நாம் சீக்கிரமே சாதித்திருக்கவேண்டும். உண்மை தான். ஆனால், அதற்காக இனி நம்மால் முடியவே முடியாது என்று அர்த்தமில்லை. முன்பு ஒரு முறை முயற்சித்து தோற்ற காரணத்தால் தம்மால் எப்போதுமே செய்யமுடியாது என்று கருதுபவர்கள இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் அடிமைகள். ஆம் சூழ்நிலைகளின் அடிமைகள்.
கீழே காணும் சாதனையாளர்கள் யாவரும் ‘வயதுக்கும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும் சம்பந்தமே இல்லை’ என உணர்த்தியிருக்கும் நேரடி உதாரணங்கள்.
சில்வஸ்டர் ஸ்டாலோன் – வீட்டு வாடகை, கரெண்ட் பில் இவற்றை கட்டவேண்டும் என்பதற்காக தனது மனைவியின் நகைகளையும் ஆசையுடன் வளர்த்த நாயையும் சில்வஸ்டர் ஸ்டாலோன் விற்க நேர்ந்தது. அவரது ‘ராக்கி’ படத்தின் ஸ்க்ரிப்ட் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர் வெற்றிகரமாக ஹாலிவுட்டில் கால்பதித்தபோது அவருக்கு வயது 30க்கும் மேல்.
ஹாரிசன் போர்டு – இவருக்கும் சினிமா கனவுகள் அத்தனை சீக்கிரம் நனவாகவில்லை. கம்பெனி கம்பெனியாக ஏறி வாய்ப்பு கேட்ட காலங்களில் கிடைத்த ரோல்களால் வெறுத்துப் போய் கடைசியில் தச்சு தொழில் செய்து தான் செலவுகளை சமாளித்து வந்தார். இவரின் முதல் இரண்டு படங்களில் இவரது பெயரைக் கூட டைட்டில் கார்டில் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஹாலிவுட்டின் மிகப் பிரபலமான நட்சத்திரமாக உயர்ந்த இவர் இன்று ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? சுமார் $ 25 மில்லியன் (அதிகமில்லை 167 கோடிகள் தான்.) அவர் வயசை சொல்ல மறந்துவிட்டோமோ… ஜஸ்ட் 73!
========================================================
Don’t miss these articles…
அளவற்ற செல்வம் புதைந்திருப்பது எங்கே தெரியுமா?
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்!
========================================================
ஜோசப் கான்ராட் – மிகப் பெரிய ஆங்கில எழுத்தாளரான இவருக்கு தனது 20 வயது வரை ஆங்கிலத்தில் பேசவே தெரியாது. பள்ளிக்கூடம் செல்வதில் துளியும் ஆர்வமில்லாத இவர் பள்ளிக்கூடத்தில் எடுத்த பெயர் ‘மக்கு’. உறவினர் ஒருவர் இவரை வளர்த்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் அவரால் சமாளிக்க முடியாமல் இவரது 15 வது வயதில் இவரை ஒரு ஆதரவற்றோர் விடுதியில் சேர்த்துவிட்டார். அதற்கு பிறகும் கூட இவர் அலைகழிக்கப்படுவது நிற்கவில்லை. ஆனால் அதன் பிறகு ஆங்கில எழுத்துலக வரலாற்றில் மிகப் பெரிய எழுத்தாளராக இவர் உயர்ந்தார்.
கர்னல் சாண்டர்ஸ் – தாமதமாக வாழ்க்கையை துவக்குபவர்களுக்கு இவரது வரலாற்றை போல உத்வேகம் கொடுக்கும் ஒன்று வேறு எதுவும் இருக்கமுடியாது. கே.எப்.சி. என்கிற பிரபல பிராண்டை இவர் உருவாக்கியபோது இவரது வயது என்ன தெரியுமா? 65. ஆம்… தன்னுடைய 65 வது வயதில் தான் இவர் தன் உண்மையான பயணத்தையே துவக்கினார். அவருக்கு கிடைச்ச ரிட்டயர்மெண்ட் தொகை எவ்ளோ தெரியுமா? $105. இன்று உலகின் மிகப் பெரிய சங்கிலித் தொடர் உணவகங்களில் ஒன்று கே.எப்.சி. தெரியுமா?
ரிச்சர்ட் ஆடம்ஸ் – ‘வாட்டர்ஷிப் டவுன்’ என்கிற மிகப் பிரபலமான சர்வதேச அளவில் அதிக விற்பனையான நாவலை வெளியிட்டபோது அதன் ஆசிரியர் ரிச்சர்ட் ஆடம்ஸுக்கு வயது என்ன தெரியுமா? 55. அவரது முதல் படைப்பை பல பதிப்பகங்கள் நிராகரித்துவிட்ட நிலையில் 1972 ஆம் ஆண்டு அதை பதிப்பிக்க வாய்ப்பு கிடைத்தது. அடுத்த சில ஆண்டுகளில் அவரது ‘வாட்டர்ஷிப் டவுன்’ பல லட்சம் காப்பிகள் விற்று சாதனை படைத்தது. மிகப் பெரிய குழந்தைகள் இலக்கிய எழுத்தாளராக இவர் உயர்ந்தார்.
கிராண்ட்மா மோசஸ் – பெயருக்கு ஏற்றார்போல இவர் ஒரு பாட்டி தான். மிகப் பிரபலமான ஓவியரான இவரது ஓவியங்கள் பல நூறு கோடிகள் ஏலம் போகின்றன. ஆனால், இவர் தனது முதல் ஓவியத்தை வரையத் துவங்கியது எப்போது தெரியுமா? 78 வது வயதில். ‘டைம்’ இதழ் உட்பட பல முன்னணி பத்திரிக்கைகளின் அட்டைபப்டத்தில் இடம்பெற்ற இவர், பல விருதுகளை குவித்திருக்கிறார். இரட்டை டாக்டர் பட்டம் பெற்றவர் இந்த பாட்டி.
மோமோஃபுக்கு ஆண்டோ – மோமோஃபுக்கு 1910 இல் தைய்வானில் பிறந்தவர். இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, ஜப்பான் சென்றவர், அங்கு சாக்ஸ், உப்பு இவையெல்லாம் விற்றுக்கொண்டிருந்தார். ஜெயிலுக்கும் செல்ல நேரிட்டது. இவர் மக்களின் பசியை உடனடியாக போக்கும் ஒரு அற்புதமான உணவை இவர் கண்டுபிடித்தபோது இவருக்கு வயது 48. இவர் கண்டுபிடித்த உணவு, மிகப் பெரிய பிராண்டானது. இவரது நிறுவனமும் கோடிகளில் லாபத்தை குவித்தது. அப்படி என்ன கண்டுபிடித்தார் தெரியுமா? இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்.
சுவாமி பிரபுபாதா – ‘ஹரே கிருஷ்ணா’ இயக்கத்தை சுவாமி பிரபுபாதா துவக்கியபோது அவரது வயது என்ன தெரியுமா? 70. ஆனால் தனது ஆயுளின் கடைசி இருபது வருடங்களில் வேதங்கள் மற்றும் உபநிடதங்கள், பகவத் கீதை போன்றவற்றை சுமார் 60 தலைப்புக்களில் மிகப் பெரிய புத்தகங்களாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். உலகின் பல நாடுகளுக்கு பறந்து பறந்து சென்று பகவத் கீதையை பரப்பினார். இன்று ‘ஹரே கிருஷ்ணா’ இயக்கத்துக்கு உலகெங்கும் கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
*******************
இது சுமார் ஒரு சாம்பிள் பட்டியல் தான். மேற்படி சாதனையாளர்கள் பட்டியல் மிகப் பெரியது.
நம் வயது என்னவாக இருந்தாலும் நம்மாலும் சாதிக்க முடியும் என்கிற எண்ணம் நமக்கு ஏற்பட்டால், நாமும் நிச்சயம் இதைப் போல சாதிக்கமுடியும் என்பதே உண்மை.
தன்னம்பிக்கை மிக்கவர்களுக்கே நவக்கிரகங்கள் உறுதுணையாக இருப்பார்கள்!
உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை செய்யுங்கள். அந்த பாதையில் உங்கள் படகை செலுத்துங்கள். ‘கருமத்தை முடிப்பவன் கட்டத்தை பாரான்’ என்று சொல்வார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மை. கடவுள் நம்பிக்கையைவிட தன்னம்பிக்கை மிக்கவர்களுக்கே நவக்கிரகங்கள் உறுதுணையாக இருப்பார்கள். ஏன் தெரியுமா? கடவுள் நம்பிக்கை இருப்பவன் கூட தவறுகள் செய்வான். ஆனால் தன்னம்பிக்கை மிக்கவன் ஒரு போதும் தவறு செய்யமாட்டான்.
உங்கள் லட்சியம் எதுவாக இருந்தாலும் அதை செயல்படுத்துவதற்குரிய பாதையில் உடனே அடியெடுத்து வையுங்கள். நிச்சயம் ஒரு நாள் சாதிப்பீர்கள்.
நம்மையே எடுத்துக்கொண்டால், நாம் யார் நமது பாதை என்ன என்று உணர்ந்து சரியான திசையில் நமது பயணத்தை துவக்கியபோது நமக்கு வயது 36. இந்த நான்காண்டுகளில் நாம் எதுவும் சாதித்துவிட்டதாக கருதவில்லை. இருப்பினும் அதற்கான பாதையில் பயணம் செய்கிறோம் என்பதே ஒரு ஆறுதலான பெருமிதமான விஷயம் தான்.
நம்மீது அக்கறையுள்ள நண்பர்களும் வாசகர்களும் ‘எப்படி சார் எல்லாத்தையும் சமாளிக்கிறீங்க?’ என்று அக்கறையோடு கேட்கிறார்கள். அவர்கள் அன்புக்கு மிக்க நன்றி. தளம் தொடர்பான செலவுகளை வாசகர்கள் உதவியுடன் சமாளிக்கிறோம். தனிப்பட்ட செலவுகளுக்கான வருவாயை ப்ரீலான்ஸ் ஜாப் செய்து ஈடுகட்டி வருகிறோம்.
நமது முழு வளர்ச்சியையும் பரிமாணத்தையும் அனைவரும் உணர்வதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும். கொஞ்சம் பொறுங்கள். வெளியே தெரிந்தால் தான் வளர்ச்சி என்றில்லை!! ♦
========================================================
Help us to run this website…
We need your SUPPORT. Help Rightmantra in its functioning.
==========================================================
Also check :
தட்டுங்கள்… இந்தக் கதவு நிச்சயம் திறக்கும்!
விடாமுயற்சியால் விதியை வென்று, ஒரு சாமானியன் சரித்திரம் படைத்த கதை!
உங்கள் வெற்றிக்கும் தோல்விக்கும் யார் பொறுப்பு?
ஆடுகளமும் ஆட்டக்காரர்களும் – ஆளுமை முன்னேற்றத் தொடர் – (5)
எதுக்கு இந்த விஷப்பரீட்சை? உன்னால ஜெயிக்க முடியுமா??
‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?
==========================================================
[END]
சுந்தர்ஜி
உங்கள் பயணத்தில் நாங்கள் பங்கேற்கிறோம் என்பதில் பெருமிதம்கொள்கிறோம்.
தங்களுக்கு உரு துணையாக எப்போதும் உடன்வருவோம்.
ALL IS WELL
Excellent and Excellent article Sundarji. Hatts off to you for giving this article at right time.
Narayanan.
Dear SundarJi,
Very nice and motivating one. Keep it up.
Thanks,
Rgds,
Ramesh