கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு!
இரண்டு விறகு வெட்டிகள் ஒரு பெரிய மர வியாபாரியிடம் பணிக்கு சேர்ந்தார்கள். ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் பணி. எவ்வளவுக்கெவ்வளவு வெட்டுகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு பணம் ஊதியமாக கிடைக்கும்.
இருவரையும் வேறு வேறு பகுதிக்கு அனுப்பினார் வியாபாரி. முதல் நாள் இருவரும் ஒரே அளவு மரங்களை வெட்டிக்கொண்டு வந்தார்கள்.
அடுத்த நாள், ஒருவர் அதிகமாகவும் மற்றவர் சற்று குறைவாகவும் வெட்டிக்கொண்டு வந்தார்கள். அதற்கு அடுத்த நாள் அந்த இடைவெளி அதிகரித்தது.
குறைவாக வெட்டுபவன் அதிகமாக வெட்டுபவனிடம் கேட்டான்… “நீ என்ன மரங்கள் வெட்டுகிறாய்?”
“நான் தேக்கு மரங்கள் வெட்டுகிறேன்.”
“வெட்டும்போது இடையே ஓய்வேடுப்பாயா? இல்லை தொடர்ந்து வேட்டுவாயா?”
“அப்பப்போ கொஞ்சம் ஓய்வெடுப்பேன்”
இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. “நாம் காலை வீச ஆரம்பிக்கும் கோடரியை உணவு இடைவேளையை தவிர வேறு எதற்கும் நிறுத்துவதில்லை. ஆனால் நம்மால் இவனை விட அதிகம் வேட்டமுடியவில்லையே… இது என்ன விந்தை” என்று தனக்குள் சிந்தித்தபடி,
ஒருவேளை தேக்கு மரங்கள் வெட்டுவதற்கு சுலபமாக இருக்கும் போல. நாம் அந்த மரம் இருக்கும் பகுதியாக கேட்டு வாங்கிக்கொள்வோம் என்று கருதி, வியாபாரியிடம், தனது விருப்பத்தை தெரிவித்தான்.வியாபாரியும் அவனுக்கு தேக்கு மரங்கள் இருக்கும் பகுதியை வழங்கினான். மற்றவனுக்கு வெட்டுவதற்கு கடினமான புளிய மரங்கள் உள்ள பகுதியை வழங்கினான்.
முதலாமவன் அடுத்த நாள் தேக்கு மரங்களை வெட்ட துவங்கினான். ஆனாலும், அந்த இன்னொரு விறகுவெட்டியே அதிக மரங்களை வெட்டினான்.
“அதெப்படிப்பா… நீ மட்டும் தினமும் அதிக மரங்களை வெட்டி அதிகம் சம்பளம் வாங்குறே… இத்தனைக்கும் புளிய மரம் வெட்டுறது ரொம்ப கஷ்டம்னாங்க. ஆனா, நான் தேக்கு மரம் தான் வெட்டுறேன். என்னால முடியலியே…” என்று அங்கலாய்த்துக்கொண்டான்.
“அது சரி… நீ கடைசியாக உன் கோடரியை எப்போது கூர் தீட்டினாய்?”
“கூர் தீட்டுறதா? எனக்கு அதுக்கெல்லாம் நேரம் கிடையாது… மரம் வெட்டுறதுல நான் மும்முரமா இருந்தேன்!”
Hard work is doing with strength and power. Smart work is doing with Wisdom, knowledge, and understanding!
There’s no guarantee of success in hard work. But smart work always ends in success.
(Hard work, Smart work இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உதாரணங்களுடன் வேறு பதிவில் விளக்குகிறோம்.)
Smart work என்பது பெரும்பாலும் அனுபவத்தில் தான் கிடைக்கும்.
அந்த விறகுவெட்டி போலத் தான் நாமும் தவறு செய்கிறோம். கோடரியை கூர் தீட்டாமல் மரத்தை வெட்ட நேரம் செலவிடுவதில் என்ன பிரயோஜனம்?
நம் வாழ்கையும் அப்படித்தான். நம்மை கூர் தீட்டிக்கொள்ளக் கூட நேரம் இன்றி பிஸியாக இருக்கிறோம். முன்னெப்போதையும் விட நாம் அனைவரும் பிஸியாக பரபரப்பாக இருக்கிறோம். ஆனால் மகிழ்ச்சியோடு இருக்கிறோமா?
ஏன் இந்த நிலைமை?
நம்மை கூர் தீட்டிக்கொள்ள நாம் மறந்துவிடுகிறோம். அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பரபரப்பாக இருப்பதிலோ கடினமாக உழைப்பதிலோ எந்தத் தவறும் இல்லை. ஆனால் அந்த பரபரப்பில் நாம் வாழ்வின் உன்னதமான விஷங்களான நமது பர்சனல் லைஃப், ஆன்மீகம், ஆலய தரிசனம், குடும்பத்திற்கு ஒதுக்கும் நேரம், புத்தகம் படிப்பது இவற்றை புறக்கணித்துவிடக்கூடாது. அப்படி புறக்கணித்தால் உங்கள் பரபரப்பிற்கு அர்த்தமே இல்லை.
நாம் அனைவரும் ரிலாக்ஸ் செய்துகொள்ள, சிந்திக்க, தியானம் செய்ய, புத்தகங்கள் படிக்க, நம்மை மேம்படுத்திக்கொள்ள நேரத்தை அவசியம் ஒதுக்கவேண்டும். இவற்றின் மூலம் நம்மை கூர் தீட்டிக்கொள்ள நாம் நேரம் ஒதுக்கவில்லையெனில் நம் உழைப்பு விழலுக்கிறைத்த நீர் தான்.
உங்களை கூர்தீட்டிக்கொள்ள என்னென்ன செய்யலாம் :
1. அளவான உடற்பயிற்சி மற்றும் தியானம். ரிச்சர்ட் பிரான்சன் என்னும் வெற்றிகரமான தொழிலதிபர் சொல்கிறார்… “என்னுடைய தொழிலை மேம்படுத்த நான் தினமும் தவறாமல் செய்யும் ஒன்று : உடற்பயிற்சி!” உடற்பயிற்சிக்கும் தொழிலுக்கும் என்ன தொடர்பு என்று நினைக்கவேண்டாம். நிச்சயம் இருக்கிறது. செய்து பாருங்கள் புரியும். உங்களை நீங்கள் நன்றாக கவனித்துக்கொண்டால் பிரபஞ்சம் உங்களை கவனித்துக்கொள்ளும்.
2. குடும்பத்துடன் அவசியம் நேரத்தை செலவிட்டு உங்களை நீங்களே புத்துப்பித்துக்கொள்ளவேண்டும். உற்சாகமாக வைத்துக்கொள்ளவேண்டும். இப்படி செய்தாலே மிகப் பெரிய ஆபத்துக்கள் விலகிப்போய்விடும்.
3. ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு பணிக்கு என்று பிரித்துக்கொள்ளவேண்டும்.
4. கற்றுக்கொள்ள மறக்கவேண்டாம். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். உங்களிடம் ஒரு மிகப் பெரிய சொத்து இருக்கிறது. அதை கவனமாக வளர்க்கவேண்டாமா? அது என்ன மிகப் பெரிய சொத்து ? நீங்கள் தான் அது!
தளத்தில் வெளியாகும் நீதிக்கதை ஒவ்வொன்றையும் உங்கள் வாழ்க்கையில் பொருத்திப் பார்த்து, உங்களை நீங்கள் செப்பனிட்டுக்கொள்ளவேண்டும். நம் அன்றாட வாழ்க்கைக்கு பயன்தரும் வகையில் தான் நம் தளத்தில் கதைகள் அளிக்கப்படுகிறது. பயன்படுத்திக்கொண்டு உயர்வது அவரவர் கைகளில்.
================================================
இந்த மாத ‘விருப்ப சந்தா’ செலுத்திவிட்டீர்களா?
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
================================================
Also check…
ஞானிகளுக்கெல்லாம் பெரிய ஞானி யார்?
வெற்றுப் படகுகளை கண்டால் என்ன செய்வீர்கள்?
நம்முடைய மதிப்பை உயர்த்துவது எது?
அள்ளிக்கொடுத்த வள்ளலும் நன்றி மறந்த புதுப்பணக்காரனும்!
வாழ்க்கையில் வெற்றி என்பது உண்மையில் என்ன?
எதுக்கு இந்த விஷப்பரீட்சை? உன்னால ஜெயிக்க முடியுமா??
எல்லோருக்கும் பொதுவான ஒரு மிகப் பெரிய சொத்து!
‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?
செய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம்!
வியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா?
எது உண்மையான வெற்றி? எது உண்மையான தோல்வி?
What is the real meaning of PRECIOUS ? மதிப்புமிக்கது என்றால் என்ன ?
இன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி!
பாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா?
ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?
விதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா?
நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?
‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’
எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? –
வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?
பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா?
சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ?
இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?
நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!
அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ?
நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!
மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா?
================================================
Don’t miss this….
எதுக்குமே டயம் இல்லை சார்… என்ன பண்றது?
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே!
================================================
[END]
வணக்கம் சுந்தர் sir
மிகவும் அருமையான பதிவு
நன்றி
Excellent article Sundarji. You are telling right.
We have to Update Ourself. Sorry Upgrade Ourself.
Narayanan,
Really very good post at the right time for me
சுந்தர் சார்,
உண்மையானா விளக்கம். சிறப்பான பதிவு.
நன்றி
அருணோதய குமார் . அ