Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, February 22, 2024
Please specify the group
Home > Featured > வறுமையால் வாடிய பக்தனுக்கு ஈசன் கொடுத்த சிபாரிசுக் கடிதம் – Rightmantra Prayer Club

வறுமையால் வாடிய பக்தனுக்கு ஈசன் கொடுத்த சிபாரிசுக் கடிதம் – Rightmantra Prayer Club

print
திருவிளையாடலில் வரும் பாணபத்திரரை அனைவருக்கும் தெரியும். அவருக்காக எம்பெருமான் விறகு முதலானவற்றை சுமந்து பாடல்கள் பாடி பாணபத்திரரை போட்டிக்கு பாட அழைத்த ஏமநாத பாகவதரை மதுரையைவிட்டே இரவோடிரவாக ஓடச் செய்ததும் தெரியும். ஆனால் அதற்கு பிறகு என்ன நடந்தது? ஆரம்பம் முதலே வறுமையில் வாடியவர் பாணபத்திரர். அவரது பிரச்னை தீர்ந்ததா?

படிக்க படிக்க பரவசத்தில் ஆழ்த்தும் அற்புதமான சம்பவம் இது!

Madurai temple

பக்தனுக்காக திருடனாய் மாறிய பரமேஸ்வரன்! 

துரையில் வாழ்ந்து வந்த பாணபத்திரர் தினமும் எம்பெருமான் திருவடி முன் பாடுவதையே தன் கடமையாக கொண்டவர். வேறு தொழில் ஏதும் செய்யாததால், வறுமையில் வாடினார். பக்தனுடைய ஏழ்மை நிலையைக் கண்ட இரங்கிய எம்பெருமான், அருள் செய்ய எண்ணி, அரசனுடைய கருவூலத்திலிருந்து பொற்காசுகள், மணிகள், நகைகள், சாமரங்களின் பொற்பிடிகள், ஆசனத்தின் பொன் தகடுகள் ஆகியவற்றை கவர்ந்து கொண்டு வந்து பாணபத்திரருக்கு அளித்தார்.

இச்செய்தி எம்பெருமானுக்கும், பாணபத்திரனுக்கும் மட்டுமே தெரியும். பாணபத்திரர் எம்பெருமான் அளித்த பொருட்களை எல்லாம் உருக்கி, உருமாற்றி, விற்று வந்த பொருளை தான் மட்டுமே துய்க்காமல் தன்னை சேர்ந்தவர்களுக்கும், யாசகர்களுக்கும் அளித்து வாழ்ந்து வந்தார். தினமும் ஏதேனும் ஒரு பொருளை பக்தனுக்கு அளித்த வந்த சொக்கநாதப் பெருமான் சில நாட்கள் சென்றபின் எதுவும் கொடுக்காமல் அமைதியாக இருந்து விட்டார்.

பாணபத்திரர் தினமும் ஆலயம் சென்று, எம்பெருமானை வணங்கி, ஒன்றும் பெறாமல் வெறும் கையுடன் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

ஒருநாள் மிகவும் வருந்திய உள்ளத்துடன், பசியானது வருத்த பாணபத்திரர் உறங்கியபோது எம்பெருமான் அவன் கனவில் தோன்றி, ”பாணபத்திரா! பாண்டிய மன்னனுடைய பொக்கிஷத்திலிருந்த பல பொருள்களை அவனறியாமல் கவர்ந்து அளித்து விட்டோம். பாண்டியனும் என்னுடைய பக்தன் ஆதலால், அவனுடைய பொக்கிஷத்தை வெறுமை ஆக்குவதும் நியாயமில்லை. மேலும் களவு போனது தெரிந்தால் அரசன் காவலாளிகளை தண்டிப்பான். ஆதலால் சேரமான் பெருமாளுக்கு நாம் திருமுகம் (சிபாரிசுக் கடிதம்) ஒன்று தருகிறோம். அதை எடுத்துக் கொண்டு நீ சேர நாட்டுக்குச் செல்வாயாக” என்று மொழிந்தருளினார்.

கண்விழித்த பாணபத்திரர் அருகில் ஓலைச்சுருள் ஒன்று இருப்பதைக் கண்டு, மகிழ்ச்சி கடலில் மூழ்கினார்.

எம்பெருமான் அருளிய திருமுகப் பாசுரம் இவ்வாறு அமைந்திருந்தது.

”மதிமலி புரிசை மாடக் கூடற் பதிமிசை நிலவும் பானிற வரிச்சிற
கன்னம் பயிற்மொழி லால வாயில் மன்னிய சிவனியான் மொழி தருமாற்றம்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க் குரிமை யினுரிமையினுதவி ஒளி திகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா வுகைக்குஞ் சேரலன் காண்க
பண்பால் யாழ்பயிற் பாணபத்திரன் றன்போ லென்பாலன்பன் றன்பால்
காண்பது கருதிப் போந்தனன் மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே.”

திருமுகம் பெற்ற பாணபத்திரர், அதை ஒரு பட்டாடையில் சுற்றி வைத்துக் கொண்டு, எம்பெருமான் திருவடி வணங்கினார். பிறகு மதுரை மீனாக்ஷி சுந்தரரேஸ்வரர் ஆலயம் சென்று எம்பெருமானை வணங்கி விடைப் பெற்றுக் கொண்டு, மேற்கே உள்ள சேரநாட்டிற்கு பயணமானான். பலவித நிலங்களை தாண்டி, நல்ல வளம் பொருந்திய மலை நாட்டை அடைந்தான்.

DSC08222

DSC08219

‘திருவஞ்சைக்களம்’ என்ற திருத்தலம் மலை நாட்டின் திலகம் போல் விளங்கி நின்றது. தருமதேவதை அப்பகுதியில் வாசம் செய்தாள். இலட்சுமி தேவி திருநடம் புரிந்தாள். வீரமகள் நன்னடம் செய்தாள். தமிழும் சமஸ்கிருதமும் சிறந்து திகழ்ந்தன. புகழ் பெற்ற அவ்வூரிலிருந்த தண்ணீர்ப் பந்தலில் சென்று தங்கினான் பாணபத்திரர்.

சேரமான் பெருமான் என்னும் அரசன் சேர நாட்டை ஆண்டு வந்தான். அன்றிரவு சேரமன்னன் கனவில் தலைவர் தோன்றி, ”சேரவேந்தனே யாம் மதுரைச் சித்தர். எம்முடைய திருமுகம் பெற்றுக் கொண்டுவரும் பாணபத்திரன் என்னும் எம் பக்தனுக்கு அரிய பொருள்களை கொடுத்து விரைவாக அனுப்புவாயாக” என்று கூறிவிட்டு மறைந்தருளினார்.

வியப்புடன் கண்விழித்த சேரமன்னன் தான் கண்ட கனவு பற்றி தம் அமைச்சர்களிடம் கூறினான். சோமசுந்தரப் பெருமானிடம் திருமுகம் பெற்று வரும் பாணபத்திரனை தேடிக் கொண்டு வருமாறு பணியாட்களுக்குக் கட்டளையிட்டார்.

எல்லா இடங்களிலும் தேடிய பணியாட்கள், இறுதியில் தண்ணீர்ப் பந்தலில் பாணபத்திரர் இருப்பதைக் கண்டு, அரசனிடம் சென்று செய்தியைக் கூறினர். உடனே அரசன் தன் பரிவாரங்கள் புடைசூழ, வந்து பாணபத்திரரை கண்டு மகிழ்ந்தார்.

Siva lingaஎம்பெருமான் தனக்கென அருளி விடுத்த ஸ்ரீமுகத்தை வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டு, ஆனந்தக் கண்ணீர் வடித்தார். பாசுரத்தை பலமுறை படித்து, எல்லையில்லாத மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார்.

தெய்வத் திருமுக ஓலையை பொன்னாசனத்தில் வைத்து, யானை மேலேற்றி எடுத்துச் சென்றார். பாணபத்திரனையும் தக்க மரியாதையுடன் உடனழைத்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றார். சேரமன்னன் அரண்மனைக்குச் சென்றதும், பாணபத்திரனுக்குப் பதினாருவித உபச்சாரங்களை செய்து, மகிழ்ச்சியடைய செய்தார்.

எம்பெருமான் அருளிய திருமுகப் பாசுரத்திலே, ”மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே” என்ற கட்டளையை சேரமான் பெருமாள் நன்கு உணர்ந்து கொண்டவராதலால், காலந்தாழ்த்தாமல், பாணபத்திரனை பொக்கிஷ அறைக்கு அழைத்துச் சென்று, எல்லாச் செல்வங்களையும் எடுத்துக்கொள்ளுமாறு வேண்டிக் கொண்டார்.

ஆனால் பாணபத்திரரரோ ”தாங்கள் அளிப்பதே போதும்” என்று பணிவுடன் கூறினார். ”எல்லாச் செல்வங்களும் இறைவன் அருளியது” என்று எண்ணிய சேரமன்னன், நிறைய செல்வத்தை அள்ளிக் கொடுத்தான். ஆனால் பாணபத்திரர் தனக்கு வேண்டிய அளவு செல்வத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு புறப்பட, சேரமன்னன் நெடுந்தூரம் வரை சென்று, பாணபத்திரரை வழியனுப்பிவிட்டுத் திரும்பினார்.

குபேரனை ஒத்த பெருஞ்செல்வத்துடன் மதுரைக்கு வந்த பாணபத்திரர், முதலில் எம்பெருமானை வணங்கினார். பிறகு, வேதியர், விற்பன்னர், ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் ஆகிய எல்லோருக்கும் தான தருமங்கள் செய்து இனிதே வாழ்ந்து வந்தார்.

– திருவிளையாடற் புராணத்தில் வரும் ‘திருமுகம் காட்டிய படலம்’ இது.

திருவருள் கைகூடி அதிர்ஷ்டம் வரும்போது எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று நமக்கு காட்டியிருக்கிறார் பாணபத்திரர். ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்று அவர் உணர்ந்ததால் தான் எவ்வளவு கொடுத்தாலும் போதாத பொன் பொருளை தனக்கு சேரமான் கொடுத்தபோது “வேண்டிய மட்டும் போதும் “என்று கூறி பெற்றுக்கொண்டு வந்து, அதிலும் தான தருமங்கள் செய்தும் வாழ்ந்து வந்திருக்கிறார்.

இதை மதுரையிலேயே சுந்தரேஸ்வரப் பெருமான் செய்திருக்க முடியும். திருவிளையாடல் வல்லோன், அத்தனை சுலபத்தில் அனைத்தையும் செய்துவிடுவானா என்ன? பாணபத்திரருக்கு உதவுவதன் மூலம் சேரமான் பெருமானுக்கும் திருவருளைக் கூட்டிச் செய்து, பாணபத்திரர் பெருமையை இதன் மூலம் நமக்கெல்லாம பறைசாற்றி, எத்தகைய மனப்பான்மை இருந்தால் தனது அருளை பெறமுடியும் என்றும் காட்டியிருக்கிறான் அந்த கள்வன். ஆம்… நம் உள்ளங்கவர் கள்வன்!

==========================================================

நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…

முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : இந்த வாரம் பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் திருவல்லிக்கேணியை சேர்ந்த சிவனருட்செல்வன் தட்சிணாமூர்த்தி (19). 

dhaksinamoorthyசமீபத்தில் மயிலை கபாலீஸ்வரர் கோவில் திருக்குளத்தில் நடைபெற்ற திருஞானசம்பந்தர் பூபம்பாவையை உயிர்பிக்கும் உற்சவத்தின்போது, செல்வன் தட்சிணாமூர்த்தியை குளக்கரையில் பார்த்தோம்.

கைகூப்பி சம்பந்தரை வணங்கிக்கொண்டு நின்றுகொண்டிருந்த இந்த இளைஞரைப் பார்த்ததுமே மனதுக்குள் ஒரு இனம் புரியாத இதம்.

வாயில் பான்பராக்கை போட்டுக்கொண்டு சைலன்ஸர்கள் அலறும் பைக்கில் அதிவேகமாக சாலையில் செல்வதும், மதுக்கடை பார்களில் நண்பர்களுடன் சினிமா உள்ளிட்ட அதிமுக்கியமான விஷயங்களை ஆலோசிப்பதும் என இன்றைய இளையதலைமுறையினர் இள‌மைப்பருவத்தை வீணான கேளிக்கைகளிலும் அர்த்தமற்ற செயற்பாடுகளிலும் செலவிடும் சூழ்நிலையில் தட்சிணாமூர்த்தி போன்றவர்களை பார்க்கும்போது பரவசம் தோன்றுவது இயல்பே..

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்து வருகிறார்.

இவரது தந்தை திரு.தனபால் பிளம்பிங் தொழில் செய்து வருகிறார். திரு.தனபாலல் அவர்களுக்கு சைவத்தின் பால் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. பல காலமாக சைவ சமய விழாக்களுக்கும் தேவார திருவாசக முற்றோதலுக்கும் செல்வது வழக்கம் உண்டு. அப்படி செல்லும்போது தனது மகன் தட்சிணாமூர்த்தியையும் அழைத்துச் செல்ல செல்ல, தட்சிணாமூர்த்திக்கும் இதில் பற்று ஏற்பட்டுவிட்டது.

IMG_5780

கூனம்பட்டி ஆதீனத்திடம் ‘விசேஷ தீட்சை’ பெற்றுள்ள தட்சிணாமூர்த்தி, தினமும் காலை மாலை இருவேளையும் அனுஷ்டானங்கள் செய்து மந்திரங்கள் சொல்வார்.

இப்படியே இறுதி வரை சிவனை வணங்கிக்கொண்டே இருந்துவிடவேண்டும் என்பது தான் தட்சிணாமூர்த்தியின் ஆசை. என்ன ஒரு லட்சியம். இதுவல்லவா இந்த பிறவியின் பயன்! சிவனை வணங்குவது ஒன்றே பாக்கியம் என்று கருதுபவர்களுக்கு பாராட்டும் பெருமையும் தேடி வரும் என்பதற்கு தட்சிணாமூர்த்தியே உதராணம்.

பூம்பாவை உயிர்ப்பித்த நிகழ்ச்சி நடைபெற்றபொது, இவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் பாக்கியம் கிடைத்தது. இவரது தந்தையிடமும் சிறிது நேரம் பேசி, இவரது அலைபேசி எண்ணை பெற்றுக்கொண்டு பிற்பாடு தொடர்புகொள்வதாக தெரிவித்திருந்தோம்.

DSC03116

நிகழ்ச்சி முடிந்து கிளம்பும் தருணம், படித்துறை முழுவதும் குப்பைக் கூளங்களால் நிரம்பி வழிந்தது. தட்சிணாமூர்த்தியும் அவர் தந்தையும் ஆளுக்கொரு பக்கம் தனியாக களமிறங்கி, குப்பைகளை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு அப்புறப்படுத்திக்கொண்டிருந்தனர். இது போன்ற செயல்களின் அருமை மற்றும் மற்றும் அவசியம் உழவாரப்பணி குழுவை வைத்திருப்பதால் நமக்கு நன்கு தெரியும்.

IMG_6009

DSC03132இன்று காலை தொடர்புகொண்டு நலம் விசாரித்து நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக் கூறி பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அருகாமையில் இருக்கும் ஏதேனும் கோவிலுக்கு சென்று எங்களுக்காக எந்நேரம் பிரார்த்தித்தால் மகிழ்ச்சியடைவோம் என்றோம். திருவல்லிக்கேணி திருவெட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று பதிகம் ஓதி பிரார்த்திப்பதாக கூறியிருக்கிறார்.

தினசரி பதிகங்கள் ஓதி வந்தாலே போதும் நமக்கு எல்லா நன்மையையும் உண்டாகும் என்பது இவரது அபிப்ராயம்.

ரைட்மந்த்ரா வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது இவர் சொன்னது என்ன தெரியுமா?

“நாம் காணவிரும்பும் மாற்றமாக நாம் முதலில் இருப்போம்” என்பது தான்.

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கு சமர்பிக்கப்பட்டிருக்கும் கோரிக்கைகளில் முதலாவதாக திரு.ரமேஷ் அவர்களால் சமர்பிக்கப்பட்டிருக்கும் கோரிக்கை அவசரம் கருதி இந்த வாரம் சேர்கப்பட்டுள்ளது. அவரை பற்றியும் நமது தளம் பற்றியும் அவரே மிகச் சிறந்ததொரு அறிமுகம் கொடுத்திருக்கிறார். அவர் யாருக்கு பிரார்த்தனை சமர்பித்திருக்கிராரோ (திரு.தங்கதுரை) அவர்களை பற்றி அவர் கூறியிருக்கும் வார்த்தைகளை கவனியுங்கள். பரோபகாரி, சமூக சிந்தனை மிக்கவர். அவரது உதவியால் பல குடும்பங்கள் இன்று நன்றாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நிச்சயம் அவர் செய்த தர்மம் அவரை காக்கும் என்பது உறுதி. அதனால் தான் இந்த பொது மன்றத்திற்கு அவரது கோரிக்கை வந்துள்ளது.

அடுத்து பிரார்த்தனை இடம்பெற்றுள்ள திருமதி.ரஞ்சித் அவர்களின் சகோதரி கார்த்திகா அவர்கள் நமது தளத்தின் தீவிர வாசகி. சில மாதங்களுக்கு முன்னர் தான் தளத்தின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது. ஆனால், அது முதல் பதிவுகளை தீவிரமாக படித்து வருகிறார். பின்பற்றியும் வருகிறார். தனது சகோதரியிடம் நமது தளம் பற்றி எடுத்துக்கூறி அடிக்கடி தளத்தை பார்க்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார். பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி, தனது சகோதரியை நமக்கு பிரார்த்தனை கோரிக்கை அனுப்பும்படி கேட்டு அனுப்பியிருக்கிறார். அவரது நம்பிக்கை வீண் போகக்கூடாது.

மூன்றாவதாக சமர்பிக்கப்பட்டிருக்கும் கோரிக்கை நம் சார்பாக வைக்கப்பட்டிருக்கிறது. நமக்கு தெரிந்த ஒருவர் மூலம் இந்த கோரிக்கை நமக்கு கிடைத்து சமர்பித்திருக்கிறோம். பிரார்த்தனையாளர் திருமதி.அமலா அவர்களை நமக்கு நேரிடியாக தெரியாது. இருப்பினும் அவரது சூழ்நிலை நமக்கு நன்கு புரிந்ததால் இந்த வாரம் பிரார்த்தனையில் சேர்த்திருக்கிறோம். நல்லது நடக்கவேண்டும்.

பொதுப் பிரார்த்தனை… என்ன சொல்ல உள்ளம் உருக்கும் ஒன்று. அவசியம் பிரார்த்தியுங்கள்.

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

(1) Friend’s father suffering from bone cancer

Dear sundar sir,

I am a reader of ur rightmanta.com for the past one month. I changed a lot even my behavior and activities. Through your writings myself and my wife both are devotees of Lord Muruga..

I really felt the good experiences of reading vel maral..

My friend’s father name is Mr.Thangadurai. He is sick and serious condition due to Bone cancer. Actually past nine months before he took treatment and he is good in healthwise. last month his shoulder is fractured and they went to treatment for that and done radiation. One month he is staying in chennai hospital and got treatment. He got bed sore also. Now he is in critical condition.. He returned from chennai and is in Papanasam.. Yesterday only we known his condition…

Actually he is a very good human being and doing lot of social services.. because of his help lot of families are survived.. but i don’s know why god gives this kind of diseases to good people.

I would like to include his name in Right Mantra Prayer Club and Wants to cure from his sick and relief from pain..he is getting untalerable pain… Sir Please include his name and Pray for ur regular prayer… God only saves his life… definitely he will do a good thing to him.. pray for him sir..

Thank you

By
R.Ramesh
Kumbakonam

(2) வாட்டி வரும் வழக்கும் உடல் உபாதையும் முடிவுக்கு வரவேண்டும்!

ரைட்மந்த்ரா ஆசிரியருக்கும் குடும்பத்தினருக்கும் வணக்கம். என் கணவர் வழக்குகளாலும் பல்வேறு உடல் உபாதைகளாலும் த்டோர்ந்து அவதிப்பட்டு வருகிறார்.

என் மாமனார் மாமியார் 20௦௦ வருடத்தில் சிறிய அளவில் சீட்டு கம்பெனியை மிகவும் நேர்மையான முறையில் நடத்தி வந்தனர். மிகவும் நம்பிக்கை மிகுந்தவர்களிடம் பணம் கொடுத்தனர். அவர்கள் சரியான நேரத்தில் பணத்தை தராததால் பணம் கட்டியவர்களுக்கு பணத்தை தர இயலவில்லை. அதனால் இரு தரப்பினரும் வழக்கு போட்டனர். அப்போது என் கணவர் படித்து கொண்டிருந்தார். அவருக்கும் இந்த பிரச்சனைக்கும் சம்பந்தமே கிடையாது. அனால் அவர் பெயரையும் கேஸ் –ல் சேர்த்து விட்டனர். 15 வருடங்கள் கேஸ் நடக்கிறது. ஒரு முறை கூட தவறாமல் என் மாமியார் மாமனார் கோர்ட் சென்று வருகின்றனர். சட்டம் மற்றும் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடக்கின்றனர். நாங்கள் யாரையும் ஏமாற்ற வில்லை.

என் கணவர் அவருடைய பணி நிமித்தமாக வெளியூர் செல்ல இருக்கிறார். அனால் இந்த வழக்கால் அவர் வெளியூர் செல்ல முடியாது. அதனால் அலுவலகத்தில் மிக பெரிய பிரச்சனை மற்றும் வேலைக்கே ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. என் கணவர் ஒருவரை நம்பி தான் நாங்கள் அனைவரும் உள்ளோம். அவர் வேலை மிகவும் இன்றியமையாத ஒன்று.

தயவு கூர்ந்து இந்த வழக்கில் இருந்து என் கணவர் மற்றும் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் விடுவிக்குமாறு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். தொடர்ந்து வழக்குகள் ஏதும் போடாமல் வழக்கை நிரந்தரமாக முடித்து எங்கள் மேல் குற்றமில்லை என தீர்ப்பு வரவேண்டும். மேலும் அலுவலகத்தில் அவருக்கு பணி நிரந்தரமாக இருக்க வேண்டும். அவர் ஜூன் மாதம் வெளியூர் செல்ல எந்த இடையுறும் இருக்க கூடாது என பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு மிக தாழ்மையுடம் கேட்டு கொள்கிறேன்.

மேலும் பல்வேறு நரம்பு தொடர்பான உடல் உபாதைகளினால் அவர் அவதிப்பட்டு வருகிறார். அது பற்றி தனிப் பிரார்த்தனையே அளிக்கவேண்டும். அந்தளவு படாயபடுத்திவருகிறது உடல் பிரச்சனைகள்.

இன்னல்கள் யாவும் நீங்கி எங்கள் குடும்பத்தினர் மன அமைதியோடு வாழ பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

இப்படிக்கு
தாங்கள் உண்மையுள்ள
திருமதி.ரஞ்சித்

(3) புத்திர பாக்கியம் வேண்டி தவிக்கும் ஒரு தாய்!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த திருமதி.அமலா ஸ்ரீதர் (29). புத்திர பாக்கியம் இன்றி தவித்து வருகிறார். அவருக்கு நல்ல முறையில் கருத்தரித்து சுகப்பிரசவம் ஏற்பட்டு அவர் விருப்பம் போல நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறக்கவேண்டும். இந்த குழந்தை அவர்களுக்கு மிகவும் முக்கியம். இதில் தான் அவரது மகிழ்ச்சியும் அந்த குடும்பத்தின் மகிழ்ச்சியும் அடங்கியிருக்கிறது.

அவரது நிலைமை எனக்கு நன்கு தெரியுமென்பதால் அவருக்காக அனைவரையும் பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

– ரைட்மந்த்ரா சுந்தர், ரைட்மந்த்ரா.காம்

* தாங்கள் கோரிக்கை அனுப்பி அது இன்னும் நம் மன்றத்தில் வெளியாகவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வாசக அன்பர்கள் மீண்டும் அந்த கோரிக்கையை (அதே மின்னஞ்சலை) திரும்ப அனுப்பவும். (அல்லது) நம்மை தொடர்புகொள்ளவும். நன்றி.

==========================================================

பொது பிரார்த்தனை

கொல்கத்தா விபத்து மற்றும் சத்தீஸ்கார் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு நம் கண்ணீர் அஞ்சலி!

கொல்கத்தா விபத்தில் பலியானோர் இறைவனடி சேர பிரார்த்திப்போம்!

கொல்கத்தாவில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த பாலம் ஒன்று கட்டுமானப் பணிகளின் போது இடிந்து விழுந்ததில் 18 பேர் பலியாகினர். 60க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

kolkatta1

கொல்கத்தாவின் மொத்த விற்பனை மையமாக திகழும் புராபஸார் பகுதியில் ரபீந்திர சாரணி மற்றும் கே.கே.தாகூர் சாலைகளை இணைக்கும் வகையில் 2.2 கி.மீ. தூரத்துக்கு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இப்பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று பிற்பகலில் பாலம் கட்டுமான நடைபெற்ற பகுதிகளில் ஒன்று திடீரென்று இடிந்து விழுந்தது. பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதி என்பதால், இடிந்து விழுந்த பகுதியில் 100க்கும் அதிகமானோர் சிக்கிக் கொண்டனர். ஏராளமமான வாகனங்களும் பாலத்துக்கு அடியில் நிறுத்தப்பட்டிருந்ததால், அவைகளும் பலத்த சேமதடைந்தன.

இந்த விபத்தில் இதுவரை 23 பேர் வரை இறந்துள்ளதாக மேற்குவங்க மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. காயமடைந்த 62 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் பலியானோர் ஆன்மா இறைவனடி சேரவும், காயமுற்று சிகிச்சை பெறுவோர் விரைவில் நலம் பெறவும் பிரார்த்திப்போம்.

மாவோயிஸ்டு தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்!

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டம் மேளவாடா கிராமத்தில் உள்ள பசாரஸ்- குவாகொண்டா பகுதி வழியாக நேற்று முன்தினம் சிஆர்பிஎப் வாகனத்தில் 7 வீரர்கள் சென்றனர். அப்போது, சாலையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி வெடித்ததில் 7 வீரர்களும் உயிரிழந்தனர். இதில், சென்னை அருகே உள்ள அம்பத்தூரைச் சேர்ந்த விஜயராஜ் (வயது 45) என்ற வீரரும் உயிரிழந்தார். இதையடுத்து சத்தீஸ்கரில் இருந்து விமானம் மூலம் விஜயராஜின் உடல் நேற்று மாலை சென்னை விமானம் நிலையம் வந்தடைந்தது.

Chhattisgarh

அவரது உடலை மத்திய ரிசர்வ் படையின் உயரதிகாரிகள் மற்றும் உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். அம்பத்தூரில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மத்திய ரிசர்வ் படையினர், உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து இன்று காலையில் அம்பத்தூரில் உள்ள வீட்டில் இருந்து இடுகாட்டிற்கு விஜயராஜின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர். இடுகாட்டில் முழு அரசு மரியாதை யுடன் 21குண்டுகள் முழங்க விஜய ராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது.

விஜயராஜ் மற்றும் அவருடன் விபத்தில் பலியான வீரர்கள் அனைவருக்கும் நம் அஞ்சலியை செலுத்துவதுடன், அவர்களை இழந்து வாடும் அவர் தம் குடும்பத்தினருக்கு நம் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம். இது உண்மையில் ஒரு தேசிய பேரிழப்பு!

கேரளவின் பராவூர் கோவில் திருவிழாவில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சிறப்பு பிரார்த்தனை!

கேரளா மாநிலம் கொல்லம் பராவூர் கோவில் திருவிழாவில் இன்று 10/04/2016 அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 84 பேர் வரை பலியாயினர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பராவூர் புன்டிங்கல் தேவி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் கோவில் திருவிழா இந்தாண்டும் வழக்கம் போல் நடைபெற்றது. திருவிழாவி்ன் போது அதிகாலை 3.30 மணியளவில் பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் 84 பேர் வரையி்ல் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

kerala_temple_fire.jpg_1718483346

முன்னதாக மாவாட்ட நிர்வாகம், வான வேடிக்கைகளுக்கு அனுமதி மறுத்திருந்ததாகவும் அதையும் மீறி வான வேடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாலேயே இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

நம் Rightmantra.com தளம் சார்பாக பலியானோர் குடும்பத்தாருக்கும் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதுடன் இவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெறவிருக்கிறது என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

விபத்தில் பலியானோர் ஆன்மா இறைவனடி சேரவும், காயமுற்று சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து நலம் பெறவும், விபத்தில் பலியானோர் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்கள் ஆறுதல் பெறவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.

இன்று மாலை 5.30 pm – 5.45 pm நடைபெறவுள்ள நமது வாராந்திர பிரார்த்தனை கிளப் பிரார்த்தனையில் இந்த பிரார்த்தனை பொதுப் பிரார்த்தனையாக சேர்க்கப்பட்டுள்ளது. அனைவரும் மறக்காமல் பிரார்த்தனை செய்யவும்.

– ரைட்மந்த்ரா பிரார்த்தனை குழு உறுப்பினர்கள்

==========================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgகும்பகோணத்தை சேர்ந்த திரு.ரமேஷ் அவர்களின் குடும்ப நண்பர் திரு.தங்கதுரை அவர்களுக்கு ஏற்பட்டுள்ள எலும்பு புற்றுநோயிலிருந்து அவர் விடுபட்டு விரைவில் நலம்பெறவும், நம் வாசகியின் கணவர் திரு.ரஞ்சித் அவர்களுக்கு வழக்குகள் மூலம் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கவும், அவருக்கு உள்ள எலும்பு – நரம்பு தொடர்பான பிரச்சனைகள் நீங்கி அவர் பரிபூரண ஆரோக்கியம் பெறவும், புதுவையை சேர்ந்த மருத்துவர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த திருமதி.அமலா ஸ்ரீதர் அவர்களுக்கு அவர் விருப்பம் போல ஆறோக்கியமான ஒரு நல்ல குழந்தை பிறக்கவும் அவர்கள் சந்ததி தழைக்கவும் இறைவனை வேண்டுவோம்.

மேலும் இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் செல்வன்.தக்ஷினாமூர்த்தியின் சிவத்தொண்டு மேன்மேலும் சிறக்கவும் அவரும் அவர் குடும்பத்தாரும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று வாழவும் பிரார்த்திப்போம்.

கொல்கத்தா விபத்தில் பலியானவர்களின் ஆன்மா இறைவனடி சேரவும், காயமுற்று மருத்துவமனையில் சிக்கியிருப்போர் விரைந்து நலம் பெறவும் பிரார்த்திப்போம். விபத்தில் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பவர்கள் விரைவில் எந்த காயமும் பாதிப்பும் இன்றி மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்கப்படவும் இறைவனை வேண்டுவோம். அதே போல நாட்டைக் காக்கும் பணியில் இருக்கும்போது மாவோயிஸ்டு தாக்குதலில் உயிர்நீத்துள்ள நம் சி.ஆர்.பி.எப் வீர்கள் அனைவரின் ஆன்மாவும் இறைவனடி சேரவும் அவர்தம் குடும்பத்தினர் ஆறுதல் பெறவும் பிரார்த்திப்போம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஏப்ரல் 03, 2016 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

==========================================================

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

==========================================================

Rightmantra Prayer Club

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

==========================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W:www.rightmantra.com

==========================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

==========================================================

சென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : திருச்சேறை ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரர் / ஸ்ரீ சாரபரமேஸ்வரர் கோவிலில் குருக்களாக தொண்டாற்றும் திரு.சுந்தரமூர்த்தி குருக்கள்!

சென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது?

சென்ற ருண விமோசன சிறப்பு பிரார்த்தனைக்கு தலைமையேற்ற திருச்சேறை குருக்கள் திரு.சுந்தரமூர்த்தி அவர்கள் பிரார்த்தனையாளர்கள் அனைவருக்காகவும் பிரார்த்தித்து அர்ச்சனையும் செய்து பிரசாதத்தையும் நமக்கு அனுப்பியிருக்கிறார். அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி. திருச்சேறை செல்பவர்கள செந்நெறியப்பரையும், அருகே திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கும் சார்நாதப்பெருமாளையும் தரிசித்துவிட்டு வரவும். நல்லதே நடக்கும்.

==========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *