அதற்கு பிறகு வேலை கேட்டு பல கம்பெனிகளை அணுகினான். யாரும் திரும்பிக் கூட பார்க்கவில்லை. ஃப்ரீலான்ஸ் செய்து தரக்கூட அவன் தயாராக இருந்தான். அதற்கும் நோ ரெஸ்பான்ஸ்.
இந்நிலையில் கான்சாஸ் நகரத்தில் இருந்த நிறுவனம் ஒன்று தனது விளம்பர படங்கள் வரைய அவனை சொற்ப சம்பளத்தில் அமர்த்தி பயன்படுத்திக்கொள்ள முடிவுசெய்து அவனுக்கு பணி தர முன்வந்தது.
தங்குவதற்கு இடம் கூட இல்லாமல் அவதிப்பட்டு வந்த அந்த இளைஞன், அந்த நிறுவனத்தின் உரிமையாளரை சந்தித்து “நான் உங்களுக்கு தேவையான படங்களை வரைந்து தருகிறேன். ஆனால், எனக்கு தங்குவதற்கு மட்டும் நீங்கள் ஏதாவது ஏற்பாடு செய்து தரமுடியுமா?” என்று கேட்டுக்கொண்டான்.
“அதற்கெல்லாம் இங்கே வழியில்லையேப்பா… நீ தான் ஏதாவது ஏற்பாடு செய்துக்கனும்” என்றார் உரிமையாளர்.
“ஒரே ஒரு மாசம் – முதல் சம்பளம் வாங்குற வரைக்குமாவது ஒரு இடம் ஏற்பாடு செஞ்சீங்கன்னா போதும். அடுத்த மாசம் நான் பார்த்துக்குறேன்…”
தன் வறுமையையும் இயலாமையையும் வேதனையுடன் வெளிப்படுத்தினான் அந்த இளைஞன்.
“ஆபிஸ்ஸுக்கு பின்புறம் ஒரு பழைய கார் ஷெட் இருக்கிறது. அது ஒரு ABANDONED ஷெட். உனக்கு ஓ.கே.ன்னா கிளீன் பண்ணி கொஞ்ச நாளைக்கு தங்கிக்கோ…” என்றார்.
அது குளிர்காலம் என்பதால், ஏதோ ஒண்டுவதற்கு ஒரு கூரை கிடைத்தால் போதும் என்று ஒப்புக்கொண்டான் இளைஞன்.
சாவியை பெற்றுக்கொண்டு தனது உடைமைகளை வைக்க ஷெட்டுக்குள் நுழைந்தான்.
அங்கே இவனை வரவேற்றது யார் தெரியுமா?
ஒரு பெரிய சுண்டெலி பட்டாளம். சுமார் ஒரு டஜன் சுண்டெலிகள் அங்கும் இங்கும் ஓட, இவன் வெறுத்தே போய்விட்டான்.
இந்த சுண்டெலிகளுடன் தான் தங்கவேண்டுமா? இறைவா இது என்ன சோதனை?
யாரையேனும் அழைத்து அந்த அறையை FUMIGATION என்று சொல்லக்கூடிய சுத்தப்படுத்துதலை செய்யலாம் என்றால் கையில் சல்லிக்காசில்லை. துரோகிகளுக்கு இந்த சுண்டெலிகள் எவ்வளவோ மேல் என்று முடிவு செய்து வேறு வழியில்லாமல் அந்த எலிகளுடனேயே தங்குவது என்று முடிவு செய்தான்.
அதற்கு பிறகு அந்த ஷெட் தான் அவன் பெட்ரூம், ஸ்டூடியோ எல்லாமே. சுண்டெலிகள் தான் அவன் ரூம் மேட்ஸ்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்த ஒரு அற்புதமான காரக்டர் பார்ட்னரின் துரோகத்தால் தன்னைவிட்டு போய்விட்ட சூழ்நிலையில், புதிய காரக்டர் ஒன்றை உருவாக்குவது பற்றி யோசித்தான்.
நண்பர்கள் செய்த துரோகம் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து அவனால் எதையுமே அமைதியாக சிந்திக்க முடியவில்லை. “இந்த இடமும் நிரந்தரமல்ல… எனவே ஏதாவது செய்தே தீர வேண்டும், என்ன செய்யலாம்” என்று யோசித்தபோது சுண்டெலி ஒன்று அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது கண்ணில் பட்டது.
திடீரென்று, சிந்தனையில் பொறி தட்ட… அந்த சுண்டெலியின் விளையாட்டை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான். அடுத்த சில மணிநேரங்களில் அதுவே ஒரு காரக்டராக உருவானது.
இந்த இளைஞன் வேறு யாருமல்ல… பிரபல ஸ்டூடியோ அதிபர் வால்ட் டிஸ்னி. அந்த சுண்டெலி வேறு யாருமல்ல… மிக்கி மவுஸ். வால்ட் டிஸ்னியின் பிரபல மிக்கி மவுஸ் பிறந்தது இப்படித்தான்.
அதன் பிறகு நடந்தது, உலகின் வெற்றிகரமான தனிமனித சரித்திரங்களில் முக்கியமான ஒன்றாகிப்போனது.
கொஞ்சம் யோசிச்சி பாருங்க… டிஸ்னிக்கு நடந்த எல்லாமே INTER-CONNECTED.
நண்பர்கள் செய்த துரோகம், கார் ஷெட், ஒரு மாச கெடு, சுண்டெலிகள் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இதுல ஒன்னு மிஸ்ஸாகியிருந்தாக் கூட ‘வால்ட் டிஸ்னி’ என்கிற சாம்ராஜ்ஜியம் தோன்றியிருக்காது.
இன்று பரந்து விரிந்த அவரது டிஸ்னி லேண்டின் மதிப்பு மட்டுமே பல ஆயிரம் கோடிகள்!
========================================================
Don’t miss these articles…
அளவற்ற செல்வம் புதைந்திருப்பது எங்கே தெரியுமா?
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்!
========================================================
இதுவரை அதிகபட்ச ஆஸ்கார் விருதுகள் வாங்கியது யார் தெரியுமா? வால்ட் டிஸ்னி தான்.
“நீங்கள் கனவுகள் கண்டால் அதை விடாமல் துரத்துங்கள். ஒரே ஒரு எலி, பெரிய கனவு இவற்றால் உலகையே என்னால் முற்றுகையிட முடிந்த பொழுது உங்களால் முடியாதா?” என்று சிரித்தபடியே கேட்கிறார் வால்ட் டிஸ்னி.
ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்!
நம்மை வாழ்க்கையின் ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்தை நோக்கி நகர்த்த இறைவன் எந்த சோதனையை வேண்டுமானாலும் தருவான். தைரியமா FACE பண்ணுவோம்.
நாம் எதை வலி, வேதனை என்று சொல்கிறோமோ அதையே ‘வரம்’ ‘மகிழ்ச்சி’ என்று மாற்றக்கூடியவன் அவன்.
நீங்கள் கடினமான காலகட்டத்தில் இருக்கிறீர்களா?
“என்னை ஏன் இறைவா தேர்ந்தெடுத்தாய்?” என்று கேட்பதற்கு பதில், “நான் இதிலிருந்து என்ன கற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறாய் இறைவா?” என்று கேட்டுப்பாருங்கள்.
ஏனெனில், அந்த கேள்வியில் தான் உங்கள் முன்னேற்றத்தின் சாவி இருக்கிறது.
இந்த பிரபஞ்சமும் சரி… இறைவனும் சரி நமக்காக நல்லது செய்யவே விரும்புகிறார்கள். BUT அவர்கள் அளிக்கக்கூடிய PACKAGING IS DEFINITELY DIFFERENT. THAT’S ALL.
அது சரி…. நேராடியா கொடுத்தா என்ன? ஏன் இப்படி ஒரு DIFFERENT PACKAGE ??
அதெப்படிங்க… நீங்கள் இறைவனிடம் எதைக் கேட்டாலும், உங்களைவிட தகுதியான பலர் அதை உங்களுக்கு முன்பிருந்தே கேட்டுக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், உங்களுக்கு மட்டும் எப்படி அதை சுலபமாக தூக்கி தருவதாம்? எனவே தான் இந்த டெக்னிக். ¶¶
==========================================================
உங்கள் உதவி இந்த தளத்திற்கு அவசியம் தேவை…!
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
Also check :
எனக்கு ஒரு பிரச்சனை – தப்பு தப்பு – ‘சவால்’!
கழுதையை கட்டி வைத்த கயிறு நம்மை கட்டலாமோ?
வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக்
அலாவுதீனின் அற்புத விளக்கு செய்த வேலை!
உங்கள் வெற்றிக்கும் தோல்விக்கும் யார் பொறுப்பு?
ஆடுகளமும் ஆட்டக்காரர்களும் – ஆளுமை முன்னேற்றத் தொடர் – (5)
எதுக்கு இந்த விஷப்பரீட்சை? உன்னால ஜெயிக்க முடியுமா??
‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?
========================================================
[END]
சுந்தர்ஜி அவர்களுக்கு வணக்கம். தோல்வியை கண்டு துவளாமல் அதை ஒரு சவாலாக ஏற்று மாற்றி யோசித்ததால் மிக பெரிய உச்சத்தை தொட்ட வால்ட் டிஸ்னி உண்மை கதை அருமை .”முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் “
வாவ்… வால்ட் டிஸ்னியின் வெற்றிச்ச் சரித்திரத்தின் பின்னே இப்படி ஒரு நிகழ்வா?
இதே போல ஒரு போரில் தோற்று ஓடிய ஒரு மன்னன், எதிரிகளுக்கு அஞ்சி ஒரு குகையில் தங்கியிருந்தபோது, அங்கே சிலந்தி ஒன்று விடாமுயற்சியுடன் வலைப்பின்னுவதை பார்த்து தான் உத்வேகம் கொண்டு ஜெயித்த கதையை நம் தளத்தில் படித்திருக்கிறேன். என் குழந்தைகளுக்கு அந்தக் கதையை சொன்னதால் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.
அதில் சிலந்தி, இதில் சுண்டெலி. நாம் நம்பிக்கையுடன் இருந்தால் போதும், எங்கிருந்து வேண்டுமானாலும் நமக்கு வெளிச்சதிர்க்கான சாவி கிடைக்கும் என்பதை இந்த பதிவு உணர்த்துகிறது.
இறுதியில் இடம்பெற்றிருக்கும் பாலோ கோலோவின் வார்த்தைகள் அபாரம்.
நல்லதொரு பதிவுக்கு நன்றி.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
Dear SundarJi,
Excellent article.. many things to learn from this article.,,
Rgds,
Ramesh
Excellent sir
thank u very much
அருமையான பதிவு, சரியான தருணத்தில் எனக்கு மிகவும் உபயோகமான வார்த்தைகள்…
மீண்டும் மீண்டும் படிக்கிறேன்.
நன்றியுடன்…
——–செல்வா