யாத்திரை போகும் வழியில் ஆங்காங்கு கேம்ப் செய்வார். சில சமயம் ஓரிரு நாட்கள் அங்கேயே தங்கிவிடுவதுண்டு. அந்த பகுதி மக்களுக்கு ஜாக்பாட் தான்.
“சாமி என் ஆடு காணாமப்போச்சு… அண்டா காணாமப்போச்சு”, “என் பையனுக்கு படிப்பு ஏறலை”, “என் மருமவ என் பேச்சை கேட்கமாட்டேங்குறா” போன்ற புகார்கள் எல்லாம் சுவாமிகளிடம் வரும்.
சிரித்தபடி அனைவருக்கும் அருளாசி வழங்கி தீர்த்தம் கொடுப்பார். கிராம தேவதைக்கு முறைப்படி வழிபாடு நடக்கிறதா என்றெல்லாம் கேட்டு தெரிந்துகொள்வார். இல்லையென்றால் செய்யச் சொல்வார்.
அப்படியொருமுறை விஜயவாடா யாத்திரை போய்விட்டு திரும்புகையில் தமிழகத்தின் எல்லைக்குள் பொன்னேரியை அவரது யாத்திரைக்குழு நெருங்கும் வேளையில், இருள்சூழ்ந்துவிட அங்கேயே ஒரு கிராமத்தில் இரவு ஹால்ட் (இன்றைய கவரப்பேட்டை).
மடத்து சிப்பந்திகளிடம் இங்கே “இங்கே அருகே ஒரு சிவத்தலம் இருக்கிறது. ஒரு மகரிஷி தவம் இயற்றிய புனித பூமி அது. அருகே கங்கைக்கு நிகரான இடம் உண்டு. அங்கு ஸ்நானம் செய்தால் கங்கையில் ஸ்நானம் செய்தது போல. நான் காலை அங்கு போகவேண்டும்” என்றார் திடீரென்று.
அதிகாலை 4.00 மணிக்கு பெரியவா எழுந்துவிட, யாத்திரை குழு மீண்டும் நடக்கத் துவங்கியது. போக வேண்டிய இடத்தை தாண்டி ஒரு கி.மீ. சென்றுவிட்டனர் குழுவினர்.
திடீரென்று ஏதோ உள்ளுணர்வு உந்த யாத்திரைக்கு குழுவினரிடம் திரும்பி, “நான் என்ன சொன்னேன் நீங்க பாட்டுக்கு தாண்டி வந்துட்டேளே” என்று சொல்லி மேனாவிலிருந்து இறங்கி வந்த வழியே நடந்தார்.
பதறியடித்துக்கொண்டு அனைவரும் பின்தொடர்ந்தனர். அதற்குள் சைக்கிளில் இருவர் குறிப்பிட்ட கிராமத்திற்கு தகவல் சொல்ல விரைந்தனர்.
அதிகாலை 4.00 மணிக்கு சண்முக குருக்கள் வீட்டு கதவு தட்டப்பட்டது.
“காஞ்சி மஹா பெரியவா நம்ம கோவிலுக்கு வந்துக்கிட்டுருக்கார்”
அவ்வார்த்தையை கேட்டது தான் தாமதம், அரைகுறை தூக்கத்திலிருந்து ஒட்டுமொத்த குடும்பமும் விழித்துக்கொண்டது. சுமார் பத்து பதினைந்து வீடுகள் இருந்த அந்த கிராமமே பரபரப்படைந்தது.
சண்முக குருக்கள், அவரது அண்ணா கங்காதர குருக்கள் என அனைவரும் உடனே ஸ்நானம் செயது பெரியவாளை பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்க தயாராகிவிட்டனர்.
பெரியவா வந்தவுடன் நேரே சென்று கங்கை போகும் அந்த குறிப்பிட்ட இடத்தில் நீராடிவிட்டு நித்யகர்மானுஷ்டங்களை முடித்துவிட்டு கோவிலுக்கு எழுந்தருளிவிட்டார்கள்.
நேரம் அப்போது 5.00 ஐ நெருங்கிவிட்டது. அந்த அதிகாலை வேளையில் அந்த சிறு கிராமத்தில் பெரியவா வரும் விஷயம் எப்படியோ கசிந்து சுமார் 50 பேருக்கு மேல் கூடிவிட்டனர்.
பூர்ண கும்ப மரியாதையை ஏற்றுக்கொண்டவர் கங்காதர குருக்களை பார்த்து “அடடே… உங்க மாமா அம்பாள் உபாசகர் தானே…” என்றார்.
“நம் மாமா அம்பாள் உபாசகர் என்பது இவருக்கு எப்படி தெரியும்?” என்று ஆச்சரியப்படுவதற்கு முன்னர், அடுத்த கேள்வி… “உனக்கு நாளும் பெண் குழந்தைகள் தானே?”
“அட ஆமாம்.. இது வரை நானோ என் குடும்பத்தினரோ பெரியவாளை பார்த்ததில்லையே… அப்படியிருக்க நம்மாத்து குழந்தைகள் அத்தனையும் பெண்டுகள்ன்னு இவருக்கு எப்படி தெரியும்?”
பிரம்மாவின் தலையெழுத்து பெரியவாளுக்கு மட்டும் தெரியுமோ என்னவோ…
அடுத்த அரைமணிநேரத்திற்குள் அந்த பரப்பிரம்மம் சுவாமியையும் அம்பாளையும் தரிசித்துவிட்டு அனைவரையும் ஆசீர்வதித்துவிட்டு மீண்டும் தன் பயணத்தை துவங்கியது.
மஹா பெரியவா சென்ற அந்த கோவில் : அருள்மிகு மரகதவல்லி சமேத ஸ்ரீவரமூர்த்தீஸ்வரர், அரியத்துறை.
**********************************************
ஆலயம் தொழுவது சாலவும் நன்று! அரியத்துறை செல்வது அதனினும் நன்று!!
ஆலயம் தொழுவது சாலவும் நன்று. ஒவ்வொருவரும் வாரத்திற்கு இரண்டு முறை அவசியம் ஆலயம் செல்லவேண்டும். இல்லை என்றால் ஒரு முறையேனும் செல்லவேண்டும்.
மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும்
அண்ணலார்அடியார் தமை அமுது செய்வித்தல்
கண்ணினால்அவர் நல்விழாப் பொலிவுகண்டு ஆர்தல்
உண்மையாம் எனில் உலகர் முன் வருக என வுரைப்பார்
என்று சேக்கிழார் குறிப்பிடுவதை போல ஆலய தரிசனம், திருக்கோவில் உற்சவங்களை பார்ப்பது தான் இந்த பிறவியின் பயன்.
சென்னையை சுற்றிலும் எத்தனையோ அற்புதமான சிவாலயங்கள், திவ்யதேசங்கள் இருக்கின்றன. சென்னை நகரில் மட்டுமே சுமார் ஆறு பாடல் பெற்ற தலங்கள் உள்ளன. (திருவொற்றியூர், திருவலிதாயம், திருமுல்லைவாயல், திருமயிலை, திருவான்மியூர், திருவேற்காடு.) சற்று வெளிப்புறம் உள்ள தலங்களை கணக்கிட்டால் இன்னும் கூட வரும்.
இங்கெல்லாம் அவசியம் அடிக்கடி செல்லவேண்டும். ஒரே தலத்துக்கு திரும்ப திரும்ப செல்வதைவிட புதுப் புது தலங்களுக்கு செல்வது மிகவும் சிறந்தது. காரணம் ஒவ்வொரு தலத்திற்கும் ஒரு மகத்துவம் உண்டு. அந்த அருளை நம்மால் ஈர்க்க முடியும்.
எது வீண் போனாலும் சிவாலய தரிசனம் மட்டும் வீண் போகவே போகாது. நிச்சயம் கைகொடுக்கும். கர்மாவை குறைக்கும். ஆலய தரிசனத்தை வழக்கப்படுத்திக்கொண்டு, அதை ஒரு பெருமிதமாக கருதத் துவங்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள். சொத்து சுகங்கள் வாங்குவதோ கார் பங்களா ஃபர்னீச்சர்கள் வாங்குவதோ பெருமையல்ல. பாடல்பெற்ற தலங்களுக்கு செல்வதும் திவ்ய தேசங்களை தரிசிப்பதும் தான் பெருமைக்குரிய விஷயம். (சிலருக்கு இதெல்லாம் இப்போது புரியாது!)
==========================================================
இந்தப் பதிவுகளை காணத் தவறாதீர்கள்…
பரிகாரத் தலங்கள் என்பவை உண்மையா? MUST READ
சாபம் என்றால் என்ன, தோஷம் என்றால் என்ன?
பூம்பாவை அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடம் இப்போது எங்கே உள்ளது தெரியுமா?
==========================================================
அரியத்துறை வரமூர்த்தீஸ்வரர்
சென்னையில் பாடல் பெற்ற தலங்களை தவிர வேறு சில மகத்துவம் பொருந்திய தலங்களும் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் அரியத்துறை வரமூர்த்தீஸ்வரர். அனைவரும் அவசியம் தரிசிக்கவேண்டிய தலம். சில வாரங்களுக்கு முன்னர் வரமூர்த்தீஸ்வரரையும் அன்னை மரகதவல்லியையும் நமது தளத்தின் ஆலய தரிசனத்திற்காக தரிசிக்க சென்றிருந்தோம். நம்முடன் நண்பர் முத்துக்குமார் வந்திருந்தார்.
ஆலய குருக்கள் திரு.சரவண குருக்களிடம் நீண்ட நேரம் அளவளாவிவிட்டு வந்தோம். (அப்போது அவர் சொன்னது தான் மேற்படி மஹா பெரியவா பற்றிய தகவல்). இந்தக் கோவிலை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை சொன்னார் சரவண குருக்கள்.
உரோமசர் என்ற முனிவர் அகத்திய முனிவரின் சிஷ்யர். இவர் பிரம்மாவிடம், சிவன், பார்வதி தரிசனம் செய்ய சிறந்த தலம் கேட்டார். பிரம்மாவும் முனிவரின் வேண்டுதலுக்கு இணங்கி கையிலிருந்த தர்ப்பையை சக்கரமாக உருவாக்கி வீசியெறிந்தார். சக்கரம் சுழன்று கொண்டே வீழ்ந்த இடம் பிரம்மாரண்யம் நதிக்கரை (ஆரணி ஆறு) அரியத்துறை.
உரோமச முனிவர் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவனை நோக்கி தவம் செய்து நூற்றாண்டு காலமாக தொடர்ந்தார். தவத்தின் முடிவில் பார்வதி பரமேஸ்வரன் காட்சி தந்து வேண்டிய வரங்களை தந்து மகிழ்வித்த இடமே அரியத்துறை என்ற அரியதலம். அருள்மிகு மரகதவல்லி சமேத வரமூர்த்தீஸ்வரர் திருக்கோயில்.
சதி அனுசூயா – அத்திரி முனிவரின் புதல்வர் முகுந்த முனிவர். தென்னகத்திலுள்ள சிவ ஆலயங்களை தரிசனம் செய்துகொண்டு அரியத்துறை வந்தார். முகுந்த முனிவரை, உரோமசமுனிவர் வரவேற்றார். சிவதரிசனம் செய்ய காசிக்கு செல்வதாக முனிவரிடம் கூறினார். முகுந்த முனிவரே சிவனைக் காண காசிக்கு செல்ல வேண்டாம். காசியை விட புனிதமானது இந்த க்ஷேத்திரம். அரியத்துறை. இந்த ஆரணி ஆற்றில் நீராடி அருள்மிகு மரகதவல்லி சமேத வரமூர்த்தீஸ்வரரை தரிசித்தாலே காசிக்கு சென்ற புண்ணியம் கிடைக்கும்.
உரோமச முனிவர் சொன்னபடியே ஆரணி ஆற்றில் நீராடி அருள்மிகு வரமூர்த்தீஸ்வரரை வணங்கினார் முகுந்த முனிவர். உடனே காசியின் காவல் தெய்வமான கால பைரவர் ரூபத்தில் சிவபெருமான் காட்சி தந்தார். சிவனின் தலையிலிருந்து கங்கை நீர் சொட்டிய இடமே அரியத்துறை என்ற பெயர் பெற்றது. இக்கோவில் பக்கத்தில் ஆரணி ஆற்றின் கரையில் ஊற்றாக சுரந்து வருகிறது.
இந்த ஊற்றாக சுரந்து கோடைக் காலத்திலும், ஆரணி ஆறு வற்றினாலும், நீர் ஊற்றெடுப்பது அதிசயத்தக்க புனித கங்கை நீராக உள்ளது.
இந்த இடம் ரொம்ப சாதரணமாகத் தான் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அறநிலையத் துறை சார்பாக சுமார் நான்கு லட்சம் ஒதுக்கப்பட்டு ஒரு மண்டபம் போல கட்டப்பட்டுள்ளது. (பணிகள் இன்னும் நிறைவடையவில்லை.) புகைப்படத்தில் காண்க.
இந்திரனுக்கும், விருத்திராசுரனுக்கும் நீண்ட நாளாக யுத்தம் நடந்து முடிவில், இந்திரன் விருத்திராசுரனைக் கொன்று உடலைத் தூக்கி வீசி எறிந்தார். அவ்வுடல் கடும் தவம் புரிந்துக் கொண்டிருந்த அகத்திய முனிவரின் தலைமீது வீழ்ந்ததால் முனிவரின் தவம் கலைந்ததால் கோபத்தில் அகத்திய மாமுனிவர் இந்திரனை ”பிரம்மஹத்தி தோஷம் பிடி” என்று சாபம் கொடுத்தார். தன் தவறை உணர்ந்து இந்திரன் முனிவரின் காலில் வீழ்ந்தார். முனிவர், மனமிரங்கி அரியத்துறை சிறப்புகள் வாய்ந்த கோவிலில் ஒரு பழமை வாய்ந்த அரசமரம் உள்ளது.
இந்த அரசமரத்தில் கிருஷ்ண பரமாத்மா இருப்பதாக நம்பப்படுகிறது. பாரிஜாத மரத்துக்காக கிருஷ்ணரின் இரு மனைவிகள் சண்டை போடவே தலா ஆறுமாதம் பாரிஜாத மரத்தை வைத்துக்கொள்ள கிருஷ்ணர் கூறிவிட்டார். பாரிஜாத மலர் அடிக்கடி இடம் மாறுவதால் மரம் கோபங்கொண்டு கிருஷ்ணனை ஆயிரம் ஆண்டுகள் அரச மரமாக இருக்க சாபம் கொடுத்தது. கிருஷ்ணனும் அரியத்துறையில் அரசமரமாக இருப்பதாக நம்பப்படுகிறது.
முன்னோர்கள் செய்த பாவத்தால் ஒரு குரங்கு இப்பகுதியில் (அரியத்துறை) பிறந்து படாத பாடுபட்டது. ஒருநாள் வேட்டைக்காரன் குரங்கை துரத்த அந்த குரங்கு அந்த அரசமரத்தை சுற்றிய பின் தாகத்துக்காக தவித்து நீர் சுனையாக சுரக்கும். கங்கை நீர் ஆரணி ஆற்றில் மூழ்கிவிட்டு ஈசன் முன் விழுந்து வணங்கியது. மறு ஜென்மத்தில் குரங்கு காஞ்சிபுரத்து மன்னனாக பிறந்தது. பூர்வஜென்ம ஞாபகம் வந்து இந்த கோவிலுக்கு வந்து கற்கோவிலாக எழுப்பியதாக ஆலய வரலாறு கூறுகிறது.
திருவொற்றியூரை ஆண்ட சித்திரசேன மகாராஜா ஒருநாள் வேட்டையாடக் காட்டுக்குச் சென்றார். அங்கே ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்டு, பின் தொடர்ந்து பார்த்தபோது பெண் குழந்தை தரையில் கிடந்தது. தனக்கு குழந்தை இல்லாதக் குறைதீர்க்க இறைவன் தந்த குழந்தைக்கு, மரகதவல்லி என பெயர் சூட்டி வளர்த்து வந்தார். அக்குழந்தை திருமண வயதை அடைந்ததும் சுயம்வரத்திற்கு ஏற்பாடுகள் செய்தார். அப்போது வரமூர்த்தீஸ்வரர் வேடன் வடிவம் கொண்டு, மரகத வல்லியைத் தூக்கிச் சென்றார். இராஜாவும் தன் படையுடன் பின்தொடர்ந்து விரட்டி வந்தார். அப்போது இறைவன் திருமணக் கோலத்தில் காட்சி தந்த இடம் அரியத்துறை.
இந்த திருத்தலத்தில் அருள்மிகு வரமூர்த்தீஸ்வரரை வணங்கினால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். திருமண தடை நீங்கும். சர்ப்ப தோஷம் நீங்கும். பித்ரு தோஷம் நீங்கும். அரசமரம் சுற்றி வந்தால் கிருஷ்ணனின் கருணை கிடைக்கும். காசி காலபைரவர் அரியத்துறையில் சுயம்பாக உள்ளார். பிறவிப்பயனை போக்க அரியத்துறைக்கு வாருங்கள்.
மேற்படி தகவல்கள் பல சரவண குருக்கள் நம்மிடம் கூறியது. தளம் சார்பாக அவரையும் அவரது மகன் திரு.மோகனையும் வஸ்திரம், துண்டு, தாம்பூலம், இனிப்புக்கள் ஆகியவற்றை வைத்துக் கொடுத்து கௌரவித்தோம். (திரு.மோகன் எம்.பி.ஏ. ஃபைனான்ஸ் படித்துவிட்டு பணிக்கு முயற்சி செய்துகொண்டிருக்கும் இவர் அப்பாவுக்கு உதவியாக கோவில் பணிகளில் மனப்பூர்வமாக ஈடுபடுகிறார். நல்ல வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறார். நாமும் முயற்சிப்பதாக கூறி இவரது RESUME ஐ நமக்கு அனுப்பச் சொல்லியிருக்கிறோம்.)
அருள்மிகு மரகதவல்லி சமேத வரமூர்த்தீஸ்வரர் திருக்கோயில்,
அரியத்துறை, கும்மிடிப்பூண்டி வட்டம்,
திருவள்ளூர் மாவட்டம் – 601 206
குருக்கள் அலைபேசி : 98948 21712
காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரையில் மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரையில்.
சென்னையில் இருந்து காளஹஸ்தி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கவரப்பேட்டை ஆர்.எம்.கே இன்ஜினீயரிங் காலேஜ் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு உள்ளே சென்றால் இக்கோவிலை அடையலாம்.
* செய்தொழில் நன்றாக நடக்க, வியாபாரம் செழிக்க தரிசிக்கவேண்டிய கோவில்
* பித்ரு தோஷம் நீங்க வணங்கவேண்டிய சுவாமி இவர்
* காசிக்கு செல்ல முடியவில்லையே என்று ஏங்குபவர்கள் இங்கு வரமூர்த்தீஸ்வரரை தரிசித்து அந்த குறையை போக்கிக்கொள்ளலாம்.
* வாழ்க்கையின் போக்கை மாற்றிக்கொள்ள விரும்புகிறவர்கள் அவசியம் தரிசிக்கவேண்டிய தலம்.
* “மனதிற்கு நிம்மதியும் ஆத்மதிருப்தியும் வேண்டுவோர் தரிசிக்க வேண்டிய தலம் அரியத்துறை ஸ்ரீ வரமூர்த்தீஸ்வரர்” – மஹா பெரியவா
**********************************************
அரியத்துறை பயண குறிப்புக்கள்
* சென்னை கோயம்பேட்டில் இருந்து நெல்லூர்,நாயுடுப்பேட்டை, காளஹஸ்தி போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளில் ஏறி வரப்பேட்டையில் இறங்கவும். அங்கிருந்து அரியதுறைக்கு மினி பஸ் வசதி உண்டு. காரிலும் செல்லலாம். கோயம்பேட்டிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவு.
* அரியத்துரை செல்பவர்கள் சிற்றுண்டி சாப்பிட தேசிய நெடுஞ்சாலையில் காரனோடை தாண்டியவுடன் இடதுபுறம் ஹோட்டல் சாய் சரவணா என்கிற உணவகம் வரும். அங்கு சாப்பிடலாம். வேறு எங்கும் உணவகம் வழியில் கிடையாது.
* அரியத்துறை செல்ல நெடுஞ்சலாயிலிருந்து ஆர்.எம்.கே. என்ஜீனியரிங் காலேஜ் எதிரே உள்ள மண் சாலையில் திரும்பவேண்டும்.
* கோவிலுக்கு முன்பாக அர்ச்சனை பொருட்கள் வாங்க ஒரு கடை உள்ளது. இருப்பினும் ஒரு செட் நீங்கள் புறப்படும் இடத்தில் வாங்கிச் செல்வது சிறந்தது.
* குருக்களை அலைபேசியில் தொடர்புகொண்டு பேசிவிட்டு செல்வது நல்லது. (அவரது அலைபேசி நம்பர் தரப்பட்டுள்ளது.
* காசி தீர்த்தம் வரும் தீர்த்த மண்டபடம் கோவிலுக்கு சற்று தொலைவில் உள்ளது. அங்கு சென்று அந்த தீர்த்ததை இறைத்து அருந்தி, தலையில் தெளித்துக்கொண்டு பின்னர் ஆலயத்திற்கு செல்லவேண்டும்.
==========================================================
தெய்வ வாக்கு !
“எனக்கு இப்போது சின்ன வயது தானே. தர்ம காரியங்களை வயதான பின்னே பார்த்துக்கொள்ளலாம் இப்போது என்ன அவசரம் என்று பல பேர் நினைக்கிறார்கள். இந்த எண்ணம் சரியானது தாணா ஸ்வாமி ?”
ஸ்ரீ பரமாச்சாரியாள் : “சரீரம் வீணாகப் போய்விட்டால் அப்புறம் பகவான் நாமாவை சொல்வது என்பது கூட முடியாது. கைகால் முடக்கிக்கொண்டுவிட்டால் பிரதட்சிணம் பண்ணவேண்டும், நமஸ்காரம் பண்ணவேண்டும் என்று நினைத்தால் கூட முடியாது. ஆகவே காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும். ‘குரு தர்ம’ ‘சத்காரியங்களை செய்’ ‘தர்ம காரியங்களை எல்லாம் செய்து ஈஸ்வரார்ப்பணம் பண்ணு’ என்று சொல்லியிருக்கிறது.”
– மஹா ஸ்வாமிகள் சொன்னது சத்காரியங்களுக்கு மட்டுமல்ல. ஆலய தரிசனத்துக்கு கூட. எனவே இந்த உடலும் மனமும் நன்றாக இருக்கும்போதே ஆலய தரிசனங்களை மேற்கொள்வோம்.
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும். (குறள் 335)
வள்ளுவர் சொன்னதும் இதைத் தான். நமக்கு ஏதாவது ஒன்று ஆகி முடங்கிப்போவதற்கு முன்னர் நல்ல செயல்களை செய்யவேண்டும்.
==========================================================
Attention readers : Rightmantra runs purely on readers’ contribution alone. Give us your hand…
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
தொகையை செலுத்திய பின்பு, மறக்காது நமக்கு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது 9840169215 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும்.
You can also Cheques / DD drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.
Rightmantra Soul Solutions
Rightmantra.com, Shop. No.64,
II Floor, Murugan Complex, (Opp.to Data Udupi Hotel),
82, Brindavan Street, West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170
தங்கள் ஆதரவுக்கு நன்றி!
www.rightmantra.com
Mobile : 9840169215
=========================================================
Also check :
திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் – அற்புதங்கள் பல நிகழ்ந்த திருநாவுக்கரசர் முக்தி தலம்!
கடனில் சிக்கித் தவிப்போரை மீட்கும் திருச்சேறை ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரர்!
திருநின்றவூரின் திருவாய் நிற்கும் ஏரிகாத்த ராமர் – ஸ்ரீராமநவமி ஸ்பெஷல் !
நந்தனாருக்காக விலகிய நந்தி – திருப்புன்கூர் ஒரு நேரடி தரிசனம்!
ஸ்ரீரங்கம் யானையும் வழக்கறுத்தீஸ்வரரும் – வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு ஒரு அருமருந்து!
அபயம் தருவான் அஞ்சனை மைந்தன் – காக்களூர் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் தரிசனம் !
நமது பிறவிப் பிணியும் திருப்பதி, திருவண்ணாமலை தரிசனமும்!
சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!
நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா….
சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!
கந்தரந்தாதியைப் பாராதே, கழுக்குன்றத்து மலையை நினையாதே!
ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?
சுந்தரர் வெள்ளை யானை மீதேறி கயிலைக்கு புறப்பட்ட அற்புத காட்சி – ஒரு சிறப்பு பார்வை!
அமிழ்தினும் உயர்ந்த அன்னையின் ‘வாயூறுநீர்’ நிகழ்த்திய அற்புதம்!
திருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள்!
==========================================================
வள்ளிமலை அற்புதங்கள்
வள்ளி தவப்பீடத்தில் அருள்பாலிக்கும் அறுபடை முருகன் – வள்ளிமலை அற்புதங்கள் (4)
வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (3)
சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)
புத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா? வள்ளிமலை அற்புதங்கள் (1)
==========================================================
[END]
Good Photo Coverage.
Nice and Excellent Information about the Temple.
Narayanan.
மக்களுக்கு ஒரு அற்புதமான ஒரு ஆலய தரிசனம்.
வளர்க உங்கள் பணி