இந்த பிள்ளையார் நமக்கு கிடைத்த கதை மிகவும் சுவாரஸ்யமானது.
சில வாரங்களுக்கு முன்னர் காஞ்சிபுரம் மாவட்டம் ‘சிவன்கூடல்’ என்னும் கிராமத்தில் உள்ள கோ-சாலை ஒன்றுக்கு செல்ல நேர்ந்தது. (அங்கே அருமையான பழம்பெரும் சிவாலயம் ஒன்று உள்ளது!). அங்குள்ள பசுக்களுக்கு பழங்கள் வாங்க பூவிருந்தவல்லி மார்கெட் அருகில் வண்டியை நிறுத்தி ஒரு பழக்கடைக்கு சென்று ஒரு தார் வாழைப் பழம் வாங்கினோம். அப்போது அங்கே ஒரு குட்டிப் பிள்ளையார் கோவில் இருந்தது.
நல்ல விஷயத்திற்கு போகும்போது ஆனைமுகனின் தரிசனம் கிடைக்கவே என்பதால் பிள்ளையாரை மனம்குளிர தரிசித்தோம். சன்னதியில் இருந்த குருக்கள் நமக்கு தீபாராதனை காட்டி, பிரசாதம் தந்தார். தட்டில் சிறு காணிக்கை போட்டுவிட்டு போய்விட்டோம்.
அடுத்தடுத்த நாட்களில் இரண்டு மூன்று முறை அந்த வழியே செல்லவேண்டியிருந்தது. நாம் செல்லவேண்டிய கோவில்களுக்கு பழங்களும் இன்ன பிற விஷயங்களும் வாங்க அந்த இடமே செட் ஆகிவிட்டபடியால் நாம் அங்கே இறங்கி அனைத்தையும் வாங்கவேண்டியிருந்தது. பழம் வாங்க அந்த பிள்ளையாரை தாண்டித் தான் போகவேண்டும். எனவே இந்த முறையும் பிள்ளையார் தரிசனம். இம்முறை குருக்கள் அவரே தேங்காய் உடைத்து நம் பெயருக்கு அர்ச்சனை செய்து பிரசாதம் தந்தார். (நாம் எதுவும் வாங்கிச் செல்லவில்லை).
நான்காம் முறை பெற்றோருடன் செல்ல நேர்ந்தது. அப்போது நாம் தேங்காய் பூ பழங்கள் கொடுத்து அர்ச்சனை செய்தோம்.
அப்ப்போது தான் குருக்களிடம் “பூஜை காணாத பிள்ளையார் கோவில் ஏதேனும் இருந்தால் சொல்லமுடியுமா? எங்கள் வறண்ட பிள்ளையார் கைங்கரியத்தில் சேர்க்க ஆசைப்படுகிறேன்” என்றோம்.
“இந்த கோவிலுக்கே பண்ணுங்க சார். இது வருமானம் இல்லாத கோவில். நான் தான் கைக்காசை போட்டு பண்ணிட்டிருக்கேன்” என்றார்.
அடுத்து அவர் சொன்னது தான் விஷமே.
“இது சாதாரண கோவில் இல்லே சார்.. பூவிருந்தவல்லியில் மிக பழமையான கோவில். இங்கே பெங்களூர் ரமணியம்மாள், வாரியார் ஸ்வாமிகள் இவங்கல்லாம் வந்து கச்சேரி பண்ணியிருக்காங்க. அந்தக் காலத்துல ரொம்ப பிரசித்தி பெற்ற கோவில் இது. மார்கெட் எல்லாம் ஹைவேஸ்ல எடுத்திட்டதுனால இப்போ கோவில் கொஞ்சம் உள்வாங்கினது போல இருக்கு. மத்தபடி இந்த பிள்ளையார் தான் இங்கே ரொம்ப ஃபேமஸ். இவருக்கு மார்கெட் பிள்ளையார்னே பேர்…” என்றார்.
வாவ்… வாரியார் சுவாமிகளும், பெங்களூர் ரமணியம்மாளும் கச்சேரி பண்ண கோவிலா? இதைவிட சிறப்பு வேறென்ன வேணும்?
“இந்த கோவிலுக்கு எதாச்சும் பண்ணுங்க… பிள்ளையார் சதுர்த்தி வருது… அதுக்கு கூட எதாச்சும் பண்ணலாம்” என்றார்.
“நிச்சயம் செய்யலாம் மாமா” என்றோம்.
அடுத்தடுத்து அவரை சந்தித்து பேசி, அனைத்தையும் இறுதி செய்தோம்.
நாளை காலை நம் தளம் சார்பாக பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் எதிரே உள்ள பிள்ளையார் கோவிலில் அபிஷேகமும் சிறப்பு வழிபாடும் நடைபெறும்.
இது நமது வறண்ட பிள்ளையார் கைங்கரியத்தில் மூன்றாவது பிள்ளையார்.
குன்றத்தூரில் அடிவாரத்தில் உள்ள திருமுறை விநாயகர், மற்றும் நாகேஸ்வரர் கோவில் குளத்திற்கு எதிர்புறம் உள்ள மடத்து மந்தார விநாயகர் என இரண்டு கோவில்களில் கைங்கரியம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த கோவிலில் இனி நம் தளம் சார்பாக தொடர்ந்து கைங்கரியம் நடைபெறும். நம் வாசகர் ஒருவரின் நேரடி பொறுப்பில் இந்த கோவில் விடப்படும்.
இதில் ஒரு விஷயம் கவனிக்கவேண்டும். பூஜை நடக்காத கோவில்கள் ஒரு ரகம். அதே நேரம் வருவாய் இல்லாமல் இருந்தும் இந்த மார்கெட் பிள்ளையார் கோவில் போல பூஜைகள் ரெகுலராக நடைபெற்று வருகிறது என்றால் அந்த பணி தொய்வடையாமல் பார்த்துக்கொள்வதும் ஒரு ரகம்.
வருவாய் குறையும்போது தான் அர்ச்சகர்கள் வேறு ஆலயங்களுக்கு சென்று விடுகிறார்கள். சம்பந்தப்பட்ட கோவில்களும் பூஜை புனஸ்காரங்கள் அபிஷேகங்கள் இன்றி போய்விடுகின்றன.
பூஜை காணாத கோவில்களை அடையாளம் கண்டு பூஜை அபிஷேகம் செய்விப்பது ஒரு வகை. ஏற்கனவே பூஜை நடைபெற்று வருவது நின்று போகாமல் அது மேலும் சிறப்பாக நடக்க உதவி புரிவது மற்றொரு வகை. நமது கைங்கரியத்தில் இரண்டுமே இருக்கும். இது தான் உண்மையான வழிபாடு தொண்டு என்று நாம் கருதுகிறோம்.
நாளை நடைபெறவிருக்கும் இந்த விநாயகர் வழிபாட்டில் கலந்துகொள்ள விரும்பும் வாசக அன்பர்கள் அவரவர் தாங்கள் விரும்பும் பொருட்களை நம்முடன் ஆலோசித்துவிட்டு வாங்கி வரலாம்.
நாம் சர்க்கரைப் பொங்கல் மற்றும் சுண்டல் பிரசாதமும் பசும்பால் மற்றும் பசுந்தயிரும் கொண்டு வருகிறோம்.
நாள் & நேரம் : ஜூன் 26 ஞாயிறு காலை 7.30 AM – 9.30 AM
இடம் : பூவிருந்தவல்லி மார்கெட் பிள்ளையார் கோவில் (செல்வா விநாயகர்) (பெருமாள் கோவில் குளம் நேர் எதிரே)
நடைபெறவுள்ள கைங்கரியம் : பிள்ளையாருக்கு அபிஷேகம், வஸ்திரம் சாத்துதல் மற்றும் பிரசாத விநியோகம்.
இந்த சிறப்பு வழிபாட்டின் போது நமது பிரார்த்தனை கிளப்புக்கு கோரிக்கை சமர்பித்துள்ள வாசகர்களின் பெயர்களிலும், நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பெயர்களிலும், அபிஷேகத்தில் நேரடியாக பங்கேற்போர் பெயர்களிலும் அர்ச்சனை நடைபெறும்.
(* இதே போல உங்கள் பகுதிகளில் பூஜை காணாத, வருவாய் இல்லாத பிள்ளையார் கோவில் இருந்தால் நமக்கு தெரியப்படுத்தவும். நாம் வந்து நேரில் பார்த்து ஆனைமுகன் அருளால் பூஜைக்கும் அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்ய ஆவண செய்கிறோம்.)
அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லை போம் போகாத் துயரும் போம் நல்ல
குணம் அதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கை தொழுதற்க்கால்
==========================================================
Also check ….
தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும் வரும் துயர் யாவும் முன் நின்று தடுக்கும்!
தேடி வந்து அருள் செய்த ஆனைமுகன் – அதிதி தேவோ பவ – (4)
வாக்கு தரும் நல்வாழ்வு தரும் – பிள்ளையாருடன் துவங்கும் புத்தாண்டு!!
வாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்!
குன்றத்தூர் திருமுறை விநாயகரும் அவரது சிறப்பும்!
அருள் நிறைந்த ஒரு ஆண்டிற்கு அடித்தளமாய் அமைந்த ஆலய தரிசனங்கள்!
==========================================================
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
Also check :
மானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)
ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2)
நெல்லுக்கு வேலியிட்ட நிமலன் – அதிதி தேவோ பவ – (3)
தேடி வந்து அருள் செய்த ஆனைமுகன் – அதிதி தேவோ பவ – (4)
==========================================================
வயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்!
பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE
புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !
மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!
==========================================================
Also check…
‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?
யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்?
பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE
புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !
மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!
இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது ?
==========================================================
[END]
ஓம் கம் கணபதயே நமஹ
மகத்தான கைங்கர்யம்
தொடரட்டும் நற்பணி
தங்கள் தொண்டு தொடர இறைவனை வேண்டுகிறோம் .
நன்றி.
கே
சிவசுப்பிரமணியன்