கண்கண்ட கடவுள் அதாவது ப்ரத்யக்ஷ தெய்வம் என்ற ஒன்று உண்டென்றால் அது சூரியன் தான். பிரபஞ்சத்தின் இயக்கத்தில் சூரியனின் பங்கு மகத்தானது. அதனால் தான் ஷண்மதங்களை ஆதிசங்கரர் ஸ்தாபித்தபோது சூரிய வழிபாட்டையும் அதில் வைத்தார்.
சப்த ரிஷிகளில் ஒருவர் ரிஷிகளில் தனித்தன்மை மிக்கவர் அகஸ்திய மகரிஷி. ‘வித்யா மண்டல ரிஷி’ என்றே அவருக்கு ஒரு சிறப்பு பெயர் உண்டு.
ஒருமுறை உலக நன்மைக்காகவும் அமைதிக்காகவும் அவர் அம்பாளை நோக்கி தவமியற்ற, அவரது தவத்துக்கு இரங்கி அவர் முன் தோன்றிய அன்னை, அவருக்கு உலகம் உய்யும் பொருட்டு ‘ஆதித்த ஹ்ருதயத்தை’ உபதேசித்தாள்.
மகத்தான ஒரு மணிமந்திரத்தை பெற்ற அகத்திய மகரிஷி, இதை தகுதி வாய்ந்த ஒருவர் மூலம் உலகிற்கு வழங்கினால் இந்த அகிலமே பயனடையும் என்று கருதினார். ஒரு விளக்கை குடத்தின் மீது வைப்பதற்கும் குன்றின் மீது வைப்பதற்கும் வித்தியாசம் உள்ளது தான்?
அவர் தேர்ந்தெடுத்த குன்று யார் தெரியுமா?
குணக் குன்றாக விளங்கிய மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி.
இராமனுக்கும் இராவணனுக்கும் நடைபெற்ற யுத்தம் நீண்டுகொண்டே சென்றது. பலவித மாய்மாலங்களை பின்பற்றி ஸ்ரீராமரையே திணறடித்து வந்தான் இராவணனன். ஸ்ரீராமருக்கே ஒரு கட்டத்தில் அவநம்பிக்கை துளிர்த்துவிட்டது.
இராவணனை வெல்லும் உபாயத்தை பற்றி ஸ்ரீராமர் ஒரு நாள் தீவிரமாக சிந்தித்துக்கொண்டிருந்தபோது, இது தான் சமயம் என்று ஸ்ரீராமன் முன்பு தோன்றிய அகஸ்திய மகரிஷி, “ராமா, இந்த கட்டத்தில் உனக்கு துணையாய் இருந்து உனது வெற்றியை உறுதிப் படுத்தும் ஒரு அற்புதமான கவசத்தை உனக்கு உபதேசிக்கிறேன். கேட்பாயா?” என்று கூற, “காத்திருக்கிறேன் குருவே. தங்கள் திருவாக்கிலிருந்து வெளிவரும் ஒவ்வொன்றும் புனிதமானது தான். கேட்க சித்தமாயிருக்கிறேன்….” என்றார்.
”ரகுகுல திலகா! லோக க்ஷேமத்திற்காக நித்திய ஜெயத்திற்காகவும் உனக்கு இப்போது ஆதித்திய ஹிருதயத்தை உபதேசிக்கிறேன். ரஹஸ்யமான இந்த உபதேசத்தை பெற்றவர்கள் எத்தகைய வலிமை படைத்த சத்ருவையும் ஜெயிக்க முடியும். நீ இந்த மந்த்ரோபதேசத்தினால் இராவணனைக் கொன்றுவிட்டால், இதன் காரணமாகவே, இந்த மந்திரம் மகிமை பெற்று விடும்”.
ஸ்ரீராமர் இரு கரம் கூப்பி கேட்டுக்கொண்டிருந்தார்.
அகஸ்தியர் தொடர்ந்தார்…. ”அன்னை உமையவள் எனக்கு உபதேசித்த இந்த ஆதித்ய ஹ்ருதயத்தை நான் உனக்கு அளிக்கிறேன். இந்த ராமாவதாரம் முழுக்க எத்தனையோ சந்தர்ப்பங்களில், நீ உன் அவதார மஹிமையை வெளிக்காட்டவில்லை. உனது தெய்வீக சக்தியையும் பிரயோகிக்கவில்லை. மனிதனாகவே வாழ்ந்து மானுடனுக்குரிய தர்மத்தை தவறாமல் அனுஷ்டித்து வருகிறாய். எனவே ஒரு மனுஷனாகவே இருந்து அரக்கர் தலைவன் இராவணனை சம்ஹாரம் செய்வது தான் உனக்குப் பெருமை. உன் மூலமாக இந்த ஆதித்ய ஹ்ருதயத்தை உலக மக்களுக்கு அளிக்கவே இப்போது இங்கே வந்தேன்.”
அகஸ்திய மகரிஷியின் வார்த்தைகளை கேட்டு இராமச்சந்திர மூர்த்தி பரவசத்தில் மூழ்கினார். அவரிடம் ஆதித்ய ஹ்ருதயத்தை உபதேசமாகப் பெற்றார். ஆதித்ய ஹ்ருதயத்தில் சூரிய நாராயணன் பல பெயர்களால் போற்றப்படுகிறார்.
”எப்போதும் சாந்தியை, ஒளியை உண்டு பண்ணுகிற பாஸ்கரனை: மழை, வெயில் இவற்றுக்கு காரண பூதனாக விளங்கும் ‘புவனேஸ்வரன்’ இரவின் இருளைப் போக்குகின்ற தேஜஸ்வீ, சகல லோகங்களையும் காத்தருள செய்யும் ரஸ்மி பாவனன், ஜகம் அனைத்துக்கும் மங்களங்களைத் தரும் சிவன். இந்திரனுக்கு மேலானவனாக மகேந்திரன்.
சூரியனை உபாசிப்பது, சூர்ய மண்டலத்தின் நடுவிலே அந்தர்யாமியாக விளங்கும் பரமேஸ்வரனை உபாசிப்பது. தம்முடைய இருதய தாமரையிலே வாஸ்து செய்யும் நித்ய வஸ்துவை வணங்குவது என்று ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்திற்கு ஸ்தூல, சூட்சும, காரணம் என்று மூவிதமான உபாசனைகள் கூறப்பட்டிருக்கிறது.
மகத்துவம் பொருந்திய ஆதித்ய ஹிருதயத்தை உபதேசமாகப் பெற்றதும் இராமனுடைய கவலைகள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல க்ஷணநேரத்தில் விலகிவிட்டது. யுத்தத்திலே வீர்யத்துடனும், பலத்துடனும் இராவணனை எதிர்த்து நின்று வென்றார் இராமபிரான்!
பரம்பொருளின் அவதாரமாகத் திகழ்ந்த ஸ்ரீராமனின் மூலமாக, பார்வதி தேவி அருளிய ‘ஆதித்ய ஹ்ருதயம்’ என்ற ஸ்தோத்திரத்தை, அகஸ்திய மஹரிஷி உலகுக்கு அளித்தார்.
ஆதித்ய ஹ்ருதயத்தை அனுதினமும் ஜபம் செய்பவர்களுக்கு சத்ருபயம் நீங்குவதாகவும் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்று அகஸ்தியரே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘ஆத்மானாம் மானுஷம் மன்யே’ என்று வால்மீகி கூறியபடி, மனுஷ நிலையிலே, இராமர் உபாஷகனாக இருந்தார்.
ராமாயணத்தில் முக்கியமான பாகமாக விளங்குவது ஆதித்ய ஹ்ருதயம். கல்பக விருக்ஷம் போலவும், காமதேனு போலவும் வேண்டுவதை வேண்டுபவர்க்கு அளிக்க வல்லது இந்த ஆதித்ய ஹ்ருதயம் என்பதை விடவும் வேறு மஹிமை வேண்டுமோ?
ஆதித்த ஹ்ருதயத்தை படித்துவிட்டு எந்தக் காரியத்தை துவக்கினாலும் அது ஜெயமாகும். தசாபுத்தி பலன்கள் சரியில்லாதவர்கள் ஆதித்த ஹ்ருதயத்தை தொடர்ந்து படித்து வந்தால் அவர்களின் பலன்கள் மேம்பட்டு நல்லது நடக்கும். ஜாதக அடிப்படையில் சூரியன் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது.
சூரிய பகவானின் அனுக்கிரகம் வேண்டுபவர்கள் தினசரி சிவாலயம் செல்ல வேண்டும், சூரிய நமஸ்காரமும் நல்ல பலன் தரும். தினசரி ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்கலாம். கோதுமையில் செய்த உணவுப்பண்டங்களை ஏழை எளியோருக்கு தானம் செய்வது நல்ல பலனை தரும். கோதுமை தவிட்டுடன் பழங்கள், கீரை சேர்த்து பசுவுக்கு கொடுக்கலாம்.
தினசரி சூரிய காயத்ரி மந்திரம் 108 முறை சொல்லி வரலாம். நவக்கிரக பரிகாரத் தலங்களில் நடுநாயகமாக விளங்கும் சூரியனார் கோயிலுக்கு சென்று வரலாம். நவதிருப்பதிகளில் திருநெல்வேலி அருகே உள்ள ஸ்ரீவைகுண்டம் சூரியனுக்குரிய பிரார்த்தனை தலமாகும்.
* கீழே தரப்பட்டுள்ள வீடியோவை ஜஸ்ட் ஒரு சில வினாடிகள் ஒலிக்கவிட்டு கேட்டுப்பாருங்கள். (ஆதித்த ஹ்ருதயம் இரண்டாவதாக இந்த வீடியோவில் உள்ளது.) என்ன ஒரு அருமையான பாசிட்டிவ் வைப்ரேஷன் தெரியுமா? கேட்டுப் பாருங்களேன்… உங்கள் கவலைகள் எல்லாம் பறந்து போனது போல இருக்கும்!
=========================================================
ஆதித்த ஹ்ருதயம் – தூய தமிழில் – To download the pdf please click the following link
http://rightmantra.com/wp-content/uploads/2016/06/Aditya-Hrudayam-in-Tamil.pdf
=========================================================
ஆதித்த ஹ்ருதயம் – யூ ட்யூப் – by சூலமங்கலம் சகோதரிகள்
=========================================================
Help us to sustain!
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
=========================================================
Also check :
முருகனை வசியம் செய்ய இந்த ‘பஞ்சாமிர்த வண்ணம்’ போதுமே!
பொன்மழையில் நனைந்த ஏழை பிரம்மச்சாரி – ஸ்ரீஸ்துதி புரிந்த மகிமை!
வழியாற் காண மெய்யாய் விளங்கும் கந்தசஷ்டி கவசம்!
அகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்!
தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!
பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!
செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!
சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!
‘ஹரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்’ – வரிகளின் பின்னே ஒரு உண்மை சம்பவம்!
மொதல்ல அவரை எழுப்பு… எழுப்புடா பழனியாண்டி!
துதிக்காதவரையும் தடுத்தாட்கொள்ளும் தண்டாயுதபாணி!
கந்தரந்தாதியைப் பாராதே, கழுக்குன்றத்து மலையை நினையாதே!
நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!
அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் !
மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!
களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!
கருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் ? தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2
முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!
=======================================================
தேடும் செல்வம் ஓடிவிடும்; தெய்வம் விட்டுப் போவதில்லை! – யாமிருக்க பயமேன் ? (10)
தேர்வை புறக்கணித்த சிறுவன் சேதுராமன் அருட்கவி ஸாதுராம் ஆன கதை – யாமிருக்க பயமேன் ? (9)
நம் வாசகியின் மகனுக்கு வேல்மாறலால் கிடைத்த வேலை! – யாமிருக்க பயமேன் ? (Part 8)
‘வேல்மாறல் எனும் வரப்பிரசாதம்’ – உண்மை சம்பவம் – (Part 7)
‘வேல்மாறல்’ யந்திர தரிசனம் — யாமிருக்க பயமேன்? (Part 6)
நம் வாசகர் வீட்டில் ‘வேல்மாறல்’ செய்த அதிசயம் — யாமிருக்க பயமேன்? (Part 5)
கைமேல் பலனைத் தந்த ‘வேல்மாறல்’ பாராயணம் — யாமிருக்க பயமேன்? (Part 4)
இழந்த வாழ்க்கையை மீட்டுத் தந்த ‘வேல்மாறல்’ — யாமிருக்க பயமேன்? (Part 3)
வினைகளை தகர்க்கும் ‘வேல்மாறல்’ எனும் மஹாமந்த்ரம் — யாமிருக்க பயமேன்? (Part 2)
வேல் தீர்க்காத வினை உண்டா? உண்மை சம்பவம்! — யாமிருக்க பயமேன்? (Part 1)
=======================================================
[END]
மிக அருமையான பதிவு சுந்தர் ஜி!!
ஒரு சிறிய சந்தேகம்….
ஆதித்ய ஹிருதயம் சம்ஸ்கிருதத்தில் படித்தால் மட்டுமே முழு பயன் கிடைக்குமா?
உங்களால் சமஸ்கிருதத்தை சரியாக படிக்க முடிந்தால், இந்த வீடியோவை ஓடவிட்டு கூடவே படித்து பழகவும். மிகவும் சிரம்மப்பட்டால் தமிழ் வரிகளை படிக்கவும். எது பலன் தரும் என்பது இங்கே விஷயம் அல்ல. யாருக்கு எது சுலபமாக இருக்கும் என்பதே விஷயம்.
ஸ்லோகத்தை படிக்க பிரிண்ட் எடுக்க முடியவில்லையே ?
இல்லையே. வருகிறதே. மீண்டும் செக் செய்யவும்.
மிக்க நன்றி சுந்தர் !!!.. என் போன்றோருக்கு இந்த ஸ்லோகம் கண்டிப்பா உதவும் என்ற நம்பிக்கை உள்ளது.