Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > நம்பிக்கை!

நம்பிக்கை!

print
மது முகநூலில் நாம் சமீபத்தில் போஸ்ட் செய்த ஒன்று. நமக்கு மிகவும் பிடித்துப் போனதால் இங்கே பகிர்கிறோம். உங்களுக்கு எப்போதெல்லாம் பிரச்சனைகளும் தோன்றி உங்களை நிலைகுலைய வைக்கிறதோ அப்போதெல்லாம் இந்த வரிகளை நினைத்துக்கொள்ளுங்கள்.

hard-work 5

நம்பிக்கை!

எல்லாம் ஒழுங்காக நடக்க,
நீ நம்பிக்கையோடு இருந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை.

எதுவுமே ஒழுங்காக
நடக்காதிருக்கும் போதும்,
நீ தைரியமாக வாழ்ந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

நீ நினைப்பதெல்லாம் உனக்கு
நடக்க நீ பலமாக உணர்ந்தால்
அதன் பெயர்
நம்பிக்கையில்லை . . .

நீ நினைக்காத பயங்கரங்கள்
உனக்கு நடந்தாலும் நீ
அசராமலிருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

உற்றாரும் பிறரும்
உனக்கு உதவி செய்ய,
நீ நிதானமாக இருந்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .

உனக்கு உதவ யாருமே
தயாராக இல்லாத சமயத்திலும்
நீ பக்குவத்தோடிருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

எல்லோரும் உன்னைக்
கொண்டாட, நீ சந்தோஷமாக
இருந்தால் அதன் பெயர்
நம்பிக்கையில்லை . . .

எல்லோரும் உன்னை
அவமதித்து ஒதுக்கித் தள்ள
அவர்கள் முன் ஜெயிக்கப் போராடினால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

உன் முயற்சிகளெல்லாம்
வெற்றியடைய நீ அழகாக
திட்டமிட்டால் அதன் பெயர்
நம்பிக்கையில்லை . . .

உன்னுடைய எல்லா முயற்சிகளும்
தோல்வியடைய, அதிலிருந்து
பாடம் கற்று நீ முயன்று கொண்டேயிருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

எல்லோரும் உனக்கு
நம்பகமாக நடக்க, நீ
தெளிவாய் முடிவெடுத்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .

உனக்கு வேண்டியவரெல்லாம்
உன் முதுகில் குத்திக் கொண்டேயிருக்க
நீ தெளிவான வழியில் சென்றால் அதன் பெயரே நம்பிக்கை ! ! !

உன்னிடத்தில் எல்லாம் இருக்க,
நீ எதிர்காலத்தைப் பற்றிக் கவலையில்லாமல் இருந்தால்
அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .

உன்னிடத்தில் எதுவுமே
இல்லாத பக்ஷத்தில், நீ எதிர்காலத்தை
நினைத்துப் பயப்படாமல் இருந்தால்
அதன் பெயரே நம்பிக்கை ! ! !

உனக்கு நம்பிக்கை இருக்கிறதா ??
நம்பிக்கை இருந்தால் நல்லது!

==========================================================

Swami Vivekananda Quote_வெற்றிக்கு வழி!

ஒரு லட்சியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதையே உங்கள் வாழ்க்கையாகக் கொள்ளுங்கள். அதையே நினையுங்கள். அதை கனவு காணுங்கள். அந்த லட்சியத்திற்காகவே வாழுங்கள். மூளை, தசைகள், நரம்புகள் என்று உங்கள் உடலில் உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியும். அந்த இலட்சியத்தால் நிறையட்டும். பிற கருத்துக்கள் அனைத்தையும் அடியோடு விட்டுவிடுங்கள். வெற்றிக்கு வழி இதுவே!

– சுவாமி விவேகானந்தர்

==========================================================

இந்த மாத விருப்ப  சந்தா  செலுத்திவிட்டீர்களா?

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

Also check… Articles on Swami Vivekananda in Rightmantra.com

ஒரு தொழிலதிபருக்கு விவேகானந்தரின் சந்திப்பு ஏற்படுத்திய திருப்புமுனை

எனக்கு ஒரு பிரச்சனை – தப்பு தப்பு – ‘சவால்’!

சேவைக்கு சுவாமி விவேகானந்தர் கொடுத்த பரிசு!

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

ஒரே ஷாட் – பந்தயத்தில் வென்ற சுவாமி விவேகானந்தர் – Must Read!

‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்?’ – விவேகானந்தர் கூறிய பதில்!

களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!

“பிச்சையிடும் பணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது?” – விவேகானந்தர் கூறிய பதில்!

பசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் !

அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன?

ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70

யார் உங்கள் தலைவர்?

வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67

யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? — ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை..!

இறைநம்பிக்கை Vs தன்னம்பிக்கை!

ஆறறிவு மனிதனுக்கு மரம் கற்றுத் தரும் குறள்

நிலம், கடல், வானம் இவற்றை விட பெரியது எது தெரியுமா ?

==========================================================

[END]

3 thoughts on “நம்பிக்கை!

  1. சுவாமி விவேகானந்தரின் நினைவு நாளில் ஒரு அருமையான பதிவு .நன்றி சுந்தர்ஜி .

  2. சுந்தர்ஜி

    சிறப்பு பதிவு
    .இன்று விவேகானந்தர் நினைவு நாளில் தங்கள் சிறப்பு பதிவு அளிப்பீர்கள் என்று தங்கள் மேல் வைத்த நம்பிக்கை.

  3. சுந்தர் சார்,
    நம்பிக்கை பற்றி மிக அருமையானா விளக்கம். சிறப்பான பதிவு.
    நன்றி.
    அருணோதய குமார் .அ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *