பாரி போரில் மாண்ட பிறகு அவரது பெண்கள் அங்கவையும் செங்கவையும் திருக்கோவலூரில் திக்கற்றவர்களாக வாழ்நாட்களை கழித்து வந்தனர்.
ஒளவையார் அப்பெண்களைக் கண்டார். ஒரு முறை மழையில் நனைந்து வந்த ஔவைக்கு அங்கவை சங்கவையர் நீலச் சிற்றாடை தந்து பேணினர். அது ஒளவைக்கு நினைவுக்கு வந்தது. ஒரு தாயின் ஸ்தானத்திலிருந்து அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதற்கு ஏற்பாடு செய்தார்.
பலரிடம் சென்று பேசி, இருவருக்கும் ஏற்ற ஒரு மணமகனை தேர்ந்தெடுத்தார். திருமண அழைப்பிதழை இப்போது போல எழுதி அனுப்பும் வசதியெல்லாம் அக்காலத்தில் இல்லை. பனையோலையில் எழுதி ஆட்களிடம் கொடுத்தனுப்பவேண்டும். ஒளவையாரால் ஓலையை எழுதமுடியவில்லை. யாரைக் கொண்டு எழுதச் செய்யலாம் என்று எண்ணமிட்டார். அப்போது அவருக்கு நினைவுக்கு வந்தவர் நம் ஆனைமுகக் கடவுள்.
உடனே விநாயகப் பெருமானை நினைத்துப் பாடல் ஒன்றை பாடினார். விநாயகர் தாமதித்துவிட்டால் என்ன செய்வது? எனவே விநாயகரையே சபிப்பது போல பாடலை இயற்றினார் ஒளவை. அது ஒளவையின் உரிமை அல்ல. தமிழுக்கு முழுமுதற் கடவுள் மீதிருந்த உரிமை.
”ஒருகொம்பிருசெவி மும்மதத்து நால்வாய்க்
கரியுரிவைக் கங்காளன் காளாய் – பரிவுடனே
கண்ணால ஓலை கடிதெழுத வாராயேல்
தன்னாண்மை தீர்ப்பன் சபித்து.”
– ஒளவையார் (தனிப்பாடல் திரட்டு)
இதன் பொருள் : ஆனைமுகா! உன் தந்தங்களில் ஒன்றை முரித்து எழுத்தாணி ஆக்கிக்கொண்டுள்ளாய் என்பர். அங்கவை சங்கவை கண்ணாலத்துக்கு நீ வந்து அழைப்போலை எழுதவேண்டும். இல்லாவிட்டால் உன்னைச் சபித்து உன் ஆற்றலை அழித்துவிடுவேன்!
அப்பன் எளியோர்க்கு எளியோன் என்றால் இவன் அதனினும் எளியோன் அல்லவா?
“ஒளவையே… இதோ வந்துவிட்டேன்… என்னை சபித்துவிடாதே” என்று முன் நின்றான் மூஷிகவாகனன். ஒளவையின் வேண்டுகோளுக்கேற்ப திருமண பத்திரிக்கைகளை எழுதித் தந்தான். கொம்பை ஒடித்து வியாசர் சொல்லச் சொல்ல பாரதத்தையே எழுதியவனுக்கு இது எம்மாத்திரம்…?
********************
பரிகாரங்கள் என்பது ஆயிரக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் செலவு செய்து தான் செய்யவேண்டும் என்பதில்லை. நமக்கு அருகில் உள்ள பிள்ளையாருக்கு ஆத்மார்த்தமாக பக்தியுடன் செய்தாலே போதுமானது.
பிள்ளையாரின் திருவுருவத்தில் நவக்கிரகங்களும் அடங்கிவிடுவர்.
நெற்றியில் சூரிய பகவான். நாபியில் சந்திரன். வலது தொடையில் செவ்வாய். வலது கீழ்க்கையில் புதன். சிரசில் குரு அமர்ந்து அருள்பாலிக்கிறார். இடது கீழ் கையில் சுக்கிரனும், வலது கீழ்கையில் சநீஸ்வரரும் அமர்ந்திருக்கிறார்கள். இடது மேல் கையில் ராகு பகவான்.
குரு பெயர்ச்சியை காட்டி சில குறிப்பிட்ட ராசிக்கார்களை மிரட்டும் வேலை தொடங்கிவிட்டது. கணபதி இருக்க கவலையே வேண்டாம். பல்வேறு கிரகப் பெயர்ச்சி மற்றும் தோஷங்களால் தாம் அவதிப்படுவதாக கருதுபவர்கள் வீண் மன உளைச்சலை விடுத்து செவ்வாய் தோறும் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து விநாயகர் அகவல் படித்துவந்தாலே போதும். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் யாவும் நீங்கி, தன்னம்பிக்கை பெருகி, இல்லறம் சிறக்க வாழ்வார்கள். இந்த செவ்வாய் வழிபாடு நவக்கிரக தோஷத்திற்கு மட்டுமல்ல புத்திர தோஷத்திற்கும் சிறந்த பரிகாரமாகும். இதிலும் வேம்பும் அரசமரமும் இணைந்துள்ள மரத்தின் கீழுள்ள பிள்ளையார் என்றால் மிகவும் விசேஷம். அது போன்ற இடங்களை பார்த்தால் குறைந்தது பத்து நிமிடங்களாவது அங்கு அமர்ந்து (தக்க துணையுடன்) பிரார்த்தனையோ தியானமோ செய்வது கருத்தரிக்க மிகவும் உதவியாக இருக்கும்.
அண்மையில் நாம் சென்ற வயலூர் மற்றும் புதுவைப் பயணத்தில் பல இடங்களில் இத்தகு பிள்ளையாரை பார்க்க முடிந்தது.
விநாயகப் பெருமானை பொருத்தவரை அவர் அதிகம் எதிர்பார்க்காத எளிமையான தெய்வம்.
அக்காலங்களில் உழவர்கள் அறுவடை செய்து நெல்லை பிரித்தெடுக்கும்போது காற்றில் தூற்றுவார்கள். அப்போது போதிய காற்று வராமல் பணி தடைப்பட்டால், உடனே பசுஞ்சாணத்தில் பிள்ளையாரை பிடித்து, களத்து மேட்டில் வைத்து “காற்று வரவேண்டும் பிள்ளையாரப்பா” என்று வேண்டிக்கொள்வார்கள். உடனே காற்று பலமாக வீசும். அந்தளவு பிள்ளையார் எளிய மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போனவர்.
இது தவிர வீட்டிலேயே சுத்தமான கஸ்தூரி மஞ்சள் அல்லது குங்குமத்தில் பிள்ளையாரைப் பிடித்து அருகம்புல் கொண்டு பூஜித்து வருவது நலம்.
(* உங்கள் பகுதிகளில் பூஜை காணாத, வருவாய் இல்லாத பிள்ளையார் கோவில் இருந்தால் நமக்கு தெரியப்படுத்தவும். நாம் வந்து நேரில் பார்த்து ஆனைமுகன் அருளால் பூஜைக்கும் அபிஷேகத்திற்கும் ஏற்பாடு செய்கிறோம்.)
==========================================================
நல்வாழ்வுக்கு சில டிப்ஸ் – 28
நமது டிப்ஸ் பகுதி நீண்ட நாட்களாக அளிக்கவில்லையே ஏன் ஒவ்வொரு முறையும் ஆவலோடு அதை எதிர்பார்த்து ஏமாந்து போகிறோம் என்று பல வாசகியர் கேட்டபடி உள்ளனர். நமது பதிவுகளே ஒரு டிப்ஸ் போல அமைந்துவிட்டதால் டிப்ஸ் என்று தனியாக எதுவும் அளிக்கவில்லை. இருப்பினும் ஆவலுடன் கேட்டவர்களுக்காக…
உப்பு வாங்கலியோ உப்பு…
‘உப்பு கட்டினால் லோகம் கட்டும்’ என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவு உப்பு ஒரு முக்கியமான பொருள். செல்வங்களுள் ஒன்று. அந்த உப்பை எப்போது வாங்கவேண்டும் என்று ஒரு வரைமுறை இருக்கிறது. வெள்ளிக்கிழமைகளில், தமிழ் மாதத்தின் துவக்க நாளில் வாங்கவேண்டும். முகூர்த்த நாளில் வாங்குவது சாலச் சிறந்தது. முகூர்த்த நாட்களில் வாங்கினால் வீட்டில் தனவிருத்தி அதிகரிக்கும்.
உப்பை கீழே சிந்துவது வீணாக்குவது கூடவே கூடாது. கல்யாணம், கிரகப் பிரவேசம் போன்ற விருந்துகளில் சாப்பிடும் இலையில் உப்பு வைக்கப்பட்டு நீங்கள் அதை உபயோகிக்கவில்லை என்றால் அதில் சிறிது நீரை விட்டு கரைத்துவிடுங்கள்.
டிப்ஸ் தொடரும்…
==========================================================
Also check ….
பாலசங்கரன் நடத்தி தந்த பிள்ளையார் பூஜையும் அபிஷேகமும்!
விநாயகனே வினை தீர்ப்பவனே – பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் பிள்ளையார்!!
பூவிருந்தவல்லி மார்க்கெட் பிள்ளையார்!
தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும் வரும் துயர் யாவும் முன் நின்று தடுக்கும்!
தேடி வந்து அருள் செய்த ஆனைமுகன் – அதிதி தேவோ பவ – (4)
வாக்கு தரும் நல்வாழ்வு தரும் – பிள்ளையாருடன் துவங்கும் புத்தாண்டு!!
வாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்!
குன்றத்தூர் திருமுறை விநாயகரும் அவரது சிறப்பும்!
அருள் நிறைந்த ஒரு ஆண்டிற்கு அடித்தளமாய் அமைந்த ஆலய தரிசனங்கள்!
==========================================================
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
Also check :
மானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)
ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)
நெல்லுக்கு வேலியிட்ட நிமலன் – அதிதி தேவோ பவ – (3)
தேடி வந்து அருள் செய்த ஆனைமுகன் – அதிதி தேவோ பவ – (4)
==========================================================
வயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்!
பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE
புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !
மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!
==========================================================
Also check…
‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?
யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்?
பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE
புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !
மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!
இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது ?
==========================================================
[END]
புதிய கோணத்தில் புகை படத்தில் காணும் பிள்ளையார் உள்ள கோவிலை பற்றி விபரம்?
ஸ்ரீ மங்களாம்பிகை சமேத சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவில், மதனந்தபுரம், போரூர்