திருமதி.எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் பாடிய அவரது ‘குறையொன்றுமில்லை மறைமூர்த்திகண்ணா’ பாடல் மிகவும் பிரபலமானது. உள்ளத்தை உருக்கும் ஒன்று. அந்தப் பாடல் பிறந்த கதை பற்றி கிடைத்த தகவல் ஒன்றை சமீபத்தில் நமது முகநூலில் பகிர்ந்திருந்தோம். தளத்திலும் பகிர்ந்தால் அனைவருக்கும் சென்று சேரும் என்பதால், அந்த செய்தியின் நம்பகத்தன்மையை இன்னும் தீவிரமாக ஆராய்ந்த போது இந்து நாளிதழின் இணையதளத்தில் அது தொடர்பான விரிவான தகவல் கிடைத்தது. மேலும் சில தகவல்களை திரட்டி இன்னும் மெருகூட்டி கூட்டி இங்கு அளிக்கிறோம்.
இன்று சனிக்கிழமை. ஆடி 1. வேங்கடவனை வழிபட ஏற்ற நாள்.
ராஜாஜி அவர்களால் எழுதப்பட்ட ஒரே ஒரு பாடல் இது என்பது இதன் சிறப்பு. தமிழறிஞர் மீ.ப. சோமசுந்தரம் (மீ.ப.சோமு) அவர்களின் உதவியுடன் இயற்றப்பட்ட இந்தப் பாடல் 1967-இல் ‘கல்கி’ பத்திரிகையில் வெளிவந்தது. இந்தப் பாடலுக்கு இசை வடிவம் தந்தவர் கடையநல்லூர் வெங்கட்ராமன் ஆவார். மறைந்த இசை மேதை பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமியால் 1979/80 -இல் முதலில் பாடப்பட்ட இப்பாடல், பிறகு இசையுலகில் மிகப் பிரபலமானது.
வாழ்க்கையில் சோகத்தைக் கூட சுவாரஸ்யமாக எடுத்துக்கொள்ளும் பழக்கமுடையவர் ராஜாஜி என்பது அவரது வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்தால் புரிந்துகொள்ளமுடியும். அவருடைய சொந்த வாழ்க்கையில் எத்தனையோ சோகம் புதைந்திருக்கிறது. அவருக்கு 37 வயதாகும்போது ஐந்து குழந்தைகளுக்குத் தாயான அலர்மேலு மங்கம்மாள் ராஜாஜியின் மடியில் உயிர் துறந்தார். அப்போது அவருடைய கடைசி மகளுக்கு வயது மூன்று. மனைவியிடம் அளவற்ற அன்பைப் பொழிந்தவர் மறுமணம் செய்துகொள்ளாமல் தேசத்தொண்டில் முற்றாக மூழ்கினார்.
ராஜாஜி செய்த பல புரட்சிகள், தியாகங்கள் அவர் பிராமணர் என்கிற ஒரே காரணத்திற்காக பிற்கால திரா’விட’ அரசியலால் இருட்டடிப்பு செய்யப்பட்டது வேதனையிலும் வேதனை.
சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் பதவி வகித்த தமிழர்; வங்காளத்தில் நடந்த மதக் கலவரத்துக்குப் பின் மேற்கு வங்க மாநில கவர்னர் பதவி வகிக்க பலரும் தயங்கிய நேரத்தில் துணிந்து அங்கே கவர்னராகப் போன தீரர்; வடக்கே மகாத்மா காந்தி தண்டி யாத்திரை சென்றதை அடுத்து தென்னகத்தில் வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தை வெற்றிகரமாக நடத்திய சுதந்திரப் போராட்ட வீரர்; தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் ஆலயங்களில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், ஆலயக் கதவுகளை அவர்களுக்குத் திறந்துவிட்ட சீர்திருத்தச் செம்மல்; தன் வாதத் திறமையாலும் நிர்வாகத் திறமையாலும் ஆளும் கட்சியைக் காட்டிலும் எதிர்கட்சியினர் எண்ணிக்கையில் அதிகம் இருந்தபோதும் சிறப்பாக அரசை வழிநடத்திச் சென்ற ராஜ தந்திரி; இசையிலும், இலக்கியங்களிலும் ஆர்வமும் புலமையும் பெற்று, குறையொன்றுமில்லை என்று இன்று திரும்பிய பக்கமெல்லாம் ஒலிக்கும் பாடலை எழுதி திருமதி எம்.எஸ். அவர்களை பாட வைத்தவர்; தன் கடைசி நாட்களை பகவத்கீதை, ராமாயணம், மகாபாரதம் போன்ற இலக்கியங்களைத் தமிழில் படைத்தவர்.
இந்த கட்டுரையை தயாரிக்க ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான பல தகவல்களை ஆராய்ந்தோம். நூல்களை படித்தோம். அப்போது ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்தது. பதிவுக்கும் அதற்கும் தொடர்பு இல்லை. இருப்பினும்… அக்காலங்களில் காதல் என்றால் என்ன? காதலர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக தருகிறோம்.
காந்தியும் ராஜாஜியும் சம்பந்திகளான சுவாரஸ்ய தகவல்!
ராஜாஜியின் மகள் லக்ஷ்மிக்கும் மகாத்மா காந்தியின் கடைசி மகன் தேவதாஸ் காந்திக்கும் காதல் அரும்பியது. லக்ஷ்மிக்கு அப்போது வயது 15 தான். ஆனால், தேவதாஸுக்கு 28 வயது. காந்தி, ராஜாஜி இருவரும் காதலர்கள் ஒருவரையொருவர் பார்க்காமல் ஐந்து வருடங்கள் காத்திருந்தால் திருமணம் செய்துவைப்பதாக உறுதியளித்தனர். காதலர்களும் பெற்றோர் சொற்படியே கண்ணியத்துடன் ஐந்து ஆண்டுகள் காத்திருந்து 1933 ஆம் ஆண்டில் கரம்பிடித்தனர். (இதெல்லாம் இக்காலத்தில் சாத்தியமா? பெற்றோர்களுக்கோ அல்லது காதலர்களுக்கோ தான் அந்தப் பக்குவம் இருக்கிறதா?)
தேவதாஸ் காந்தி கல்லீரலில் ஏற்பட்ட ஒரு நோய் காரணமாக 57 ஆம் அகவையில் எதிர்பாராமல் இறந்துவிட லக்ஷ்மி தமது 45 வயதில் கைம்பெண்ணாகிவிட்டார். ராஜாஜியின் மற்றொரு மகள் நாமகிரி 25 வயதிலேயே கணவரை இழந்து கைம்பெண்ணாகிவிட்டார். இது தவிர அவரது அன்புக்குரிய மகனும் திடீரென அவரை விட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார். இப்படி சொந்த வாழ்க்கையில் ஈடு செய்ய முடியாத இழப்புக்களுடனும் சோகத்துடனும் பொது வாழ்க்கையில் ஈடுபட்ட ராஜாஜி தமது 94 ஆம் வயதில் 1972 ஆம் ஆண்டு ஆச்சார்யன் திருவடிகளை அடைந்தார்.
குறையொன்றுமில்லை பிறந்த கதை…!
1925. நாடெங்கிலும் காந்தியின் தலைமையில் விடுதலைப் போராட்டம் புது எழுச்சி கொண்டிருந்த காலகட்டம். காசையும் வாங்கிக் கொண்டு கேசையும் ஏற்றுக் கொண்டு தானும் கோர்ட்டுக்குப் போகமாட்டேன் அடுத்தவனையும் போகவிடமாட்டேன் என்ற தற்போதைய நீதிமன்றப் புறக்கணிப்பைப் போலன்றி ஏழு வருடங்களாக ஒத்துழையாமை இயக்கத்தின் கீழ் தங்கள் சன்னத்துகளை திரும்பத் தந்துவிட்டு அந்நிய அரசின் நீதிமன்றங்களை அன்றைய வக்கீல்கள் முழுமையாகப் புறக்கணித்து வந்த காலம். தற்போதைய ஆந்திர மாநிலத்திலிருக்கும் சித்தூரிலிருந்த ஒரு காங்கிரஸ் மேலவை உறுப்பினரும் மூதறிஞர் ராஜாஜியின் நண்பருமான ஒரு வக்கீல் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அமரர் ராஜாஜி சித்தூர் செல்கிறார். காந்தியின் கட்டளையை மீறி ஒரு குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு ‘தாழ்த்தப்பட்ட பஞ்சமனுக்கு’ அப்பீலில் ஆஜராவதாக அவர் துணிந்து முடிவெடுத்திருந்தார். அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தினாலும் சரி என்ற எண்ணத்திற்கு அவர் வந்திருந்தார் என்பதும் கடைசி வரை அதை அவர் விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை என்பதும் அவரது மேன்மை.
அந்த மனிதன் அப்படி என்ன தவறிழைத்துவிட்டான்? தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்து விட்டதால் அவன் திருப்பதி கோவிலுக்குள் நுழைந்து இறைவனைப் பார்த்து வணங்க அனுமதியற்ற அவலமான காலகட்டம். அப்போதிருந்த நீதிமன்றம் அதை மீறும் ‘பஞ்சமர்களை’ சிறைக்கு அனுப்பிய காலம். அந்த மனிதன் பத்து வருடங்களாக திருப்பதி கோவிலுக்குள் செல்லத் துடிக்கிறான். அனுமதி இல்லை. ஒரு நாள் ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷத்துடன் பக்திமேலிட கோவிலுக்குள் நுழைய காவலர் கைது செய்து நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகிறான். அவனுக்காக அப்பீல் செய்த அந்த சித்தூர் வக்கீல் குற்ற வழக்குகளில் ஜாம்பவான் ஆகிய ராஜாஜிக்கு அந்த அப்பீலை நடாத்தித் தரும்படி வேண்டுகிறார்.
ராஜாஜிக்கு மிகப்பெரிய சவால். ஏழு வருடங்களாக காந்தியின் கட்டளைக்கிணங்கி தான் புறக்கணித்து வந்த நீதிமன்றப் பணியை இந்த ஒரு வழக்கிற்காக மீண்டும் ஏற்பதா? வேண்டாமா? கட்சியா? நியாயமா? அரிசனங்களின் ஆலயப்பிரவேசம் அவசியமானது என்ற அவரது கொளகைக்கு முன்னால் காந்தியின் கட்டளை தோற்கிறது. அந்த ஏழைக்காக சித்தூர் செசன்ஸ் கோர்ட்டில் அந்த மேல்முறையீட்டில் ஆஜராக ராஜாஜி முடிவெடுக்கிறார்.
ஆனால் அவரது வக்கீல் தொழிலுக்கான உரிமத்தை பல்லாயிரக் கணக்கான காங்கிரஸ் வக்கீல்கள் போல அவரும் பார் கவுன்சிலிடம் திரும்பத் தந்துவிட்டாரே? எப்படி ஆஜராவது என்கிறார் அந்த சித்தூர் வக்கீல். கவலை வேண்டாம் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தில் வக்கீலாக இல்லாமல் வக்காலத்து இல்லாமல் தனிமனிதனாக ஒரு குற்றவாளிக்கு ஆஜராக வழி உண்டு என்பதை சுட்டிக்காட்டி அவர் சித்தூர் சென்ற நாள் 22-12-1925. ஆங்கிலேய நீதிபதி அவருக்கு விதிகளின் படி அனுமதி அளிக்க மூதறிஞர் ராஜாஜி அவருக்கே உரித்தான சட்ட ஞானத்தோடு வக்கீல் உடையின்றி சிவில் உடையோடு அவ்வழக்கை நடத்தி அந்த மனிதனுக்கு விடுதலை வாங்கித் தருகிறார். அவனைத் தன்னோடு திருக்கோவிலுக்குள் அழைத்துச் செல்கிறார். தெய்வ தரிசனம் அவனுக்குப் பரவசத்தையும் இவருக்கு மகிழ்வையும் தருகிறது. அந்த உணர்வு மேலீட்டில் மூதறிஞர் எழுதிய பாடல்தான் ‘ குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா’ கீர்த்தனை.
பிற்பாடு தனக்கு மாப்பிள்ளை ஆகியவரும் காந்தியின் மகனுமான தேவதாஸ் காந்திக்கு திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்திலிருந்து இந்த சம்பவத்தை விளக்கி ஒரு கடிதம் எழுதுகிறார். அது காந்தியாரின் பார்வைக்குச் செல்கிறது. ஒரு உன்னதமான காரியத்தைச் செய்த்தற்காக அந்த மகாத்மா இந்த உத்தமரைப் பாராட்டுகிறார். அக்கடிதங்களை சபர்மதி ஆசிரமத்தில் தான் பார்த்ததாக ஒரு முறை இரயில் பயணத்தில் நான் சந்தித்த ஒரு அன்பர் சொன்னார்.
Gandhi Ashram
Tiruchengodu
24.12.25
My dear Devadas
I have been away from my place since 21st and will be there only tomorrow. I am writing this from Salem where I have broken journey for a day. I am returning from Chittoor where I argued a case in court!
(As perhaps you have already read in the papers) you can read a report of this unexpected event in The Hindu of 23 December.
A panchama was convicted by the sub-magistrate of Tirupati because in a fit of devotion and exultation of mind he went inside along with other pilgrims into the famous temple at Tiruchanoor. I read a report of the judgment in the papers with indignation. Later on I was requested to help in the appeal filed by the man and I readily agreed. I went and the gentleman an MLC and Vakil in charge of the case asked me if I would argue the case. I said if I could speak in court as a private gentleman specially requested by the appellant — which procedure is open to every accused person in a criminal case — I would gladly do it but I could not appear as a vakil filing a vakalat. The court agreed to this course and I fired away. Of course the event is a shock to the Non-Cooperator’s conscience. But every rule is observed best by breaking the letter of it when the occasion arises in a supremely compelling way. The case of a perfectly devoted and earnest pariah rushing into the temple to see his God and offer worship and the police catching him and prosecuting him took me out of the mechanical groove of doctrine. He was not a satyagrahi, he was not a reformer, nor a hero. But he was a panchama who came year after year to the temple for the last ten years and was content to break his coconut from outside the gate. This year somehow he felt he was also worthy to go nearer. I suppose the pulse of agitation had unconsciously touched his soul and when a crowd of pilgrims came shouting Govinda! Govinda! The Tirupati pilgrims’ war cry, he forgot himself and the law imposed on his unfortunate class. And he went in. Surely, I can’t stand aside resting on the creed of Boycott of Courts and see this man convicted for “insulting religion”!
I fear the event might be misunderstood and purposely hooked on by designers and enemies. However I have done it and I have obtained an acquittal too of the man. I felt a bit queer when standing and addressing without turban or coat and with only my khadi chaddar over my head and shoulders as at home and was prepared to be objected to and to retire. But the magistrate was all courtesy and felt keenly interested. So I went on as if I had never stopped practice these seven years.
Yours affectionately,
Anna
இச்சம்பவத்தை நினைவு கூர்ந்து முதன்முதலாக ராஜாஜியின் நினைவாக தி இந்து நாளிதழில் 2002 ம் வருடம் டிசம்பர் 24ம் தேதி ராஜாஜியின் பேரன் கோபால் காந்தி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதை இத்துடன் லிங்க்கியிருக்கிறேன். சற்றே நினைத்துப்பாருங்கள். 1925 ல் நிகழ்ந்த ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவம் யாருக்கும் தெரியாமல் போகிறது. பிற்பாடு 1967ல் கல்கி வார இதழ் ராஜாஜி எழுதிய இப்பாடலை முதல் தடவையாக பதிப்பித்தது.
ஆனாலும் இப்பாடலை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியது இசையரசி எம். எஸ். சுப்புலக்ஷ்மி தான். 1979ம் வருடம் HMV நிறுவனம் எம்.எஸ். பாடிய ஸ்ரீவேங்கடேச பஞ்சரத்னமாலா என்ற ஒலித்தட்டில் இப்பாடலை அவர் அற்புதமாகப் பாடி அருமையான அப்பாடலுக்கு மேலும் மெருகேற்றியிருந்தார். சிவரஞ்சனி, காப்பி மற்றும் சிந்துபைரவி ஆகிய மூன்று ராகங்களில் அமைந்த ராகமாலிகைப் பாடல் கேட்பவர்களை உன்மத்தம் அடையச் செய்ய வல்லது. பதிவுசெய்யப்பட்டாலும் சரித்திரம் மறந்த அந்த உன்னதமான சம்பவத்தையும் அந்த உத்தமரின் மேன்மையையும் தங்களின் மேலான பார்வைக்கு வைப்பதில் இந்த எளியவனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததால் எனக்கும் குறை ஒன்றும் இல்லை.
==========================================================
‘குறையொன்றுமில்லை’ பாடல் ஊனையும் உள்ளத்தையும் ஒருங்கே உருக்கும் ஒரு அற்புதம். மனிதனுக்கும் தெய்வத்துக்கும் இடையே இருக்க வேண்டிய புரிதல் பற்றி அத்தனை அற்புதமாக சொல்கிறது. திருமலை ஆலயப் பிரவேசம் மறுக்கப்பட்ட அந்த ஏழை & அவனுக்காக வாதாடிய ராஜாஜி இருவரின் இடத்திலிருந்தும் அந்தப் பாடலை தனித்தனியே இரண்டு முறை கேட்கவேண்டும். கடைசியில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் இப்போது இருக்கும் சூழலிலிருந்து ஒரு முறை கேட்கவேண்டும். அப்போது தான் இந்த பாடலின் தாக்கம் புரியும்.
இந்தப் பாடலின் வைர வரிகளை உள்வாங்கி முகபாவங்களில் இத்தனை அற்புதமாக பிரதிபலிக்க எம்.எஸ். அவர்களால் மட்டுமே முடியும்! (இறுதியில் காணொளி இணைக்கப்பட்டுள்ளது!)
கிருஷ்ண பரமாத்மாவிடம் குந்திதேவி வரம் கேட்டபோது, “எனக்கு எப்போதும் துன்பத்தை தா கண்ணா. அப்போது தான் எப்போதும் உன் நினைவு இருக்கும். உன் நினைவோடு இருப்பதைவிட துன்பம் பெரிதல்லவே…!” என்றாராம். இந்தப் பாடல் பிரதிபலிப்பதும் அதைத் தான்.
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா – உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
குறையொன்றுமில்லை – YOUTUBE VIDEO OF M S SUBBULAKSHMI
==========================================================
Don’t miss these articles…
முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!
நாமசங்கீர்த்தனத்தின் பெருமையும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகிமையும்!
ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?
எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் வாழ்வில் ஏழுமலையானும் மகா பெரியவாவும் நடத்திய நெகிழவைக்கும் நாடகம்!
==========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?
==========================================================
Also check :
நமது பிறவிப் பிணியும் திருப்பதி, திருவண்ணாமலை தரிசனமும்!
‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!
பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!
108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் சிறப்பும் பிரமிக்க வைக்கும் பாராயண பலன்களும்!
==========================================================
திருமால் திருவிளையாடல் தொடர்
ஆச்சார அனுஷ்டானம், பக்தி – எது பிரதானம் ? – திருமால் திருவிளையாடல் (4)
ஜகந்நாதன் சாப்பிட்ட மாம்பழங்கள் – உண்மை சம்பவம்! திருமால் திருவிளையாடல் (3)
பக்தனுக்காக தேரோட்டத்தை நிறுத்திய ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (2)
விரட்டப்பட்ட பக்தர், தடுத்தாட்கொண்ட பூரி ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (1)
==========================================================
[END]
சூப்பர் சார்
1925 இல் நடந்தது 1967 இல் பிரசுரிக்கப்பட்டது.
1979 இல் பாடல் பதிவு, 2002 இல் ஹிந்து வில் பதிவு, இன்று நம் எல்லோர் மனதிலும் மறக்கமுடியாது சார்.
மிக மிக நேர்த்தியான ஒரு பதிவு.
நன்றி,
சோ. ரவிச்சந்திரன்
“யாதும் மறுக்காத மலையப்பன் மலையில் அவன் இதயத்தில் ஏதும் தரும் கருணை கடல் அன்னை!” இந்த வார்த்தைகள் மட்டுமே போதும் குறைகளை விரட்ட !!
அருமையான பதிவு !!! சூப்பர் சுந்தர் !!!
அன்புடன்
நெ வீ வாசுதேவன்
Excellent Information.
AMMA M.S Subulakshmi is an Legend and a Living God as of now.
Narayanan.
எவ்வளவு கஷ்டம் இருந்தால் இந்த பாட்ட கேட்கும்போது மனசு லேசாகி மயிலிறகால் வருடுவது போன்ற உணர்வு
அதுவும் எம் எஸ் அம்மாவோட வாய்ஸ் – அற்புதம்
தினமும் உறங்க செல்லும் முன் ஒரு முறை இந்த பாடலை கண்மூடி அமைதியாக கேட்டு பாருங்கள் நாம் வாழும் வாழ்க்கையின் பொருளும் அர்த்தமும் விளங்கும்