Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > சிவபூஜைக்கு வெற்றிலை வாங்க உதவியவன் கதை – சிவபுண்ணியக் கதைகள் (11)

சிவபூஜைக்கு வெற்றிலை வாங்க உதவியவன் கதை – சிவபுண்ணியக் கதைகள் (11)

print
Maha Periyava kanchi kamakshi 2“நம் பாவங்களைத் தான் வாங்கிக் கொள்பவன் ஈஸ்வரன். அவன் தலையில் சந்திரன் இருக்கிறான். சந்திரனை விடப் பாவம் செய்தவர் யார்? அவனையே தலையில் சுமக்கும் சிவன், நம்மையெல்லாம் ஏன் காப்பாற்ற மாட்டான்? சிவனை பூஜிப்பது மிக சுலபம். இன்னும் சொல்லப்போனால் செலவில்லாதது. நீரினால் அபிஷேகம் செய்து வில்வத்தால் பூஜித்தால் போதும். மேலும் அவர், தான் விஷத்தை உண்டு, நமக்கு அமிர்தம் அளிப்பவர். முன் ஜன்ம நல்வினைத் தொடர்பு இல்லாவிட்டால் சிவ பூஜை செய்ய வேண்டும் என்ற எண்ணமே தோன்றாது!” – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

ஆம் மகா சுவாமிகள் சொல்வது போல, முன்ஜென்மத்தில் ஏதேனும் நல்லது செய்திருந்தால் தான் சிவசிந்தனையே இந்த பிறவியில் வரும். எனவே நாம் இப்போது எந்த நிலையில் எப்படி இருந்தாலும் சிவசிந்தனையும் சிவபக்தியும் இருந்தாலே அது ஒரு வரம் தான். பாக்கியம், அதிர்ஷ்டம் என்று நாம் கருதும் விஷயங்கள் எல்லாம் அற்பமானவை. சிவபக்தி ஒன்றே மிகப் பெரிய பாக்கியம். இதை அனைவரும் ஒரு நாள் உணர்ந்தே தீருவார்கள்!

சிவபுண்ணியத் தொடரில் இந்த பகுதியில் இடம்பெற்றிருக்கும் கதை (சம்பவம்) அற்புதமான ஒன்று.

************************************************

‘ஸ்ரீ ராகவேந்திர மகிமை’க்கு வரைந்தவர் சிவபுண்ணியத்திற்கு வரைகிறார்!

artist sasiசிவபுண்ணியம் தொடரை மிக மிக சிரத்தை எடுத்துக்கொண்டு நாம் அளித்துவருவது நீங்கள் அறிந்ததே. இதற்கு மேலும் சிறப்பை கூட்டும் விதமாக இனி சிவபுண்ணியம் தொடரின் ஒவ்வொரு பாகத்திலும் சிறப்பு ஓவியம் ஒன்று இடம்பெறும். இந்த தொடரில் நீங்கள் பார்க்கும் ஓவியம் திரு.சசி அவர்கள் வரைந்தது. நம் எதிர்கால வளர்ச்சி மற்றும் தேவையை மனதில் கொண்டு இவரை நமது தளத்திற்கு பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்திருக்கிறோம்.

திரு.சசி அவர்கள் திரு.அம்மன் சத்தியநாதன் அவர்களின் ‘ஸ்ரீ ராகவேந்திர மகிமை’ நூலுக்கு ஓவியம் வரைந்து வருபவர். அதன் பல பாகங்களுக்கு இவர் தான் ஓவியர். கண்ணைக் கவரும் தத்ரூபமான ஓவியம் வரைவதில் இவர் நிபுணர். அனுபவஸ்தர். சென்ற வாரம் திரு.அம்மன் சத்தியநாதன் அவர்கள் பூண்டி அருகே எழுப்பி வரும் ஸ்ரீ ராகவேந்திரர் கிரந்தாலயாவை பார்வையிடச் சென்றபோது அவர் மூலம் சசி அவர்களின் நட்பு நமக்கு கிடைத்தது. பல ஆன்மீகப் பணிகளை செய்து வரும் சசி அவர்கள் சிவபுண்ணியம் தொடருக்கு ஓவியம் வரைவது மிகவும் பொருத்தமாக இருக்கும். பக்தி தொடர்களுக்கு ஓவியம் வரைவது சாதாரண விஷயம் அல்ல. அந்த காலகட்டத்தை சூழலை சம்பவத்தை கண்முன் கொண்டு வரவேண்டும். நாம் சொல்வதை சரியாக உள்வாங்கிக்கொள்ளவேண்டும். அந்த வகையில் சசி அவர்கள் நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். முதல் ஓவியத்திலேயே சசி அவர்கள் உங்கள உள்ளத்தை கவர்ந்திருப்பார் என்பதில் ஐயமில்லை! நமது சிவபுண்ணியம் மற்றும் இதர ஆன்மீக பதிவுகளுக்கு இவரை ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.

இவரைப் பற்றியும் இவர் ஆற்றிவரும் பணிகள் பற்றியும் தளத்தில் ஒரு பதிவு வரும். இப்போதைக்கு ஒரு சிறு அறிமுகம் அளித்திருக்கிறோம். நன்றி!

************************************************

சிவபூஜைக்கு வெற்றிலை வாங்க உதவியவன் கதை!

த்ஸ்ய தேசத்தை ஸூமதி என்கிற மன்னன் ஆண்டு வந்த நேரம். அவனுக்கு அதிரதன் என்கிற மகன் இருந்தான். அக்கால வழக்கம் போல அதிரதனுக்கு கேகய நாட்டு (கிழக்கு பலூசிஸ்தான்) அரசனின் மகளான மேனகாவுக்கும் திருமணம் நடைபெற்றது. சிறு குழந்தையாக விளையாடி பொழுதைக் கழிக்க வேண்டிய அதிரதன் தன் மனைவியோடு விளையாடி பொழுதைக் கழித்து வந்தான்.

இப்படி சென்ற காலகட்டத்தில் ஒரு நாள் அவனுக்கு அவனது முன்ஜென்மம் நினைவுக்கு வந்தது. சிவபெருமானை வணங்கி பூசிக்கவேண்டும் சிவாலயம் சென்று தொழவேண்டும் என்கிற பேராவல் திடீரென உண்டாயிற்று. தனது திடீர் மனமாற்றத்தை ஆசையை தனது தந்தையிடம் தெரிவித்தபோது அவர் உளம் மகிழ்ந்து மறுப்பேதும் சொல்லாமல் மகனை அவன் மனைவியுடன் அனுப்பிவைத்தான்.

இருவரும் ஹரீச்வர சுவாமி கோவிலுக்கு சென்றனர். அங்கு சிவபெருமானை பக்தியுடன் வணங்கிவிட்டு அந்த கோவிலை சிறப்பான முறையில் நிர்வகித்து வந்த வேததர்மி என்கிற அந்தனோத்தமர் முன்பு சென்று, “சுவாமி… அடியேனை தங்களுக்கு தெரிகிறதா?” என்று கேட்டான்.

“தங்களைத் தெரியாமல் இருக்க முடியுமா என்ன? தாங்கள் தான் அரசகுமாரர் என்பதை பார்த்த மாத்திரத்தில் யாராலுமே சொல்லிவிடமுடியுமே இளவரசே…..”

“சுவாமி… இந்த பிறவியில் நான் அரச பரம்பரையில் பிறந்தவன் என்று எல்லோராலும் சொல்லிவிடமுடியும். ஆனால் நான் போனஜென்மத்தில் யாராக இருந்தேன் என்று சொல்ல இயலுமா?”

“அது அந்த சர்வேஸ்வரன் ஒருவனுக்கு தான் தெரியும் இளவரசே… எளியோன் எனக்கு எப்படி தெரியும்?”

“சுவாமி நான் உங்களுக்கு தற்போது ஒரு கதை கூறுகிறேன். கவனமாக கேளுங்கள்….” என்று கூறியபடி ஒரு கதையை கூறத் துவங்கினான்.

************************************************

“கௌட தேசத்தில் விக்கிரமபுரம் என்னும் நகரில் அந்தண குலத்தில் சினேகன் என்பவன் பிறந்தான். இளமையிலேயே பெற்றோரை இழந்துவிட்ட அவனை உற்றார் உறவினர் யாருமே வளர்த்து ஆளாக்க இல்லாத நிலையில் ஒரு சேரிப் பெண் தத்தெடுத்து வளர்த்து வந்தாள். அவன் தீவினையால் அவளும் அவனை விட்டுப் போய்விட்டாள்.

எனவே பிழைப்புக்காக மீன்களை பிடித்து விற்றும், பறவைகளை வேட்டையாடி கொன்று அவற்றை விற்றும் சினேகன் வாழ்ந்து வந்தான். ஒரு கட்டத்தில் கள், மாமிசம் போன்றவற்றை விற்று வயிறு வளர்க்க ஆரம்பித்தான்.

வரலாற்று தகவல்: 1) மத்ஸ்ய தேசம் = இன்றைய ராஜஸ்தானின் ஜெய்பூர்  2) கௌட தேசம் = இன்றைய வங்காளம்!

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நாள், ஒரு அந்தணர் சிவபூஜைக்காக வெற்றிலை பாக்கு வாங்க கடைவீதிக்கு வந்தார். அது சமயம் மதம் பிடித்த யானை ஒன்று சங்கிலியை அறுத்துக்கொண்டு கடைவீதியில் ஓடி வந்ததது. யானையைக் கண்டு பயந்த மக்கள் அனைவரும் ஆளுக்கொரு திசையில் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள ஓட அந்த அந்தணரும் ஓடினார். அப்போது பொருட்களை வாங்க அவர் தனது இடுப்பில் முடித்து வைத்திருந்த காசுகள் கீழே சிதறி விழுந்துவிட்டன. அவர் உடனே மிகவும் கவலையுடன் அதை குனிந்து தேட ஆரம்பித்தார். ஆனால் முதுமையின் காரணமாக சிதறி விழுந்த காசுகளை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. சிவபூஜைக்கு வெற்றிலை பாக்கு வாங்க காசுக்கு என்ன செய்வேன் என்று துயரத்தில் மூழ்கினார்.

அந்த நேரம் சினேகன் கள் விற்றுவிட்டு மனைவியுடன் கடைவீதியில் வந்துகொண்டிருந்தான். யாரோ முதியவர் தரையில் ஏதோ துழாவியபடி அமர்ந்திருப்பதை கண்டு சில வினாடிகள் நின்றான்.

Sivapunniyam August

அந்த அந்தணர் சினேகனிடம், “தம்பி, சிவபூஜைக்கு வெற்றிலை வாங்க வந்தேன். யானை செய்த அமர்க்களத்தில் பயந்து ஓடியபோது இடுப்பிலிருந்து காசுகள் கீழே விழுந்துவிட்டது. இந்த வயதான காலத்தில் என்னால் தேடமுடியவில்லை. இறைவனுக்காக வெற்றிலை வாங்க மட்டும் கொஞ்சம் காசு கொடுத்து உதவேன். உனக்கு புண்ணியமாய் போகும்” என்றார்.

அவன் உடனே கிண்டலாக “ஐயா… ஒரு வேளை நான் அரசனாகிவிட்டால் காசு தருகிறேன்” என்றான்.

அதைக் கேட்ட அந்த அந்தணர் “தம்பி நீ நிச்சயம் அரசனாவாய். நாடாள்வாய். அதில் எந்த சந்தேகமும் இல்லை” என்கிறார்.

இதை கேட்டவுடன் அவன் அருகிலே நின்றிருந்த அவன் மனைவிக்கு ஆர்வம் வந்துவிட்டது.

“சுவாமி அப்படி இவர் நாடாளும் மன்னனாக இருக்கும்போது நான் இவரது பட்டத்து ராணியாக இருப்பேனா?” என்று கேட்டாள்.

“ஆமாமம்மா.. நீயும் அவனுடன் தான் இருப்பாய்” என்றார்.

இவ்விதம் இருவரும் மாறி மாறி பல கேள்விகள் கேட்டுவிட்டு இறுதியில் கையில் இருந்த கொஞ்சம் பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்துவிட்டு பின்னர் தன் மனைவியுடன் தன் வழியே போய்விட்டான். பின்னர் இருவரும் காலக்கிரமத்தில் ஒருவர் பின் ஒருவராக உயிர் துறந்தார்கள்.

************************************************

அதிரதன் தொடர்ந்தான்….

“காசுகளை சிதறவிட்ட அந்த அந்தணர் வேறு யாருமல்ல. நீங்கள் தான். உங்கள் சிவபூஜைக்கு வெற்றிலை வாங்க சிறிதளவு பணம் கொடுத்த சிவபுண்ணியத்தின் பலனாக மத்ஸய தேசத்து இளவரசனாக நான் பிறந்தேன். இவளும் கேகய தேசத்து மன்னனுக்கு மகளாக பிறந்து என்னை கரம்பிடித்தாள். நீங்களும் மிகப் பெரிய சிவாலயம் ஒன்றை நிர்வகிக்கும் வேதியராக பிறந்தீர்கள்!”

“உங்களை பார்த்து உங்களுடன் பேசிய காரணத்தால் தான் எனக்கு என் பூர்வஜென்மா தொடர்பான நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன. இல்லையெனில் வந்திருக்காது” என்று கூறி அவரை வணங்கியவன் “இப்போது சுவாமிக்கு பூஜைக்கும் அபிஷேகத்திற்கும் என்னென்னெ பொருட்கள் தேவையோ அதையெல்லாம் என்னிடம் பெற்றுக்கொண்டு என்னை தன்யனாக்கவேண்டும்” என்று அவரிடம் விண்ணப்பித்துக்கொண்டான்.

IMG_6629-22

தொடர்ந்து எண்ணற்ற பொருட்களையும் திரவியங்களையும் அவருக்கு காணிக்கையாக கொடுத்து இன்புற்றான். பின்னர் அரண்மனை திரும்பி தனது தந்தையிடம் நடந்த அனைத்தையும் கூறி அவர்களை வியப்பில் ஆழ்த்தினான். மேலும் பல சிவபுண்ணியங்களை செய்து, பல சிவாலயங்களை புனரமைத்து அபிஷேக ஆராதனைகளை ஏற்பாடு செய்தான். தான தருமங்களை செய்து நல்லாட்சி செலுத்தி வந்தான். பகைவர்கள் அவனைக் கண்டு அஞ்சி நடுங்கினர்.

ஒரு நாள் தேவர்கள் தலைவனான இந்திரனே நேரில் வந்து அதிரதனை சந்தித்து பொன்னால் ஆன மாலையையும் சிந்தாமணி ரத்தினத்தையும் பரிசாக தந்து அவனுடன் அளவளாவி மகிழ்ந்தான்.

இப்படி பலவகைகளில் சிறப்பு பெற்று ஆட்சி செலுத்தி வந்த அதிரதன் இறுதியில் மனைவியுடன் சிவப்பதம் அடைந்து பேரின்ப பெருவீட்டில் புகுந்து மகிழ்ந்தான்.

************************************************

சிவபூஜைக்கு வெற்றிலை வாங்க காசு கொடுத்ததற்கே இந்த புண்ணியம் என்றால் மற்றவற்றை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

சிவபூஜைக்கும் அபிஷேக ஆராதனைகளும் நம்மால் இயன்ற பொருட்களை தந்து உதவவேண்டும். அப்படி செய்கையில் “நான் செய்கிறேன்” என்கிற பெருமிதம் கூடாது. காரணம், நமது செல்வம், ஆரோக்கியம், வலிமை அனைத்தும் ஈசன் அளித்ததே. அதை நாம் அவனுக்கு திருப்பித் தருகிறோம். எனவே அடக்கத்துடன், “சர்வம் சிவார்ப்பணம்.. இந்த பெரும் பேற்றை எனக்கு நல்கியதற்கு நன்றி இறைவா” என்று கூறி பக்தியுடன் செய்யவேண்டும்.

திருமூலர் சொல்வதை பாருங்கள்…

புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை
நண்ணறி யாமல் நழுவுகின் றார்களே .
– திருமூலர் (திருமந்திரம்) 

பாடல் விளக்கம் : சிவனை அடைதற்குச் செயற்பாலதாகிய தவம் யாது` எனத் தேர்பவர்க்கு, பூவும், நீருமே சாதனங்களாகும். அவை எவவிடத்தும் எளிதிற் கிடைப்பனவே. அவை சாதனங்களாதல் எவ்வாறு எனின், நீரைச் சொரிந்து பூவைச் சாத்துதலாகிய அதைக் கண்டவுடனே சிவன் அதனைச் செய்தவர்க்கு அருள்புரிகின்றான். அங்ஙனமாகவும், நல்லூழ் இல்லாத பலர் இதனைச் செய்யாது வாளா பொழுது போக்கிப் பிறப்பில் வீழ்கின்றனர்.

==========================================================

சிவபுண்ணியக் கதைகள் முந்தைய பாகங்களுக்கு…

‘சாகுற நேரத்தில சங்கரா’ – பழமொழியின் பொருள் என்ன? சிவபுண்ணியக் கதைகள் (10)

இடையன் செய்த சிவபுண்ணியமும் கிருஷ்ணாவதாரமும் – சிவபுண்ணியக் கதைகள் (9)

உழவாரப்பணி என்னும் உன்னத தொண்டு – சிவபுண்ணியக் கதைகள் (8)

ருத்ராக்ஷம் தந்த புது வாழ்வு – சிவபுண்ணியக் கதைகள் (7)

கயிலை அலங்கரிக்கப்பட்டது யாரை வரவேற்க தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (6)

திருடிய நெய்யும் சிவபுண்ணியமும் – சிவபுண்ணியக் கதைகள் (5)

வாழைப்பழ திருடனுக்கு கிடைத்த பேறு – சிவபுண்ணியக் கதைகள் (4)

பசுவின் பால் கொடுத்த சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (3)

தந்தையை காத்த, தனயனின் சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (2)

கூற்றுவன் அஞ்சுவது யாரைக் கண்டு தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (1)

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

For more information click here!

==========================================================

Also check கர்மா Vs கடவுள் earlier episodes…

கர்மாவை வென்ற காருண்யம் – கர்மா Vs கடவுள் (5)

விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)

கர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)

நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)

ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)

==========================================================

Similar articles…

சிவபெருமானின் முக்கண் எவை தெரியுமா?

ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!

கபாலீஸ்வரருடன் ஒரு பொன்மாலைப் பொழுது!

‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!

பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?

சிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது? – சிவராத்திரி SPL 5

கிரக லட்சணம், கோ சம்ரட்சணம்!

சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!

ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!

Thalaivar is always great!

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

மனதில் ஏற்பட்ட திடீர் குழப்பம் – கற்பகாம்பாளுடன் தோன்றி விடை சொன்ன கபாலீஸ்வரர்!

தண்டியடிகளுக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த இடம் – ஒரு நேரடி ரிப்போர்ட்!

பதிகங்கள் புரியாத அதிசயம் உண்டா?

தலைவருடன் ஒரு சந்திப்பு!

நாள் கிழமை விஷேடங்களின் போது ஏன் அவசியம் ஆலயத்திற்கு செல்லவேண்டும்?

கேட்காமலே அள்ளிக் கொடுப்பவனிடம் கேட்க என்ன இருக்கிறது?

==========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *