(* இந்த பதிவில் உள்ள புகைப்படங்கள் காலடியில் ஆதிசங்கரர் ஜன்ம பூமியில் கட்டப்பட்டுள்ள சங்கரர், சாரதாம்பாள் கோவில் மற்றும் அருகே உள்ள அவரது குலதெய்வமான காலடியப்பன் ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் புகைப்படங்களாகும். இரண்டும் அடுத்தடுத்து அமைந்துள்ளது. சென்ற ஆண்டு நாம் காலடி சென்றிருந்தபோது எடுத்த புகைப்படங்கள் இவை.)
சிருங்கேரி சாரதா பீடத்தின் 33 வது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபினவ ந்ருஸிம்ஹ பாரதீ மஹாஸ்வாமிகளின் (1872–1912) கடுமையான முயற்சியின் பேரில் தான் ஆதிசங்கரரின் ஜன்ம பூமி கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இதற்கு ஆசார்யாள் பட்ட கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா?
இது சம்பந்தமாக நடைபெற்றவை அனைத்தும் சிலிர்ப்பூட்டுபவை. அவசியம் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டியவை.
ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபினவ ந்ருஸிம்ஹ பாரதீ மஹாஸ்வாமிகள், ஆதிசங்கரர் அவதரித்த வைசாக சுக்ல பஞ்சமி திதியை மிக முக்கியமான ஒன்றாக அனைவரும் கொண்டாடவேண்டும் என்று விரும்பினார். எனவே அந்த நாளில் சங்கர ஜெயந்தியை கொண்டாடும் வழக்கத்தை அவர் ஏற்படுத்தினார்.
ஸ்ரீ ஸ்வாமிகளுக்கு எப்படி சங்கரரின் ஜன்மபூமியை கண்டுபிடிக்கவேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது?
ஸ்வாமிகள் பீடத்தில் இருந்த காலகட்டத்தில் விஜய யாத்திரை மேற்கொண்டார். அப்போது சனாதன தர்மத்திற்கு புத்துயிர் ஊட்டி, வேத நெறியை தழைக்கச் செய்ய சங்கரர் ஆற்றிய அரும்பணிகள் பற்றிய உணர்வேயின்றி பலர் இருப்பதை கண்டு வேதனை அடைந்தார்.
சங்கரர் காலடியில் அவதரித்த இடத்தை சரியாக கண்டுபிடித்து அவ்விடத்தில் அவருக்கு ஒரு கோவில் எழுப்புவதே இதற்கு சரியான தீர்வு என்று முடிவு செய்தார். ஆனால் அது என்ன அத்தனை சுலபமான விஷயமா?
இவ்விஷயத்தில் அவருக்கு உதவிக்கு வந்தது சிருங்கேரி பீடத்தின் 12வது பீடாதிபதியாக விளங்கிய வித்யாரண்யர் (1380–1386) எழுதிய ‘ஸ்ரீமாதவீய சங்கர திக் விஜயம்’ என்னும் நூல் தான். (வித்யாரண்யர் பற்றியும் அவர் நிகழ்த்திய அற்புதம் பற்றியும் நம் தளத்தில் ஏற்கனவே ஒரு பதிவு வெளிவந்துள்ளது. திருமகளின் அருள்மழையும் பின்னே ஒளிந்திருந்த காரணமும்!)
காலடி தான் ஜகத்குருவின் அவதாரபூமி என்று அடித்துச் சொல்லும் இந்நூலில், அவரது ஜன்ம பூமி பற்றிய குறிப்புகளும் நிறைய காணப்பட்டன.
ஆனால், எட்டாம் ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜகத்குருவின் ஜன்ம பூமியை கண்டுபிடிக்க இந்த குறிப்புக்கள் மட்டும் போதுமா? அவர் மனம் குழப்பத்தில் தவித்த காலகட்டத்தில், அப்போது மஹா சுவாமிகளை தரிசிக்க மைசூர் திவான் கே.சேஷாத்ரி ஐயர் வந்திருந்தார்.
அவரிடம் இது பற்றிய தனது உள்ளக்கிடக்கையை ஸ்வாமிகள் தெரிவிக்க, அவர் இது தொடர்பான முயற்சிகளில் இறங்கினார். கேரளாவில் மட்டும் காலடி என்ற பெயரில் மூன்று இடங்கள் இருந்தன. ஒன்று திருவனந்தபுரம் அருகே, மற்றொன்று கோழிக்கோடு அருகே, மற்றுமொன்று எர்ணாகுளம் அருகே.
ஆனால், ‘ஸ்ரீமாதவீய சங்கர திக் விஜயம்’ சுவடியில் காலடியில் ஓடும் பூர்ணா நதி பற்றிய குறிப்பு காணப்பட்டது இடத்தை இறுதி செய்ய உதவியாக இருந்தது. ஒருவழியாக சங்கரர் பிறந்த இடம் அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட எர்ணாகுளம் அருகே உள்ள காலடி என்று உறுதி செய்யப்பட்டது. (இங்கு தான் பூர்ணா நதி ஓடுகிறது!)
அதன் பின்னர் மகாஸ்வாமிகள் சிறிதும் தாமதிக்காமல், காலடியில் சிருங்கேரி மடம் சார்பாக ஒரு இடத்தை விலைக்கு வாங்கி அங்கு ஐந்து நாள் சங்கர ஜெயந்தி உத்சவத்தை வெகு விமரிசையாக நடத்தினார். பல வேத பண்டிதர்களை கொண்டு ஹோமம், பூஜை என்று பிரமாதமாக அது நடத்தப்பட்டது. நடுக்காவேரியை சேர்ந்த ஸ்ரீனிவாச சாஸ்திரி என்பவரை வரவழைக்கப்பட்டு இந்த உற்சவம் நடத்தப்பட்டது.
இந்த தருணத்தில் தான் திருவாங்கூர் சமஸ்தானத்த்தின் திவானாக திரு.மாதவராவ் பொறுப்புக்கு வந்தார். சிருங்கேரி மகாஸ்வாமிகள் மீது பேரன்பும் பக்தியும் கொண்டிருந்தவர் அவரும் அவர் குடும்பத்தினரும்.
மகாஸ்வாமிகளின் அறிவுறுத்தலின் பேரில் அப்போதைய சிருங்கேரி மடத்தின் ஏஜண்ட் ஸ்ரீகண்ட சாஸ்திரி, கேரள உயர்நீதி மன்ற நீதிபதி திரு.ராமச்சந்திர ஐயர் ஆகியோர் மாதவராவை சந்தித்து சங்கரர் ஜன்ம பூமியை கண்டுபிடிக்க ஒத்துழைப்பையும் உதவியையும் கோரினர்.
தொடர்ந்து செய்த ஆலோசனையின் பேரில் காலடி நேரடியாக செல்வது, நிலைமையை ஆராய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த மூவர் குழு, காலடியை அடைந்த போது அதன் அழகிலும் வனப்பிலும் மெய்மறந்துவிட்டனர்.
கிராம மக்கள் ஒவ்வொருவரிடமும் பேசினர். அப்போது அவர்கள், காலடியில் சங்கரரின் காலை முதலை பற்றிய ‘முதலைக்கடவு’ இடத்தை குறிப்பிட்டனர். சங்கரரின் நெருங்கிய உறவினர்ககளின் வம்சாவழிகள் என்று கூறப்படும் நம்பூதிரிகள் இருவரின் குடும்பத்தினரும் குழுவினரிடம் இந்த தகவலை உறுதி செய்தனர். சங்கரரின் தாய் ஆர்யாம்பாளுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய ஊரார் ஒத்துழைக்க மறுத்த நிலையில், (சந்நியாசி நெருப்பு சம்பந்தமான காரியங்களை செய்யக்கூடாது என்று) இந்த இரு குடும்பத்தினரும் தான், ஆர்யாம்பாளை தூக்கி வாழை மட்டைகளில் கிடத்தினர். இதைத் தொடர்ந்து அக்குடும்பத்தினரை சங்கரர் ஆசீர்வதித்தாராம். இது குறித்த பட்டயம் ஒன்று அக்குடும்பத்தினரிடம் இன்றும் இருக்கிறது.
ஆக, காலடி தான் சங்கரரின் அவதார பூமி என்பதற்கு சான்றுகள் பல கிடைத்தன.
மேலும் இந்த தொடரின் இரண்டாம் அத்தியாயத்தில் நாம் கண்ட சம்பவமும் ஸ்ரீமாதவீய சங்கர திக் விஜயத்தில் காணப்படுகிறது. அந்த சம்பவத்தை வைத்தும் முதலைக் கடவை கண்டுபிடித்ததும் சங்கரரின் குலதெய்வமான ஸ்ரீகிருஷ்ணர் கோவிலின் அமைவிடத்தை வைத்தும் சங்கரரின் அவதார பூமி குறித்து ஒரு முடிவுக்கு மூவர் குழுவால் வர முடிந்தது. ஸ்ரீமாதவீய சங்கர திக் விஜயத்தில் மேற்படி கிருஷ்ணன் கோவிலை பற்றிய தெளிவான குறிப்பு உள்ளது. இரண்டும் பொருந்தவே, குழுவினரின் பணி சுலபமாகிவிட்டது.
சங்கர பகவத் பாதாள் அவதரித்த இடத்தை கண்டுபிடித்தாகிவிட்டது. குழுவினருக்கு அடுத்த சவால் முளைத்தது. இந்த இடத்தை சட்டப்பூர்வமாக உடமையாக்கவேண்டும். அப்போது தானே அங்கு சங்கரருக்கு கோவில் கட்டமுடியும்? ஆனால், அது சாத்தியமா?
அந்த இடம் பல நம்பூதிரி குடும்பத்தினருக்கு சொந்தமானதாக இருந்தது. மேலும் ‘தெக்கே மடம்’ என்று அழைக்கப்பட்ட ஒரு மடத்திற்கு அது சொந்தமானதாக இருந்தது.
எனவே திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்களின் உதவியை நாடினர். திருவிதாங்கூர் சமஸ்தானத்தினர் சிருங்கேரி மடத்தின் ஆச்சார்யாள்கள் மீது பெருமதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். சொல்லப்போனால், சிருங்கேரி மடத்திற்கு அவ்வப்போது பெருமளவில் அவர்கள் பொன் பொருள் உள்ளிட்ட காணிக்கைகளையும் வழங்கி வந்தனர்.
சிருங்கேரி ஸ்ரீ மடத்தின் மீது பெரிய பற்று வைத்திருந்த ஒரு சமஸ்தானத்தின் கீழ் சங்கர ஜன்ம பூமி இருந்தது இறைவனின் திரைக்கதை தான். இல்லையெனில், இந்த பணி முழுமை பெறாமலே போயிருக்கும். நீங்களும் இப்போது பகவத் பாதாள் அவதரித்த இடத்தை பார்த்துக்கொண்டிருக்கமாட்டீர்கள்.
இந்த தருணத்தில் தான் 1905 ஆம் ஆண்டு வந்தது. அந்த ஆண்டிற்கு என்ன முக்கியத்துவம்?
அப்போது பிரிட்டிஷ் அரசாங்கம் அரிய கட்டிடங்கள் மற்றும் தொல்லியல் தொடர்பான சட்டம் ஒன்றை பாஸ் செய்திருந்தது. மூவர் குழுவினர் அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் மூலம் திருநாளை சந்தித்தனர். மன்னர் சிருங்கேரி மடத்தின் குழுவினரை அன்புடன் வரவேற்று உபசரித்து பேசிக்கொண்டிருந்தபோது, மூவர் குழுவினர் ‘காலடி என்னும் சங்கரின் புனித பூமி இப்படி கவனிப்பாரற்று கிடக்கிறது. நாம் ஏதாவது செய்யவேண்டும்’ என்று மெதுவாக சொன்னபோது, மன்னர் எந்த வித ரியாக்ஷனும் காட்டாமல் கேட்டுக்கொண்டிருந்தாராம்.
மூவர் குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
அடுத்த வாரம் சிருங்கேரி பீடத்திற்கு வழக்கம்போல திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து காணிக்கை வந்தபோது காணிக்கையுடன் கூடவே பட்டுத் துணியில் சுற்றப்பட்டு ஏதோ ஒன்று இருக்க, மகாஸ்வாமிகள் மடத்தின் செயலாளரை அழைத்து ‘அது என்ன என்று பாருங்கள்?’ என்று கூறினார். அவர் அதை எடுத்து பட்டுத்துணியை விளக்கிவிட்டு பார்த்தால் அது ஓலையில் எழுதப்பட்ட ஒரு கிரந்தம். அதாவது பட்டயம். அக்காலங்களில் இப்போதுள்ளது போல, சொத்துப் பத்திரங்கள் பாண்டு பேப்பர்களில் இருக்காது. சுவடிகளில் எழுதப்பட்டிருக்கும்.
அதை பிரித்துப் பார்த்தபோது, இந்த ஒரு வார காலகட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானம், ஒட்டுமொத்த காலடியையும் அரசுடமையாக்கி அதை சிருங்கேரி மடத்திற்கு கிரயம் செய்து தந்திருக்கும் விபரம் இருந்தது.
இந்த பரிவர்த்தனையில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாதவாறு மன்னர் பார்த்துக்கொண்டார். நிலம் தொடர்புடைய அனைவருக்கும் தவறாமல் உரிய இழப்பீடுகளும் மாற்று இடங்களும் ஏராளமான அரசாங்க சலுகைகளும் இதன்பொருட்டு வழங்கப்பட்டது.
அனைவரும் மன்னர் மூலம் திருநாள் மஹாராஜாவுக்கு சிருங்கேரி மடத்தின் மீதிருந்த அபிமானத்தை கண்டு நெகிழ்ந்துபோயினர்.
அதுமட்டுமல்ல மன்னர் மூலம் திருநாள் பண்டைய கட்டுமானங்கள், பழம்பெருமை வாய்ந்த இடங்களை பாதுகாக்கும் சட்டம் ஒன்றையும் இயற்றினார்.
மேலும் சங்கரரின் ஜன்ம பூமியாக கண்டறியப்பட்ட இடத்தை முழுமையாக சுத்தம் செய்து, அங்கு சிருங்கேரி மடத்தின் ஆலோசனைப்படி கோவில் கட்டவும் உத்தரவிட்டார்.
இதற்கிடையே சங்கரரின் ஜன்ம பூமியை கண்டறிய முயற்சிகளை துவக்கிய மகா ஸ்வாமிகள் தொடர் சங்கிலி போல நடைபெற்ற அத்தனை முன்னேற்றங்கள் குறித்தும் மகிழ்ச்சியடைந்தார்.
சங்கரருக்கு கோவில் கட்டும் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டது. தொடர்ந்து ஸ்வாமிகள் விஜய யாத்திரை மேற்கொண்டார். விஜயயாத்திரையின் நிறைவில் – 1909 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி – பௌர்ணமி அன்று ஸ்வாமிகள் திருவிதாங்கூர் எல்லையை அடைந்தார்.
மன்னர் மூலம் திருநாள், சகலவித மான ராஜ மரியாதையுடன் சுவாமிகளை வரவேற்றார்.
இடையே, கோவில் கும்பாபிஷேகத்தின் தேதியாக பிப்ரவரி 19, 1910 தீர்மானிக்கப்பட்டது.
காலடியை நோக்கி ஸ்வாமிகள் யாத்திரையை தொடர்ந்துகொண்டிருந்தார். பெரும்பாவூர் என்கிற இடத்திற்கு அருகே வரும்போது, அங்கு அரசு உயர்நிலைப் பள்ளியில் தங்கினார்.
கனவில் தோன்றியது யார்?
அன்றிரவு மகா ஸ்வாமிகளுக்கு ஒரு கனவு வந்தது. அதில், வெள்ளை சேலை உடுத்திய ஒரு வயதான பெண்மணி தோன்றினார். “தாங்கள் யாரம்மா?” என்று ஸ்வாமிகள் கேட்க, “நான் அருகே உள்ள மரத்தின் கீழே வசிக்கிறேன். நீ வந்திருப்பதை அறிந்து உன்ன வரவேற்க வந்தேன்” என்று கூறிவிட்டு மறைந்தார்.
மறுநாள் காலை விழித்தபோது, ஸ்வாமிகள் இரவு கண்ட கனவு குறித்து சிந்தித்தபடி இருந்தார். அந்த நேரம் சிருங்கேரி மட நிர்வாகிகள், காலடியில் அனைத்துப் பணிகளும் நிறைவுபெற்றுவிட்டதாக தெரிவித்தனர்.
அப்போது அவர்களிடம் பேசியபோது, சங்கரர் ஜன்ம பூமியில் ஆர்யாம்பா தகனம் செய்யப்பட்டதாக் கருதப்படும் இடத்திற்கு அருகாமையில் ஒரு அசோக மரம் இருப்பதாக தெரிந்தது. எனவே கனவில் வந்தது சங்கரரின் தாய் ஆர்யாம்பாள் தான் என்பது உறுதியானது.
இறுதியாக 1910 பிப்ரவரி 19 மகா சுக்ல துவாதசி அன்று சங்கரர் ஜென்ம பூமியின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்தக் காலகட்டத்திலேயே சுமார் 50,000 இதை கண்டு களித்தார்களாம்.
ஆக, காலடியில் நாம் இன்று சங்கரரின் ஜன்ம பூமியை கண்டு தரிசித்து பரவசப்படுகிறோம் என்றால் அதற்கு காரணம் ஸ்ரீ ஸச்சிதானந்த சிவாபினவ ந்ருஸிம்ஹ பாரதீ மஹாஸ்வாமிகள் தான். அவருக்கு அனேக கோடி நமஸ்காரங்கள். சுமார் 33 ஆண்டுகள் இவர் சிருங்கேரி பீடத்தை அலங்கரித்தார்.¶¶
==========================================================
அடுத்து வருவது :
நம் காலடி பயணத்திற்கான வித்து ஊன்றப்பட்டது எங்கே?
கிருஷ்ணன் கோவிலில் நடைபெற்ற அக்ஷய திரிதியை – கனகதாரா பூஜை – ஒரு நேரடி வர்ணனை!
==========================================================
Also check :
கர்மா Vs கடவுள் முந்தைய அத்தியாயங்கள்…
கர்மாவை வென்ற காருண்யம் – கர்மா Vs கடவுள் (5)
விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)
கர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)
நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)
ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)
==========================================================
A REMINDER TO ALL …. உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Donate us. Support us. Your contribution really makes a big difference.
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
For full details : We need your support and financial assistance. Click here!
==========================================================
Also Check :
தங்க மழை பொழிந்த ‘ஸ்வர்ணத்து மனை’ – நேரடி ரிப்போர்ட் – காலடி பயணம் (5)
சிவன் துவக்கிய ஆனந்தலஹரி, சங்கரர் முடித்த சௌந்தர்யலஹரி – காலடி பயணம் (4)
செழிக்க மகனை தியாகம் செய்த ஆர்யாம்பாளின் சமாதி – காலடி பயணம் (3)
சங்கரரின் காலை முதலை பற்றிய ‘முதலைக் கடவு’ – ஒரு நேரடி ரிப்போர்ட் (2)
பக்திக்கும் பாசத்திற்கும் வளைந்த பூர்ணா நதி – காலடி நோக்கி ஒரு பயணம் (1)
திருமகளின் அருள்மழையும் பின்னே ஒளிந்திருந்த காரணமும்!
உங்கள் இல்லங்களில் ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ என்றும் தழைத்தோங்க சில எளிய வழிகள்!
ஜகத்குரு ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு – ஒரு (வி)சித்திர அனுபவம்!
அறியாமை இருளை அகற்றிய ஞான சூரியன் ஜகத் குரு ஆதிசங்கரர் ஜெயந்தி சிறப்பு பதிவு!
காலத்தால் அழியா ‘ஜனனி ஜனனி’ பாடலுக்கு ஆதிசங்கரர் தந்த ஆசி! சிலிர்க்க வைக்கும் உண்மை!!
தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!
பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!
==========================================================
[END]
மிக மிக அருமையான பதிவு. புகைப்படங்கள் நேரில் பார்ப்பது போன்ற தோற்றத்தை அளிக்கிறது.
சில பிழை திருத்தங்கள் செய்திருக்கிறேன். மீண்டும் பதிவை பார்க்கவும். நன்றி.
அருமை சுந்தர்ஜி. சந்தோசம்.
அருமையான பதிவு
புகைப்படங்களும் வர்ணனையும் நம்மை வேறு ஒரு புதிய உலகுக்கு அழைத்து செல்கிறது
அன்றைய காலகட்டத்திலும் ஒரு ஆலயத்தை நிறுவ எத்துனை பரிவர்தனைகள் எவ்வளவு முயற்சிகள்
குருவருளால் எல்லாம் நலமே முடிந்தது
சுந்தர் அவர்களே
உங்கள் கடுமையான முயற்சிக்கும்
யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற உங்களின் உயரிய பண்பிற்கும் வாசக்சர்கள் சார்பாக எமது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுதல்களும்
சுந்தர்ஜி அவர்களுக்கு வணக்கம் .
ஆதி சங்கரர் பரம பவித்திரமான புண்ணிய பூமியை கண்டு பிடித்து உறுதி செய்து, ஆலயம் கட்டி கும்பாபிசேகம் நடந்தது வரை மிக விமரிசையாக வர்ணனை செய்த விதம் அருமை .
மேலும் நேரில் சென்றால் எப்படி மனம் மகிழ்ச்சி அடையுமோ அந்த அளவுக்கு உங்கள் படங்களில் நேர்த்தி இருந்தது .
காலடி செல்லும் நேரடி வாய்ப்பு கிடைக்கும் வரை, நீங்கள் எங்களை அழைத்து சென்றதை மிக பெரிய பாக்கியமாக எண்ணுகிறேன் .
உங்கள் புனித பயணம் மேலும் தொடர இறையருளும் குருவருளும் துணை நிற்கட்டும் .
இந்த பதிவின் மூலம் நாங்களும் காலடி சென்று வந்த ஒரு உணர்வு ஏற்பட்டிருக்கிறது என்றால் மிகையாகாது. இது போன்ற இடங்களையெல்லாம் தரிசிக்காமலே எங்கள் பிறவி முடிந்துவிடுமோ என்று கவலையாக இருக்கிறது. விரைவில் ஈசன் அருள்புரியவேண்டும்.
சிருங்கேரி ஆச்சார்யாள், சங்கரரின் ஜன்ம பூமியை கண்டுபிடிக்க எடுத்த சிரத்தையை பற்றி அறிந்துகொள்ளும்போது சிலிரிப்பாக இருக்கிறது. அதை அப்படியே பதிவாக அளித்த உங்களின் தேடல் வியக்கவைக்கிறது.
இறுதியில் நீங்கள் தந்திருக்கும் நான்கு ஆச்சார்யல்களின் படமும் ஒரு பொக்கிஷம்.
பதிவின் ஒவ்வொரு படமும் ஒரு கண்களை எடுக்க முடியாத அளவிற்கு அத்தனை அழகு. Kerala – God’s own country என்று சும்மாவா சொன்னார்கள்.
பதிவின் அடுத்த அத்தியாயத்திற்கு ஆவலோடு காத்திருக்கிறோம்.
தொடரட்டும் உங்கள் தொண்டு. தழைக்கட்டும் அறமும் இன்பமும்.
– பிரேமலதா மனின்கண்டன்,
மேட்டூர்