‘உழவாரப்பணி’ என்னும் சிவபுண்ணியத்தை மேற்கொள்வதால் கிடைக்கும் பயன் என்ன தெரியுமா?
21 தலைமுறைகளுக்கு தாங்களும், தங்கள் வம்சாவளியினரும் பேரின்பம் பெற்று மீண்டும் பிறவா நிலை எய்தி, சிவபுண்ணியம் ஈட்டி, சிவானந்தப் பெருவாழ்வில் திளைத்து இன்புறுவார்களாம்.
அத்தகைய உழவாரப்பணி புரியும் அவ்வடியார்களுக்கு உதவிக்கரம் நீட்டி, அப்பணியில் நம்மை உடலாலும், உடலால் முடியாதவர் பொருளாலும், பிற வகைகளாலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு கோயில் திருப்பணியை மேற்கொண்டு ஈசனருள் பெற்று வாழ்வோம்.
உழவாரப்பணியை பொருத்தவரை பலர் உடலுழைப்பை கொடுப்பது என்று மட்டுமே என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நம்முடன் பேசும் சில வயதில் பெரியவர்கள் தங்களுக்கு வர விருப்பம் தான் என்றும், ஆனால் தங்களால் எந்த பணியும் செய்ய இயலாது என்பதால் வருவதற்கு யோசிப்பதாகவும் கூறுவார்கள். அந்த எண்ணம் தவறு. இருகால்களை இழந்த திரு.ஜெயராமன் உழவாரப்பணியை செய்து வரவில்லையா?
உழவாரப்பணியை பொருத்தவரை அவரவர் வயதுக்கும் தெம்புக்கும் தகுதிக்கும் ஏற்ற பணிகள் நிச்சயம் உண்டு.
உடல் உழைப்பு தான் என்றில்லை நம் பொருட்களை பார்த்துக்கொள்வதற்கு கூட சில சமயம் நபர்கள் தேவைப்படுவார்கள். அதைச் செய்தால் கூட போதும். எனவே வயதும் உடல்நிலையும் உழவாரப்பணி செய்ய ஒரு போதும் தடையாக இருக்காது. வாசகி தாமரை வெங்கட் அவர்களின் மாமியார், சற்று வயது முதிர்ந்தவர் தொடர்ந்து உழவாரப்பணிக்கு வந்து இந்த கைங்கரியத்தை செய்து வருகிறார்.
(பொருட்களை பார்த்துகொள்வதில் என்ன புண்ணியம் கிடைக்கும்? வந்து பணி செய்தால் தானே என்று நினைக்கவேண்டாம். இந்தப் பதிவை அவசியம் செக் செய்யவும். உயிரை பறிக்க வந்த எமதூதர்கள்; தடுக்க வந்த சிவகணங்கள்!)
******************************************************
இந்த பதிவு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நவராத்திரியை முன்னிட்டு மத்தூர் மகிஷாஷுர மர்த்தனியம்மன் கோவிலில் நாம் செய்த உழவாரப்பணி பற்றியதாகும். இது வரை நாம் செய்த உழவாரப்பணிகளிலேயே மிகுந்த மனநிறைவும் மகிழ்ச்சியும் தந்ததொரு பணி இது என்றால் மிகையாகாது.
சுமார் 20 பேர் மட்டுமே கொண்டதொரு குழுவில் இத்தனை மகத்தான பணி சாத்தியப்பட்டது என்றால் அதற்கு காரணம் நிச்சயம் திருவருள் தான்.
* ஐம்பதுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இந்த பதிவில் இடம்பெற்றிருப்பதால் பிரவுசர் லோட் ஆக சிறிது நேரம் பிடிக்கும். எனவே சற்று பொறுமையாக பார்க்கவும்.
உழவாரப்பணியை பொருத்தவரை எந்தளவு வேலை அதிகமோ அந்தளவு திருப்தியும் மனநிறைவும் கிடைக்கும்.
மத்தூர் கோவிலில் நாம் செய்தது நவராத்திரி சிறப்பு உழவாரப்பணி என்பதால் நாங்கள் செய்த பணிக்கு ஒரு அர்த்தம் கிடைத்தது.
பொதுவாக உழவாரப்பணிகளில் மகளிர் குழுவினருக்கு தான் சற்று வேலை அதிகம் இருக்கும். காரணம், பிசுக்கேறி நிறம் மாறிய விளக்குகளை துலக்குவது, பிரபைகளை சுத்தம் செய்வது, திருக்கோவில் பாத்திரங்களை துலக்குவது என்று உட்கார்ந்தே செய்யவேண்டிய கடினமான பணிகள். சில நேரங்களில் வெயிலில் உட்கார்ந்து இவற்றை செய்யவேண்டியிருக்கும்.
ஆண் உறுப்பினர்களை பொறுத்தவரை ஒட்டடை அடிப்பது, புல் வெட்டுவது, சன்னதிக்குள் சென்று சுத்தம் செய்வது போன்ற பணிகள் இருக்கும். ஆனால், இந்த முறை மகளிர் குழுவினருக்கும் சரி, ஆண் உறுப்பினர்களுக்கும் சரி சரிசமமான பணி இருந்தது.
பணி நடைபெற்ற நாளன்று காலை சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள நமது வீட்டிலிருந்து உழவாரப்பணி பொருட்களை வேனில் ஏற்றிக்கொண்ட பின்னர் ஐயப்பன்தாங்கல் பேருந்து நிலைய நிறுத்தத்ததில் காத்திருந்த குழு உறுப்பினர்கள் அனைவரையும் பிக்கப் செய்துகொண்ட பின்னர் பயணம் துவங்கியது.
பூவிருந்தவல்லி வழியாக திருமழிசை பின் அங்கிருந்து திருவள்ளூர், திருத்தணி சென்று பின்னர் மத்தூர் செல்வதாக பிளான்.
சற்று நீண்ட தூர பயணம் என்பதால் திருவள்ளூர் தாண்டியவுடன் காபி சாப்பிட ஒரு ‘கும்பகோணம் டிகிரி காபி’ கடையில் வண்டியை நிறுத்தினோம். அனைவரும் டிகிரி காபி / ஸ்பெஷல் டீ சாப்பிட்டோம்.
அங்கே கூட எங்களுக்கு ஒரு பெரிய மெசேஜ் கிடைத்தது. சுவற்றில் வரையப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தர் படம் மற்றும் பொன்மொழிகள் மூலம். இதை ஒரு தனிப் பதிவாகவே அளிக்கவேண்டிய அளவு அத்தனை ஆழம் மிக்கது.
ஒரு 15 நிமிட REFRESHING கிற்கு பிறகு வண்டி மீண்டும் புறப்பட்டது.
திருத்தணி தாண்டி பொன்பாடி ரயில்வே கேட்டை கடந்து மத்தூருக்கு சென்றபோது மணி அப்படி இப்படி என்று 9.30 AM ஆகிவிட்டது.
மத்தூரில் ஊருக்கு உள்ளே மிகப் பழமையான சிவாலயம் இருக்கிறது. முதலில் அங்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் மகிஷாஷூர மர்த்தனியம்மன் கோவிலுக்கு வரலாம் என்று விரும்பினோம்.
எனவே நேரே மத்தூர் கிராமத்துக்கு நடுவே அமைந்துள்ள அமிர்தவல்லி தாயார் சமேத அகத்தீஸ்வரர் கோவிலுக்கு முதலில் சென்றோம். பழமையான இந்த கோவிலை புனருத்தாரணம் செய்து கடந்த ஆண்டு தான் கும்பாபிஷேகம் செய்திருக்கிறார்கள்.
அங்கு சென்று அகத்தீஸ்வரரை தரிசித்து அர்ச்சனை செய்து, அன்றைய பிரார்த்தனை கிளப் பிரார்த்தனையாளர்களின் பெயர்களுக்கும் குழு உறுப்பினர்கள் பெயர்களுக்கும் அர்ச்சனை செய்துவிட்டு அம்பாளையும் தரிசித்துவிட்டு பின்னர் புறப்பட்டோம்.
மத்தூர் வரும்போது மணி 10.00 AM. மணிகண்ட குருக்கள் எங்கோ வெளியே செல்லவேண்டியவர், நமக்காக காத்திருந்தார்.
அவரிடம், “ஸ்வாமி, இப்போதைக்கு வேலையை உடனே துவக்கிவிடுகிறோம். ஏற்கனவே தாமதமாகிவிட்டது. மதியம் புறப்படுவதற்கு முன்பு அம்மன் தரிசனம் வைத்துக்கொள்கிறோம்….” என்றோம்.
“நானும் கொஞ்சம் அவசரமாக திருத்தணி வரை செல்லவேண்டி இருக்கிறது. உங்களுக்காகத் தான் காத்திருந்தேன். நீங்கள் பாட்டுக்கு உங்கள் பணியை ஆரம்பித்து செய்துகொண்டிருங்கள். அனைத்தும் ஏற்பாடு செய்திருக்கிறேன். நான் மதியம் வந்துவிடுவேன். வந்த பிறகு தரிசனம் செய்துவைக்கிறேன். அம்மனை ஆற அமர தரிசிக்கலாம்…” என்றார்.
அவரிடம் நாம் கொண்டு வந்திருந்த இரண்டு பார்சல்களை கொடுத்து “இதை அம்மன் பாதத்தில் வைத்திருங்கள். அங்கேயே சில மணிநேரங்கள் இருக்கட்டும். மதியம் பணி முடிந்த பிறகு வாங்கிக்கொள்கிறோம்.” என்றோம்.
அது என்ன பார்சல்…..? இறுதியில் பார்க்கலாம்.
தொடர்ந்து குழுவினர் ஆளாளுக்கு வேலைகள் பிரித்துவிடப்பட்டது.
ஆண்களில் ஒரு குழுவினர் துடைப்பம், மண்வெட்டி ஆகியவற்றை கொடுத்து நீண்ட நெடிய வெளிப் பிரகாரத்தை சுத்தம் செய்ய புறப்பட்டார்கள்.
மற்றொரு குழுவினரிடம் உட்பிரகாரத்தை முழுவதுமாக ஒட்டடை அடிக்கச் சொன்னோம்.
வேறு ஒரு குழுவினரிடம் வெளியே இருந்த துர்க்கை சன்னதியை சுத்தம் செய்யும் பொறுப்பு விடப்பட்டது.
ஆலயத்தின் அர்ச்சகர் மணிகண்ட குருக்களிடம் ஏற்கனவே பேசிவிட்டு சென்றதால், அவர் பாத்திரங்கள், மற்றும் விளக்குகள், காலங்கள் ஆகியவற்றை தயாராக எடுத்து வைத்திருந்தனர்.
(* மத்தூர் ஆலய நவராத்திரி விழா அழைப்பிதழை திருத்தணி சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் உள்ள அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டி மணிகண்ட குருக்கள் திருத்தணி சென்றிருந்தார்.)
பிரகாரம் சுத்த செய்ய களமிறங்கிய குழுவினர், வெயிலென்றும் பாராமல், பிரகாரத்தில் ஆங்காங்கு முளைத்திருந்த செடிகொடி புற்களை பிடுங்கி, ஆங்காங்கு பரவியிருந்த குப்பை கூளங்களை அகற்றி சுத்தம் செய்தபடி இருந்தனர்.
வித்தியாசத்தை இந்த புகைப்படங்களின் இறுதியில் அளிக்கப்பட்டுள்ள இரண்டு படங்களில் அறிந்துகொள்ளலாம்.
மற்றொரு குழுவினர் உட்பிரகாரம் முழுக்க ஒட்டடை அடித்தனர். மேலே சுவற்றில் அப்பிக்கொண்டிருந்த நாட்பட்ட ஒட்டடைகள், சிலந்தி வலைகள் மற்றும் தூசிகள் அகற்றப்பட்டது. தூசி மேலே விழும் வாய்ப்பு அதிகம் என்பதால் இது சற்று சிரமமான பணி தான்.
வெளியே இருந்த துர்க்கை சன்னதியை சுத்தம் செய்யத் துவங்கிய வேறொரு குழுவினருக்கு சவாலான பணி தான். நாட்பட்ட எண்ணைப் பிசுக்குகள் அம்மன் மீதும் வாகனம் மீது ஏறி அதுவே ஒரு கோட்டிங் போல அப்பிக்கொண்டிருந்தது. அனைத்தும், உழவாரக்கரண்டி கொண்டு சுரண்டி அகற்றப்பட்டது.
எண்ணைப் பிசுக்கை அகற்றுவதற்கே நிறைய நேரம் பிடித்தது. நம்மிடம் அதற்குரிய உபகரணங்கள் இல்லை என்பதால் இது போன்ற பணிகள் சற்று சவாலானவை தான்.
ஒரு வழியாக போராடி எண்ணைப் பிசுக்குகள் அகற்றிய பிறகு, மேடை மற்றும் சன்னதி சுத்தமாக கூட்டிப் பெருக்கி பின்னர் சோப் ஆயில் கொண்டு மேடை உள்ளிட்ட அலம்பிவிடப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
சுத்தம் செய்வதற்கு முன்பும் பின்பும் உள்ள வித்தியாசத்தை நீங்களே பாருங்கள்….!
மற்றொரு குழுவினர் விளக்குகள் மற்றும் பாத்திரங்களை சுத்தம் செய்ய துவங்கினர். 108 கலசங்கள் துலக்க கிடைத்தன. முதலில் அவற்றை சுற்றியிருந்த நூல் அகற்றப்பட்டது. அதையே மூன்று பேர் செய்யவேண்டியிருந்தது. பின்னர் விளக்குகள், கோவில் பாத்திரங்கள், தாம்பாளத் தட்டு, பித்தளை அண்டா இவற்றை துலக்கினர்.
மலைக்க வைக்கும் அளவு பாத்திரங்கள் குவிந்தன. ஆனால், மகளிர் அணியினருக்கு இதெல்லாம் ஒரு விஷயமா? துலக்கி தூள் கிளப்பிவிட்டனர். எத்தனை அதிர்ஷ்டசாலிகள் நம் மகளிர் அணியினர்…!
இதிலென்ன ஒரு சிறப்பு என்றால், குழு உறுப்பினர் வாசகி தாமரை வெங்கட் அவர்களின் குழந்தைகளும் தங்களால் இயன்ற பணிகளை செய்தது தான். (அவர்கள் பணி செய்தலும் சரி… குறும்பு செய்தாலும் சரி.. இரண்டுமே எங்களுக்கு ஒ.கே. தான்!)
பாத்திரங்கள் மட்டுமல்ல அம்மனின் சேலைகள் மற்றும் துணிமணிகள் சிலவும் துவைக்க வாய்ப்பு கிடைத்தது. அவையும் துவைத்து உலர்த்தப்பட்டது.
மேற்கூறிய பணிகள் தவிர தரை துடைக்கும் பணியும் இருந்தது. அதையும் ஒரு சிலர் கவனித்துக்கொண்டனர்.
அனைத்தையும் செய்துகொண்டிருக்கும்போதே மதியம் 1.00 ஐ தாண்டிவிட்டது. எங்களுக்கான மதிய உணவை ஆலயத்திலேயே ஏற்பாடு செய்திருந்தபடியால், உணவுக்கூடதிற்கு இரண்டு குழுக்களாக சென்று சாப்பிட்டுவிட்டு வந்தோம்.
சாதம், குழம்பு, ரசம், மோர், கூட்டு, பொரியல் என அருமையான சாப்பாடு. நாம் டயட்டில் இருப்பதால் சற்று குறைவாகவே சாப்பிட சிலர் வெளுத்து வாங்கிவிட்டனர். அவர்கள் யார் யார் என்கிற விபரம் புகைப்படங்களை பார்த்தாலே புரியும்!
(இப்போது நடைபெற்ற ஒரு சம்பவத்தை பற்றி ஏற்கனவே தனிப்பதிவில் விளக்கியிருக்கிறோம். அதை படிக்கவும். திருப்பதி முருகனுக்கு அரோகரா!)
அடுத்து மிக முக்கியமான ஒரு பணி பற்றி சொல்லவேண்டும்.
இது நவராத்திரி சிறப்பு உழவாரப்பணி என்பதால், நவராத்திரி கொலு மண்டபத்தை அசெம்பிள் செய்து தரவேண்டும் என்று குருக்கள் முதலிலேயே கூறியிருந்தார்.
அந்த பணியை செய்யலாம் என்று நான்கு நண்பர்களை அதற்கு ஒதுக்கிவிட்டு பணியை துவக்கலாம் என்றால், எதை எங்கே ஃபிட் செய்வது என்று ஒன்றுமே புரியவில்லை.
“இதை உங்களால் தனியே செய்யமுடியாது. திருத்தணியிலிருந்து ஆட்களை வர்ச்சொல்கிறோம். அவர்கள் உடனிருந்து எப்படி ஃபிட் செய்யவேண்டும் என்று சொல்லித் தருவார்கள்” என்று கூறிய ஆலய நிர்வாகி, அதற்கென ஆட்களை வரவழைத்தார். அவர்கள் வந்தபிறகு அவர்களும் உடன் சேர, படிக்கட்டுக்களை அசெம்பிள் செய்ய துவங்கிய பணி பிற்பகல் 3.00 மணியளவில் தான் நிறைவு பெற்றது. அதுவரை இந்த பணியை கவனித்துக்கொண்டிருந்த அன்பர்கள் உணவைப் பற்றிக்கூட சிந்தனையின்றி பணி செய்துகொண்டிருன்தனர்.
பணி ஒருவழியாக நிறைவுபெற்றதும் அனைவரும் அம்மனை (மூலவர்) தரிசிக்க விழைந்தோம். குருக்களை தொடர்புகொண்டபோது தாம் விரைவில் வந்துவிடுவதாகவும் சற்று பொறுத்திருக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
லேட் ஆனது ஆகிவிட்டது பரவாயில்லை என்று அவருக்கு காத்திருந்தோம்.
சற்று நேரத்திற்கெல்லாம் மணிகண்ட குருக்கள் வந்துவிட, நம் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் சிறப்பு தரிசனம் செய்விக்கப்பட்டது. அர்ச்சனைக்காக அனைவரின் பெயர்களுக்கும் சங்கல்பம் செய்யப்பட்டது. பிரார்த்தனை கிளப் பிரார்த்தனையாளர்களுக்கும் நம் நண்பர்கள் சிலருக்கும் நாம் அர்ச்சனை குழு உறுப்பினர்கள் அவரவர் பெயர்களுக்கும் குடும்ப உறுப்பினர்கள் பெயர்களுக்கும் சங்கல்பம் செய்துகொண்டனர்.
அனைவருக்கும் பொறுமையாக சங்கலபம் செய்துவைத்தார் மணிகண்ட குருக்கள். மகிஷாஷூர மர்த்தனி அம்மனை அருகிலிருந்து நன்கு தரிசித்தார்கள் நம் குழுவினர்.
அர்ச்சனை முடிந்து தீபாராதனை நடைபெற்று அனைவருக்கும் பிரசாதம் தரப்பட்டது.
“அந்த பார்சலை கொண்டு வரமுடியுமா?” என்று கேட்டோம்.
“இதோ…” என்று கூறி அம்மனின் பாதத்தில் இருந்த அந்த பார்சலை எடுத்துக்கொடுத்தார்.
அது என்ன பார்சல்?
இரண்டு பெரிய பாக்கெட்டுக்களில் நல்ல தரமான குங்குமம். நம் வாசகியரின் பெயர்களில் இது போன்று குங்குமம் ஒரு ஒரு கிலோ வாங்கி கோவில்களுக்கு அளிக்கும் ஒரு புதிய சேவை அது.
அதை மாத்தூரிலிருந்து தொடங்கிட வேண்டி, இரண்டு வாசகியரின் சார்பில் அங்கு குங்குமம் ஒப்படைக்கப்பட்டது. அந்த குங்குமத்தை மீண்டும் அம்மனின் பாதத்தில் சில வினாடிகள் வைத்து அதிலிருந்து கொஞ்சம் எடுத்து நம் குழுவினர் அனைவருக்கும் தந்தார்.
மீதமுள்ள குங்குமத்தை வரும் பக்தர்கள் அனைவருக்கும் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.ஒரு பாக்கெட் எப்படியும் ஒரு மாதம் வரும்.
இந்த கைங்கரியம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தளத்தின் பணிகளில் உதவியாக உள்ள நம் வாசகியரின் பெயர்களில் இது அமைதியாக நடைபெற்றுவருகிறது. பலருக்கு அவர்களின் பெயர்களில் இப்படி ஒன்று நடைபெற்றதே தெரியாது. அதை சொல்ல சந்தர்ப்பம் அமையவில்லை. பரவாயில்லை என விட்டுவிட்டோம். இன்றும் இது நடைபெற்றுவருகிறது. காசி விஸ்வநாதர் கோவில், பேரம்பாக்கம் நரசிம்மர் கோவில், குன்றத்தூர் நாகேஸ்வரர் கோவில், கந்தழீஸ்வரர் கோவில், திருவூரகப் பெருமாள் கோவில், வடபழனி வேங்கீஸ்வரர் இப்படி பல கோவில்களில் குங்குமப் பாக்கெட்டுகள் அளிக்கப்பட்டுள்ளன.
தரிசனம் இனிதே நிறைவுபெற்றதும் இறுதி கட்டமாக நம் தளம் சார்பாக கோவில் பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஆலயத்தின் தல விருட்சமான வேப்ப மரத்தின் முன்பு நடைபெற்றது.
பொதுவாக உழவாரப்பணி நடைபெறும் ஆலயங்களில் நம்மை நன்கு வேலை வாங்கவேண்டும். அப்போது தான் பணி சிறக்கும். பல கோவில்களில் இது பற்றி அக்கறையே இன்றி நடந்துகொள்வார்கள். ஆனால், மத்தூரை பொருத்தவரை நமக்கு அனைவரும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்களும் எங்களுடன் இனைந்து தங்களால் இயன்ற பனியை செய்தார்கள்.
கோவில் அர்ச்சகர் திரு.மணிகண்ட குருக்கள், அவருடைய உதவியாளர், மற்றும் கோவிலின் நிர்வாக அதிகாரி கார்த்திக், கோவிலில் பணியாற்றும் அம்பிகா, கன்னியம்மாள், தவில் வித்துவான் திரு.லோகநாதன், திரு.கமலநாதன் உள்ளிட்டோர் கௌரவிக்கப்பட்டனர்.
அனைவருக்கும் தலா ஒரு வஸ்திரம், துண்டு, சுவீட் காரம் பாக்ஸ், தாம்பூலம், ரொக்கம் வைத்து தரப்பட்டது. பெண்களுக்கு வஸ்திரத்துக்கு பதில் சேலை வைத்து தரப்பட்டது.
கோவில் சார்பாக நம்மை திரு.மணிகண்ட குருக்கள் கௌரவித்தார்கள். “எல்லாப் பெருமையும் என் குழுனருக்கே” என்று அதை நமது நண்பர்களுக்கு அற்பணித்தோம்.
நமது தளத்தின் லேமினேட்டட் பிரார்த்தனை படம் கோவிலுக்கு பரிசளிக்கப்பட்டது. நாம் எழுதிய புத்தகங்களும் பரிசளிக்கப்பட்டது.
நவராத்திரியை முன்னிட்டு கோவிலுக்கு நம் தளம் சார்பாக எலக்ட்ரிக் உபகரணங்கள்,லைட் பிட்டுங்குகள் ஒப்படைக்கப்பட்டது. (இதற்கு அடுத்த வாரம் மத்தூர் சென்று கொலு பொம்மைகள், சீரிய லைட்டுகள் உள்ளிட்டவற்றை அளித்தோம்).
நமது பணிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் எளிய பரிசுகள் சம்பந்தப்பட்ட ஆலயத்தின் குருக்கள் அவர்களைக் கொண்டு தருவது நமது வழக்கம். இந்த முறை அம்மன் பாதத்தில் வைக்கப்பட்ட மகிஷாஷூர மர்த்தனியம்மன் ஸ்லோக புத்தகம் அனைவருக்கும் மணிகண்ட குருக்கள் அவர்களின் திருக்கரங்களால் பரிசாக தரப்பட்டது.
இது தவிர ஆலயத்தின் வேப்பிலை பிரசாதமும், குங்குமப் பிரசாதத்துடன் மகிஷாஷூர மர்த்தனியம்மனின் அழகிய படமும் (A4 சைஸ்) பரிசாக அனைவருக்கும் கிடைத்தது. இது நாங்கள் யாரும் எதிர்பாராத ஒன்று.
மொத்தத்தில் பல நினைவுகளை தந்ததொரு அருமையான பணி இது என்றால் மிகையாகாது. பணியின் சிகரமாக பெரியவர் திருப்பதி முருகன் அவர்கள் கௌரவிக்கப்பட்டார். * இது பற்றி ஏற்கனவே தனிப் பதிவு அளிக்கப்பட்டுள்ள்ளது.
சுமார் 3.30 அளவில் புறப்பட்டு சென்னைக்கு வந்து சேர்ந்த பொது 6.00 ஆகிவிட்டது. பிரார்த்தனை நேரத்தில் அனைவரும் வேனில் இருந்தபடியால் வேனிலேயே அந்த வாரத்திற்கான பிரார்த்தனை கிளப் பிரார்த்தனை செய்யப்பட்டது.
மீண்டும் இங்கு ஒரு உழவாரப்பணி செய்ய ஆவலோடு அனைவரும் காத்திருக்கிறோம்! மகிஷூரமர்த்தனியம்மன் அருள் புரியவேண்டும்!!
குழு உறுப்பினர்களுக்கு : மத்தூருக்கு சென்று இந்த பணிக்கு ஏற்பாடு பின்னர் நம் குழுவினரை அழைத்துச் சென்று பணியை வெற்றிகரமாக முடித்து இந்த பதிவை அளிக்கும் வரை எவ்வளவு விஷயங்களை நினைவில் கொண்டு பதிவில் சேர்க்க வேண்டியிருக்கிறது என்று நண்பர்களுக்கு புரிந்திருக்கும். எனவே தான் உழவாரப்பணி பதிவுகள் அளிக்க தாமதமாகிறது. இந்த பதிவை படிக்கும் இந்நேரம் மீண்டும் ஒரு முறை மத்தூரில் பணி செய்தது போன்ற உணர்வு ஏற்பட்டால் அதுவே நமக்கு கிடைத்த வெற்றியாகும். இனி எஞ்சியுள்ள உழவாரப்பணிகள் பற்றிய பதிவை ஒவ்வொன்றாக அளிக்க முயற்சிக்கிறோம். நன்றி!
==========================================================
நமது உழவாரப்பணிக் குழுவில் சேர விரும்பினால்…
நமது உழவாரப்பனிக் குழுவில் நீங்கள் சேர விரும்பினால்… ‘TEMPLE CLEANING VOLUNTEER’ என்று குறிப்பிட்டு தங்கள் பெயர், வசிப்பிடம், அலைபேசி எண் ஆகியற்றை editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவேண்டும். உழவாரப்பணி இறுதி செய்யப்பட்டவுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கப்படும். (* உழவாரப்பணி பிரதி மாதம் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் மட்டுமே நடைபெறும்!)
Rightmantra Sundar | M : 9840169215 | E : editor@rightmantra.com
==========================================================
Help us in our mission!
We need your SUPPORT. Help Rightmantra in its functioning.
==========================================================
Also check articles on ‘உழவாரப்பணி’:
தொண்டும் பேரானந்தமும் – சேக்கிழாருக்காக செலவிட்ட சில மணி நேரங்கள் !
அருமையான பணியை தந்து இறுதியில் அற்புதமான பரிசை தந்த திரிசூலநாதர்!
நம் உழவாரப்பணிக்கு பெருமை சேர்த்த சிறுவன்! நெகிழவைக்கும் சம்பவம்!!
தீவினைகளை அகற்றி பாவங்களை துடைத்தெறிய ஓர் அரிய வாய்ப்பு!
உயிரை பறிக்க வந்த எமதூதர்கள்; தடுக்க வந்த சிவகணங்கள்!
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே!
குரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம்! மகா பெரியவா சொன்ன பரிகாரம்!! குரு தரிசனம் (32)
இவர்களின் சேவையை விட பெரியது இந்த உலகில் உண்டா? “இதோ எந்தன் தெய்வம்” – (3)
வள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!
“எது இன்பம்?” — சேக்கிழார் மணிமண்டபத்தில் சில நெகிழ்ச்சியான தருணங்கள்!!
பாயாசம் சாப்பிட்டதற்கு பாராட்டு கிடைத்த அதிசயம்! — சிவராத்திரி SPL (5)
“என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே!’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி
‘பெரிய’ இடத்து பணியாளர்களுக்கு நம் தளம் செய்த சிறப்பு – A quick update on திருநின்றவூர் உழவாரப்பணி !
திருமகளின் புகுந்த வீட்டில் (திருநின்றவூர்) நமக்கு உழவாரப்பணி வாய்ப்பு கிடைத்த கதை !
பாராட்டும் வரவேற்பும் பெற்ற நமது ஒத்தாண்டீஸ்வரர் கோவில் உழவாரப்பணி! பிரத்யேக பதிவு!!
“என் பிள்ளை குட்டிங்க நல்லாயிருந்தா அது போதும்” – திருமழிசையில் நெகிழவைத்த ஈஸ்வரியம்மா!
==========================================================
[END]
உழவாரப்பணியின் சிறப்பும் பெருமையும் பிரமிக்க வைக்கிறது.
புகைப்படங்கள் ஒவ்வொன்றையும் பார்க்க பார்க்க பரவசம். ஆத்மார்த்தமான அர்த்தமுள்ளதொரு உழவாரப்பணி. குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் என்னை சிலிரிக்க வைக்கிறது.
மலையென குவிந்த கலசங்கள், பாத்திரங்கள், விளக்குகள் ஆகியவை நன்கு துலக்கப்பட்டு அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் காட்சி ஒன்றே இந்த பணியின் முக்கியத்துவடுதுக்கு எடுத்துக்காட்டு.
தாமரை வெங்கட் அவர்களின் குழந்தைகள் தங்கள் பங்குக்கு செய்த பணி பாராட்டத்தக்கது.
கோவில் பணியாளர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து பார்த்து கௌரவித்து அவர்கள் மனதில் இடம்பிடித்ததோடல்லாமல் அவர்களுக்கு மிகப் பெரியதொரு உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறீர்கள் என்பது படங்களை பார்த்தாலே புரிகிறது.
ஆண்கள் குழுவினர் கொலுப்படி செட் செய்யும் புகைப்படமும், கொலு படிக்கட்டுகள் தயாராகி கொலு பொம்மைகள் அலங்காரத்துடன் காணப்படும் புகைப்படமும் சிலிர்க்க வைக்கின்றது.
அதே போன்று முன்பக்கம் உள்ள சன்னதி எந்தளவு குழுவினரின் கைவண்ணத்தில் பொலிவு பெற்றது என்பதும் புரிகிறது.
இப்படி ஒவ்வொரு அம்சத்தையும் சொல்லிக்கொண்டே போகலாம்.
இறுதியாக இத்தனை பணிகளுக்கு இடையிலும் மத்தூர் சென்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்து பணியை ஒருங்கிணைத்து அனைத்தையும் சிறப்பாக முடித்தமைக்கு நம் சுந்தர்ஜி அவர்களுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
உங்களுடன் நானும் சேர்ந்து பணி செய்ய இயலவில்லையே என்று ஏங்கவைக்கிறது.
நம் குழு மேன்மேலும் பல பணிகள் செய்யவும் வளரவும் அம்மனையும் அப்பனையும் வேண்டிக்கொள்கிறேன்.
எஞ்சியுள்ள உழவாரப்பணிகள் குறித்த பதிவையும் விரைவில் அளிக்கவேண்டுகிறேன்.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்
மத்தூர் உழவாரப் பணி மறக்க முடியாத உழவாரப் பணி .இதில் தான் உழவாரப் பணியின் முழு வீச்சு புரிந்தது. ஏறக்குறைய 20 பேர் பங்கேற்றோம்.என் தம்பி மனோ வுடனான முதல் உழவாரப் பணி. பணியின் போது ஏற்பட்ட களைப்பு அன்னையின் தரிசனத்தில் பறந்து போய் விட்டது.
சற்று கூடுதலான பணி தான் என்றாலும்,இதை செய்ய நாங்கள் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என்றே தோன்றியது.
துர்க்கை அம்மன் சந்நிதி சுத்தம் செய்வதில் நான் இணைந்தேன்.என்னை பிசுக்கை நீக்க நீக்க, எங்களின் மன பிசுக்கும் நீங்கியது.பரிமளம் அம்மா ,ரமா அம்மா என்று எங்களின் கூட்டணி களை கட்டியது.மகளிர் அணியின் உதவியுடன் வெற்றிகரமாக முடித்தோம்.
மற்றோர் மகளிர் கூட்டணி யின் பாத்திரம் மற்றும் திருவிளைக்கு துலக்கம் அருமை.. நவராத்திரி கொலு மண்டபம் செட் செய்தது..ஹை லைட் ..நான் ஏதோ ஒப்புக்கு சப்பாக நின்று கொண்டிருந்தேன்.
இறுதியாக அம்மன் தரிசனம்,,,பின்பு அருட் பிரசாதம்..இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது .தாயே..மீண்டும் எங்களுக்கு உன் திருமுகம் காட்டி,உன் அருளில் மீண்டும் ஒரு முறை உழவாரப் பணி செய்ய அருள் புரிவாயாக.
மாதம் ஒரு முறை..தவறாது உழவாரப் பணி மேற்கொள்வோம்.
மத்தூர் உழவாரப் பணி நிகழ்வை வெற்றியாக்கிய அனைவருக்கும் (குறிப்பாய் மகளிர் குழு)..குறிப்பாக இந்நிகழ்வின் பின்னணியில் உறுதுணையாய் இருந்த அனைவருக்கும்,எங்களுக்கு வழி காட்டிய சுந்தர் அண்ணாவிற்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கின்றேன்
என்றும் நன்றியுடன்,
ரா.ராகேஷ் (கூடுவாஞ்சேரி)
சுந்தர் சார்,
வாழ்த்துக்கள் சுந்தர் sir and uzhavapani டீம்-க்கும். பதிவை படிததுவே ஒரு மன நிறைவை தந்தது என்றால் பணி seitha அநைவருக்கும் எப்படி இருந்திருக்கும் என்று உணர முடிகிறது. பதிவை அளிக்க மேற்கொண்ட சிரமமும் புரிகிறது. வாழ்த்துக்கள் தவிர வேருன்றும் varthai இல்லை சொல்ல.
குரு அருள் என்றும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
nandri
தங்கள் மேலான கருத்துக்களுக்கும் ஆசிகளுக்கும் மிக்க நன்றி!
Dear SundarJi,
Excellent work done by our team..
Rgds,
Ramesh