இனி மாதம் ஒரு பிள்ளையாரை அடையாளம் கண்டு அபிஷேக ஆராதனைகள் செய்ய தீர்மானித்திருக்கிறோம். வாசகர்களும் அவர்கள் பகுதியில் இப்படி ஏதேனும் பிள்ளையார் இருந்தால் அடையாளம் கண்டு நமக்கு தகவல் தெரிவித்து இந்த தொண்டு சிறக்க உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த பதிவுக்கு வருவோம்….
பிள்ளையார் பற்றி படிப்பதே ஒரு இனிமையான மங்களகரமான விஷயம் தான். நாம் ஏற்கனவே பல பதிவுகளில் கூறியது போல, பிள்ளையாரை மனம்குளிர்வித்தாலே போதும். அனைத்து கிரக தோஷங்களும் நீங்கி எடுத்த காரியம் யாவும் இனிதே நிறைவேறும்.
அரச மரத்தை சுற்றி வந்து அடிவயிற்றை தடவிப் பார்த்த கதையாக, இது போன்ற கைங்கரியங்களைஎல்லாம் செய்துவிட்டு உடனே பலனை எதிர்பார்க்க கூடாது. செய்துகொண்டே இருக்கவேண்டும். நமக்கு அனுகூலமான நேரம் வரும்போது அனைத்தும் தானாக நடக்கும். கொடுக்கும் தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும்.
சில சமயம் நமது மனவுறுதியை பரிசோதிக்க இறைவன் சோதனைகள் தரக்கூடும். துவண்டுவிடக்கூடாது. ஆனால் அனைத்தும் சுபமாகவே முடியும்.
இறைவனிடம் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு நாம் பாட்டுக்கு நமது கடமையை செய்துவந்தால், எந்தவொரு சாபமும் வரமாக மாறும். அதே நேரம் அற்பு சுகங்களில் மூழ்கி இறைவனை புறக்கணித்துவிட்டு மமதையுடன் திரிந்தால் எப்பேற்பட்ட வரமும் சாபமாகிவிடும். எனவே எச்சரிக்கை.
மீண்டும் பிள்ளையார் விஷயத்திற்கு வருகிறோம்….
நீங்கள் எதை இழந்திருந்தாலும் பிள்ளையார் வழிபாட்டை தொடர்ந்து செய்வதன் மூலம் அதை திரும்ப பெறமுடியும்.
வாழ்க்கையில் வசந்தம் வீசவேண்டுமா?
செய்தொழிலில் லாபம் குவியவேண்டுமா?
நல்லோர் நட்பும் நல்ல சுற்றமும் வேண்டுமா?
நோயற்ற வாழ்வு வேண்டுமா?
பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர வேண்டுமா?
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த கணவன் மீண்டும் வரவேண்டுமா?
ஆனைமுகனை பற்றிக்கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.
இதைத் தான கவியரசு கண்ணதாசன் அற்புதமாக….
//அற்புத கீர்த்தி வேண்டின்
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின்
நலமெலாம் பெருகவேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக்
களஞ்சியத் திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர்!
பொய்யில்லை கண்ட உண்மை.//
என்ற கவிதையில் கூறினார்.
இதோ கணபதியை கைதொழுது வாழ்க்கையில் வசந்தம் வீசப்பெற்ற ஒரு பெண்ணின் சரித்திரத்தை பார்ப்போம். விநாயகர் புராணத்தில் வரும் சம்பவம் இது.
விநாயகனே வினை தீர்ப்பவனே…!
இயற்கை வளமும் செல்வ செழிப்பும் கொழிக்கும் மாளவ தேசத்தை சந்திராங்கதன் என்கிற மன்னன் ஆண்டுவந்தான். அவன் மனைவி இந்துமதி என்கிற அதிரூப சுந்தரி. பேரழகுப் பெட்டகமாக திகழ்ந்த அவள், கணவனுக்கு ஏற்ற மனைவியாக ஒழுக்க சீலத்துடன் வாழ்ந்து வந்தாள்.
தம்பதிகள் இருவரும் ஒருமித்த மனத்துடன் இனிய இல்லறம் நடத்தி வந்த காலகட்டங்களில், அவனுடைய மந்திரி பிரதானிகள் ஒரு சமயம் அவனை வந்து வணங்கி, “வனத்தில் துஷ்ட மிருகங்கள் அதிகளவு பெருகிவிட்டன. அந்த வழியே செல்லும் மக்களையும் அவை தாக்கி அச்சுறுத்தி வருகின்றன. அவற்றை கட்டுப்படுத்தத வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து தனது படைவீரர்கள் சிலரை அழைத்துக்கொண்டு அடுத்த நாள் விடியற்காலை சந்திராங்கதன் வேட்டைக்கு கிளம்பினான்.
காட்டில் உள்ள புலி, சிங்கம், கரடி, நரி முதலான பல விலங்குகளை வேட்டையாடி கொன்று குவித்தான். அக்காட்டில் இருந்த சில ராக்ஷசர்கள் தங்கள் பகுதிக்கு வந்து தங்களுக்கு உரிமையான விலங்குகளை ஒரு மானிடன் வேட்டையாடுவதா என்று வெகுண்டெழுந்து சந்திராங்கதனை தாக்க வந்தார்கள். சந்திராங்கதானோ துளியும் கலங்காமல் அவர்களின் கை மற்றும் கால்களை வெட்டி வீழ்த்தினான்.
தம் இனத்தவர் ஒரு மானிடனால் தாக்கப்பட்டு மடிவதை தெரிந்துகொண்ட ஒரு மகாபலசாலியான அரக்கி, சந்திராங்கதனை கொன்று விழுங்க அவனை நோக்கி ஆவேசமாக வந்தாள்.
ஏற்கனவே பலமணிநேரம் போர் புரிந்தமையால் களைப்புற்றிருந்த சந்திராங்கதன் அவளது வலிமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடினான்.
அப்போது எதிர்பட்ட ஒரு தடாகத்தில் குதித்து தப்பிக்க முயன்றான்.
அந்த தடாகம் நாகதேவதைகளுக்கு சொந்தமான அவர்கள் தினசரி நீராடும் தடாகம். தங்கள் தடாகத்தில் அழகே உருவான ஒரு ஆண்மகன் வந்து விழுவதை கண்ட நாகதேவதைகள், அவனுடன் கூடிக் களிக்க விரும்பி அவனை தங்கள் நாகலோகத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள்.
நாகலோகத்தில் சந்திராங்கதனை பலவாறு உபசரித்தவர்கள் அவனுக்கு இன்சுவை பானங்கள், பழங்கள் முதலியவற்றை அளித்து உற்சாகமூட்டினார்கள்.
காமப் பித்து தலைக்கேறி தங்கள் இச்சைக்கு சந்திராங்கதன் உடன்படவேண்டும் என்று அவனிடம் அந்த தேவதைகள் கெஞ்சினார்கள். ஆனால், சந்திராங்கதானோ, “நான் ஏகபத்தினி விரதன். என் மனைவி இந்துமதியை தவிர வேறு மங்கையரை கனவிலும் தீண்டமாட்டேன்” என்றான்.
‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’ என்று நம்பிய நாகதேவதைகள், அவனை விடுவிக்காமல் தங்கள் உலகத்திலேயே பலவித கேளிக்கைகள், விருந்து உபசாரங்கள் ஏற்பாடு செய்து அவன் மனம் கோணாமல் அவனை கோபப்படுத்தாமல் அவனை கண்ணின் இமைபோல பார்த்துக்கொண்டனர்.
நாட்கள் சென்றதே தவிர சந்திராங்கதன் அவர்களது இச்சைக்கு உடன்படவில்லை.
இந்நிலையில், வேட்டையாட வந்த தங்கள் மன்னனை காணாமல் தவித்த வீரர்கள் அவன் தடாகத்தில் மூழ்கி இறந்திருக்கவேண்டும் என்று கருதி இந்துமதியிடம் அந்த செய்தியை தெரிவித்தனர்.
இந்துமதி அது கேட்டு துடிதுடித்து தரையில் வீழ்ந்து பலவாறு கணவனை நினைத்து அழுது புரண்டாள். அவளை ஒருவராலும் சமாதானப்படுத்த இயலவில்லை.
நாட்கள் பல சென்ற பின்னரும் செய்தி எதுவும் வராமல் போகவே கணவன் இறந்துவிட்டான் என்று கருதி பெண்ணுக்குரிய மங்கல சின்னங்களை அகற்றிய இந்துமதி கணவனை பிரிந்த துயரிலேய அவன் நினைவாகவே வாழ்ந்து வந்தாள்.
ஆண்டுகள் பல உருண்டோடின. ஒரு நாள் மாளவ நாட்டு அரண்மனைக்கு நாரத மகரிஷி வருகை புரிந்தார். அவரை வரவேற்று பாதபூஜை செய்து உபசரித்தாள் இந்துமதி.
அவளுடைய முகவாட்டத்தை கண்ட நாரத மகரிஷி நடந்த அனைத்தையும் தனது ஞான திருஷ்டியில் உணர்ந்துகொண்டார்.
“அம்மா இந்துமதி, உன் துயரம் முடிவுக்கு வந்தது. உன் கணவன் சந்திராங்கதன் இறக்கவில்லை. அவன் நாகலோகத்தில் நாகக்கன்னிகைகளால் சிறை வைக்கப்பட்டிருக்கிறான்” என்று தெரிவித்தார்.
உடனே பெரும் மகிழ்ச்சியடைந்து ஆனந்தக் கண்ணீர் வடித்த இந்துமதி, பூஜையறைக்கு ஓடிச்சென்று பூக்களை எடுத்து தலையில் சூடி திலகமும் இட்டுக்கொண்டாள்.
“சுவாமி… தங்கள் வாக்கை கேட்டு பட்டமரம் துளிர்த்தது போல உணர்ந்தேன். என் கணவரை மீட்கும் உபாயம் ஏதேனும் இருக்கிறதா?” என்று வினவினாள்.
நாரதர் புமுறுவல் செய்தபடி “நீ விநாயகப் பெருமானுக்குரிய சதுர்த்தி விரதத்தை முறைப்படி அனுஷ்டிப்பாயேயானால் உன் கணவன் உன்னிடம் திரும்ப வருவான். இதைத் தவிர வேறு மார்க்கமில்லை” என்றார்.
அந்த நிமிடமே தனது துயரம் அனைத்தும் முடிவுக்கு வந்ததை போல உணர்ந்த இந்துமதி, விநாயகர் சதுர்த்தி நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்து அந்த விரதத்தை பக்தியுடன் மிகவும் சிரத்தையாக அனுஷ்டித்தாள்.
இந்துமதியின் பக்தியை கண்டு ஆனைமுகத்து அண்ணல் மனம் கனிந்தது. இதையடுத்து நாகலோக கன்னிகளின் மனதில் மாற்றம் ஏற்பட்டது.
தாங்கள் எத்தனையோ விதத்தில் முயன்றும் சந்திராங்கதன் தன் மனதை மாற்றிக்கொள்ளாமல் தன் நிலையில் உறுதியாக நின்று எந்தவித சஞ்சலத்திற்கும் இடம் கொடுக்காமல் திகழ்ந்ததையடுத்து அவன் மேல் அவர்களுக்குள்ள இச்சை அகன்று மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது!
உடனே அவர்களுக்குள் ஆலோசித்து அவனை விடுவித்து அவனை ஒரு புரவியின் மீது ஏற்றி, பல வித உபசாரங்கள் செய்து மீண்டும் சந்திராங்கதனை அவனது நாட்டுக்கே அனுப்பிவைத்தனர்.
மரித்துப் போனதாக நம்பப்பட்ட தங்கள் அரசன், ஒரு குதிரையின் மீது முன்னைக் காட்டிலும் பொலிவுடன் வருவதைக் கண்ட அந்நாட்டு மக்கள் அவனை உற்சாகத்துடன் வரவேற்றார்கள். அமைச்சர்கள் மற்றும் படைத் தளபதிகள் அனைவரும் முன் நின்று வரவேற்று அவனை சகல மரியாதையுடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள்.
இருக்காதா பின்னே… இந்த புனர்ஜென்மம் விநாயகப் பெருமானின் கருணையினால் அல்லவா கிடைத்தது!
அங்கு சிம்மாசனத்தில் அமர்ந்த சந்திராங்கதன் நடந்த அனைத்தையும் தன் மனைவியிடம் கூறி இங்கு நடந்ததையும் கேட்டுத் தெரிந்துகொண்டான். அப்போது இந்துமதி, நாரத மகரிஷியின் ஆலோசனையின் பேரில் தாம் சதுர்த்தி விரதம் அனுஷ்டித்ததைக் கூறி அந்த விரதத்தின் மகிமையாலும் விநாயகப் பெருமானின் கருணையினாலுமே நீங்கள் மீண்டு வந்தீர்கள் என்றாள்.
அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த சந்திராங்கதன் தானும் விநாயகர் வழிபாட்டில் இருந்து விரதங்களை மனைவியோடு சேர்ந்து அனுஷ்டித்து வாழ்வாங்கு வாழ்ந்து பேரின்பம் எய்தினான்.
இழந்த அனைத்தையும் மீட்டுத் தரும் விநாயகர் வழிபாடும் சதுர்த்தி விரதமும் என்றால் மிகையகாது. சதுர்த்தி விரதத்தை ஒவ்வொரு மாதமும் அனுஷ்டிக்கலாம்.
இந்துமதியைப் போல, கணவனை விட்டு பிரிந்தவர்கள், கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்பவர்கள், மற்றும் தவறான தொடர்பினால் கூடாத சகவாசத்தால் கணவனை தொலைத்தவர்கள் போன்றோர் உடனடியாக சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்கத் துவங்குங்கள். வரும் விநாயகர் சதுர்த்தியை தவறவிடவேண்டாம்.
இது பற்றி விரிவான பதிவை விரைவில் அளிக்கிறோம்!
வாழ்க வளமுடன், நலமுடன், அறமுடன்!
ஆனைமுகன் துணை!
==========================================================
Also check ….
பூவிருந்தவல்லி மார்க்கெட் பிள்ளையார்!
தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும் வரும் துயர் யாவும் முன் நின்று தடுக்கும்!
தேடி வந்து அருள் செய்த ஆனைமுகன் – அதிதி தேவோ பவ – (4)
வாக்கு தரும் நல்வாழ்வு தரும் – பிள்ளையாருடன் துவங்கும் புத்தாண்டு!!
வாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்!
குன்றத்தூர் திருமுறை விநாயகரும் அவரது சிறப்பும்!
அருள் நிறைந்த ஒரு ஆண்டிற்கு அடித்தளமாய் அமைந்த ஆலய தரிசனங்கள்!
==========================================================
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
Also check :
மானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)
ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)
நெல்லுக்கு வேலியிட்ட நிமலன் – அதிதி தேவோ பவ – (3)
தேடி வந்து அருள் செய்த ஆனைமுகன் – அதிதி தேவோ பவ – (4)
==========================================================
வயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்!
பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE
புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !
மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!
==========================================================
Also check…
‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?
யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்?
பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE
புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !
மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!
இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது ?
==========================================================
[END]