Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 15, 2024
Please specify the group
Home > Featured > மகா பெரியவா நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு நாம் அளித்த திக்குமுக்காட வைத்த பரிசு!

மகா பெரியவா நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு நாம் அளித்த திக்குமுக்காட வைத்த பரிசு!

print
ல்லாம் வல்ல இறைவனின் கருணையினால் பிப்ரவரி 10, ஞாயிறு மாலை நமது தளம் ஏற்பாடு செய்த இந்த ‘மகா பெரியவா சொற்பொழிவு’ நிகழ்ச்சி + ஆப்ரஹாம் லிங்கன் பிறந்தநாள் சிறப்புரை மிக மிகச் சிறப்பாக நடந்ததோடு மட்டுமல்லாமல் அனைவரும் மெச்சும்படியாகவும் அமைந்தது.

விழா சிறப்பாக நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனால் இந்தளவு சிறப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கவில்லை. அதற்கு காரணம் உண்மையில் அந்த பரம்பொருளின் கடைக்கண் பார்வை தான்.

இந்த நிகழ்ச்சியை நான் எந்த சூழ்நிலையில் நடத்தினேன் என்பதை அந்த ஆண்டவனும் மகா பெரியவாவும் மட்டுமே அறிவார்கள்.

நல்ல முயற்சிகளுக்கு இறைவன் என்றும் துணையிருப்பான். சோதனைகளை கண்டு கலங்காது “எண்ணித் துணிக கருமம்”  என்று கருதி செயல்பட்டால் சோதனைகள் விலகி பாதை தெளிவாகும் பயணம் தொடரும் என்பதை மற்றொரு முறை அனுபவப் பூர்வமாக உணர்ந்துகொண்டேன்.

இது என்னுடைய பர்சனல் விழா அல்ல. பொது விழா. இருப்பினும் சிலரை என் கடும் அலுவல்களுக்கிடையேயும் வருந்தி வருந்தி அழைத்தேன். மின்னஞ்சல் செய்தேன். குறுந்தகவலும் அனுப்பினேன்.

ஆனால் பாலம் ஐயா அவர்களை ஒரே ஒரு முறை – அதுவும் அலைபேசியில் மட்டுமே – அதுவும் சனிக்கிழமை காலையில் தான் அழைத்தேன். அது கூட ஒரு பார்மாலிட்டிக்காகத் தான். (அவருக்கு வலைத் தளம் பார்க்க தெரியாது. குறுந்தகவலும் படிக்க தெரியாது.)


எத்தனையோ பேருக்கு நான் மறுபடியும் எஸ்.எம்.எஸ். மூலம் நினைவூட்டுதல் செய்ய, ஐயாவுக்கு நான் மறுபடியும் நினைவூட்டக்கூட இல்லை. ஆனாலும் என் ஒரே ஒரு அலைபேசி அழைப்பை ஏற்று அவர் வந்திருந்து சிறப்பித்து என்னையும் மகிழ்ச்சியில் திக்கு முக்காட வைத்துவிட்டார். ‘மேன்மக்கள் மேன்மக்களே’ என்பதை நிரூபித்துவிட்டார். இதை விட பெரிய பாக்கியம் அடியேனுக்கு என்ன இருக்க முடியும்?

அதே போல ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மகாத்மியத்தை வையம் முழுதும் பரப்பிய மானாமதுரை டாக்டர்.சேதுராமன் அவர்களின் மகன் திரு.லக்ஷ்மி நரசிம்மன் தன் குடும்பத்தோடு வந்திருந்து நிகழ்ச்சியில் கலந்கொண்டு சிறப்பித்தார். இதை விட வேறு என்ன சந்தோஷம் வேண்டும்?

ஒவ்வொரு முறையும் இது போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தும்போது பலப் பல விஷயங்களை தெரிந்துகொள்கிறேன். அனுபவப்படுகிறேன். புரிந்துகொள்கிறேன். இறைவனுக்கு நன்றி. நன்றி.

தோட்டத்தில் எத்தனையோ மலர்கள் மலர்ந்தாலும் இறைவனுக்கு அணிவிக்கப்படும் மாலையில் இடம்பெறும் பேறு சிலவற்றுக்கு தானே கிடைக்கிறது?

இந்த எளிய முயற்சிக்கு பக்கபலமாக இருந்து தோள் கொடுத்த நண்பர்களுக்கும் வந்திருந்த நண்பர்ளுக்கும், தள  வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

விழாவின் துவக்க உரையில் நான் கூறியதே “வந்திருக்கும் பாக்கியசாலிகள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்” என்பது தான்.

விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு ஒரு எதிர்பாராத இனிய பரிசு நம் தளம் சார்பாக அளிக்கப்பட்டது.

மகா பெரியவரின் அறிய புகைப்படம் ஒன்று தான் அது.

இந்த படம் என்னிடம் வந்ததே ஒரு அற்புதமான நிகழ்வு தான்.

என்னை சார்ந்தவர்களுக்கும் என்னுடன் இருப்பவர்களுக்கும் எப்போதுமே சர்ப்ரைஸாக ஏதாவது மகிழ்ச்சி தருவது என் வழக்கம். மேற்படி விழாவுக்கு வருபவர்களுக்கு அவர்கள் சந்தோஷத்தில் மூழ்கும்படி நம் சக்திக்கு உட்பட்டு ஏதேனும் ஒரு சிறிய பரிசு அளிக்கவேண்டும் என்று முடிவு செய்து யோசித்த போது “மகா பெரியவா” பாக்கெட் சைஸ் படம் ஏதாவது தரலாம் என்று முடிவு செய்தேன்.

படத்தை நூற்றுக்கணக்கில் வாங்கி அதில் நம் தளத்தின் பெயரை ஸ்க்ரீன் பிரிண்ட் செய்து தருவதாக உத்தேசம். இதற்காக
கடைகளில் சென்று பல மகா பெரியவா பாகெட் சைஸ் படங்களை பார்த்தேன். எதுவுமே எனக்கு திருப்தியாக அமையவில்லை. நிகழ்ச்சி தேதியோ நெருங்கிக்கொண்டிருக்கிறது.

எப்படியாவது ஏதாவது படத்தை கொடுக்கணும் என்பதில் மட்டும் உறுதி குறையவில்லை.

வெள்ளிக்கிழமை அன்று மாலை நிகழ்ச்சி நடைபெற்ற கோவில் மண்டபத்தின் பொறுப்பாளரை பார்த்து பாக்கி அடவான்ஸ் தொகை கட்ட சென்றிருந்தேன். அப்போது அவர், “சுந்தர் சார் உங்களுக்கு ஒரு பரிசு வெச்சிருக்கேன்” என்று கூறி தனது மேஜை டிராயரில் இருந்து பரமாச்சாரியார் படம் ஒன்றை எடுத்து தந்தார்.

படத்தை பார்த்து நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. “மகா பெரியவா பத்தி நிகழ்ச்சி பண்ற உங்களுக்கு மகா பெரியவா படம் தேடி வந்திருக்கு பார்த்தீங்களா?” என்றார்.

“என் பாக்கியம் சார்” என்றேன் கண்களில் ஒற்றிக்கொண்டு.

அவர் கொடுத்தது சாதாரண படம் அல்ல. சிதம்பரத்தில் நடராஜருக்கு அணிவிக்கப்படும் குஞ்சிதபாதத்துடன் மகா பெரியவா காணப்படும் அதிசய படம்.

அந்த படத்தை பற்றிய விபரத்தை இணைப்பில் காணலாம்.

(Double click the image to ZOOM and READ the text)

நமது நிகழ்ச்சியில் அனைவருக்கும் அளிக்க பரமாச்சாரியார் படம் ஒன்றிற்காக தேடி அலையும் கதையை சொல்லி “இந்த படத்தை தான் நீ கொடுக்கணும்” என்று மகா பெரியவாவே உத்தரவிட்டுள்ளதாக கருதுகிறேன் சார் என்றே அவரிடம்.

அந்த படத்தை பிரிண்ட் செய்து ஒரு பத்து – பதினைந்து காப்பி தன்னிடம் ஒருவர் தந்ததாகவும் எனக்காக ஒன்றை எடுத்து வைத்திருந்ததாகவும் கூறினார் அவர்.

இந்த படத்தையே நமது நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கும் தரலாம் என்று கருதி, அதை பிரிண்ட் செய்து அளித்தவரிடம் நமது நிகழ்ச்சியை பற்றிய விபரத்தை கூறி, “இதே படத்தை நான் ஸ்கேன் செய்து பிரிண்ட் போட்டு தரலாம்னு இருக்கேன். உங்க மேலான அனுமதி வேண்டும்” என்றேன். “தாராளமா சார்…!” என்று அவர் அனுமதி தந்த பிறகு பணிகள் துரிதமாக நடைபெற்றது.

200 படங்களுக்கு மேல் ரெடி செய்தேன். நேற்றைய நிகழ்ச்சியில் அனைத்தும் காலியாகிவிட்டது. வருபவர்களை இருக்கையில் அமரவைத்த பிறகு அவர்களுக்கு மேற்படி படமும், நம் தளத்தின் சார்பாக பிரிண்ட் செய்யப்படும் “ஆலய தரிசன முறைகள்” பற்றிய நோட்டீசும் அளிக்கப்பட்டது.

படத்தை பார்த்து பலர் பவசமடைந்து கண்களில் ஒற்றிக்கொண்டது கண்கொள்ளா காட்சி.

நிகழ்ச்சியில் நாம் பேசியது என்ன? திரு.சுவாமிநாதன் பேசியது என்ன? & திரு.சுவாமிநாதன் அவர்களுக்கு நாம் வழங்கிய அவர் சற்றும் எதிர்பாராத நினைவுப் பரிசு.

(அடுத்தடுத்த பதிவுகளில் இடைவெளியில்லாமல் அளிக்க முயற்சிக்கிறேன்.)

12 thoughts on “மகா பெரியவா நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு நாம் அளித்த திக்குமுக்காட வைத்த பரிசு!

  1. சுந்தர்ஜி அவர்களே , நான் தென்மாவட்டத்தில் இருப்பதால் (ஸ்ரீவில்லிபுத்தூர்),இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை .ஆனாலும் தங்களின் மஹா பெரியவரின் சொற்பொழிவு பற்றிய கட்டுரை படித்ததால்,ஆனந்தம் கொண்டேன் .மஹா பெரியவர் காஞ்சி சங்கராச்சாரியார் அருளாசிகள் அனைவரும் பெற்றிட, தாங்கள் ஆற்றிவரும் தொண்டு சிறந்திட, என் வாழ்த்துக்கள் . நன்றி

  2. உண்மையில் நான் அந்த படத்தை ஒரு சிலரிடம் கொடுக்கும் போது அவர்கள் அதை பெற்ற பவ்வியமும் கண்ணில் ஒற்றி கொண்ட அழகும் காண கண் கோடி வேண்டும் ,ஒரு சிலர் இன்னொன்று கிடைக்குமா என்று கேட்டு பெற்றுகொண்டார்கள் அவர்களை சந்தோஷ படுத்தியது நமக்கு சந்தோசம்

    சீக்கிரம் பதிவுகளை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்

  3. மஹா பெரியவரின் படம் வேண்டும் என விரும்பி உங்கள் தளத்தில் இருந்து
    பிரிண்ட் எடுத்து ஒரு அட்டையில் ஒட்டி பூஜை அறையில் வைத்தேன். விழாவிற்கு வந்த பின் மற்றொரு படமும் கிடைத்தது ஆச்சர்யமே.

    ——————————————
    Great.
    இறைவனை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் அவன் நம்மை நோக்கி பத்து அடி எடுத்து வைப்பான்.
    – சுந்தர்

  4. நான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவன். எனக்கு 70 வயதாகிறது. ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியாவில் அதிகரியாக பணி புரிந்தேன் விஜயேந்திரரின் இளைய தம்பி ம.ராமகிருஷ்ணன் என்னிடம்
    பணிபுரிந்தபோது பல முறை காஞ்சிபுரம் சென்று.மஹா பெரியவரை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.

    அதன் பிறகு நேற்று தான் பரமாச்சாரியாளை மானசீகமாக தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. நன்றி.

  5. Last Thursday , I visited your web site,then I continued my search to know more about ‘Maha periyava’. Finally I Save one great image in my desktop.Yes, It’s too amazing, there is no words to tell. Me too … get a same photo ( தேடி வந்த சிதம்பரம் ) of மஹா பெரியவா.

  6. Dear sundarji,

    It is a pleasure to participate in such events and I am blessed with the perivaa’s magimai. Thanks for the opportunity given and may god bless you and your team a grand success in all your future endeavours.

    Thanks and Regards

    S.Lakshmi Narasimhan
    2nd Son of Manamadurai S. Sethuraman

    ————————————————
    Thanks sir.
    Your presence was a great cheer to us.
    Hope you would grace all our future events of such nature.
    – Sundar

  7. பிரமாதம் சுந்தர். விழாவை நன்றாக கவர் செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  8. அற்புதம். வாரத்தின் முதல் நாள் நல்ல நாளாக அமைத்து கொடுத்த பரமாச்சாரியார் அவர்களுக்கும், திரு சுவாமிநாதன் அவர்களுக்கும், சத் கருவியாக இருந்த நமது சுந்தர்ஜி அவர்களுக்கும் எங்களது பணிவான நன்றிகள்.

    ப.சங்கரநாராயணன்.

    1. Very very sorry…!!!
      I couldn’t make it on this auspicious day due to severe leg pain on both my legs… This I conveyed through Mr.Sankaranarayanan but couldn’t face you hence kept silent…! This I wanted to convey on Mon/Tue but the sudden demise of “vinodhini” put me in to deep sorrow and I could understand how much you might got affected on this. IT took some time for me to recover to send this late communication…!!!
      Very sorry !!!!

  9. சுந்தர் ஜி கலக்கிட்டிங்க

    ரொம்ப நாள் கழிச்சு intha siteku varen….outstanding work bro.

  10. really i never thought this stuff you would create in this site.

    just normal information only i thought…real vishwaroopam from past to NOW.

    by the way i saved kanchi periyava photo too.

  11. மஹா பெரியவா பற்றிய நிகழ்ச்சி தொகுப்பு நேரில் கலந்து கொண்டதைப்போல் இருந்தது. உங்கள்செயல் தொடர இறைவனின் அருள் முழுமையாக உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன் . குருவருள் உங்களுக்கு நிச்சயமாக உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *