Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 15, 2024
Please specify the group
Home > Featured > முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

print
மது தளத்தின் மிக முக்கியமான ஒரு அம்சம் வாராந்திர பிரார்த்தனை கிளப். கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேல் நடந்து வரும் இந்த பிரார்த்தனை கிளப்பில் பல வாசகர்களின் பிரார்த்தனைகள் இடம்பெற்றுள்ளன. பல அருளாளர்கள் தலைமை ஏற்று பிரார்த்தனை செய்துவருகிறார்கள். அவை நிறைவேறிய அனுபவங்களை ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம். இதோ தற்போது மேலும் சில வெற்றிச் செய்திகள் கிடைத்திருக்கின்றன.

giant siva

பிரார்த்தனை கிளப்பை பொறுத்தவரை பெரும்பாலும், பிரார்த்தனையை சமர்பிக்க மட்டுமே தளத்திற்கு வருபவர்கள் பலர் உண்டு. அவர்களில் பலருக்கு இணையம் பார்க்கும் வசதியோ வழக்கமோ இருப்பதில்லை. ஏதோ பரிகாரத்தை எப்போதோ தேடும்போதோ அல்லது யாரோ சொல்லியோ நமது தளத்திற்கு வந்து, பிரார்த்தனை சமர்பித்துவிட்டு செல்கிறார்கள். அவர்களில் பலர் மின்னஞ்சல் கூட அனுப்பமுடியாமல், அனுப்பத் தெரியாமல் நம்மிடம் அலைபேசியில் விபரத்தை சொல்லி நாம் குறிப்பெடுத்துக்கொண்டு இங்கு அளிப்பதுண்டு. பல பரிகாரங்கள் செய்து சலித்துப் போய் இறுதியாக இங்கும் பிரார்த்தனை சமர்பித்துவிட்டு செல்கிற ரகம் அவர்கள். ஏற்கனவே செய்த பரிகாரங்களின் பலன்கள் திரண்டிருக்க, கூட்டுப் பிரார்த்தனை என்கிற மகாசக்தி அதில் சேரும்போது அவர்களின் கர்மா கரைந்து பலன் கனியத் துவங்குகிறது. சில மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் கழித்து அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும்போது, நம்மிடம் பிரார்த்தனை சமர்பித்ததையே அவர்களில் பெரும்பாலானோர் மறந்துவிடுகிறார்கள். அது அவர்கள் தவறு அல்ல. இது யதார்த்தம். எனவே அது குறித்த அப்டேட் நமக்கு வருவதில்லை. அவர்களுடைய பிரார்த்தனை நிறைவேறி அவர்கள் மகிழ்ச்சியோடு இருந்தாலே நமக்கு போதும்.

அதே நேரம், நம் தளத்திற்கு ரெகுலராக வரும் வாசகர்கள் நம்முடன் தொடர்பில் இருப்பவர்கள் பிரார்த்தனை கோரிக்கை சமர்பித்து அது நிறைவேறும் பட்சத்தில் நமக்கு மறக்காமல் தெரிவிக்கிறார்கள். அதற்கு முதற்கண் சம்பந்தப்பட்டவர்களுக்கு நம் நன்றி.

இன்னும் சிலர் உண்டு. இவர்களுக்கு இணையமோ தகவல் தொடர்போ ஒரு பிரச்சனையே இல்லை. நன்றியுணர்ச்சி தான் பிரச்சனை. பிரார்த்தனை நிறைவேறினால் அதை நம்மிடம் தெரிவிக்கவேண்டும் என்பது பற்றிய உணர்வே இன்றி இருக்கிறார்கள். மறந்தும் விடுகிறார்கள். பிரச்சனை என்று ஓடி வரும்போது, இங்கே சம்பந்தப்பட்டவர்களுக்காக யாரோ முன் பின் தெரியாத ஒரு அருளாளர் பிரார்த்தனை செய்கிறார். சம்பந்தப்பட்ட வாசகர் யார் என்றே தெரியாத பல நூறு வாசகர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். அவர்களை மறக்கலாமா? நன்றியோடு இருப்பவர்களுக்கே இறைவனிடம் மேலும் கேட்பதற்கு தகுதியுண்டு. உரிமையும் உண்டு. இதை ஏன் சொல்கிறோம் என்றால், இனி இங்கு கோரிக்கை சமர்பிப்பவர்கள் அது நிறைவேறும் பட்சத்தில் அதை நம்மிடம் அப்டேட் செய்ய தவறக்கூடாது என்பதற்காகவே. மற்றபடி எல்லாரும் எப்போதும் சௌக்கியமாக சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பதே நம் பிரார்த்தனை.

இன்னும் சிலருக்கு பிரார்த்தனை நிறைவேறியும் அது பற்றிய ஞானம் இல்லாமல் இருக்கிறார்கள். நாம் பலமுறை சொல்லியிருக்கிறோம். திருவருள் என்றாலே கூரையை பிய்த்துக்கொண்டு பணம் கொட்டுவது ஒன்று தான் என்று நினைக்கக்கூடாது என்று. அப்படி நினைப்பதைவிட அறியாமை வேறு ஒன்றும் இல்லை.

Sivalingam

திருவருள் என்றால் என்ன?

திருவருள் என்றால் என்ன என்று சம்பந்தர் எவ்வளவு அழகாக விளக்குகிறார் பாருங்கள்…

அச்சம்மிலர் பாவம்மிலர் கேடும்மில ரடியார்
நிச்சம்முறு நோயும்மிலர் தாமுந்நின்றி யூரில்
நச்சம்மிட றுடையார்நறுங் கொன்றைநயந் தாளும்
பச்சம்முடை யடிகள்திருப் பாதம்பணி வாரே.
-திருஞானசம்பந்தர்

பொருள் : நஞ்சை மிடற்றிலே நிறுத்தித் தேவர்களைக் காத்தருளியவரும், மணம் கமழும் கொன்றை மலர்களை விரும்பிச் சூடியவரும், தம்மை வழிபடும் அடியவர்களை ஆட்கொண்டருளும் அன்புடையவரும் ஆகிய நின்றியூரில் விளங்கும் இறைவரது பாதம் பணிவார் அச்சம், பாவம், கேடு, நாள்தோறும் வரும் நோய் ஆகியன இலராவர்.

மிகப் பெரிய வரங்கள் எல்லாம் நாம் பிரச்னையின் தீவிரத்தில் நாம் அழுதுகொண்டிருக்கும்போது போது தான் கிடைக்கும். அதை நாம் உணர்வதில்லை.

சமீபத்தில் நமக்கு வந்த மூன்று வெற்றிச் செய்திகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.

அதற்கு முன்…  இதில் கவனிக்கவேண்டிய ஒரு விஷயம் முதல் இரண்டு பிரார்த்தனைகளும் நிறைவேற எடுத்துக்கொண்ட கால அவகாசத்தை பாருங்கள். முதலாவது கிட்டத்தட்ட இரண்டரை வருடம். இரண்டாவது கிட்டத்தட்ட 10 மாதங்கள. மூன்றாவது சில வாரங்கள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

GOD’S MILL GRIND SLOW AS PER THE SUBSTANCE. BUT SURE.

ஏன் இந்த திடீர் சப்தம் ஐயனே?

யிலையில் ஒரு முறை சிவபெருமான் தனது பரிவாரங்களோடு வீற்றிருக்கிறார். திடீரென்று பூமியே இரண்டாக பிளப்பது போன்று “டமார்” என்று சப்தம். நந்தி பகவான் உட்பட அனைவரும் பதறிப்போய், “என்ன ஆயிற்று ஏன் இந்த திடீர் சப்தம் ஐயனே?” என்று கேள்வியெழுப்ப, சிவபெருமான் சிரித்துக்கொண்டே, “ஒன்றுமில்லை இராவணன் பிறந்துவிட்டான். அது தான் பூமி நடுங்கும் இந்த சப்தம்” என்றார்.

சில நிமிடங்கள் சென்றது. மறுபடியும் அதே போல ஒரு சப்தம். இம்முறையும் பூமி பிளந்தது போல இருந்தது.

“இது என்ன சப்தம்?” என்று அனைவரும் கேட்க, “ஒன்றுமில்லை… ராவணன் இராமரால் சம்ஹரிக்கப்பட்டுவிட்டான்… பூமி மகிழ்கிறது” என்றார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

இறைவனின் காலக்கணக்கு வேறு. நம் காலக்கணக்கு வேறு.

எனவே நமக்கு அனைத்தும் சற்று மெதுவாகத் தான் நடப்பது போல தெரியும். ஆனால் அவனைப் பொறுத்தவரை, கேட்கும் மாத்திரத்தில் நமது பிரார்த்தனைகள் ஏற்றுகொள்ளப்பட்டுவிடுகின்றன.

முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே…

திருப்புன்கூரில் விலகிய நிலையல் நந்தி!
திருப்புன்கூரில் விலகிய நிலையல் நந்தி!

முந்தி நின்ற வினைக ளவைபோகச்
சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்
அந்த மில்லா வடிக ளவர்போலும்
கந்த மல்கு கமழ்புன் சடையாரே!

– திருப்புன்கூர் தலம் குறித்த திருஞான சம்பந்தர் தேவாரம் இது.

பொருள் : நெஞ்சே பல பிறவிகளிலும் நின்ற வினைகள் பலவும் நீங்க, திருப்புன்கூரில் ஆதி அந்தம் இல்லாத தலைவராய், மணம் நிறைந்து கமழும் செந்நிறச் சடைமுடி உடையவராய் எழுந்தருளிய சிவபிரானைச் சிந்தனை செய்வாயாக என்பது இதன் பொருள்.

(திருப்புன்கூர் பற்றியும் நந்தி விலகிய கதை பற்றியும் விரிவான பதிவு ஏற்கனவே நம் தளத்தில் இடம்பெற்றுள்ளது. பார்க்க : நந்தனாருக்காக விலகிய நந்தி – திருப்புன்கூர் ஒரு நேரடி தரிசனம்!)

இந்த வாரம் நேரமின்மை காரணமாக பிரார்த்தனை பதிவு இடம்பெறவில்லை. எனவே சென்ற இரண்டு வார பிரார்த்தனைகளில் இடம்பெற்ற கோரிக்கைகளுக்காக மீண்டும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

அடுத்த வாரம், கடன் பிரச்சனையில் சிக்கித் தவிப்பர்களுக்கான விசேஷ பிரார்த்தனை இடம்பெறும். ‘திருச்சேறை’ திருக்கோவில் அர்ச்சகர் திரு.சுந்தரமூர்த்தி குருக்கள் அவர்கள் தலைமை ஏற்கவுள்ளார். இந்த பிரார்த்தனைக்கு ஏற்கனவே சில வாசகர்கள் கோரிக்கைகளை அனுப்பியிருக்கிறார்கள். மேலும் கோரிக்கை சமர்பிக்க விரும்புகிறவர்கள் நமக்கு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு விரைந்து அனுப்பவும்.

***********************************

பிரார்த்தனை நிறைவேறிய வெற்றிச் செய்திகள் 

நமது தளத்தில் இடம்பெற்ற பிரார்த்தனை விபரம் :

புற்றுநோயால் தவிக்கும் மகள் – தாயின் வேதனை

ரைட்மந்த்ரா நண்பர்களுக்கும் ஆசிரியருக்கும் என் வணக்கங்கள்..

என் மகளின் பெயர் சிவசக்தி. வயது 35. அவளுக்கு வாயில் தொண்டை அருகே புற்றுநோய் ஏற்பட்டு தற்போது மிகவும் சிரமப்படுகிறாள். அவள் சிரமப்படுவதை ஒரு தாயாக என்னால் பார்க்க முடியவில்லை. 12 வயதி அவளுக்கு ஒரு பையன் இருக்கிறான். அவளுக்கு தகுந்த சிகிச்சை முறைகளை  ஆலோசித்து வருகிறேன். எந்த ஒரு தெளிவான முடிவும் எடுக்க இயலவில்லை. அவளுக்கு விரைவில் புற்றுநோய்  பரிபூரண குணமடைய இறைவனை வேண்டிக்கொள்ளும்படி உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

– ராணி, கோவை

தற்போது ராணி அவர்களிடமிருந்து மின்னஞ்சல் வந்துள்ளது.

Hello sir this is Rani from coimbatore, hope you remember me.

Two years ago you all prayed to god on behalf of my daughter due to cancer. After you’re pray god opened the eyes Yes:). Now she is fine. Thank you so much thambi for your group prayer. I never forget you. If you come coimbatore please visit my home.

Regards,
Rani (Suma’s Friend)

அவர் பிரார்த்தனை வெளியான பதிவு :

http://rightmantra.com/?p=6700

இந்த பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றது :

 பன்னிரு திருமுறை வித்தகர் திரு.என்.சுவாமிநாதன்

***********************************

அடுத்த பிரார்த்தனை :

பறிபோன சொத்து & வேலை

சொத்து வழக்கு ஒன்றில் அநீதி இழைக்கப்பட்டு அதனால் என் சகோதரர் திரு.வெங்கடாசலம் அவர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார். எங்கள் சொத்து எங்கள் கையைவிட்டுப் போனது மட்டுமல்ல உரிய விலையும் கிடைக்காது ஏமாற்றப்பட்டுவிட்டோம். மேலும் பத்தாண்டுகளுக்கும் மேல் எங்களை அலைகழித்த வழக்கால் பல செலவுகள் ஏற்பட்டு தற்போது அனைத்தையும் இழந்து நிற்கதியாய் குடும்பம் நிற்கிறது.

இதனால் என் சகோதரருக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு வயிற்று வலியால் துடித்து வருகிறார். சில நேரங்களில் எனக்கு வாழவே பிடிக்கவில்லை. என் உயிரை மாய்த்துக்கொள்கிறேன் என்று விரக்தியில் வேதனையில் கூறுகிறார்.

அதே போல என் சகோதரி வசந்தாவுக்கும் துரோகத்தினாலும் புனையப்பட்ட பொய்களினாலும் வேலை போய்விட்டது. அண்ணாவும் தங்கையும் தற்போது குடிதண்ணீருக்கு கூட வழி இல்லாத ஒரு வீட்டில் கோவை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார்கள். நான்கு கி.மீ. தூரம் சென்று தான் தண்ணீர் எடுத்து வரவேண்டும்.

அடுத்தடுத்து இப்படி ஏற்பட்ட சோதனைகளால் அவர்கள் இருவருக்குமே கடவுள் நம்பிக்கை போய்விட்டது. ஆனால், நம் பிரார்த்தனை கிளப் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.

இருவரின் பிரச்சனைகள் தீர்ந்து அவர்கள் சௌக்கியமாக சந்தோஷமாக வாழ பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

– என்.சகுந்தலா,
சென்னை.

சகுந்தலா அவர்களிடமிருந்து 25/09/2015 அன்று வந்த தகவல்

Namasthe Sundar Sir,

Words fail me to thank you adequately, You were extremely generous to include my request to pray for my brother and sister in the Kootu prarthanai club. I thank you, all the readers of our blog Right Mantra.com and Sri Suresh Sivachariyar from the bottom of my heart for praying for my brother and sister, and, my heartfelt thanks to you for doing archana in my brother’s name at Lord Saneeswarar’s temple. My brother is completely cured of his severe stomach pain, We got connection for water supply to our house. (water is supplied once a week! but now my brother need not carry every drop of water from a public tap 4 kilometres from our house.)

My sincere thank again
Please accept my regards
N Sakuntala

அவர் பிரார்த்தனை வெளியான பதிவு :

http://rightmantra.com/?p=17418

இந்த பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றது :

வட திருநள்ளாறு ஆலய குருக்கள் திரு.சுரேஷ் சிவாச்சாரியார்

***********************************

அடுத்த பிரார்த்தனை :

Want financial blessings!

My Dear Brother

Daily I am contacting you through phone and disturbing you very much.  But you are replying patiently and encouraging me.  Thank you very much for the same. Daily I am praying Mahaperiyava that today some financial blessing to my business  or any good thing should be happened. But due to my misfortune I am not able to enjoy such good miracles.

Now without working capital  I cannot run my business.  I am also trying and approaching banks for financial assistance.  But some obstacles are comming and stopped me to proceed further.  As on date If I have not blessed with financial assistance I have to close down my business.   Also I am daily chanting “Idarinum Thalarinum” Pathikam in good faith.  Now every thing is going beyond my control.

I request you to kindly pray for me in your Prayer Club.  You are aware that I am doing this business not only for me but also to nurture Vedas and Education.  Now nothing in my hand.  All are in the hands of God.  Myself and my wife is in extreme frustration.

Regards

S. Chandrasekaran,
Mumbai

சந்திரசேகரன் அவர்கள் தனது பிரார்த்தனை ஏற்கப்பட்டுவிட்டதாகவும், தனக்கு வங்கியில் கடன் கிடைத்துவிட்டதாகவும் அலைபேசியில் தொடர்புகொண்டு சொன்னார். மின்னஞ்சலும் அனுப்பினார்.

Mahaperiyava’s Miracle in My Life

My Ananthakoti Namaskarams to Poojya Sri Mahaperiyava

First of all I wish to introduce myself to all readers of Right Mantra that I am a “SLAVE OF ALL MAHAPERIYAVA’S DEVOTEES”

I am a wholesale distributor for Cycle Brand Agarbathies, MTR Masalas, Idhyam Gingelly Oil, KPL Co-conut Oil. By the Grace Mahaperiyava the business is going well. As the volume of the business is more, it is needless to say that I have to invest sufficient working capital to run the business smoothly. But in real fact I faced severe financial crisis to run the business. At that time while searching in Google, I found Right Mantra’s web site and got the friendship of Sri Sundar. I told my problem and he consoled me’ The way of his approach really gave me fresh energy in my soul.

Mahaperiyavqa

Moreover he sent me one Thevaram called “Idarinum Thalarinum” and told me to chant the same daily. I am also chanting the same regularly. In the meantime, my Auditor helped me to apply Bank Loan. But all the circumstances are not favored us. We have faced so many difficulties and discouragement in getting the Loan. But Mahaperiyava by his grace removed all the obstacles and made Bank Authorities to sanction the Loan.

Now my business is going smoothly and bank authorities promised me to sanction more amount the growth of the business. Definitely by the Grace of Mahaperiyava my business will grow more and more and Mahaperiyava will nurture all Vedic Schools through me and fulfill my life ambition.

MAHAPERIYAVA THIRUVADI SARANAM

– Chandrasekaran, Cheki Naka, Kalyan-E, Mumbai

அவர் பிரார்த்தனை வெளியான பதிவு :

http://rightmantra.com/?p=19779

இந்த பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றது :

‘மந்த்ராலய முரசு’ அமரர் மானாமதுரை திரு.சேதுராமன் அவர்களின் துணைவியார் திருமதி.சாந்தா சேதுராமன் அவர்கள்.

**************************************************************

Rightmantra needs your support!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally. Your contribution really makes a big difference.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

Paypal id : ‘rightmantra@gmail.com’

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

**************************************************************

Also Check :

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

வெற்றிகரமான பிரார்த்தனைக்கு ஒரு வழிகாட்டி!

உங்கள் பிரார்த்தனைகள் சுலபமாக நிறைவேற வேண்டுமா?

ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் – வாருங்கள் விதியை மாற்றுவோம்!

=====================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

==========================================================

Rightmantra Prayer Club

==========================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W:www.rightmantra.com

=========================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

==========================================================

[END]

One thought on “முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

  1. பிரார்த்தனை நிறைவேறிய ஒவ்வொரு அனுபவமும் சிலிரிக்க வைக்கிறது.

    நமது தளத்தில் எந்த பதிவை நான் மிஸ் செய்தலும் பிரார்த்தனை பதிவை மட்டும் தவறவிடுவதில்லை. பதிவில் இடம்பெறும் கதைக்காகவே காத்திருந்து படிப்பேன்.

    இந்த பிரார்த்தனை மன்றம் மேன்மேலும் வளர்ச்சியடைந்து மேலும் பலரது பிரார்த்தனைகளை நிறைவேற்றி, அவர்கள் மகிழ்ச்சியாக மனநிம்மதியுடன் வாழ உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    நன்றிமறப்பவர்கள் குறித்து தாங்கள் கூறியுள்ள கருத்து முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. நன்றியுடன் இருப்பவர்களுக்கே இறைவன் முன் நின்று மேலும் கேட்பதற்கு உரிமை உண்டு.

    தங்கள் தொண்டு தொடரவும் இந்த பிரார்த்தனை மன்றம் வளரவும் வாழ்த்துக்கள்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *