மகா பெரியவா முக்காலமும் உணர்ந்த ஞானி மட்டுமல்ல… நமக்கு எது நல்லதோ அதை தர வல்லவர். இவர் ஏன் இதை சொல்கிறார் என்று யோசித்து பிற்பாடு அதில் ஒளிந்திருக்கும் சூட்சுமத்தை உணர்ந்து மெய்சிலிர்த்தவர்கள் பலருண்டு. அப்படி சிலிர்த்த செகந்தராபாத்தை சேர்ந்த ராமஸ்வாமி என்கிற பக்தர் விவரிக்கும் சம்பவம் இது…
பெயர் பொருத்தம் பார்த்து பெரியவா செய்து வைத்த கல்யாணம்!
கர்நாடகத்தில் பெல்காம் அருகில் மகா சுவாமிகள் தங்கியிருந்த சமயம். நான் என் குடும்பத்தாருடன் தரிசனத்திற்கு சென்றிருந்தேன். பெரியவாளை என் தந்தை நமஸ்கரித்தபோது, ”இவர் ஹூப்ளி ராமஸ்வாமியின் தகப்பனார்” என்று அணுக்கத்தொண்டர் தெரியப்படுத்தினார். (நான் அப்போது ஹூப்ளி ரயில்வே டிவிஷனில் அதிகாரியாக பணியாற்றிக்கொண்டிருந்ததால் ‘ஹூப்ளி ராமஸ்வாமி’ என்று பணியாளர்கள் பட்டம் சூட்டியிருந்தார்கள்!)
ஒரு முறை தரிசனத்துக்காக இரண்டு மணிநேரம் காத்துக் கிடந்தேன். தரிசனம் கிடைக்கவில்லை. இனிமேலும் தாமதித்தால் என்னுடைய அலுவலக வேலைகள் (நான் இன்ஸ்பெக்சன் செய்வதற்காக அருகிலிருந்த ஜங்க்ஷனுக்கு வந்திருந்தேன்.) தடைபட்டுவிடும் என்பதால் தொலைவிலிருந்தே ஒரு கும்பிடு போட்டுவிட்டு, என் அலுவலைப் பார்க்கச் சென்றுவிட்டேன். இரண்டு மணி நேரம் கழித்து ஸ்ரீமடத்து சிப்பந்தி ஒருவர் ரயில்வே நிலையத்திற்கு வந்து, பெரியவாள் அழைத்துக்கொண்டு வரும்படி சொல்லியனுப்பியதாகச் சொன்னார்.
”பெரியவா சொன்னதை அப்படியே சொல்லுங்கோ”.
“சதாரா ஸ்டேஷன்லே போய்ப்பார். இன்ஸ்பெக்சன் பண்ணிண்டு இருப்பான் அந்த ராமஸ்வாமி. வரச்சொல்லு” என்றார்கள்.
பரபரப்புடன் வேலையை முடித்துக்கொண்டு தரிசனத்திற்குச் சென்றேன். மன்னிப்புக் கோரும் விதமாக, ”பெரியவா ரொம்ப பிசியாக இருந்தீர்கள். நான் ஆபீஸ் வேலையை முழுமையாக முடிக்காமல் ஹெட் குவார்ட்டர்ஸ் போக முடியாது. என்னுடைய மேலதிகாரி சத்தம் போடுவார்…” என்று ஆரம்பித்தேன்.
பெரியவா என் பதிலை சட்டை செய்ததாகவே தெரியவில்லை! பட்டென்று, ”உனக்கு என்ன வேணும்?” என்றார்கள்.
அப்போது என் மனதில் ஒரே பிரச்சனைதான் இருந்தது. என் மகள் கல்யாணம்.
”என் பெண்ணுக்கு நல்ல இடத்திலே கல்யாணம் ஆகணும். அப்பா ரொம்ப தொந்தரவு பண்றார். அவர்களும் பல பேர்களுக்கு ஜாதகம் அனுப்பி, வரன் ஜாதகம் கேட்கிறார். ரொம்பப் பேர் பதில் போடுவதேயில்லை. வந்த ஜாதகங்கள் பொருத்தமாக இல்லை…”
”அவ்வளவு தானே?… சரி போ. உன் பெண் கல்யாணத்தை நான் நடத்தி வைக்கிறேன்…”
இந்தத் தெளிவான பதில் என்னை அதிர்ந்து போகச் செய்தது.
”நான் நடத்தி வைக்கிறேன்…” என் மேல் பனிமழை பொழிந்தாற் போல் இருந்தது. எதிர்பாராத இன்பத் தாக்குதலை அனுபவித்தவர்களுக்கு தான் என் நிலைமையை புரிந்து கொள்ளமுடியும். உடனே சற்றும் யோசிக்காமல் மகா பாமரத்தனமாக ”சத்தியமாகச் சொல்றேளா?” என்று கேட்டு விட்டேன்.
சத்திய ஸ்வரூபத்திடம் இப்படி ஒரு கேள்வி! (இப்போது நினைத்தாலும் என் உடம்பு நடுங்குகிறது.) கருணை வள்ளல் மெல்லச் சிரித்தது. அவ்வளவே. இந்த நிகழ்ச்சி அப்போது என் மனதில் ஆழமாகப் பதியவேயில்லை. நான் ஊருக்குப் போய் என் வேலையில் மூழ்கி விட்டேன்.
இரண்டு மாதத்துக்கு பிறகு, மும்பையிலிருந்து ஒரு கடிதம் வந்தது. என் அப்பா எப்பவோ எழுதிய கடிதத்துக்கு பதில். வரன் ஜாதகத்துடன். ஜாதகங்கள் பொருந்தியிருந்தன. மற்ற நடைமுறைகள் நடந்து கல்யாணமும் நடந்து விட்டது. இரண்டு வருஷங்களுக்கு மேல் இடைவெளி.
கர்னூலில் ஸ்ரீ மடம் முகாம்.
நான், என் பெண், அவள் குழந்தை – பெரியவா தரிசனத்துக்குச் சென்றோம். பெரியவா காலடியில், அருட்பார்வையில் குழந்தையைப் போட்டுவிட்டு, பெரியவாளின் விசாரணைக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தோம். (குழந்தை அதற்குள், அப்படியே தூங்கி விட்டது.) பெரியவா பிரசாதம் கொடுத்ததும் நான், என் பெண்ணுடன் புறப்பட்டு நாலைந்து தப்படி வைத்து விட்டேன்.
பெரியவா விரலைச் சொடுக்கிக் கூப்பிட்ட மாதிரி இருந்தது. திரும்பினோம்.
”இந்தக் கொழந்தையை மடத்திலே வெச்சிண்டு நான் எப்படி சம்ரட்சிக்கிறது? எடுத்துண்டு போ!”
எங்களுக்கு மகா வெட்கம். பெரியவா தரிசன பேரானந்தத்தில் குழந்தையை மறந்து விட்டோம். என் பெண் ஓடிச் சென்று குழந்தையை எடுத்துக் கொண்டாள். அப்போது அருகிலிருந்த ஸ்ரீ கண்டன் என்ற தொண்டரிடம், ”ராமஸ்வாமிக்கு திருப்தியான்னு கேளு” என்றார்கள்.
எனக்கு புரியவில்லை. இப்போது இப்படி ஒரு கேள்வி எதற்கு? நாங்கள் சந்தோஷமாகத்தானே புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம்? பதில் சொல்ல முடியவில்லை.
”அவன் பெண்ணோட பேரென்னன்னு கேளு”
”உமா” என்றேன்.
”மாப்பிள்ளை பேரு?”
”சதாசிவன்…”
”சரிதானே என்னைக் குத்தம்சொல்லக்கூடாது? பெயர் பொருத்தம் பார்த்துத்தான் கல்யாணம் செய்து வெச்சிருக்கிறேன்!”
என் கண்களில் பொலபொலவென்று நீர் வழிந்தது. இப்படியும் ஒரு சக்தியா? இப்படி ஓர் அனுக்கிரகமா? கோடி ஜன்ம புண்ணியம் இப்படித்தான் ஒன்றுதிரண்டு வரும் போலிருக்கிறது.
==========================================================
Also check : நம்முடைய மதிப்பை உயர்த்துவது எது? – பெரியவா சொன்ன பால் கதை!
தீமைக்கு நம் எதிர்வினை எப்படி இருக்கவேண்டும்? மகா பெரியவா காட்டும் வழி!
அற்புதமான வாழ்க்கை வேண்டுமா? அரியத்துறைக்கு வாங்க!
==========================================================
Transfer all your burdens to Periyava
1985. ஸ்ரீ காஞ்சிமடம். நமஸ்காரம் செய்துவிட்டு எழுந்தேன்.
”யாரு?…ஹூப்ளி ராமசாமியா?… எங்கேருந்து வரே?… மதராஸ்லேயிருந்து தானே?…”
”விஜயவாடாவிலிருந்து வரேன். இப்போ அங்கேதான் வேலை…”
“இல்லையே … மதராஸிலிருந்துதானே?”
”நான் முதலில் கூறியது, பெரியவாளின் திருசெவிகளில் விழவில்லை போலும் என்று எண்ணிக்கொண்டு, சற்று உரத்த குரலில், ”விஜயவாடாவிலிருந்து… மதராஸ் வழியாகத் தானே வரணும்…” என்றேன்.
பெரியவா ”இல்லே… நீ மதராஸில் இருந்துதான் வந்திருக்கே.”
பின்னரும் பெரியவாளிடம் வாதாட விரும்பாமல் பிரசாதம் பெற்றுக்கொண்டு சென்னைக்கு வந்தேன். அங்கே கொஞ்சம் சொந்த வேலை இருந்தது. செகந்தராப்பாத்திலுள்ள என் மேலதிகாரிக்கு போன் செய்து ஒருவாரம் லீவு கேட்டேன். அவர் சொன்னார்.
“Ramaswami! Here is a Bombshell… you are transferred to Madras!…”
”சார், நான் மெட்ராஸுக்கு மாற்றல் கேட்கவில்லை. செகந்தராபாத்துக்கு தான் கேட்டிருந்தேன்…”
“Sorry! you are to be relieved tomorrow. Go to Vijayawada immediately and get relieved tomorrow.”
அப்படியே செய்தேன்.
என்னுடைய சென்னை மாற்றல் உத்தரவின் ஒரு பிரதி எனக்குக் கிடைப்பதற்கு முன்னதாகவே பெரியவாள் கைக்குப் போயிருக்குமோ? ‘இல்லே, நீ மதராஸில் இருந்துதான் வந்திருக்கே!… என்று பெரியவா சொன்ன அந்த நிமிடத்தில், நான் சென்னை அதிகாரியாகத்தான் இருந்திருக்கிறேன். நாம் செய்யக்கூடியது ஒன்றே ஒன்றுதான். கவலையே படாமல், எல்லாச் சுமைகளையும் பெரியவாளிடம் transfer செய்து விடுவதுதான்!
– என். ராமஸ்வாமி, செகந்தராபாத் | எஸ்.கோதண்ட ராம சர்மா | மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்
==========================================================
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர்ந்திட உதவிடுங்கள்…!
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
Also check our earlier articles on Maha Periyava
”வா சங்கரா, இப்படி வந்து உட்கார்” – திருவாய் மலர்ந்த தெய்வம்!
தன் புண்ணியத்தை ஈந்து நம் பாவத்தை கரைக்கும் கருணைக்கடல்!
சேற்றுக்குள் மறைந்திருந்த ஸ்ரீ அனந்த பத்மநாப ஈஸ்வரர்! விசேஷ புகைப்படங்கள்!!
பெரியவா மீட்ட பரமேஸ்வரனும் பரந்தாமனும் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு
திகிலூட்டிய மழை வெள்ளம் – கைகொடுத்த ‘கோளறு பதிகம்’!
ஏமாற நாங்களில்லை என் பெரியவாளே – மஹா பெரியவா லீலாம்ருதம்!
மானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)
அபலையின் கண்ணீரை துடைத்த ஆபத்பாந்தவன்!
நவராத்திரி & கொலு – ஏழ்மையில் வாடிய குடும்பத்தில் பெரியவா போட்ட ‘ஆனந்த’ குண்டுகள்!
நடமாடும் தெய்வத்தின் மாசற்ற மகிமை!
குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….
http://rightmantra.com/?cat=126
==========================================================
Don’t miss Maha Periyava’s miracle @ Kanchi Lingappan street
சேற்றுக்குள் மறைந்திருந்த ஸ்ரீ அனந்த பத்மநாப ஈஸ்வரர்! விசேஷ புகைப்படங்கள்!!
பெரியவா மீட்ட பரமேஸ்வரனும் பரந்தாமனும் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு
==========================================================
Also check our earlier articles on Ramana Maharishi
ஒன்றுக்கும் உதவாதது அனைவரும் மெச்சும்படி உயர்ந்தது எப்படி?
“நான் யாருக்கும் நமஸ்காரம் பண்ணமாட்டேன். என்னை கட்டாயப்படுத்தக்கூடாது”
ரமணர் ஏன் ஆஸ்ரம கோ-சாலையை பெரிதாக கட்டச் செய்தார்?
ரமணர் விளக்கிய கிரி பிரதட்சண மாண்பு!
ரமணர் ஏன் ஆஸ்ரம கோ-சாலையை பெரிதாக கட்டச் செய்தார்?
அன்னபூரணிக்கு முதல் நைவேத்தியம்!
காக்கா குருவிக்கு ஏது ஓய் உக்கிராணம்?
ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…
எந்த கண்களில் பார்வை இருக்கிறது? எதில் இல்லை?
பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!
ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!
பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!
==========================================================
[END]