Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, November 8, 2024
Please specify the group
Home > Featured > சிவபெருமானின் முக்கண் எவை தெரியுமா?

சிவபெருமானின் முக்கண் எவை தெரியுமா?

print
துரை மீனாட்சி அம்மன் கோவிலில் ‘‘நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை’’ ஆண்டு தோறும் ஆவணி மாதம் நடைபெறும். இந்த லீலையில் சொல்வது போல் சில தினங்களுக்கு முன்பு மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரை குளத்திற்கு நாரை ஒன்று வந்தது. அது பொற்றாமரை குளத்தை வலம் வந்தபடி இருந்தது. அந்த நாரை, குளத்தின் மேற்கு பகுதியில் உள்ள சிவலிங்கத்தின் எதிரே நின்றிருந்தது. சிவனை நோக்கி தவம் செய்வது போல் இருந்ததாக, அதை பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர். தற்போது வெயில் கடுமையாக கொளுத்துவதால், நாரைக்கு நிழல் வேண்டும் என்ற எண்ணத்தில் பக்தர் ஒருவர் குடையை விரித்து வைத்தார். உடனே அந்த நாரை குடையின் கீழ் ஒதுங்கி நின்றது.

Madurai Temple Naarai

இந்நிலையில் அந்த நாரை எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக இருப்பதை பார்த்த பக்தர்கள் உணவு கொடுத்தனர். ஆனால் பட்டினியாகவே குளத்தை சுற்றி வந்த அந்த நாரை திடீரென்று நேற்று முன்தினம் இறந்தது. இதை அறிந்ததும் கோவில் நிர்வாகத்தினர், இறந்த நாரையை மீட்டு நல்லடக்கம் செய்தனர்.

Madurai Temple Stork

நாரை உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்துள்ளது என்று பக்தர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

சிவபெருமானின் முக்கண் எவை தெரியுமா?

தமிழ் மொழியில் எழுந்த புராணங்களுள் மூன்றுக்கு மட்டும் தனிச் சிறப்பு உண்டு. காரணம் சிவபெருமானின் மூன்று கண்களோடு அவை ஒப்பிடப்படுவது தான். இவற்றை முப்பெரும் புராணம் என்று அழைப்பது மரபு. சேக்கிழாரின் பெரியபுராணத்தைச் சிவபெருமானின் வலக்கண் என்றும். பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணத்தைச் சிவபெருமானின் இடக்கண் என்றும், கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத்தைச் சிவனின் நெற்றிக் கண்ணுடன் இணைத்துப் பேசுவர். (நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவன் தானே முருகன்.) இவற்றுள் மதுரைத் தலபுராணமாகப் போற்றப்படுவது திருவிளையாடல் புராணம்.

திருவிளையாடல் புராணம் சொல்வது என்ன?

நாரைக்கு முக்தி கொடுத்த படலம்

பாண்டியநாட்டின் தென்பகுதியில் இருந்த பெரிய தடாகம் ஒன்றில் வாழ்ந்த மீன்களை உண்டு நாரை ஒன்று வசித்து வந்தது. ஒரு சமயம் மழை பெய்யாமல் போனதால் குளம் வற்றிப் போனது. நாரைக்கு உணவு கிடைக்கவில்லை. எனவே, அது ஒரு வனத்திற்குள் சென்று, அங்கிருந்த நீர்நிலைகளில் சிக்கிய மீன்களைத் தின்று வாழ்ந்தது. அங்கு அச்சோ என்ற குளம் இருந்தது.

Madurai Stork 2
பக்தர் ஒருவர் அமைத்து தந்த குடை

பக்தர் ஒருவர் அமைத்து தந்த குடைஇதன் கரையில் பல முனிவர்கள் தவம் செய்து வந்தனர். இந்த புண்ணியசீலர்கள் பயன்படுத்தும் குளத்தில் நிறைய மீன்கள் இருந்தன. இருந்தாலும், அந்த தவசீலர்கள் வசிக்கும் பகுதியில் மீன் பிடித்து சாப்பிடுவது மகாபாவம் என கொக்கு நினைத்தது.

அங்குள்ள முனிவர்களில் ஒருவரது பெயர் சத்தியன். இவர் மதுரை தலம் பற்றியும், அங்கு குடிகொண்டிருக்கும் சுந்தரேஸ்வரர் பற்றியும் அருமையாக தன் சகமுனிவர்களிடம் பேசுவார். இதைக் கேட்ட நாரை மதுரை நோக்கிப் பறந்தது. பொற்றாமரைக் குளத்தின் நீர் தன் மீது படும்படியாக தலையை மூழ்கி விட்டு பறந்தது. அன்னை மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதி மேலுள்ள இந்திர விமானத்தைச் சுற்றி சுற்றிப் பறந்தது 15 நாட்கள் இவ்வாறே செய்து, பதினாறாம் நாள் பொற்றாமரைக் குளக்கரைக்கு வந்தது.

குளத்தில் மீன்கள் துள்ளி விளையாடின. அவற்றைப் பிடித்து உண்ண எண்ணிய வேளையில், ஞானம் பிறந்தது. இப்படி செய்வது பாவமல்லவா? அது பசியைப் பொறுத்துக் கொண்டது.

thiruvilaiyadal puranam naraiதனது இயற்கையான சுபாவத்தைக் கூட கருணையின் காரணமாகவும், தன் மீது கொண்ட நம்பிக்கையாலும் மாற்றிக்கொண்ட நாரையின் முன்னால் சுந்தரேஸ்வரர் தோன்றி, என்ன வரம் வேண்டும் நாரையே? என்றார்.

“ஐயனே! எங்கள் இனத்தவர் மீன்களைப் பிடித்து உண்ணும் சுபாவமுடையவர்கள். ஆனால், இந்த புண்ணிய குளத்தில் அதைச் செய்யாமல் இருக்க தாங்களே அருள வேண்டும். எனவே, இந்தக் குளத்தில் மீன்களே இல்லாமல் செய்ய வேண்டும். மேலும், எனக்கு சிவலோகத்தில் தங்கும் பாக்கியம் வேண்டும்” என்றது. பெருமானும் அவ்வாறே அருளினார்.

நாரை நான்கு புயங்களும், மூன்று கண்களும் பொருந்திய சிவ வடிவம் பெற்று, வானுலகத்தோர் தூவிய மலர் மாரியில் மூழ்கியவாறு விமானத்தில் ஏறித் தேவ துந்துபிகள் முழங்க சிவலோகத்தை அடைந்தது. பின்னர் நந்தி கணங்களுள் ஒன்றாய்த் தங்கியிருந்தது. நாரையின் வேண்டுதற்கிணங்க இன்று வரை பொற்றாமரைக் குளத்தில் மீன்களே கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது.

– இது தான் திருவிளையாடல் புராணத்தில் நாரைக்கு முக்தி கொடுத்த படலத்தில் உள்ள தகவல்.

இது நிச்சயம் மீனாக்ஷி சுந்தரேஸ்வரரின் மகிமையை உணர்த்தும் நிகழ்வு தான் என்பதில் ஐயமில்லை. “குளத்தில் மீனைத் தேடி நாரை வந்திருக்கும் இதில் அதிசயம் எதுவும் இல்லை” என்று சிலர் வாதிடுகிறார்கள். நாரை முதலான பறவைகள் மனிதர்கள் நடமாட்டம் மிக்க பகுதிகளுக்கு வரவே வராது. மதுரை தற்போது பெருநகரம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் எத்தனையோ இடங்கள் இருக்க, மதுரை பொற்றாமரைக் குளத்திற்கு நாரை வந்த காரணம் என்ன?  மேலும் அது மூன்று நாட்களுக்கும் மேல் உண்ணாநோன்பு இருந்து மதுரையம்பதியில் உயிர் துறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

=========================================================

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

=========================================================

Also check :

விலங்குகள் இறைவனை பூஜித்து முக்தி பெற்ற தலங்கள் – படங்களுடன் சிறப்பு தொகுப்பு!

காகம் சிவகணங்களில் ஒன்றான கதை – அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 3

கிரக லட்சணம், கோ சம்ரட்சணம்!

=========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *