இதென்ன கேள்வி… பணம் நிறைய வைத்திருப்பவன் பணக்காரன். கஷ்டப்படுபவன் ஏழை. அது தானே உங்கள் பதில்? இந்த பதில் சரியா?
சம்பவம் 1
ஒரு பெரிய சீமாட்டி ஒரு புடவைக் கடைக்கு செல்கிறாள் புடவை எடுக்க. “எனக்கு கொஞ்சம் பட்டுச்சேலைகள் காட்டுங்கள். விலை மலிவாக இருக்கட்டும். என் மகனுக்கு திருமணம். என் வீட்டு வேலைக்காரிக்கு கொடுக்கவேண்டும்…” என்கிறாள்.
சேல்ஸ்கேர்ள் எடுத்து போட்ட புடவைகளில் மலிவானதாக ஒன்றை செலக்ட் செய்து பணத்தை கட்டிவிட்டு எடுத்துச் சென்றாள்.
சற்று நேரம் கழித்து அந்த வேலைக்காரி வருகிறாள்.
“என் முதலாளியம்மா பையனுக்கு கல்யாணம். நல்ல சேலையா ஒன்னு அவங்களுக்கு எடுத்து கொடுக்கணும். விலை கொஞ்சம் கூட இருந்தாலும் பரவாயில்லை. நல்ல டிசைன்ஸ் எடுத்துப் போடுங்க”
சம்பவம் 2
ஒரு பெரிய இடத்துப் பெண், ஒருமுறை பிக்னிக்கிற்கு சென்ற இடத்தில ஒரு ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்தாள். அவளது கைக்குழந்தை திடீரென பாலுக்காக அழ, ஹோட்டல் நிர்வாகத்திடம் “குழந்தைக்கு பால் கிடைக்குமா?” என்றாள்.
“எஸ் மேடம்… கிடைக்கும். ஒரு கப் நூறு ரூபாய் ஆகும்” என்று பதில் வந்தது.
“பரவாயில்லை… உடனே ஒரு கப் வேண்டும்” என்று கூறி ஆர்டர் செய்து பாலை வரழைத்தாள்.
அவள் ஊருக்கு திரும்பிப் போகும்போது வழியில் மறுபடியும் குழந்தை பாலுக்காக அழ, சாலையோரம் இருந்த ஒரு டீக்கடையில் காரை நிறுத்தி, பால் கிடைக்குமா என்று விசாரித்தாள்.
“பசும்பாலே இருக்கும்மா” என்று கூறி அக்கடைக்கார், பசும்பால் கொடுத்தார்.
“ரொம்ப தேங்க்ஸ்பா… எவ்ளோ ஆச்சு?”
“பணம் வேண்டாம்மா… குழந்தைங்க குடிக்கிற பாலுக்கு நான் காசு வாங்குறதில்லை” என்று பதில் சொன்னவர், “இன்னும் வேணும்னாலும் வாங்கிக்கோங்க. போற வழியில குழந்தை அழுதா என்ன பண்ணுவீங்க?” என்றார் பரிவுடன்.
சம்பவம் 3
அலுவலகத்துக்கு புறப்படும்போது தான் அந்த இளைஞன் கவனித்தான். செருப்பு பிய்ந்துபோயிருந்தது.
பிரதான சாலை வந்ததும் அந்த செருப்பை தைக்க செருப்பு தைப்பவரை தேடிச் சென்றான். ஒரு நபர் சாலையோரம் ஒரு குடைக்கு கீழே செருப்புக்களை தைத்தபடி அமர்ந்திருந்தார்.
வண்டியை அவர் முன் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி, செருப்பை அவர் முன் போட்டவன், “இதை கொஞ்சம் தைச்சு கொடுங்க. புது செருப்பு. எப்படி பிஞ்சதுன்னு தெரியலே….”
“எவ்ளோப்பா ஆகும்?”
செருப்பை வாங்கி ஆராய்ந்த அந்த தொழிலாளி, “இருபது ரூபா ஆகும் சார்…”
“இருபது ரூபாயா? பத்து ரூபாய் வாங்கிக்கோங்க…”
அந்த இளைஞரை சற்று தலையை நிமிர்த்தி பார்த்தார். கதிரவனின் கதிர்கள் சுட்டெரித்தது. சரியாக பார்க்க முடியவில்லை.
“இருபதுக்கு கம்மி தைக்க முடியாது சார்”
“என்ன இதுக்கு போய் இருபது ரூபாயா? பதினைஞ்சு வாங்கிக்கோங்க”
“நான் கம்மியாத் தான் சொல்லியிருக்கேன். சொல்யூஷன் போட்டு ஒட்டி தைக்கணும்.. அப்போ தான் தையல் நிக்கும்”
இளைஞனின் பேரம் தொடர்ந்துகொண்டிருந்தது.
இதனிடையே… டீ ஆர்டர் எடுக்க பக்கத்து டீக்கடை சிறுவன் வந்தான்…
“ஒரு டீ கொண்டு வாப்பா….. சார் டீ சாப்பிடுறீங்களா??”
அந்த இளைஞனின் பதிலுக்கு காத்திராமல், “சாருக்கும் ஒரு டீ சேர்த்து ரெண்டு டீ கொண்டுவாப்பா…” என்றார்.
“இல்லே ஐயா வேண்டாம்…”
“பரவாயில்லை சார்… சாப்பிடுங்க… நல்லா இருக்கும். இந்த ஏரியாவுல முப்பது வருஷமா இருக்குற கடை அது…”
சற்று நேரத்தில் சூடான டீ வந்தது.
அந்தப் பெரியவரிடம் பத்து ரூபாய்க்கு பேரம் பேசிய அந்த இளைஞன் நெளிந்தபடி அந்த டீயை அருந்தினான்.
செருப்பு தைத்து முடித்த பிறகு, பைசா கொடுக்கும்போது சாப்பிட்ட டீக்கும் சேர்த்து தர, அந்த பெரியவர் சொன்னார்… “செருப்பு தைச்சதுக்கு மட்டும் காசு கொடுங்க… டீக்கு வேண்டாம்… என்னோட கஸ்டமர் நீங்க… உங்களை உபசரிக்கிறது என்னோட கடமை…” என்றார்.
(தாம்பரம் சானடோரியம் பேருந்து நிறுத்தம் அருகே உண்மையில் நடந்த சம்பவம் இது. நம் வாசகர் ஒருவர் கவனித்த சம்பவம்!!)
இங்கு யார் பணக்காரர்?
காரில் வந்து விலை குறைந்து புடவை வாங்கிச் சென்ற அந்த சீமாட்டியா அல்லது நடந்து வந்து விலையுயர்ந்த புடவையை தனது எஜமானிக்கு வாங்கிச் அவள் வீட்டு வேலைக்காரியா?
குழந்தையின் பாலுக்கு கூட அநியாய விலை வைத்த அந்த ஸ்டார் ஓட்டல் மேனஜரா? அல்லது குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு பணம் வேண்டாம் என்று சொன்ன இந்த சாலையோர டீக்கடைக்காரரா?
செருப்பு தைப்பவரிடம் பத்து ரூபாய்க்கு பேரம் பேசிய பைக்கில் வந்த இளைஞரா? அல்லது டீயை அவருக்கு கொடுத்து உபசரித்த செருப்பு தைப்பவாரா?
பணக்காரன், ஏழை குறித்த தவறான மதிப்பீடுகள் (WRONG DEFINITION) ஆண்டாண்டு காலமாக நமது சிந்தனையில் ஊறிப்போயிருக்கிறது. நம்மால் இந்த உலகை மாற்றமுடியுமா என்று தெரியாது. குறைந்த பட்சம் இந்த தளத்தை படிப்பவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அவர்கள் உலகை மாற்றுவார்கள்.
பணம் வைத்திருப்பதால் மட்டுமே ஒருவர் பணக்காராகிவிடமுடியாது. அதே நேரம், பணம் இல்லாததால் ஒருவர் ஏழையும் கிடையாது.
பணத்திற்கான ஓட்டத்தில் நாம் மனிதர்களை பொருட்படுத்துவதில்லை. பணத்தை பெரிதாக கருதாத இதயங்களை கவனிக்க மறந்துவிடுகிறோம்.
தேவையுள்ளவர்களுக்கு பிரதிபலன் எதிர்பார்க்காமல் உதவுவோம். அது தரும் மனநிறைவை பணம் நிச்சயம் தரமுடியாது!
தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே
அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
பொன்னைப்போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை
இதை புரிந்து கொண்ட ஒருவனை போல் மனிதன் வேறில்லை!
(நாளை ஒரு முக்கியமான பதிவு வரவிருக்கிறது. அதற்கு முன் இதை அளித்தால் நன்றாக இருக்கும் என்று கருதி இதை அளித்திருக்கிறோம்!)
==========================================================
Are you a part in our journey?
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
Also check :
வாழ்க்கையில் வெற்றி என்பது உண்மையில் என்ன?
எல்லோருக்கும் பொதுவான ஒரு மிகப் பெரிய சொத்து!
‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?
What is the real meaning of PRECIOUS ? மதிப்புமிக்கது என்றால் என்ன ?
பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE
புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !
==========================================================
[END]
Excellent Moral.
Narayanan.S
நிதர்சமான உண்மை
மூன்றுமே மிக முக்கியமான நிகழ்வுகள்.
பொட்டில் அறையும் செய்தி.
யார் பணக்காரன் என்பதை நம் வாசகர்கள் நிச்சயம் புரிந்து நடந்து கொள்வோம்.
Dear SundarJi,
Super..!!!
Rgds,
Ramesh
பணக்கார சுந்தர்ஜி,
அனைத்து சம்பவங்களும் அருமை. தொடர்ந்து அருமையான பதிவுகளை அளிப்பதற்கு நன்றி.
இப்படிக்கு,
பணக்காரனாக முயற்சி செய்யும் நாகராஜன்!
🙂
Fantastic share