Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, October 8, 2024
Please specify the group
Home > Featured > வாழைப்பழ திருடனுக்கு கிடைத்த பேறு – சிவபுண்ணியக் கதைகள் (4)

வாழைப்பழ திருடனுக்கு கிடைத்த பேறு – சிவபுண்ணியக் கதைகள் (4)

print
சிவபுண்ணியம் தொடரில் இந்த அத்தியாயத்தில் நாம் பார்க்கப்போகும் சம்பவம் விராட தேசத்தில் நடைபெற்றது. விராட தேசம் பற்றிய குறிப்புக்கள் மகாபாரதத்தில் நிறைய இடங்களில் காணப்படுகிறது. (அநேகமாக இன்றைய ஜார்கண்ட் மாநிலமாக இருக்கலாம்). இப்போது நம் நாட்டில் உள்ள மாநிலங்கள் போல, அந்தக் காலத்தில் (பல ஆயிரம் வருடங்கள் முன்பு) மொத்த 56 தேசங்கள் இருந்தன. இப்போதுள்ள 35 மாநிலங்களும் இந்த 56 தேசத்தில் அடங்கிவிடும்.

விராட தேசத்தில் சீமந்தபுரம் என்னும் நகரம் இருந்தது. அந்நகரத்தில் அகரு என்கிற உத்தம அந்தணன் ஒருவன் வாழ்ந்து வந்தான். சாஸ்திர நெறிகள் வழுவாத வாழ்க்கை வாழ்ந்து வந்த அந்த உத்த பிராமணனுக்கு அவன் குலத்தின் பெயரைக் கெடுக்கக்கூடிய ‘சோமகன்’ என்கிற மகன் இருந்தான். இருக்கும் தீய பழக்கங்கள் அனைத்தும் அவனிடம் இருந்தன. போதாகுறைக்கு பல விலைமகளிருடன் அவனுக்கு தொடர்பு இருந்தது.

ஒரு நாள் சோமகன் வாழைமரங்கள் நிறைந்த புஷ்கர நாட்டிற்கு செல்லும்போது அங்கிருந்த வாழைத் தோட்டம் ஒன்றில் புகுந்து அங்கிருந்து ஒரு வாழைக்குலையை அறுத்து திருடிக்கொண்டு குறுக்கு வழியில் தன்னுடைய நகருக்கு ஓட்டமும் நடையுமாக சென்றுகொண்டிருந்தான்.

தோட்டக் காவலர்கள், தோட்டத்தில் திடீர் சலசலப்பு கேட்டதையடுத்து என்ன ஏதென்று வந்து பார்த்தபோது இவன் கையும்களவுமாக சிக்கிக்கொண்டான். உடனே அவனை பிடித்து கயிற்றில் கட்டி அந்நாட்டு அரசனுக்கு முன் கொண்டு நிறுத்தினர்.

இக்காலம் போல அல்ல அக்காலம். களவு முதலான செயல்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும். இருப்பினும் ஆராயாமல் தீர்ப்பு சொல்லமாட்டார்கள்.

அரசன் இவனைப் பற்றி விசாரித்தபோது இவனது துர்நடத்தை பற்றி அறிந்துகொண்டான். சோமகனின் தந்தையின் பொருட்டு அவன் உயிரைப் பறிக்காமல், அவனது கைகளில் ஒன்றை மட்டும் வெட்டுமாறு கூறி அவனை உயிரோடு விட்டுவிட்டான்.

ஆடின காலும், பாடின வாயும், திருடிய கைகளும் சும்மாயிருக்காது அல்லவா?

இருகரங்கள் இருந்தபோதே சோமகன் உழைத்து உண்டதில்லை. தற்போது ஒரு கையை இழந்துவிட்ட நிலையில், திருட்டையே பிரதானமாக கொண்டு பல வித திருட்டுச் செயல்களில் ஈடுபட்டு வந்தான்.

இந்நிலையில் ஒரு நாள் தனது நாட்டு அரசனுக்கு சொந்தமான வனத்தில் நுழைந்து அங்கிருந்த உயர் ரக வாழைமரங்களில் விளையும், வாழைப்பழங்களை தினசரி திருடி அவற்றை சந்தையில் விற்று வந்தான். இப்படியாக அவன் திருடிவந்த காலகட்டங்களில் ஒரு நாள் காவலாளிகளிடம் அகப்பட்டுக்கொண்டான்.

அரசன் முன் கொண்டு வந்து நிறுத்தியபோது, ஒரு கையை வெட்டியும் இவன் திருந்தவில்லையா என சினம்கொண்டு, இம்முறை அவனை மாறுகால் மாறுகை வாங்கும்படி உத்தரவிட்டான்.

இதையடுத்து அவனை சிறைக்கூடத்தில் அடைத்து அரசன் விதித்த தண்டனையை நிறைவேற்றினர் காவலர்கள். ஒரு நாள் உயிரோடு இருந்த சோமகன், மறுநாள் துன்பம் தாளாமல் உயிர் துறந்துவிட்டான்.

உடனே எம தூதர்கள் அங்கு வந்து அவனை பாசத்தால் கட்டியிழுத்துச் சென்று எமதர்மன் முன்னிலையில் அவனை நிறுத்தினார்கள்.

அனைத்தையும் விசாரித்த எமதர்மன், தனது தூதர்களை நோக்கி, “காலதூதர்களே இந்த பாபி செய்த பாவங்களுக்கு அளவேயில்லை. ஒரு நாள் இவன் தன்னுடைய தொழிலான வாழைப்பழ திருட்டை அரங்கேற்றி குறுக்கு பாதை ஒன்றில் வேகமாக சென்றுகொண்டிருந்தான். தோட்டத்து காவலாளிகள் இவன் குலையை திருடிக்கொண்டு செல்வதைப் பார்த்துவிட்டார்கள். இவனை அவர்கள் துரத்த இவன் அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக வேகமாக ஓடினான்.

அவனுடைய பூர்வஜெனம் புண்ணியம் அப்போது வேலை செய்ய ஆரம்பித்தது. வாழைக்குலையை தூக்கிக்கொண்டு ஓடுவதற்கு சிரமமாக இருந்த காரணத்தால் அவற்றை வழியில் தென்பட்ட ஸ்ரீ ஹாடகேஷ்வர சுவாமியின் ஆலயத்தில் அதைப் போட்டுவிட்டு இவன் முன்னைவிட வேகமாக ஓடி மறைந்தே போனான்.

shiva temple

மறுநாள் காலை கோவிலை திறந்த ஆலய நிர்வாகத்தினர் உள்ளே ஒரு வாழைப்பழ குலை இருப்பதை பார்த்து அரசனுக்கு தெரிவித்தனர். அரசனும் அதைக் கேட்டு வியப்படைந்து, அப்பழங்களை சுவாமிக்கும் அம்பாளுக்கும் செய்யும் அபிஷேகத்தில் பயன்படுத்திக் கொள்ளும்படி உத்தரவிட்டான். அர்ச்சகர்களும் அப்பழங்களை பிசைந்து தேனும் வெள்ளமும் கலந்து அம்மையப்பனுக்கு அபிஷேகம் செய்து மகிழ்ந்தார்கள்.

இந்த ஒரு செயலின் காரணமாக இவன் பாபங்கள் அனைத்தும் நீங்கி மகா புண்ணியவானாக மாறிவிட்டான். இவன் செல்லவேண்டிய இடம் நரகம் அல்ல. கங்காதரன் வீற்றிருக்கும் கயிலையே ஆகும். சிவதூதர்களுக்கு இது தெரிந்து அவர்கள் சினம் கொள்வதற்கு முன்பு உடனே இவனை பாசத்திலிருந்து விடுவியுங்கள் என்று தனது தூதர்களுக்கு அறிவுறுத்தினான்.

தங்கள் எஜமானரின் உத்தரவையடுத்து தங்கள் பாசங்களில் இருந்து சோமகனை விடுவித்த காலதூதர்கள் அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.

இங்கே சிறைச்சாலையில் யாவரும் அதிசயிக்கும் வண்ணம் மீண்டும் உயிர் பெற்று எழுந்து உட்கார்ந்தான் சோமகன். வெட்டுண்டு உயிர் நீத்தவன் மீண்டும் உயிர் பிழைத்த அதிசயத்தை கேள்விப்பட்ட மன்னன் சிறைக்கூடத்திற்குக் விரைந்து வந்தான். அவனிடம் சோமகன் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினான்.

இவன் கூறிக்கொண்டிருக்கும்போதே அதை மெய்ப்பிக்கும்விதமாக ஒரு அழகிய விமானத்தில் அங்கு வந்த சிவகணங்கள் சோமகனை அதில் ஏற்றிகொண்டு சென்றார்கள்.

வரலாற்று தகவல் : திருநாவுக்கரசர் தனது ஆறாம் திருமுறையில் பதினாறு வகையான சிவத்தலங்களை பற்றி குறிப்பிடுகிறார். அகத்தீச்வரம், நாகேச்வரம், திண்டீச்வரம் இப்படி. அதில் ஒன்று தான் இந்த பதிவில் வரும் ஹாடகேஷ்வரம். இன்றும் வடநாடு முழுதும் நூற்றுக்கணக்கான ஹாடகேஷ்வரர் கோவில்கள் உள்ளன. (தமிழில் ‘ஆடகேசுவரர்’).

கயிலையில் உமாமகேஸ்வரனை தரிசித்து மனம் குளிர்ந்த சோமகன் அங்கேயே நீண்டகாலம் தங்கியிருந்து இறுதியில் முக்தி பெற்றான்.

சிவபுண்ணியத்தின் மகிமை அளவிடக்கரியது. கற்பனைக்கும் அனுமானத்திற்கும் அப்பாற்ப்பட்டது.

‘சிவபுண்ணியம்’ பற்றி நமக்கு கூறும் அகஸ்தியர், துர்வாசர் போன்ற மகரிஷிகள் சிவபுண்ணியத்தை பற்றி கேட்டாலே அனைவரது பாபங்களும் நீங்கிவிடும் என்று சான்றளித்திருக்கிறார்கள். எனவே இந்த தொடரை பக்தியோடும் நம்பிக்கையோடும் படித்துவரவேண்டும்.

அடுத்தடுத்த அத்தியாயங்களில் மேலும் பல பிரமிப்பூட்டும் சம்பவங்களை பார்க்கலாம்…!

இரக்க முன்னறி யாதெழு தூதுவர்
பரக்க ழித்தவர் பற்றுதன் முன்னமே
அரக்க னுக்கருள் செய்தவாட் போக்கியார்
கரப்ப துங்கரப் பாரவர் தங்கட்கே.

– திருநாவுக்கரசர் (ஐந்தாம் திருமுறை)

பாடல் விளக்கம் :  இரக்கமென்பதை முன்னும் அறியாது எழுந்த எமதூதுவர்கள் பரவிவந்து அழித்துப் பற்றிக்கொள்வதற்கு முன்பே , இராவணனுக்கு அருள்செய்த வாட்போக்கி இறைவர் அவர்கட்கு அகப்படாமல் தம்மடியாரை ஒளிக்கவும் ஒளிப்பர்.

….. சிவபுண்ணியக் கதைகள் தொடரும் 

========================================================

சிவபுண்ணியக் கதைகள் முந்தைய பாகங்களுக்கு…

பசுவின் பால் கொடுத்த சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (3)

தந்தையை காத்த, தனயனின் சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் (2)

கூற்றுவன் அஞ்சுவது யாரைக் கண்டு தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (1)

==========================================================

Rightmantra needs your help….

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

Also check கர்மா Vs கடவுள் earlier episodes…

கர்மாவை வென்ற காருண்யம் – கர்மா Vs கடவுள் (5)

விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)

கர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)

நம் தலைவிதியை மாற்ற முடியுமா? பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள்? – கர்மா Vs கடவுள் (2)

ஊழ்வினையை அனுபவித்தே தீரவேண்டுமா? அது அத்தனை சக்திமிக்கதா? கர்மா Vs கடவுள் (1)

கூற்றுவன் அஞ்சுவது யாரைக் கண்டு தெரியுமா? – சிவபுண்ணியக் கதைகள் (1)

==========================================================

Similar articles…

சிவபெருமானின் முக்கண் எவை தெரியுமா?

ஜப்திக்கு போன யானை சிவத் தொண்டுக்கு வந்த கதை!

கபாலீஸ்வரருடன் ஒரு பொன்மாலைப் பொழுது!

‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!

பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?

சிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது? – சிவராத்திரி SPL 5

கிரக லட்சணம், கோ சம்ரட்சணம்!

சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!

ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!

Thalaivar is always great!

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

மனதில் ஏற்பட்ட திடீர் குழப்பம் – கற்பகாம்பாளுடன் தோன்றி விடை சொன்ன கபாலீஸ்வரர்!

தண்டியடிகளுக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த இடம் – ஒரு நேரடி ரிப்போர்ட்!

பதிகங்கள் புரியாத அதிசயம் உண்டா?

தலைவருடன் ஒரு சந்திப்பு!

நாள் கிழமை விஷேடங்களின் போது ஏன் அவசியம் ஆலயத்திற்கு செல்லவேண்டும்?

கேட்காமலே அள்ளிக் கொடுப்பவனிடம் கேட்க என்ன இருக்கிறது?

==========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *