Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Monday, June 24, 2024
Please specify the group
Home > Featured > குழந்தைகளின் தவிப்பும் குருவின் கருணையும் – குரு பூர்ணிமா SPL

குழந்தைகளின் தவிப்பும் குருவின் கருணையும் – குரு பூர்ணிமா SPL

print
19.07.2016 செவ்வாய்க்கிழமை அன்று குரு பூர்ணிமா. இரண்டு கண்களை போல நம்மை வழிநடத்தும் இரண்டு குருமார்களை பற்றி இந்நன்னாளை முன்னிட்டு பார்ப்போம். பகவான் ஸ்ரீ ரமணர் 1950 ஆம் ஆண்டு சித்தியானார். மகா பெரியவா அப்போது தான் ஸ்ரீ மடத்தில் தனது பாதி ஆயுளை நிறைவு செய்கிறார். இருவருக்கும் இடையேயான புரிதல் மற்றும் பரஸ்பர மரியாதை பற்றி நீங்கள் ஏற்கனவே பல சம்பவங்களை படித்திருப்பீர்கள். குறிப்பாக மகா பெரியவாவும் பகவான் ஸ்ரீ ரமணரும் திருவண்ணாமலையில் நேருக்கு நேர் ஒரு முறை சந்தித்துக்கொண்ட நிகழ்வை பற்றியும் தன்னை சந்திக்க வந்த பால் பிரண்டனை ரமணரை சந்திக்க பெரியவா அனுப்பியதைப் பற்றியும் நீங்கள் ஏற்கனவே படித்திருப்பீர்கள். (இன்னும் சில / பல ஆண்டுகள் ரமணர் இருந்திருந்தால் இருவருக்கும் இடையிலான பல சந்திப்புக்கள் குறித்த ஆத்மானுபவங்கள் கிடைத்திருக்கும்!!!)

Maha Periyava and Ramana

ஞானிகளுக்கிடையே பேதம் ஏது? இருவரும் தாம் இந்த பூவுலகிற்கு வந்த நோக்கத்தை செவ்வனே நிறைவேற்றி இன்றும் சூட்சும சரீரத்தில் இருந்து நம்மை வழி நடத்திவருகிறார்கள்.

மகாபெரியவா மற்றும் ஸ்ரீ ரமணர் குறித்த இரண்டு சம்பவங்களை இந்தப் பதிவில் தந்திருக்கிறோம். ஒரே சிப்பியில் இரண்டு முத்துக்கள் போல! பதிவு சற்று பெரியது. பொறுமையாக கடைசி வரை SCROLL செய்து பார்க்கவும்.

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும். 
(குறள் # 268)

பெரியவா சரணம்!!!

– ரைட்மந்த்ரா சுந்தர்

==========================================================

Also check : 

குரு என்பவர்  இறைவனை விட உயர்ந்தவரா? MUST READ

யாரை குருவாக ஏற்றுக்கொள்வது? உண்மையான குருவை எப்படி அடையாளம் காண்பது?

==========================================================

நரம்பு கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஷேஷ பிரார்த்தனை!

690மது தளத்தின் பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கை சமர்பிக்கப்பட்டு அது நிறைவேறிய அனுபவங்கள் மேலும் இரண்டு கிடைத்துள்ளது. விபரங்கள் பின்னர். இதற்கிடையே நமது தளத்தில் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விஷேஷ பிரார்த்தனை கிளப் பதிவு அளிக்கப்படவிருக்கிறது. பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவில் அர்ச்சகர் திரு.ராஜா குருக்கள் அந்த பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவுள்ளார். எனவே நரம்பு தொடர்பான பிரச்சனைகள் உள்ள வாசகர்கள் தங்கள் பிரார்த்தனையை அவரவர் பெயர், ராசி, நட்சத்திரத்துடன் சற்று விரிவாக நமக்கு அனுப்பவும். உங்கள் அலைபேசி  எண்ணை மறக்காமல் குறிப்பிடவேண்டும்.

பிரார்த்தனை கோரிக்கையை வரும் 21/07/2016 க்குள் editor@rightmantra.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். சந்தேகங்களுக்கு நம்மை தொடர்புகொள்ளலாம். அலைபேசி : 9840169215.

இது தொடர்பான ஆலய தரிசன பதிவுக்கு : சித்தர்கள் பாடிய, நரம்பு கோளாறுகளை நீக்கும், பேரம்பாக்கம் சோளீஸ்வரர்!

சென்ற பிரார்த்தனை கிளப் பதிவுக்கு : திருவாசகம் கேட்டு பிறந்த குழந்தை! – Rightmantra Prayer Club

Also check : பரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்? MUST READ

==========================================================

பார்வை ஒன்றே போதுமே!

 • குமார ராஜா, மேற்கு தாம்பரம்

“நான் மத்திய அரசின் நிர்வாகத்திலுள்ள வானிலை மையத்தில் பொறுப்புள்ள பதவியில் பணிபுரிகிறேன். நான் ஒரு காலத்தில் (அதாவது 1993ம் ஆண்டிற்கு முந்தி வரை) தீவிர கம்யூனிஸ்ட் ஆக இருந்தேன். அதாவது கர்மா தத்துவத்தின் பேரிலும் கடவுள் நம்பிக்கை பேரிலும் அளவு கடந்த வெறுப்புடன் இருந்தேன். நான் பிராமண குடும்பத்தில் பிறந்திருப்பினும் நித்ய அனுஷ்டானங்களை செய்யாமலும் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளின் மேலுள்ள ஈடுபாட்டில் சனாதன தர்மத்தின் மீது நம்பிக்கை இழந்து, எனது வீட்டில் நடக்கும் எந்தவொரு சமய வழிபாட்டிலும் ஈடுபடுவதில்லை. குறிப்பாக, சனாதன தர்மத்தை அணுப்பிசகாமல் கடைப்பிடித்து அதைத் தீவிரமாக பிரசாரம் செய்ததாலும் மகா சுவாமிகளை கடுமையாக வெறுத்தேன்.

Maha Periyavaஇவ்வாறிருக்கையில் 1993ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருநாள் எனது நண்பர்கள் இருவருடன் காஞ்சிபுரம் வந்திருந்தேன். மனமில்லாமல் அவர்களுடன் சில கோயில்களுக்குச் சென்று விட்டு (காஞ்சிபுரத்தில் கோயில்கள் தவிர மற்ற இடங்களில் பார்ப்பதற்கு இல்லாததால்) அவர்களுடன் ஸ்ரீமடத்திற்கும் செல்ல நேர்ந்தது. அந்த வருடம் மகா சுவாமிகளின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்ததாலும் ஸ்ரீமடத்தில் என்ன பணிகள் செய்கிறார்கள் என்பதை அறியவும் ஸ்ரீமடத்திற்கு சென்றேன். 11.00 மணியளவில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று ஸ்ரீ மகா சுவாமிகளை தரிசனம் செய்து கொண்டிருந்தார்கள். நானும் அந்த வரிசையில் சென்று அவரைப் பார்க்கச் சென்றேன்.

அவர் அருகில் சென்று பார்க்க முடியாவிட்டாலும் அவர் இருக்கும் இடத்திற்கு நேரே சென்று எதிரில் நின்றேன். அவர் என்னை உற்றுப் பார்ப்பது போல் தெரிந்தது. ஒரு க்ஷண நேரம்தான் இருக்கும். அதன் பிறகு சென்னைக்கு திரும்பினோம். வரும் வழியெல்லாம் அவருடைய பார்வைதான் என்னைத் தொடர்ந்து வந்தது. அவர் என்னைப் பார்த்து, ”திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்திற்கு செல்” என்று சொல்வது போன்ற உணர்வு. தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களுக்கு எந்த வேலையில் ஈடுபட்டாலும் அவர் பார்வை ‘திருவண்ணாமலைக்குச் செல், செல்’ என்று கட்டளையிட்டுக் கொண்டே இருந்தது.

அதன்பின் அக்கட்டளைப்படி, திருவண்ணாமலை வந்து ஸ்ரீ ரமண மகரிஷிகளின் அதிஷ்டானத்தை தரிசனம் செய்த பின்தான் எனக்கு நிம்மதியாயிற்று. என்ன அதிசயம்! அதன்பின் தான் என் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம். எந்த சனாதன தர்மத்தையும் கோயில்களையும் பழித்தேனோ, தற்போது அவற்றின் மீது ஈடுபாடு கொண்டதுடன் மாதமொரு முறை திருவண்ணாமலை சென்று கிரிவலம் செல்வதுடன் ரமணாஸ்ரமத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்கிறேன்.

என்னுடைய இந்த மாற்றத்திற்கு ஸ்ரீ மகா சுவாமிகள் பார்வை அருள் ஒன்றுதான் காரணம். அவர் நேரில் என்னிடம் பேசியிருந்தால் கூட இம்மாற்றம் நிகழ்ந்திருக்காது. ஏனெனில் பெரியோர்கள் எது எந்த நல்வார்த்தை கூறினாலும் அதற்கு எதிர்மறையாகச் செயல்படுவதே மனித சுபாவம். ஸ்ரீ மகாசுவாமிகள் பேசாமல் தன் அருட்பார்வையால் என்னை நல்வழியில் மாற்றியது பெரிய அதிசயமே.”

– எஸ்.கோதண்ட ராம சர்மா அவர்கள் தொகுத்த ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’ தொகுப்பிலிருந்து

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

For more information click here!

==========================================================

Also check our earlier articles on Maha Periyava

“கடமையை செய், பன்மடங்கு பலனை எதிர்பார்” – இது பெரியவா கீதை!

தப்புக்கு பெரியவா சொன்ன பிராயச்சித்தமும் தங்கக்காசும்!

பெயர் பொருத்தம் பார்த்து பெரியவா செய்து வைத்த கல்யாணம்!

காற்றை நிறுத்திய காத்தவராயன்!

”வா சங்கரா, இப்படி வந்து உட்கார்” – திருவாய் மலர்ந்த தெய்வம்!

தன் புண்ணியத்தை ஈந்து நம் பாவத்தை கரைக்கும் கருணைக்கடல்!

சேற்றுக்குள் மறைந்திருந்த ஸ்ரீ அனந்த பத்மநாப ஈஸ்வரர்! விசேஷ புகைப்படங்கள்!!

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

==========================================================

னைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்தி, மவுன முழக்கமிட்டு, அனைவரது உள்ளங்களிலும் தனி இடம் பிடித்தார் ரமண மஹரிஷி. உலகின் அனைத்து உயிர்களையும் ஆதாரம் என அறிந்துகொண்ட இவர், அதுவே ஆன்மா எனவும் உறுதிசெய்தார்.

நாய், பசு, அணில், குரங்கு போன்ற சகல ஜீவராசிகளையும் பகவான், மனிதர்களைப் போலவே பாவித்து மரியாதையுடனும் அன்புடனும் நடத்துவார்.

ரமணர்

புதிதாக ரமணரை சந்திக்க வருகிறவர்களுக்கு இது ஒவ்வொரு சமயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.   பசங்கள் என்று பகவான் சொல்வதைக் கேட்டு, யரோ சில சிறுவர்களைக் குறிப்பதாக கருதி பலர் ஏமாறியது உண்டு.  ஆனால் அவர் குறிப்பது மானிடச் சிறுவர்களை அல்ல.  நாய், அணில், போன்ற குழந்தைகளைத் தான்.  எல்லா ஜீவராசிகளும் அவருக்கு சமமே.  மிருகங்களைக் கூட அவன், அவள் என்று உயர்திணையிலேயே குறிப்பிடுவார்.  ஆசிரமத்துக்குள் அவைகளை அவமரியாதையாகவோ அன்பின்றியோ நடத்துவதை பகவான் சகிக்க மாட்டார்.

“அந்த உடல்களுக்குள்ளே எந்த எந்த ஆத்மாக்கள் இருக்கின்றனவோ!  பூர்வ கர்மத்தின் எப்பாகத்தை முடிப்பதற்காக நம்மை அவை அடுத்திருக்கின்றனவோ!   யாருக்குத் தெரியும்?” என்று கூறுவார்.

கீழ்கண்ட சம்பவத்தை படியுங்கள். குருபூர்ணிமா செய்தி இதுவே!

குழந்தைங்க எப்படி தவிக்கிறது பாருங்கோ…

ரு நாள் வழக்கம்போல் அணில்கள் முந்திரிபருப்புக்காக பகவான் சோபா மேல் ஏறி விளையாடின. டப்பாவில் முந்திரி பருப்புகள் இல்லாததால் நிலக்கடலை கொடுத்தார்.

அவைகளுக்கு ருசிக்காததால் கலாட்டா செய்யத் துவங்கின.

பகவான், அட்டெண்டெண்டு கிருஷ்ணசுவாமியிடம், “ஸ்டோர் ரூம்ல ஏதாவது இருக்கோ என்னமோ கேட்டுட்டு வா” என்றார்.

கிருஷ்ணசுவாமி பத்து பருப்புகள் கொண்டுவந்தார்.

“என்ன இவ்வளவு தான் இருக்கா?” என்றார் பகவான்.

Ramanar with squirrel
பகவான் மடியில் துள்ளிவிளையாடும் அணில்

கிருஷ்ணசுவாமி, “பாயாசத்துக்கு தேவையான அளவு தான் இருக்காம். அதனாலே இதைத் தான் கொடுத்தாங்க!” என்றார்.

“இவாளுக்கெல்லாம் பாயாசத்துக்கு முந்திரி பருப்பு இருந்தாத் தான் ருசிக்கும்போல…. பாயசத்துல முந்திரிப் பருப்பு இல்லேன்னு யார் அழுதா? பாவம் வேறெதுவும் பிடிக்காம குழந்தைங்க எப்படி தவிக்கிறது பாருங்கோ” என்றார்.

சற்று நேரத்தில் ஸ்டோர் ரூமிலிருந்து பாயசத்துக்காக பாதுகாக்கப்பட்ட முந்திரி பருப்புகள் கொடுத்தனுப்பப்பட்டன.

அன்று சாயந்திரமே டாக்டர் அனந்த நாராயணன் ஊரில் இருந்து வந்தார். வந்தவர், “அணில்களுக்கென்றே கொண்டு வந்தேன்” என்று மூன்று கிலோ முந்திரி பருப்பை பகவான் சன்னதியில் சமர்பித்தார்.

பகவான் புன்சிரிப்புடன் கிருஷ்ணசுவாமியை பார்த்து, “அவாளுக்கு வேண்டியதை தாமாகவே சம்பாதிச்சுகொண்டா. இனி உங்களை யாசிக்க வேண்டியதில்லை. இது அவா சொத்து. பத்திரமா இங்கேயே டப்பாவுல போட்டு வையும். ஸ்டோருக்கு மாத்திரம் அனுப்பி விடாதேயும். ஜாக்கிரதை!” என்றார்.

– ரமண திருவிளையாடற் திரட்டு   ¶¶

==========================================================

Also check our earlier articles on Ramana Maharishi

ஒன்றுக்கும் உதவாதது அனைவரும் மெச்சும்படி உயர்ந்தது எப்படி?

“நான் யாருக்கும் நமஸ்காரம் பண்ணமாட்டேன். என்னை கட்டாயப்படுத்தக்கூடாது”

ரமணர் ஏன் ஆஸ்ரம கோ-சாலையை பெரிதாக கட்டச் செய்தார்?

ரமணர் விளக்கிய கிரி பிரதட்சண மாண்பு!

அன்னபூரணிக்கு முதல் நைவேத்தியம்!

காக்கா குருவிக்கு ஏது ஓய் உக்கிராணம்?

ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…

எந்த கண்களில் பார்வை இருக்கிறது? எதில் இல்லை?

பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!

ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!

பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!

==========================================================

[END]

2 thoughts on “குழந்தைகளின் தவிப்பும் குருவின் கருணையும் – குரு பூர்ணிமா SPL

 1. குரு பிரம்மா
  குரு விஷ்ணு
  குரு தேவோ மஹேஸ்வரஹ
  குரு சாக்சாத் பர பிரம்மா தஸ்மை
  ஸ்ரீ குருவே நமஹ

 2. குருவே சரணம்!

  அன்பன்
  நாகராஜன் ஏகாம்பரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *