை சந்திச்சு தினம் ஒரு தகவல் கொடுகின்றீர்கள். உங்களை எப்படி பாராட்டுவது ? உங்களை பெற்ற பெற்றோருக்கு என் நமஸ்காரங்கள். அடுத்து மஹா பெரியவா மகிமைகளுக்காக காத்திருக்கின்றோம்

  5. …*பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்….”

    great saying !!…need to educate this strongly in young minds and that is the ONLY way to see a better future society and country..

    thanks for the time and the post..appreciate that

  6. கறுப்பின மக்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளி தந்தவர் ஆபிரகாம் லிங்கன் அவர்கள் . சிறு வயதில் இருந்தே அமெரிக்க ஜனாதிபதி ஆகும் சிந்தனயை மனதில் விதைத்து ,அதை சாதித்தும் காட்டியவர். அவர் வாழ்க்கை வரலாறு தன்னபிக்கை தரும் புத்தகம் . அது படிப்பதற்கு மட்டும் அன்றி ,அது போன்ற வாழ்க்கை நாம் அனைவரும் வாழ தூண்டுவதாக உள்ளது. நன்றி

  7. விவரமான பதிவு. விறுவிறுப்பான பதிவு. படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கு சுந்தர்.

  8. Thoughts becomes things. Thats what has been proved time and time.
    ***
    Whether its 18th or 19th century or now.

    Whatever we desire have to very badly, focus and get it. But, one more thing is also there with this great man’s history – that when we try to help people, we will be always ALIVE, SO ENERGETIC, SO ENTHUSIASTIC ALL THE TIME.
    ***
    I will also try to follow and get succeed in my life. Focus. Focus. Focus.
    ***
    **Chitti**.

  9. இதிவரை லிங்கன் அவர்களை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை
    ஆஅனல் உங்கள் இந்த பதிவின் பின் கண்டிப்பாக அவரது வாழ்கை வரலாற்றை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பெருகிடுகிறது

  10. \\ஆபிரஹாம் லிங்கனோ பதற்றப்படாமல் “நண்பரே, என் தந்தை மறைந்து பலகாலம் ஆயிற்று. ஆனால் அவர் தைத்துக் கொடுத்த காலணி இன்னும் உங்களிடம் உழைக்கிறது என்றால் என்ன பொருள்? அவர் எவ்வளவு சிறந்த தொழிலாளி என்பது தெரிகிறது அல்லவா? அப்படி ஒரு சிறந்த தொழிலாளியின் மகனாகப் பிறந்தது குறித்து நான் பெருமை அடைகிறேன். அது மட்டுமல்ல, இப்போது உம் செருப்பு கிழிந்து போனாலும் என்னிடம் கொடுங்கள். நான் அதைச் சரி செய்து தைத்துத் தருவேன். அந்தத் தொழிலையும் நான் நன்கு அறிவேன்.”\\

    அருமை ….

    பாராட்டுக்கள் ….

    மனோகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *