இவை மேலோட்டமாக படித்துவிட்டு செல்லக்கூடிய விஷயங்கள் அல்ல. ரமணரைப் பற்றிய பதிவுகளை அவசியம் திரும்ப திரும்ப படிக்க வேண்டியவை. பார்ப்பதற்கு சாதரணமாக சிறியதாக தெரியும். ஆனால் இவற்றில் ஆழ்ந்த பொருள், சூட்சுமம் உண்டு. அது தான் ரமணருக்கே உரிய தனித்தன்மை. மிக மிக கடினமான, யாருக்கும் எளிதில் விளங்காத ஆன்ம விசாரம் தொடர்பான சந்தேகங்களுக்கு சர்வ சாதாரணமாக அன்றாட ஆஸ்ரம நடவடிக்கைகளை கொண்டே அவர் விடையளிக்கும் பாங்கு… That’s Bhagwan’s touch! இது தொடர்பான தேடலோ சந்தேகமோ இருந்து சரியான விடை கிடைக்காமல் தவிப்பவர்களுக்கே இதன் அருமை தெரியும்.
பின்பற்றலே வழிபாடு
தரிசனம் பண்ண வந்த ஒருவர் வெவ்வேறு மகான்களை அவர் தரிசித்ததையும், அவர்கள் அனைவரும் அவருக்கு மிகவும் அன்போடு உபதேசித்ததையும் கூறினார். பின்னர் தனக்கு இருக்கும் ஒரு குழப்பத்தைத் தீர்க்க வேண்டினார்.
‘பகவானே! நான் தரிசிச்ச மகான்கள் எல்லோர் மேலேயும் மரியாதையும், பிரியமும் சமமா இருக்கு. நான் யாரை குருவா ஏத்துக்கறது? யாரைப் பின்பற்றுவது?’ என்று கேட்டார். ”குரு வேற வேறயா இருந்தாலும் உபதேசமெல்லாம் ஒண்ணுதான். அந்த ஒண்ணை பின்பற்றுங்கோ!” என்றார் பகவான்.
கிரிபிரதட்சண மாண்பு
ஒருமுறை பகவான் அருணாச்சலத்தை காட்டி ”மலைமருந்து” என்றார். ”இந்த மருந்தோட சாம்பிள் இதைத் தினம் பிரதட்சணம் பண்ணினா தெரியும்” என்றார். தியானத்திலேயே இருக்கின்ற சாதுக்களுக்கு பகவான் கிரி பிரதட்சணத்தை ஆலோசனைக் கூறுவார். ”ராம லட்சுமண படைகள் இலங்கைக்கு போனப்போ இந்திரஜித் சக்தி வாய்ந்த நாகாஸ்திரத்தை பிரயோகிச்சான். ஹனுமானைத் தவிர மத்த எல்லோரும் மூர்ச்சையிட்டா. ஹனுமான் திரும்பவும் இங்கே வந்து சஞ்சீவி மூலிகைக்காக சஞ்சீவி மலையையே பெயர்த்துக் கொண்டு போனார். அந்த சஞ்சீவி மூலிகையோட காத்துப்பட்ட உடனேயே எல்லோரும் எழுந்துட்டா. இந்த அருணாச்சலம் அதைவிட ரொம்ப விசேஷம்” என்றார் பகவான்.
மலை மருந்து
ஆசிரம பாக சாலையில் நடேசய்யரின் சாதுவான மனப்பாங்கினால் அங்கு வேலை செய்யும் பெண்கள் எல்லாக் கடின வேலைகளையும் அவர் மீது அளவுக்கு அதிகமாத் திணித்தனர். சிலசமயம் சாது மிரண்டு விடும். உடனே வெளியில் யாரும் இல்லாத இடத்திற்கு சென்று மணலில் உருண்டு புரண்டு கத்தி தன்னுடைய கோபத்தை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் பணிக்குத் திரும்புவார்.
ஒருமுறை தனக்கு ஏற்படும் கோபத்தை பற்றி மனம் வருந்தியபடி பகவானிடம் கிரிபிரதட்சணம் செய்ய அனுமதி கேட்டார். பகவானும் சந்தோஷமாக சிரித்தவாறு தலையசைத்தார். அன்றிலிருந்து எப்போதாவது கோபம் ஏற்பட்டால் அன்று வேலை முடிந்தவுடன் கிரிபிரதட்சணத்திற்கு கிளம்பி விடுவார். கிளம்பும் முன் பகவானை நமஸ்கரித்துச் செல்வார். ஒருமுறை பகவான் , ”கோபத்திலே இருந்து விடுபடறதுக்கு கிரிபிரதட்சணம் செய்யறான், நல்லது செய்யட்டும்” என்றார்.
பரங்கருணையால் கவிழ்ந்த பாத்திரத்தை திருப்புதல்
ஒரு முறை சாது நடனானந்தரின் சகோதரர் ‘பகவானை எல்லோரும் ஈஸ்வர அம்சமுன்னு சொல்றாங்க… அப்படின்னா என் மனசிலே உள்ள ஆத்மாவைப் பத்தின சந்தேகங்களை நான் கேட்காமலே விளக்கறாரான்னு பார்ப்போம்’ என்று பகவானைத் தரிசிக்க சென்றார்.
பகவான் வழக்கமாக யாரும் கேள்வி கேட்காமல் பதில் அளிப்பதில்லை. அன்று, அவர் வணங்கி எழுந்தவுடன் ஆத்ம இயல்பை விளக்கத் துவங்கினார்.
எது தியானம்?
பகவான் வழக்கமாக கிச்சனுக்கு அதிகாலை 4.00 மணிக்கு சென்று காய்கறிகள் வெட்ட ஆரம்பிப்பார். குஞ்சுசுவாமி மற்றும் யாராவது இருவர் பகவானுக்கு உதவுவார்கள். சில சமயம் வெட்ட வேண்டிய காயின் அளவு மலைக்க செய்யும். பகவான் எல்லோரையும் விட நிறைய காய்களை வெட்டுவார். வேகமாகவும் வெட்டுவார்.
சிலருக்கு காலை தியானப் பழக்கம் இருந்ததால் வேலையை ஐந்து மணிக்குள் முடித்து விட்டு தியானம் செய்ய இன்று முடியுமோ முடியாதோ என்று கடிகாரத்தில் மணியைப் பார்ப்பார்கள்.
இதைக் கவனித்த பகவான், ”என்ன விஷயம், மணியை பாக்கறேளே?” என்றார்.
‘இல்லே பகவானே! அஞ்சு மணிக்குத் தியானம் பண்றது வழக்கம். அதான்’ என்றார் அன்பர். ”காலாகாலத்திலே வேலையை முடிக்கணுந்தான். அதுக்கு இந்த நினைப்புதான் தடை. எவ்வளவு வேலைங்கறது தடையில்லே.
”நாம வேலை பாக்கறதே தியானந்தான் ஓய்! இப்போ தியானத்தை சிரத்தையா பண்ணும்! என்றார் பகவான்.
– ரமண திருவிளையாடற் திரட்டு ¶¶
=========================================================
Also check : யாரை குருவாக ஏற்றுக்கொள்வது? உண்மையான குருவை எப்படி அடையாளம் காண்பது?
=========================================================
Help us to run this website…
We need your SUPPORT. Help Rightmantra in its functioning.
==========================================================
For earlier episodes…
அன்னபூரணிக்கு முதல் நைவேத்தியம்!
காக்கா குருவிக்கு ஏது ஓய் உக்கிராணம்?
ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…
எந்த கண்களில் பார்வை இருக்கிறது? எதில் இல்லை?
பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!
ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!
பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!
==========================================================
Also Check :
ஆட்கொண்ட அருணாச்சலேஸ்வரர் – பள்ளி மாணவர்களுக்கு பாடமான நமது தளத்தின் நோட்டீஸ்!
“தன்னைப் போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே!” .
கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!
மழை பொழியுது – பாத்திரத்தை முதல்ல நேரா வைங்க!
==========================================================
[END]
திருவண்ணாமலை கிரிவலம் செள்ளமுடியவில்லையே என்கிற ஏக்கத்தை தீர்த்ததுன் இந்த பதிவு. ரமண மகரிஷி தொடர்பான பதிவுகளை ஆரம்பம் முதல் விடாமல் படித்து வருகிறேன். நீங்கள் சொல்வது போல, மிக பெரிய விஷயங்களை மிக மிக எளிமையாக உணர்த்தும் அவரது பாங்கு அவருக்கே உரித்தானது.
எத்தனை குருமார்கள் இருந்தால் என்ன, அவர்கள் உபதேசம் ஒன்று தான். அதை பின்பற்று என்று ரமணர் கூறியிருப்பது அந்த சீடருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தான்.
சஞ்சீவி பர்வதத்தைவிட அருணாசலம் மிகவும் உயர்வானது என்ற தகவல் புதிது.
எது தியானம் என்பது பற்றி ரமணர் கூறியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை. தாங்களும், ஒரு முறை நம் தளத்திற்காக பதிவுகள் எழுதுவதே எனக்கு தியானம் போலத் தான். அந்தளவு ஆதமார்த்தமாக ஒரே சிந்தனையுடன் பதிவுகளை எழுதுவேன் என்று கூறினீர்கள்.
சித்ரா பௌர்ணமிக்காக மிக மிக அற்புதமான பதிவை அளித்தமைக்கு நன்றி.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
சுந்தர்ஜி அவர்களுக்கு இனிய காலை வணக்கம் .
“செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமை தான் நமது செல்வம் ” பக்தி சிரத்தையுடன் தொழில் செய்வதும் ஒரு வகையில் தியானம் தான் . ஆத்மார்த்தமாக செய்யும் எந்த செயலும் தியானம் தான் . ” ஓம் நமோ பகவதே ரமணாய நம”