இதற்கு என்ன தீர்வு?
மாணவர்களுக்கு கல்வியின் ஊடே தேவாரம் உள்ளிட்ட சைவத் திருமுறைகளை சொல்லிக்கொடுப்பது தான் இதற்கு தீர்வு! தேவாரம், திருப்புகழ் போன்ற தமிழ் திருமுறைகள் மற்றும் திருக்குறள் இவற்றை கற்பவர்களுக்கு மனம் சம்பந்தப்பட்ட நோய்கள் எந்தக் காலத்திலும் வராது. எதையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலைப் பெற்று அவர்கள் விளங்குவார்கள்.
அக்கால பள்ளிகளில் மனனம் என்பது முக்கியமான ஒரு அம்சம். மனனம் என்பது ஒரு அற்புதமான கற்றல் முறை. முக்கியமான சூத்திரங்களை, வாய்ப்பாடுகளை, பாடல்களை ஒரு முறை மனனம் செய்துவிட்டால் ஆயுசு முழுவதும் அவை மறக்காது. முதலில் மனனம் செய்துவிட்டால் பின்னர் பொருள் விளங்கிக்கொள்வது மிகவும் சுலபம். மேலும், சிறு வயதில் மனனம் செய்வது எளிது. பசுமரத்தில் எவ்வாறு ஆணி சுலபமாக பதிகிறதோ அவ்வாறே சிறுவயதில் மனனம் செய்வது பதிந்துவிடும். ஆனால், இந்த மனன முறைகள் எதற்கு பயன்படுத்தவேண்டுமோ அதை விட்டுவிட்டு, அனுபவத்தில் உணரவேண்டிய பாடங்களைக் கூட மனனம் செய்து தேர்வுத் தாளில் கொட்டுவது போன்று கல்விமுறை மாற்றப்பட்டுவிட்டது.
மேலும் திருமுறைகளை இளமையிலேயே கற்கத் துவங்கவேண்டும், அது பெரியவர்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல குழந்தைகளுக்கும் என்று உணர்த்தத்தான் பன்னிரு திருமுறைகளில் முதல் திருமுறையாக முதல் பாடலாக மூன்று வயது குழந்தை பாடிய “தோடுடைய செவியன் விடையேறி” என்ற பாடல் இடம்பெற்றிருக்கிறது. திருமுறைகளை இளமையிலேயே கற்கவேண்டும் என்பதற்கு இதைவிட பெரிய சான்று வேண்டுமா என்ன?
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே
– பன்னிரு திருமுறைகளில் முதல் பாடல் (அம்பிகையிடம் ஞானப்பால் உண்ட பின் சம்பந்தர் மூன்று வயதில் பாடியது!)
வேலூரில் குழந்தைகளுக்கான கோடைக்கால இலவச சைவ சமய பயிற்சி வகுப்பு!
வரும் கோடைக்காலத்தில் வேலூரில் காந்தி நகரில் உள்ள சாரதா வித்யாலயா என்ற பள்ளியில், மாணவர்களுக்கு ‘மூன்றாம் ஆண்டு கோடைக்கால இலவச சைவசமய பயிற்சி வகுப்பு’ நடைபெறவிருக்கிறது. நாளை தொடங்கி சுமார் 10 நாட்கள் இவ்வகுப்பு நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 150 மாணவர்கள் இவ்வகுப்புகளில் கலந்துகொண்டு பயன்பெற்று வருகிறார்கள். இது மூன்றாவது ஆண்டாக நடைபெறவிருக்கிறது. முதலாமாண்டு ‘அட்டவீரட்டான தலங்கள்’ பற்றி மாணவர்களுக்கு 10 நாட்கள் சொல்லிக்கொடுக்கப்பட்டது. அடுத்த ஆண்டு, சைவ சமய குரவர்கள் நால்வர் வாழ்க்கை வரலாறு பற்றியும் மாணவர்களுக்கு போதிக்கப்பட்டது. இவ்வாண்டு ‘திருவிளையாடற் புராணம்’ கருப்பொருளாக தேர்ந்தெடுக்கப்பட்ட்டுள்ளது.
உங்களுக்கு தெரிந்த நண்பர் / உறவினர் வீட்டுக் குழந்தைகள் இருந்தால் தாராளமாக இந்த பத்து நாள் வகுப்பில் சேர்க்கலாம்.
வயது 5 முதல் 15 வரை.
அனுமதி முற்றிலும் இலவசம்.
போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும். மற்றும் பங்கேற்பு சான்றிதழ்களும் வழங்கப்படும்.
முகவரி : ஸ்ரீ சாரதா வித்யாலயா, எண் 4, 22 வது கிழக்கு குறுக்கு சாலை, காந்தி நகர், வேலூர் – 632006. தொடர்புக்கு : 9944458470, 8682086322
இந்த ஆண்டு வகுப்புகளுக்கான துவக்கவிழா நாளை காலை 10.00 மணியளவில் வேலூர் காந்தி நகரில் உள்ள பள்ளி வளாகத்தில் நடைபெறவிருக்கிறது. இது பற்றி நம்மிடம் தெரிவிக்கப்பட்டு நாம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவர்கள் மத்தியில் பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.
உடனே ஒப்புக்கொண்டோம். நமக்கு குழந்தைகள் மத்தியில் பேச மேடை கிடைக்கிறதே என்பதற்காக அல்ல. இந்தக் காலத்திலும் அதுவும் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக நம் மாணவர்களுக்கு இலவசமாக சைவ சமயப் பயிற்சி அளிக்க இப்படியும் சிலர் இருக்கிறார்களே அவர்களை அவசியம் நேரில் கண்டு நம் தளம் சார்பாக கௌரவித்து, பேட்டியும் கண்டு நம் தளத்தில் வெளியிடவேண்டும் என்கிற எண்ணம் தான். எனவே பள்ளி முதல்வரையும் நிறுவனரையும் நேரில் சந்தித்து கௌரவிக்கவிருக்கிறோம். மேலும் பள்ளி மாணவர்களிடையே திருமுறைகளை அவசியம் கொண்டு செல்லவேண்டும் என்கிற நமது லட்சியத்திற்கு இது மிகப் பெரிய தீனி என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டோம்.
எனவே இன்று மதியம் வேலூர் புறப்படுகிறோம். அங்கு காங்கேயநல்லூர் வாரியார் ஸ்வாமிகள் வளாகத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்குகிறோம். நாளை காலை 10.00 மணியளவில் துவக்கவிழா நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கிறது.
அனைத்தும் நல்லபடியாக முடிய குருவருளும் திருவருளும் துணை நிற்க வேண்டுகிறோம்.
திருவருளால் வெள்ளிக்கிழமை சந்திப்போம்!
நன்றி!!
==========================================================
We are running purely on readers’ contribution. Support Rightmantra in its functioning. Please check the following link :
We need your support and financial assistance. Click here!
==========================================================
Also check :
திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!
பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்!
பிள்ளைகளுக்கு நீங்கள் மறக்காமல் சேர்க்க வேண்டிய ‘சொத்து’ என்ன தெரியுமா?
‘தீயவை மாள, பிணிகள் அகல, எதிர்கால சந்ததியினர் சிறக்க, தளம் சார்பாக ஒரு தடுப்பூசி!’
ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடிய திருஞானசம்பந்தர் குரு பூஜை!
எதுக்கு இத்தனை பதிகங்கள்? ஒரே பதிகம் / ஸ்லோகம் அத்தனை பலனையும் தராதா??
திருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள்!
பிள்ளைகளுக்கு என்ன சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்?
ஆலய தரிசனம் என்னும் அருமருந்து!
கோவில்களுக்கு செல்வதன் முழு பலனை அடைய….
பள்ளி மாணவர்களுக்கு இலவச திருமுறை வகுப்பு – சங்கர் அவர்களின் அயராத சிவத்தொண்டு!
‘மாணவர்கள் மனதில் மாணிக்கவாசகர்’ – திவாகரும் அவரது திருவாசகத் தொண்டும்!
நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் கரை புரள, சிவலோகத்தில் சில மணித்துளிகள்…!
======================================================
[END]
வாழ்த்துக்கள் சுந்தர் !!.
சுந்தர்ஜி அவர்களுக்கு வணக்கம் .
பள்ளி விடுமுறை காலத்தில் இலவச சைவ சமய பயிற்சி வரவேற்க தக்கது .
அங்கு செல்வதால் குழந்தைகள் பல ஆரோக்கியமான விசயங்களை கற்று கொள்ளள முடியும் .
இந்த வாய்ப்பு வேலூர் குழந்தைகளுக்கு கிடைத்திருப்பது அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும் .
இறையருளும் குருவருளும் இருந்தால் மட்டுமே சாத்தியம் .
எங்கும் ஆன்மிகம் தளைத்து அருள் ஒளி பரவட்டும் .