Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Monday, June 24, 2024
Please specify the group
Home > Featured > திருக்குறிப்புத் தொண்டரை ஆட்கொண்ட முக்தீஸ்வரர் தரிசனம் – Rightmantra Prayer Club

திருக்குறிப்புத் தொண்டரை ஆட்கொண்ட முக்தீஸ்வரர் தரிசனம் – Rightmantra Prayer Club

print
க்தி இலக்கிய வரலாற்றில் மிகப் பெரும் புரட்சி செய்த நூல் சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் எனப்படும் ‘பெரியபுராணம்’. காரணம், இறைவனின் அருளைப் பெற ஒருவர் தான் செய்யும் தொழிலை எல்லாம் விட்டுவிட்டு முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்கிற கருத்தை உடைத்து நொறுக்கி – இல்லறத்தில் ஈடுபட்டபடியே ஒருவர் தொண்டு செய்து இறையருளை பெறமுடியும் – என்பதை உணர்த்திய வாழ்வியல் வழிகாட்டி பெரியபுராணம்.

Thirukkurippu Thondar 1

இந்த 63 நாயன்மார்களும் கி.பி. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்தவர்கள். இவ்வடியார்கள் வாழ்ந்த ஊர்கள் இன்றும் இருக்கின்றன. அவர்கள் வாழ்ந்த வீடும் இருக்கிறது.

63 நாயன்மார்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை உடையவர்கள். ஆனால் ஈசன் மேல் கொண்ட அன்பில், பக்தியில் அனைவரும் ஒருவரே.

அவர்களில் திருக்குறிப்பு தொண்டரை பற்றி இன்று பார்ப்போம். இன்று சித்திரை சுவாதி – திருக்குறிப்பு தொண்டரின் குருபூஜை.

நமது பிரார்த்தனை பதிவின் கட்டமைப்பு 

பிரார்த்தனை பதிவுகள் ஒரு வகையில் THERAPEUTIC MYTH போல. இவற்றை படிப்பதே சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து படிப்பவர்களுக்கு விடுதலை அளிக்கக்கூடும். அந்த வகையில் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவும் கவனமாக தயாரிக்கப்படுகிறது.

1) முதலில் இறைவனின் பெருமையை கூறும் கதை அல்லது புராணச் சம்பவம்.

2) கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கு ஏற்ப, ஒரு கோவிலின் கோபுரத்தின் படம்.

3) அடுத்து பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் அருளாளரைப் பற்றிய குறிப்பு.

4) அதற்கு அடுத்து சமர்பிக்கப்படும் பிரார்த்தனைகள்.

5) அதற்கு பிறகு, பொதுப் பிரார்த்தனை. நமது கூட்டுப் பிரார்த்தனையை வலிமையுள்ளதாக ஆக்கும் அம்சங்களில் இது முக்கியமான ஒன்று. காரணம், நமது பிரச்னைகளுக்காக மட்டுமல்லாது பொதுப் பிரச்சனைகள் மற்றும் தேசத்தின் நலன் குறித்தும் பிரார்த்தனை செய்வதால் கூட்டுப் பிரார்த்தனைக்கு உண்மையான அர்த்தம் கிடைத்துவிடும்.

6) அதற்கு பிறகு CONFESSION. இதுவரை நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு, இனி அதை செய்யாதிருக்கும் வண்ணம் இறைவனின் திருவருளை வேண்டுவது.

ஆக, இத்தனை மகத்துவமான விஷயங்களை ஒருவர் படித்தாலே அவருக்கு பாதிப் பிரச்சனைகள் தீர்ந்தது போல. மேற்கூறிய பிரார்த்தனையை சமர்பித்துள்ள வாசகர்கள் தவிர, பிறர் இதை படிக்கும்போதும் அவர்கள் பிரார்த்தனை செய்யும்போதும் அவர்களுக்கும் நன்மை விளையும் என்று சொல்லவேண்டுமா என்ன?

தொண்டுக்கோர் திலகம் சூட்டிய திருக்குறிப்பு தொண்டர்! 

சிவத்தொண்டு செய்வதற்கு பணமோ பொருளோ தேவையில்லை. மனம் போதும் என்று உணர்த்தியவர் திருக்குறிப்பு தொண்டர்.

காஞ்சியில் ஏகாலியர் (வண்ணார்) குலத்தில் தோன்றியவர் திருக்குறிப்பு தொண்டர். இவர் சிவனடியார்களின் குறிப்பறிந்து செயல்பட்டதால் இவருக்கு இந்த பெயர் வந்தது.

வறுமையான குடும்ப சூழலில் வாழ்ந்து வந்த திருக்குறிப்பு தொண்டர் காஞ்சியில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் மீது பேரன்பும் பக்தியும் கொண்டிருந்தார்.

சிவதொண்டு செய்வதற்கு பொருள் வசதியோ இட வசதியோ இவருக்கு இல்லை. எனவே தான் செய்து வரும் சலவைத் தொழிலையே சிவதொண்டுக்கு பயன்படுத்தி வந்தார்.

muktheeswarar gopuram 1

Thirukkurippu thondar 22“சிவனடியார்களின் ஆடைகளை துவைத்து மாசு நீக்கி கொடுத்தாலே தம்முடைய பிறப்பின் மாசு கழியும்” என்ற தத்துவத்தை இவர் உணர்ந்திருந்தால், தினந்தோறும் ஒரு சிவனடியாருக்கேனும் ஆடைகளை துவைத்து உலர்த்தி தரும் தொண்டை செய்து வந்தார்.

இவரது பெருமையை காஞ்சியில் குடிகொண்டுள்ள ஏகம்பர் உலகறிய செய்ய விரும்பினார்.

ஒரு நாள் இறைவன் கந்தலாடையை உடுத்தி கொண்டு திருநீறு பூசிய உடலுடன் குளிரில் நடுங்கிக் கொண்டே திருக்குறிப்பு தொண்டரின் இல்லத்திற்கு வந்தார்.

அவரை வரவேற்று உபசரித்த திருக்குறிப்பு தொண்டர், சிவனடியாரின் அழுக்கடைந்த கந்தல் துணியையும், மெலிந்த உடலையும் கண்டு வருத்தமடைந்து, “ஐயா! நான் சிவனடியார்களின் ஆடைகளை சுத்தம் செய்து கொடுத்து விட்டு தான், மற்றவர்களின் ஆடையை துவைப்பேன். எனவே தாங்கள் தங்களது உடையை கொடுத்தால் உடனே சுத்தம் செய்து கொடுத்து விடுகிறேன்,” என பணிவோடு கேட்டார்.

“இந்த குளிரில் இருக்கும் ஒரு ஆடையையும் உன்னிடம் கொடுத்து விட்டால் என் பாடு திண்டாட்டமாகி விடுமே,” என்றார் அடியார் வேடத்தில் எழுந்தருளியிருந்த இறைவன்.

“ஐயா! அப்படி சொல்லாதீர்கள். விரைவாக துணியை துவைத்து உலர்த்தி தருகிறேன்,” என்றார்.

muktheeswarar

“இன்று மாலை பொழுது சாய்வதற்குள் துணியை வெளுத்து என்னிடம் தந்து விட வேண்டும்,” என்ற நிபந்தனையுடன் அணிந்திருந்த கந்தலாடையை களைந்து கொடுத்தார் சிவன்.

திருக்குறிப்பு தொண்டர் ஆடை பயபக்தியுடன் வாங்கி, தனது மூட்டைக்குள் வைத்து பாலாற்றை நோக்கி புறப்பட்டார்.

சோதனையின்றி சிவனருள் சாத்தியமா என்ன?

வருணபகவானை அழைத்த ஈசன் திடீரென புயலும் மழையுமாய் வீசச் சொன்னார். பாலாற்றில் துணியை துவைத்துக்கொண்டிருந்த திருக்குறிப்பு தொண்டர் திடீரென பெய்த பெருமழையால் கலங்கி தவித்தார்.

Thirukkurippu thondar

மாலையும் நெருங்கி விட்டது. மழை நின்றபாடில்லை. சிவனடியாருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போனதே என்று வருந்தி இனி நாம் உயிரோடிருப்பதே வீண் என்று கருதி தான் ஆடைகளை துவைக்கும் கல்லில் தலையை மோதி உயிர் விட தயாரானார்.

அதற்கு மேலும் அடியாரை சோதிக்க விரும்பாத இறைவன் துவைக்கும் கல்லில் இருந்து தன் திருக்கரத்தை நீட்டி தொண்டரின் தலை மோதாமல் தடுத்து ஆட்கொண்டார்.

Kanchipuram Muktheeswarar Temple 4 d copy

அப்போது வானத்தில் பேரொளி பிறந்தது. இறைவன் உமையொரு பாகனாய் விடை மீது தோன்றி, அடியவரை நோக்கி,””உன் பெருமையை இந்த உலகுக்கு உணர்த்தவே நாம் இவ்வாறு செய்தோம். இனி கயிலை வந்து எம்முடன் இருப்பீராக” என கூறி மறைந்தார். திருக்குறிப்பு தொண்டரும் இறைவனின் திருவடியை அடைந்தார்.

இறைவன் நடத்திய மேற்படி திருவிளையாடல் நடந்த தலம் தான் காஞ்சி முக்தீஸ்வரர் திருக்கோயில். சன்னதிக்கு நேர் எதிரே நுழைவு வாயிலில் சுதை வடிவில் இந்த வரலாறு காட்டப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் இந்த தலம் உள்ளது. காஞ்சி செல்பவர்கள் அடுத்த முறை முக்தீஸ்வரரையும் அவசியம் தரிசியுங்கள்!

==========================================================

முக்தீஸ்வரர் கோவில் படங்கள் கிடைத்த கதை!

* இந்த பதிவை தயாரித்துக்கொண்டிருந்தபோது, சம்பந்தப்பட்ட முக்தீஸ்வரர் கோவிலின் புகைப்படங்களை அளித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சென்னை நகர் அல்லது புறநகர் என்றால் நாமே நேரில் சென்று புகைப்படங்களை எடுத்திருப்போம். முக்தீஸ்வரர் கோவில் இருப்பதோ காஞ்சி நகரத்தில். எனவே என்ன செய்வது என்று யோசித்த போது, காஞ்சியில் வசிக்கும் நண்பர் வெங்கட கிருஷ்ணன் என்பவர் நினைவுக்கு வந்தார். அவரை தொடர்புகொண்டு, இது போன்ற பதிவை நாளை திருக்குறிப்பு  தொண்டரின் குருபூஜையை முன்னிட்டு பிரார்த்தனை பதிவுடன் அளிக்கிறேன். முக்தீஸ்வரர் கோவிலின் புகைப்படங்களை அளித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது… நீங்கள் காந்தி ரோடு சென்று கோவிலின் புகைப்படங்களை எடுத்து அனுப்ப முடியுமா என்று கேட்டோம். அவர், தான் பணி நிமித்தமாக தற்போது வெளியூர் சென்றிருப்பதாகவும் வார இறுதியில் தான் காஞ்சி திரும்புவேன் என்றும் சொன்னார். இருப்பினும் நமது நோக்கத்தையும் தேவையையும் உணர்ந்தவர், “கவலைப்படாதீங்க ஜி, என் தம்பியை காலைல கோவிலுக்கு நேரே போகச் சொல்லி அவனை ஃபோட்டோ எடுத்து உங்களுக்கு வாட்ஸ் அப்ல அனுப்பச் சொல்றேன்” என்றார். சொன்னது போலவே, வெங்கட கிருஷ்ணனின் சகோதரர் படங்களை எடுத்து அனுப்பச் சொன்னார். ஒன்றிரண்டு படங்களை நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சலித்துக்கொள்ளாமல் வேறு வேறு கோணங்களில் எடுத்து மறுபடியும் அனுப்பினார். நாமே சென்று முக்தீஸ்வரரை நேரில் சந்தித்து படம் எடுத்ததைப் போல உணர்ந்தோம்.

நண்பருக்கும் அவரது சகோதரர் திரு.தேவராஜன் அவர்களுக்கும் சிவபுண்ணியம் கிடைக்க ஈசனை வேண்டுகிறேன்.

==========================================================

நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…

முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : மேற்கு மாம்பலம் ஸத்குரு ஸபா வேத பாடசாலை மாணவர்கள் 

தி.நகர் சுப்பிரமணி தெருவில் உள்ளது ஸத்குரு ஸபா வேத பாடசாலை. இங்குள்ள கோசாலைக்கு பிரதி மாதம் நம் தலம் சார்பாக தீவனம் அளிக்கப்பட்டு வருகிறது. தவிர கடந்த தீபாவளிக்கு இங்குள்ள மாணவர்கள் அனைவருக்கும் நம் தளம் சார்பாக பட்டாசு, துணிமணிகள் இனிப்புக்கள் வழங்கி கோ-பூஜையும் செய்தது குறிப்பிடத்தக்கது.

இங்கு சுமார் 20 வித்யார்த்திகள் தங்கி வேதம் படித்து வருகிறார்கள். அவர்களுள் ஒருவன் போன்று பழகுவதால் மாணவர்கள் நம்மை பார்த்தாலே குஷியாகிவிடுவார்கள்.

DSC05561

இங்கு அடிக்கடி சென்று அம்மாணவர்களுடனும் கோசாலையில் உள்ள கன்றுக்குட்டிகளுடனும் சிறிது நேரம் செலவிடுவது நம் வழக்கம். மாணவர்களுக்கு பிரியமானதையும் வாங்கிச் சென்று அவர்களுக்கு அளித்து அவர்கள் படும் சந்தோஷத்தை கண்டு ஆனந்தப்படுவது நமது வழக்கம்.

DSC07534

கடந்த வாரம் ஒரு நாள் பாடசாலையை நிர்வகித்து வரும் திரு.பாலசுப்ரமணிய கனபாடிகளை சந்தித்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி, பாடசாலை வித்யார்த்திகள் இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். மகிழ்ச்சியுடன் இசைந்திருக்கிறார்கள்.

வேதம் படிக்கும் மாணவர்கள் நமது பிரார்த்தனைக்கு  தலைமை  ஏற்கிறார்கள் என்பது நாம் செய்த பாக்கியமே அன்றி வேறில்லை. எல்லாம் ஈசன் கருணை.

Also check : கோ பூஜையும் வேத சம்ரட்சணமும்!

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருப்பவர்கள் பற்றிய சிறு அறிமுகம்: 

இந்த வார பிரார்த்தனைக்கு முதலாவதாக கோரிக்கை அனுப்பியிருக்கும் நண்பர் அயல்நாடு ஒன்றில் மென்பொருள் பொறியாளராக உள்ளார். குடும்பப் பிரச்சனைகளால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஒருவருக்கு வீட்டில் அமைதி கிடைக்கவில்லை என்றால் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் அமைதி கிடைக்காது. எனவே நாம் எப்போதும் இறைவனிடம் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்கையையே வேண்டி பிரார்த்திக்கவேண்டும். கூட்டுப் பிரார்த்தனை மீது நம்பிக்கை வைத்து நமது மன்றத்தில் இவர் கோரிக்கை வைத்திருப்பதால் விரைவில் இவரது துன்பம் நீங்கி இன்பம் பெருகும் என்று எதிர்பார்க்கலாம்.

அடுத்த கோரிக்கையை அனுப்பியிருக்கும் திருமதி.லலிதா ராமநாதன் முகநூலில் நாம் அளித்த பிரார்த்தனை குறித்த அப்டேட்டுக்களை பார்த்து நம்மிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு விபரங்கள் கேட்டறிந்தார். பின்னர் நமது வேண்டுகோளுக்கிணங்க ஒரு தாளில் பிரார்த்தனையை எழுதி அதை ஸ்கேன் செய்து நமக்கு மின்னஞ்சலில் அனுப்பினார். தனக்காக அல்ல தனது உறவினருக்காக இந்த பிரார்த்தனையை அவர் சமர்பித்திருக்கிறார். அவரது நல்லுள்ளத்துக்கு நன்றி.

அடுத்த கோரிக்கை நண்பர் ராகேஷ் அனுப்பியிருக்கிறார். தனது அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியர் ஒருவரின் உறவினருக்காக இந்த பிரார்த்தனையை அவர் சமர்பித்திருக்கிறார். புற்றுநோயால் உருக்குலைந்து போயுள்ள ஒரு இல்லத்தரசி நலம் பெறவேண்டி அவர் அனுப்பியுள்ள பிரார்த்தனை இது.

கடைசி கோரிக்கை திருமதி.லக்ஷ்மி அவர்களுடையது. சென்ற வாரமே இவரது கோரிக்கை தனிப் பதிவாக இடம்பெற்றிருந்தாலும், வேத பாடசாலை மாணவர்கள் தலைமை ஏற்கும் இந்த வார பிரார்த்தனையில் அவரது கோரிக்கை இடம்பெற்றால் நன்றாக இருக்கும் என்பதால் இந்த வாரமும் பிரார்த்தனை பதிவில் சேர்த்திருக்கிறோம். மேலும் அவர் எழுதவிருக்கும் பதவி உயர்வுக்கான தேர்வு நாளை மறுநாள் (ஞாயிறு) நடைபெறவுள்ளது. இவரைப் போன்றவர்கள் அவசியம் வெற்றி பெற்று பதவி உயர்வு பெறவேண்டும். இவரது சேவை மேன்மேலும் சிறக்க வேண்டும்.

பொதுப் பிரார்த்தனை… என்ன சொல்ல… காலத்தின் தேவை. அவசியம் அனைவரும் பிரார்த்தியுங்கள்.

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

(1) Want peace and harmony!

Dear Rightmantra Editor and friends,

I married six years ago and God has blessed me with two daughters. What my problem is my marriage life is not harmonious after the initial 2 years. My wife is highly short tempered and gets irritated even for small small issues. This has resulted in a huge family tussle. Now she is abusing each and every person in my family. Though we are living together, there is no harmony in life. Every now and then my wife re-collects the past issues and starts verbally abusing me. We live as a nuclear family though.

I have tried many ways for getting things moving but nothing had worked out. My parents also suffered as my married life is not going well.

May i request you all to pray for bringing peace and harmony in my life.

Thanks
Don’t want to disclose my name

(2) உறவினரின் BRAIN TUMOUR குணமாகி நலம் பெறவேண்டும் & மகள் திருமணம் நடைபெறவேண்டும்!

நமஸ்காரம்.

எங்களது உறவினர் திரு.விஸ்வநாதன் திருச்சியில் இருக்கிறார். சில வாரங்களுக்கு முன்னர் ஒரு நாள் வாந்தி வந்தது. தொடர்ந்து தலைவலி. மருத்துவமனைக்கு சென்று காண்பித்ததில் பல்வேறு பரிசோதனைகள் செய்து இறுதியில் அவருக்கு BRAIN TUMOUR என்று கூறிவிட்டனர்.

இதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை கடந்த 8 ஆம் தேதி நடைபெற்றது. இருப்பினும் பெரிய முன்னேற்றம் இல்லை. அவருக்கு தாய், தந்தை மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

அவர் பூரண குணம் அடைந்து அவர் மகளுக்கு திருமணம் அவர் கையாலேயே செய்து வைக்கவேண்டும் என்று குடும்பத்தினர் ஏங்குகின்றனர். அவரது உடல்நிலை குறித்து பெரிதும் கவலைகொண்டுள்ளனர்.

அவர் பரிபூரண குணம் பெற்று அவர் மகளுக்கு சீரும் சிறப்புமாக் அவரே திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
லலிதா ராமநாதன்,
கே.கே.நகர், சென்னை – 83

(3) டெனிலா டெஸ்மண்ட் அவர்கள் புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு வரவேண்டும்!

சுந்தர் அண்ணாவுக்கும் ரைட்மந்த்ரா பிரார்த்தனை குழு அங்கத்தினர்களுக்கும் என் வணக்கம்.

என் நண்பர் பிரபு அவர்களின் குடும்ப நண்பர் டெனிலா டெஸ்மண்ட் அவர்களுக்காக இந்த கோரிக்கையை சமர்பிக்கின்றேன்.

டெனிலா டெஸ்மண்ட் மிக இனிமையான நபர். ஒரு சிறந்த இல்லத்தரசி. ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கின்றார். 2014 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வில் துரதிர்ஷ்டவசமாக அவருக்கு லிம்போமா நிலை 4 (புற்றுநோய்) உள்ளது என கண்டறியப்பட்டது.

தொடர்ந்து கீமோதெரபி சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது. கீமோதெரபி சிகிச்சை 6 முறை செய்யப்பட்டும் எந்த பலனும் இல்லை. இப்போது அவரது கடைசி நம்பிக்கை ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை தான்.

ஸ்டெம் மாற்று சிகிச்சை செய்வதற்கான ஆயத்த பணிகள் நடை பெற்று கொண்டிருக்கின்றன. அவருக்கு வேண்டிய பொருளுதவி கிடைத்த அந்த சிகிச்சை வெற்றி பெறவேண்டும்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் என் நண்பருக்காக இந்த கோரிக்கையை சமர்பிக்கிறேன். டெனிலா டெஸ்மண்ட் அவர்கள் புற்றுநோய் பாதிப்பிலிருந்து முழுமையாக நீங்கி பரிபூரண ஆரோக்கியம் பெறவும், அவர் தன் பணிகளை செம்மையாக செய்யவும் அவரது இல்லறம் சிறக்கவும் இறைவனை வேண்டுகிறேன்.

– ராகேஷ் ராதாகிருஷ்ணன்,
எஸ்டான்ஸியா ஐ.டி. பார்க், சென்னை.

(4) தேர்வில் வெற்றியும் பதவி உயர்வும் பெறவேண்டும்!

வணக்கம் நண்பர்களே….

என் பெயர் எம்.அழகுலட்சுமி. என் கணவர் பெயர் முத்துக்குமார். எனக்கு இரண்டு குழந்தைகள். நான் போஸ்டல் டிபார்ட்மெண்ட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். என் குடும்ப முன்னேற்றத்திற்காக போஸ்டல் டிபார்ட்மென்ட் எக்ஸாம் வரும் ஞாயிறு 24. 04. 2016 அன்று எழுதப் போகின்றேன். அத்தேர்வில் வெற்றிபெற்று பதவி உயர்வு கிடைக்கவும், அப்பதவி உயர்வில் எந்தவித தடங்கலும் இல்லாமல் இருக்கவேண்டும் என்று என் கோரிக்கைகளை ஆண்டவனிடம் அர்ப்பணிக்கிறேன். நான் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கி உள்ளேன். அதிலிருந்து மீண்டு வரவேண்டும் என்று ஆண்டவனிடம் மிகப்பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஆதலால் என் கோரிக்கைகளை இக்கூட்டு பிரார்த்தனையில் வைத்து என் குடும்பம் சிறந்து விளங்கவும், மேலும் மேலும் நான் டிபார்ட்மெண்ட்டில் சின்சியர் வொர்க்கர் ஆக பணிபுரிய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

– எம்.அழகுலட்சுமி, Post-Woman,
மேற்கு மாம்பலம்

* தாங்கள் கோரிக்கை அனுப்பி அது இன்னும் நம் மன்றத்தில் வெளியாகவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வாசக அன்பர்கள் மீண்டும் அந்த கோரிக்கையை (அதே மின்னஞ்சலை) திரும்ப அனுப்பவும். (அல்லது) நம்மை தொடர்புகொள்ளவும். நன்றி.

==========================================================

பொது பிரார்த்தனை

வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் தேசம்! கருணை மழை வேண்டும்!!

கோடைக் காலம் துவங்கியுள்ளதையடுத்து முழுதும் பல மாநிலங்கள் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன.

கர்நாடகம், மகாராஷ்டிரம், தெலங்கானா, ஒரிஸ்ஸா, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் கடும் வறட்சி நிலவி வருவதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீரின்றி தவிக்கிறார்கள். வெயில் தணலாய் தகிப்பதால் தமிழகமும் விரைவில் வறட்சியின் பிடியில் சிக்கக் கூடும்.

india-drought

மேற்கூறிய மாநிலங்களில் பெரும்பாலான நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டுள்ளன. நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதால், மக்கள் குடிப்பதற்குக் கூட தண்ணீர் கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர். விளை நிலங்கள் தண்ணீரின்றி பாளம் பாளமாக வெடித்து காணப்படுகிறது. மனிதர்களே தண்ணீர் இன்றி சிரம்மப்ப்படும்போது கால்நடைகள் நிலை கேட்கவேண்டுமா என்ன?

இதனால் வறட்சி காணப்படும் பகுதிகளிலிருந்து மக்கள் நீர் தேடி வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இதேபோன்று தெலங்கானா மாநிலத்திலும் வறட்சி நிலவி வருகிறது. அங்குள்ள அணைகளில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது.

கர்நாடகாவில், காவிரி ஆறு பாயும் பல்வேறு மாவட்டங்களிலும் வறட்சி ஏற்பட்டுள்ளது, கர்நாடக, தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு தண்ணீர் பஞ்சத்தில் தவித்து வருகிறது.

drough

இதனிடையே தெலங்கானாவில் கனகையா என்ற விவசாயி ஒருவர் வயலில் கடும் வறட்சி காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது கடைசி வார்த்தை ‘ குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்’ என்று மனைவியிடம் பேசியுள்ளார். எப்போதும் வயலில் இரவு தங்கும் போது இப்படி கூறுவது வழக்கமானது தான். ஆனால் அவர் அதற்கு பிறகு அவரது கைபேசியில் இருந்து பதில் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி, கிராமத்து ஆட்களுடன் வயலில் சென்று பார்த்துள்ளார். அங்கு அவர் புளிய மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 4 ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றி போனது. 3 மாடுகளும் இறந்து போய் விட்டதால் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். கனகையாவின் உடல் தகனம் செய்ய கூட அவரது குடும்பத்தினரிடம் காசு இல்லை. கிராமத்தில் உள்ளவர்கள் தான் அவருக்கு இறுதி சடங்கு செய்துள்ளனர்.

மேற்கூறிய சம்பவம் ஒரு சாம்பிள் தான். தெலங்கானா உருவானது பின் இதுவரை சுமார் 2100 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

என்ன சொல்வது? என்னவென்று பிரார்த்திப்பது?

வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலக மெல்லாம்!

நம் வாசகர்கள் அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். கோடை முடியும் வரை ஷவரில் குளிப்பது, குழாயை திறந்து வைத்து தண்ணீரை உபயோகிப்பது முதலியவற்றை தவிர்த்து பக்கெட்டுகளில் தண்ணீரை பிடித்து உபயோகிக்கவும். பல நூறு லிட்டர் நீரை ஒவ்வொருவரும் இதன் மூலம் மிச்சபடுத்த முடியும். 

==========================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgதிருமண வாழ்க்கையில் மனைவியுடன் ஏற்பட்டுளால் பூசல்கள் காரணமாக மன அமைதியும் நிம்மதியும் இழந்து தவிக்கும் பெயர் வெளியிட விரும்பாத அந்த வாசகரின் மனக்குறைகள் நீங்கவும், அவர் இல்லத்தில் சாந்தியும் சமாதானமும் நிலவவும், BRAIN TUMOUR ஆல் அவதிப்படும் திரு.விஸ்வநாதன் அவர்கள் விரைந்து நலம் பெற்று, அவரது மகள் திருமணத்தை சீரும் சிறப்புமாக நடத்திடவும், திருமதி.டெனிலா டெஸ்மன்ட்க்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு நீங்கி அவர் பூரண குணமடையவும், திரு.அழகு லக்ஷ்மி அவர்கள் தம் தேர்வை நல்லமுறையில் எழுதி பதவி உயர்வு பெறவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

மேலும் இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் வேத பாடசாலை மாணவர்கள் வேதக் கல்வியை திறம்பட கற்று வேத நெறி தழைத்தோங்க பணியாற்றவேண்டும். அவர்கள் யாவரும் அவர்கள் குடும்பத்தாருடன் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று வாழவும் பிரார்த்திப்போம்.

நாடு முழுதும் வறட்சி நீங்கி பசுமை தழைத்தோங்கவும் மழையானது குறையின்றி பொழியவும், விவசாயிகள் காக்கப்படவும் பிரார்த்திப்போம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஏப்ரல் 24, 2016 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

==========================================================

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை….

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

==========================================================

Rightmantra Prayer Club

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

==========================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W:www.rightmantra.com

==========================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

==========================================================

சென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : திருவல்லிக்கேணியை சேர்ந்த சிவனருட்செல்வன் தட்சிணாமூர்த்தி (19). 

DSCN50202 GG

சென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது?

தட்சிணாமூர்த்தி திருவல்லிக்கேணியில் திருவேட்டீஸ்வரர் ஆலயத்திற்கு பிரார்த்தனை நடைபெற்ற இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளும் சென்று நமக்காக பதிகம் ஓதி பிரார்த்தனை செய்தார். அவருக்கு நம் மனமார்ந்த நன்றி!

==========================================================

[END]

2 thoughts on “திருக்குறிப்புத் தொண்டரை ஆட்கொண்ட முக்தீஸ்வரர் தரிசனம் – Rightmantra Prayer Club

 1. டியர் சுந்தர்ஜி அவர்களுக்கு இனிய மாலை வணக்கம் .
  திருக்குறிப்பு தொண்டர் சிவனடியார்களுக்கு சேவை செய்து இறைவனின் திருவடி நிழலை அடைந்த விதம் சிறப்பு . மேலும் அது தொடர்புடைய படங்களை இணைத்திருப்பது மேலும் சிறப்பு .
  நாயன்மார்களின் குரு பூஜை தினம்
  07/05/2016 சிறுதொண்ட நாயனார் சித்திரை பரணி
  08/05/2016 மங்கையர்கரசியார் சித்திரை ரோகினி
  10/05/2016 விறன்மிண்ட நாயனார் சித்திரை திருவாதிரை

 2. இந்த வார பிரார்த்தனை பதிவின் கதை அருமை. திருக்குறிப்பு தொண்டர் முக்தி பெற்ற தலம் முக்தீஸ்வரர் தரிசனம் அருமை. அவரது தலம் காஞ்சியில் இருப்பது தெரியாது.

  திருக்குறிப்பு தொண்டரின் வரலாற்றை முன்னரே கேள்விப்பட்டிருந்தாலும் விரிவாக தெரியாது. அவரது வரலாறு தொடர்புடைய சிற்பங்களும் படங்களும் அருமை.

  திருக்குறிப்பு தொண்டரையும் முக்தீஸ்வரரையும் தரிசிக்க கிடைத்த வாய்ப்பு எதிர்பாராதது.

  தாங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க படம் எடுத்து அனுப்பிய தங்கள் நண்பரின் சகோதரருக்கு நன்றி.

  இந்த வார பிரார்த்தனையை நேற்றே நான் விளக்கேற்றி வைத்து பல ஸ்லோகங்கள் சொல்லி பிரார்த்தனை செய்துவிட்டேன்.

  சத்குரு சபா வேத பாடசாலை மாணவர்களுக்கு நன்றி.

  பிரார்த்தனை கோரிக்கைகள் அனைத்தும் பெரியவ அருளால் நிறைவேறும் என்பது திண்ணம்.

  – பிரேமலதா மணிகண்டன்
  மேட்டூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *