Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 8, 2024
Please specify the group
Home > Featured > 12 ஜோதிர்லிங்கங்கள் தரிசனம் – ஒரு நேரடி அனுபவம் – மகா சிவராத்திரி சிறப்பு பதிவு

12 ஜோதிர்லிங்கங்கள் தரிசனம் – ஒரு நேரடி அனுபவம் – மகா சிவராத்திரி சிறப்பு பதிவு

print
சென்னை சைதாப்பேட்டையில் பிரம்மா குமாரிகளின் 12 ஜோதிர்லிங்க தரிசனக் காட்சி நடைபெற்று வருகிறது. பாரதத்தின் 12 ஜோதிர்லிங்க சிவத்தலங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கிறது. அதுவும் அந்தந்த தலங்களின் லிங்கங்களை அதே உருவில் அங்கு சென்று நேரிலேயே தரிசனம் செய்வது போன்ற ஓர் அற்புத உணர்வு கிடைக்கிறது. இது சிவராத்திரியை முன்னிட்டு சென்னை மக்களுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும்.

Jyotir Linga - Bramma kumaris 1

Jyotir Linga - Bramma kumaris 2இந்த கண்காட்சி பற்றி கேள்விப்பட்டவுடன் நமது தளத்தில் சிவராத்திரி சிறப்பு பதிவாக கண்காட்சியை கவர் செய்து அளிக்க விரும்பினோம். பிரம்மா குமாரிகள் தலைமையகத்தை தொடர்புகொண்டு நமது விருப்பத்தை தெரிவித்தோம். கண்காட்சியில் லிங்க மூர்த்தங்களை புகைப்படம் எடுக்கவும் அனுமதி கோரினோம். ஈசனருளால் அரிதினும் அரிதான வாய்ப்பு நமக்கு கிடைத்தது.

நேற்று முன்தினம் மாலை மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள வி.கே.எம். மஹாலில் நடைபெற்று வந்த கண்காட்சிக்கு நேரே சென்றோம். அங்கே ஒருங்கிணைப்பாளர் திரு.சிவராமகிருஷ்ணன் மற்றும் சைதை பிரம்மகுமாரிகள் சங்கத்தின் பொறுப்பாளர் சகோதரி தேவி இருவரையும் சந்தித்தோம்.

Jyotir Linga - Bramma kumaris 6

Jyotir Linga - Bramma kumaris 9ஏற்கனவே தேவி அவர்களிடம் நாம் பேசிவிட்டதால் அதிகம் அறிமுகம் தேவைப்படவில்லை. திரு.சிவராமகிருஷ்ணன் அவர்கள் உடனிருந்து கவரேஜ்க்கு அனைத்து விதங்களிலும் உதவினார்.

கண்காட்சியின் நேர்த்தி மற்றும் அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த பள்ளி மாணவியர் பங்கேற்ற பரதம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளின் தரம் நம்மை வெகுவாக கவர்ந்தது.

அஷ்டலக்ஷ்மிகளின் கண்கவர் அணிவகுப்பு!
அஷ்டலக்ஷ்மிகளின் கண்கவர் அணிவகுப்பு!

Jyotir Linga - Bramma kumaris 7

Jyotir Linga - Bramma kumaris 8முன்னதாக நாட்டிய நிகழ்ச்சியில் மேடையில் அஷ்டலக்ஷ்மிகளின் தத்ரூப காட்சி இடம்பெற்றது. நாம் கூட முதலில் பொம்மைகள் என்று நினைத்தோம். ஆனால் அத்தனையும் ஜீவனுடன் இருந்த பெண்கள். தத்ரூபமாக சாத்சாத் அந்தந்த தேவியரே அமர்ந்திருப்பது போல அமர்ந்திருந்தனர்.

Jyotir Linga - Bramma kumaris 10

Jyotir Linga - Bramma kumaris 12நமது பாராட்டுக்களை தெரிவித்தோம். தொடர்ந்து நிகழ்ச்சியின் இடையே சகோதரி தேவி அவர்களை மேடையில் கௌரவித்தோம். தொடர்ந்து இந்த கண்காட்சி சில நிமிடங்கள் பேச நமக்கு வாய்ப்பு கிடைத்தது.

Jyotir Linga - Bramma kumaris 3

Jyotir Linga - Bramma kumaris 4“அடியேன் பெயர் சுந்தர். ரைட்மந்த்ரா என்கிற ஆன்மீக / சுயமுன்னேற்ற தளத்தை நடத்தி வருகிறேன். இந்து ஆன்மீக கண்காட்சியில் பிரம்மகுமாரிகள் அமைப்பினரின் ஜோதிர்லிங்க கண்காட்சியை ஒவ்வொரு முறையும் கண்டு ரசிப்பேன். இத்தனை அற்புதமாக இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்றால் அது சிவனருள் இன்றி சாத்தியமேயில்லை. பாக்கியம் என்பது உண்மையில் இந்த ஜோதிர்லிங்கங்களை தரிசிப்பது தான். அதுவும் சிவராத்திரி நடைபெறும் சமயம் தரிசிப்பது மிகப் பெரும் பாக்கியம். இது போன்று 12 ஜோதிர்லிங்கங்களை நாம் நேரில் பார்க்கவேண்டும் என்றால் அது அத்தனை சுலபம் அல்ல. ஆனால், பிரம்மகுமாரிகள் அமைப்பினர் நம் கண் முன்னே தத்ரூபமாக அனைத்து மூர்த்தங்களையும் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். இதை இத்தனை அற்புதமாக வடிவமைத்திருக்கும் பிரம்மகுமாரிகள் சங்கத்தினருக்கும் சைதை பகுதி பொறுப்பாளர் சகோதரி தேவி அவர்களுக்கும் நம் பாராட்டுக்கள். இதை அனைவரும் பயன்படுத்திக்கொண்டு சிவனருள் பெறவேண்டும். இதை நீங்கள் பார்த்து மகிழ்வதோடு உங்கள் சுற்றத்திடமும் நட்புக்களிடமும் கூறி, அவர்களையும் பார்க்கச் செய்யுங்கள். அந்த புண்ணியத்தில் உங்களுக்கும் பெருமளவு பங்கு உண்டு. அனைவருக்கும் நன்றி. வணக்கம்!”

– இது தான் நாம் ஆற்றிய உரையின் சுருக்கம்.

உரை முடித்து மேடையைவிட்டு இறங்கியவுடன் பிரம்மகுமாரிகள் அமைப்பினர் பலர் வந்து “நன்றாக பேசினீர்கள்” என்று பாராட்டு தெரிவித்தார்கள்.

ஈசனருள்.

இனி பிரம்மா குமாரிகள் அமைப்பினர் பற்றியும் இந்த ஜோதிர்லிங்க கண்காட்சி பற்றியும் பார்ப்போம்.

********************************************************************

(இதில் உள்ள தகவல்கள் அந்த அமைப்பின் தன்னார்லவர்களில் ஒருவரான திரு.சிவராமகிருஷ்ணன் நம்மிடம் கூறியது)

மனிதகுலம் அனைத்திற்கும் மேலான சக்தி பொருந்திய இறைவன் கடவுள் ஒருவர் என்று அனைத்து மதங்களும் ஒருசேர இணக்கமாய் வருவது ஒரே ஒரு கருத்தில்தான். அதாவது இறைவன் ஒளிமயமானவர் என்பது. அவ்வாறு ஒளியாய் ஜோதியாய் விளங்கும் பரம்பொருள் இறைவனை அன்புடன் நினைப்பது, தியானிப்பது, அல்லது பூஜை செய்வது, வணங்குவது என்பது எல்லா மனிதர்களுக்கும் கடினமாய் தென்பட்டது.

Jyotir Linga - Bramma kumaris 14

ஆகவே அந்த பெரிய உருவில் எளிதாய் வழிபட லிங்க உருவாய்க் கண்டு பல்வேறு கோணங்களில் உலகின் பல பாகங்களிலும் பல மதத்தினரும் வணங்கி வந்துள்ளனர் என்பது சரித்திர ஆய்வாளர்களின் முடிவு. அந்த சிவலிங்க உருவம் தொன்று தொட்டு பாரதத்தின் 12 முக்கிய ஸ்தலங்களில் பிரசித்தமாய் பல்வேறு அளவுகளில், பல்வேறு பெயர்களில் வணங்கப்பட்டு வருகிறது.

அத்தலங்கள் பின்வருமாறு:

1. சோமநாத்
பிரபாக்ஷேத்ரம் கடற்கரை
குஜராத்

2. மல்லிகார்ஜுனர்
ஸ்ரீசைலம்
ஆந்திர பிரதேசம்

3. மகா காளேஷ்வர்
சிப்ரா நதிக்கரை, உஜ்ஜயினி அருகே
மத்திய பிரதேசம்

4. ஓம்காரேஷ்வர்
நர்மதை நதிக்கரை, உஜ்ஜயினி – காண்ட்வா சாலை
மஹாராஷ்டிரா

5. வைத்யநாத்
பரவி, ஜஸதி, சன்தால் பர்காணா
பீகார்

6. பீம் சங்கர்
பீமா நதிக்கரை, நாசிக்கிலிருந்து 120கி.மீ.
மஹாராஷ்டிரா

7. ராமேஸ்வரர்
ராமேஸ்வரம்
தமிழ்நாடு

8. நாகேஷ்வரர்
தாருகாவனம்
குஜராத்

9. விஸ்வநாத்
காசி
உத்தர பிரதேசம்

10 திரியம்புகேஷ்வர்
பிரம்மகிரி அருகில், நாசிக் அருகில்
மஹாராஷ்டிரா

11 கேதாரேஸ்வர்
கேதார்நாத்
உத்தர பிரதேசம்

12 கிருஷ்ணேஷ்வர்
பேரூல்
ஆந்திர பிரதேசம்

அவற்றின் மூலஸ்தான மூர்த்தங்களின் படங்கள் இதோ….

Jyotir Linga - Bramma kumaris Somnath

Jyotir Linga - Bramma kumaris Somnath21. சோம்நாத்

Jyotir Linga - Bramma kumaris Kasi Viswanatha

Jyotir Linga - Bramma kumaris Kasi Viswanatha 22. விஷ்வநாத்

Jyotir Linga - Bramma kumaris Tryambakeshwar 2

Jyotir Linga - Bramma kumaris Tryambakeshwar3.திரியம்பகேஷ்வரர்

Jyotir Linga - Bramma kumaris Omkareswar

Jyotir Linga - Bramma kumaris Omkareswar24. ஓங்காரேஷ்வர்

Jyotir Linga - Bramma kumaris Mahakaleswar1

Jyotir Linga - Bramma kumaris Mahakaleswar25. மகாகாலேஷ்வரர்

Jyotir Linga - Bramma kumaris Nageswar

Jyotir Linga - Bramma kumaris Nageswar26.நாகேஷ்வர்

Jyotir Linga - Bramma kumaris Vaidhyanath

Jyotir Linga - Bramma kumaris Vaidhyanath27.வைத்யநாத்

Jyotir Linga - Bramma kumaris Krishneswar

Jyotir Linga - Bramma kumaris Krishneswar28. கிருஷ்ணேஷ்வரர்

Jyotir Linga - Bramma kumaris Bheema Sankar

Jyotir Linga - Bramma kumaris Bheema Sankar29. பீமாசங்கர்

Jyotir Linga - Bramma kumaris Kedarnath

Jyotir Linga - Bramma kumaris Kedarnath210. கேதார்நாத்

Jyotir Linga - Bramma kumaris Mallikarjuna 1

Jyotir Linga - Bramma kumaris Mallikarjuna 211.மல்லிகார்ஜூன்

Jyotir Linga - Bramma kumaris Rameswar1

Jyotir Linga - Bramma kumaris Rameswar212.இராமேஷ்வரர்

முழுமுதற் கடவுளாம் சிவனை, ஜோதி உருவாய்த் திகழ்பவரை மனதார எண்ணி, புத்தியின் மூலமாய் தியானம் செய்வது அவருடைய வழிகாட்டின் உன்னத நிலையாகும். இவ்வாறு மனதையும் புத்தியையும் இறைவன்பால் ஒருமுகப்படுத்தும் முறையே இராஜயோக தியானம் எனப்படுகிறது.

மனித ஆத்மாக்கள் அனைவருக்கும் மேலான தந்தை நிராகாரமானவர் (மனித உருவற்றவர்) ஜோதி சொரூபமாய் விளங்குபவர். இந்த உலக சிருஷ்டியின் கர்த்தா அவரே! அவரை அன்புடன் நினைத்து தியானம் செய்வதன் மூலம் நமது பாவச்சுமைகள் அழிந்து புதிய உலகமான சொர்க்கம் இப்புவியில் படைக்கப்படும். அதுவே இறைவனது படைப்பில் முதல் யுகமாகும். அதைத் தொடர்ந்து திரேதா, துவாபர மற்றும் கலியுகம் என்று காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். தற்போது நாம் கலியுக இருண்ட, துக்கம் நிறைந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிவோம்.

ஆனாலும் பலரால் மறந்து போய் விடப்பட்டிருக்கும் இம்மாபெரும் உண்மையை எளியமுறையில் இன்றைய தலைமுறையினரும் புரிந்துகொண்டு தியானம் செய்ய வேண்டுமென்பதற்காகவே பிரம்மாகுமாரிகள் இயக்கம் இந்த மாபெரும் 12 ஜோதிர்லிங்க தரிசனத்தை ஏற்பாடு செய்துள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளாக தமிழகம் கேரளா மற்றும் ஆந்திர தேசத்திலும் பல முக்கிய நகரங்களில் சுமார் 112 இடங்களில் இத்தரிசனம் நடந்தேறியுள்ளது. பல லட்சக்கணக்கான மக்கள் இத்தரிசனத்தைக் கண்டு பயனடைந்துள்ளனர். பிரம்மாகுமாரிகள் இயக்கம் அகில உலக அளவில் 147 நாடுகளில் 9500 கிளை நிலையங்களின் மூலம், ஆன்மீக, சமூக மற்றும் கல்விப் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. இதன் தலைமையகம் இராஜஸ்தானில் மவுண்ட் அபு என்னுமிடத்தில் உள்ளது.

தமிழக மண்டல தலைமையகம் சென்னை அண்ணா நகரிலுள்ளது. சுமார் 300 கிளைகள் உள்ளன. இவ்வியக்கம் ஐநாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் உலக அமைதி சேவைக்கான அங்கீகாரம் என்றே சொல்ல வேண்டும்.

இத்தரிசனத்தின் சிறப்பு யாதெனில், பாரதத்தின் 12 ஜோதிர்லிங்க சிவதலங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கிறது. அதுவும் அந்தந்த தலங்களின் லிங்கங்களை அதே உருவில் அங்கு சென்று நேரிலேயே தரிசனம் செய்வது போன்ற ஓர் அற்புத உணர்வு கிடைக்கிறது.

இத்தரிசனக் காட்சியின் கூடவே நடைபெறும் பிற நிகழ்ச்சிகள் வருமாறு:

1. இந்த உலகம் நாடகச் சக்கரம், இறைவன் மற்றும் இராஜயோகம் பற்றிய விழிப்புணர்வு படக்காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

2. இறைவனோடு மனம்- புத்தியை இணைய வைக்கும் தியானப் பயிற்சி குடில்.

3. மனிதன் 5 தத்துவங்கள் இறைவன் பற்றிய வீடியோ காட்சி.

4.தினமும் மாலையில் ஒலி ஒளி விளக்கு சூழலில் நம் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கும் தேவிகளின் தத்ரூபமான காட்சி.

தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் நடைபெற்ற இத்தரிசனம் தற்போது மேற்கு சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் சாலையில் உள்ள V.K.M மகாலில் 4.3.2016 முதல் 8.3.2016 வரை காலை எட்டு மணி முதல் மாலை 9 மணி வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும். அனுமதிக்காக எவ்வித கட்டணமும் கிடையாது.

Jyothirlinga Darshan

இதன் ஆரம்பகால விழா மார்ச் 04, 2016 வெள்ளிகிழமை அன்று காலை 9.30 மணியளவில் நடந்தேறியது. இதில் மாண்புமிகு சென்னை மாநகர மேயர் திரு.சைதை துரைசாமி, பல்லாவரம் சட்டமன்ற உறப்பினர் திரு.தன்சிங், தலைவர் VGP குழுமம், முனைவர் திரு VG.சந்தோசம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தேறியது. தமிழகத்தின் மூத்த ராஜயோக பயிற்சியாளர் சகோதரி பி.கு.கலாவதி மற்றும் தமிழக மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் சகோதரி பி.கு.பீனா ஆகியோர் ஆசிர்வாத உரையாற்றினர்.

இத்தரிசனத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சைதாப்பேட்டை பகுதி பொறுப்பு சகோதரி பி.கு.தேவி அவர்கள் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து சைதாப்பேட்டை மற்றும் அதை சார்ந்த துணை கிளைகளிலும் சென்று இலவசமாக அளிக்கப்படும் இராஜயோக தியானப்பயிற்சியை பெற்று பயனடையுமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

**************************************************************

சிவராத்திரி வழிபாடு!

சிவராத்திரி வழிபாட்டுக்காக தற்போது காட்டுமன்னார்குடியை அடுத்துள்ள திருக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் புறப்பட்டுவிட்டோம். இந்த மகா சிவராத்திரி அந்த ஆலயத்தில் தான். மூன்றாம் கால பூஜைக்கு நம் தளத்திற்கு விருப்ப சந்தா அளிக்கும் மற்றும் பணிக்கு உதவி வரும் வாசகர்கள் சார்பாக அபிஷேகப் பொருட்கள் மற்றும் இதர நிவேதனப் பொருட்களை சமர்பிக்கவுள்ளோம். மேலும் பல அறப்பணிகள் தளம் சார்பாக செய்ய உறுதி பூண்டுள்ளோம்.

kADAMBUR

இது தவிர பிரார்த்தனை கிளப்புக்கு கோரிக்கை அனுப்பியிருக்கும் வாசகர்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைகளுக்காக கோரிக்கை அனுப்பிய வாசகர்கள் அனைவரின் பெயர்களிலும் சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்யப்படும். சிவனருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!

  • சிவராத்திரி பதிவுகள் இன்னும் முடியவில்லை. சிவனைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே என்பதால் சிவராத்திரி முடிந்த பிறகு கூட அவை தொடரும்!

**************************************************************

Also Check :

சிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது? – சிவராத்திரி SPL 5

வரும் சிவராத்திரி 3 கோடி விரதத்திற்கு சமமான உத்தம சிவராத்திரி – முழு தகவல்கள் – சிவராத்திரி SPL 4

காகம் சிவகணங்களில் ஒன்றான கதை – அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL3

பதினோறாயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்த ஏழை!  அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 2

காமுகன் கயிலை சென்ற கதை! அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 1

மனிதன் நினைக்கிறான் அவிநாசியப்பன் முடிக்கிறான்!

உயிரை பறிக்க வந்த எமதூதர்கள்; தடுக்க வந்த சிவகணங்கள்!

========================================================

Rightmantra needs your support to function smoothly…

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest or ad revenues. We are purely relying on our readers’ contribution. Donate us liberally. Small or big your contribution really matters.

Our A/c Details

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

Or you can send Cheque / DD / MO to the following address:

Rightmantra Soul Solutions, Shop. No.64, II Floor, Murugan Complex, (Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street, West Mambalam, Chennai-600033. Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

========================================================

சென்ற ஆண்டு அளித்த சிவராத்திரி ஸ்பெஷல் தொடர் மற்றும் இதற்கு முன்பு நாம் அளித்த சிவராத்திரி சிறப்பு பதிவுகளுக்கு….

கண்ணைக் கட்டிக்கொண்டு துவங்கிய ஒரு சிவராத்திரி பயணம்! – சிவராத்திரி ஸ்பெஷல் FINAL

மனக்கோயில் கொண்ட மாணிக்கத்துடன் ஒரு மாலை! – சிவராத்திரி ஸ்பெஷல் 6

சிவபெருமானின் அனந்த கல்யாண குணங்கள் – சிவராத்திரி ஸ்பெஷல் 5

சிவராத்திரி – செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்! சிவராத்திரி ஸ்பெஷல் 4

இறைவனிடம் கேட்கக்கூடாத கேள்வி – சிவராத்திரி ஸ்பெஷல் 3

கல் நந்தி புல் சாப்பிட்டு தண்ணீரும் குடித்த உண்மை சம்பவம் – சிவராத்திரி ஸ்பெஷல் 1

========================================================

சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!

ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!

Thalaivar is always great!

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

========================================================

[END]

One thought on “12 ஜோதிர்லிங்கங்கள் தரிசனம் – ஒரு நேரடி அனுபவம் – மகா சிவராத்திரி சிறப்பு பதிவு

  1. நேற்று கோவிலுக்கு செல்ல இயலவில்லை. ஆனால் நம் தளத்தின் வழியாக ஜோதிர்லிங்க தரிசனம்.
    நன்றி ஜி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *