Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, November 5, 2024
Please specify the group
Home > Featured > பதினோறாயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்த ஏழை! அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 2

பதினோறாயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்த ஏழை! அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 2

print
ன்றைக்கு பரிகாரங்கள் என்பவை மிகவும் பரவலாக பேசப்படுகின்றன. பிரச்சனையின் தீவிரத்தை பொறுத்து பரிகாரங்களின் தன்மையும் அமைகிறது.

பல பரிகாரங்கள் தொன்று தொட்ட காலம் முதல் நிலவி வருபவை. கேட்கும்போதே தலை சுற்றும். அனைத்து சௌகரியங்களும் வாய்க்கப்பெற்று நினைப்பதை நிறைவேற்றிக்கொள்ளக் கூடிய வசதி படைத்தோருக்கும் செல்வந்தர்களுக்கு இதெல்லாம் மிகச் சுலபம். ஆனால் வாழ்க்கையே நித்தம் நித்தம் போராட்டம் என்றிருக்கும் சராசரி மனிதர்கள் எங்கே போவார்கள் எப்படி இவற்றை செய்வார்கள் என்று சிலருக்கு தோன்றலாம்.

நிச்சயம் முடியும். பரிகாரம் செய்பவரின் பொருளாதார மற்றும் வாழ்க்கை சூழ்நிலை, அவர்களின் அப்போதைய மனநிலை, செய்யும் பரிகார தானத்தின் முக்கியத்துவம், அதை பெறுவோரின் தகுதி, பரிகாரம் செய்யப்படும் இடம் (கோ-சாலை, நதி தீரம் முதலியன) இவற்றை பொறுத்து அதற்கு தனிச் சிறப்பு வந்துவிடும்.

பரிகாரங்கள் செய்யும்போது ஒருவருக்கு பொருந்தும் விதி மற்றவருக்கு பொருந்தாது. (Pls check Bhagavan Ramanar’s Explanation @ ஆச்சார அனுஷ்டானம், பக்தி – எது பிரதானம் ?)

பதினோறாயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்த ஏழை! 

நீண்ட நாட்களாக புத்திரப்பேறு இன்றி தவித்த வித்யாபதி என்னும் பிராமணன் ஒருவன், தன் குறை நீங்கும் பொருட்டு தனது குடும்ப ஜோதிடரை சந்தித்து ஆலோசனைகள் கேட்டான். அவர் ஒரு ஸ்ரீவித்யா உபாசகர். ஜோதிடத்தை தொழிலாக அல்லாமல் தொண்டாக செய்து வந்தார்.

அவனது கட்டங்களை அவர் கட்டங்களை ஆராய்ந்து “சென்ற ஜென்மத்தில் உன் மனைவியின் விருப்பத்திற்கு மாறாக அவள் மாமியார் (உன் தாய்) அவளுக்கு  கருக்கலைப்பு செய்தாள். அதற்கு உடந்தையாக நீ இருந்த காரணத்தால் உனக்கு இந்த ஜென்மாவில் சந்தானத் தடை ஏற்படுகிறது. இருப்பினும் பதினோராயிரம் பிராமணர்களுக்கு அன்னதானம் செய்தால் அந்த தோஷம் நீங்கிவிடும். இதைவிட்டால் வேறு வழியோ பரிகாரமோ இல்லை” என்றும் கூறினார்.

அதைக் கேட்டு கலங்கிய அவன் நானோ ஏழை பதினோறாயிரம் பிராம்மணர்களுக்கு நான் எங்கே அன்னதானம் செய்வது என்று பல வாறு புலம்பினான்.

தன் இல்லத்திற்கு வந்து தன் மனைவி வேதவதியிடம் விஷயத்தை சொன்னதும் அவள் சிவபெருமானை பிரார்த்தித்தாள். ஒவ்வொரு வருடமும் மஹா சிவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து வரும் பதிவிரதை அவள். “ஐயனே .. குலம் விளங்க ஒரு மகவை உன்னிடம் மன்றாடி வருகிறோம். பதினோறாயிரம் அந்தணர்களுக்கு நாங்கள் எப்படி அன்னதானம் செய்ய முடியும்? நீ தான் உரிய வழியை காட்டவேண்டும்…” என்று பிரார்த்தித்தபடி உறங்கலானாள்.

Avinasi Gopuram

அன்றிரவு அவள் கனவில் அசரீரியாக தோன்றிய ஈசன், “நாளை காலை அவிநாசியம்பதி செல். அங்கே சபா மண்டபத்தில் இரண்டு அந்தணர்கள் இருப்பார்கள். அவர்களை உன் இல்லத்திற்கு வரவேற்று அழைத்துச் சென்று அமுது படைப்பாயாக. பதினோறாயிரம் அந்தணர்களுக்கு அன்னம் பாலித்த பலன் உனக்கு கிட்டும்” என்று கூறி மறைந்தார்.

========================================================

Also check :

காமுகன் கயிலை சென்ற கதை! அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 1

மனிதன் நினைக்கிறான் அவிநாசியப்பன் முடிக்கிறான்!

உயிரை பறிக்க வந்த எமதூதர்கள்; தடுக்க வந்த சிவகணங்கள்!

========================================================

கனவில் ஈசன் உரைத்தபடி மறுநாள் அவள் அவிநாசியம்பதி செல்ல, அங்கே சபா மண்டபத்தில் இரண்டு அந்தணர்கள் எழுந்தருளி இருந்தார்கள்.

அவர்களை வணங்கி அவர்களிடம் இன்று மதியம் அமுது செய்ய என் இல்லத்திற்கு எழுந்தருள வேண்டும் என்று வேதவதி வேண்டிக்கொண்டாள். அவர்களும் அதற்கு இசைந்து அவள் இல்லத்திற்கு வர, இரண்டு பேருக்கும் அறுசுவை உணவு படைத்தனர் தம்பதிகள்.

அவர்களும் வயிறார உண்டு முடித்தவுடன் அவர்களுக்கு தாம்பூலம் வஸ்திரம் முதலியவற்றை தம்பதிகள் தானம் செய்தனர். அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டு வாழ்த்திவிட்டு சென்றனர்.

இதன் பலனாக விரைவில் வேதவதி கருவுற்று சில மாதங்களில் அழகானதொரு குழந்தையை பெற்றெடுத்தாள். தம்பதிகள் அவிநாசியப்பரின் கருணை கண்டு பெரும்களிப்பு எய்தினர்.

குழந்தைக்கு ஜாதகம் கணித்து நல்லதொரு பெயர் சூட்ட அவர்கள் ஜோதிடரிடம் ஆலோசனை கேட்கும் பொருட்டு அவன் செல்ல, அவர் “பதினோராயிரம் அந்தணர்களுக்கு நீ அன்னமிட்டிருக்கவேண்டுமே… எப்படி உன்னால் முடிந்தது?” என்று வியக்க, இவன் அதை மறுத்து “இல்லை இரண்டு பேருக்கு மட்டுமே அன்னமிட்டேன்” என்றான்.

தொடர்ந்து ஈசன் தனது மனைவியின் கனவில் தோன்றி அசரீரியாக உரைத்தது உட்பட அனைத்தையும் ஜோதிடரிடம் விளக்கினான் வித்யாபதி.

ஒரு கணம் சிந்தித்த ஜோதிடர், “இல்லை இல்லை… நீ அன்னமிட்டது பதினோராயிரம் அந்தணர்களுக்கு தான்”

“எப்படி புரியவில்லையே…”

அஷ்ட ஸகஸ்ரப் பிராமணர் ஒருவரும், சிதம்பர தீக்ஷிதர் ஒருவரும் அவர் வீட்டில் உணவருந்தினார்களென்றும், எண்ணாயிரவரும், தில்லை மூவாயிரவரும் சேர்ந்து பதினோராயிரவரென்று வந்ததாகவும் ஜோதிடர் விளக்கினார்.

“நீ போஜனம் செய்வித்தவர்களில் ஒருவர் எண்ணாயிரத்தார். மற்றொருவர் மூவாயிரத்தார் இருவரும் சேர்ந்து பதினோராயிரம் பேர்… கணக்கு சரி தான்!” என்றாராம்.

Avinasi Gopuram2

ஆக, தகுதி வாய்ந்த அந்தணர் ஒருவருக்கு உணவளிப்பது கூட பெரும் பலன் தரக்கூடியது.

பிறப்பாலோ பூணூல் தரிப்பதாலோ ஒருவர் அந்தணர் ஆகிவிடமுடியாது. அந்தணர் என்போர் யார் என்பதற்கு வள்ளுவர் கூறும் உதாரணம் தெரியுமா?

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். (குறள் 30)

எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.

ஈசனிடம் மெய்யான பக்தியும் அன்பும் இருந்தால், யாருக்கும் எந்த பாதிப்பும் இன்றி எப்பேற்பட்ட பிரச்சனைக்கும் தீர்வு எளிதில் கிடைக்கும் என்பது புலனாகிறது அல்லவா?

முகமலர்ந்தந் தணர்போற்றும் புக்கொளியூர்
அவிநாசி யப்பா வேநான்
அகநெகிழ்ந்தே அறப்பணிசெய் யறுபத்து
மூவருடன் அமர்ந்து நீயும்
நகர்வலஞ் செய் நின்கோலம் நான்கண்ட
வாறேநன் கவியி யற்றிப்
புகநின்றேன் புண்ணியனே! பொற்சடையாய்!
புகலிடமொன் றளித்தி டாயே.
– உறையூர் அருணாச்சல முதலியார்

(இந்த கதை நமது சொந்த ஆக்கம். நாம் கேள்வியுற்ற சிறு விஷயத்தை அடிப்படையாக வைத்து இந்தக் கதையை புனைந்துள்ளோம். நன்றி!)

========================================================

கும்பகோணம் பயணம்!

இன்றிரவு பெற்றோரை அழைத்துக்கொண்டு கும்பகோணம் புறப்படுகிறோம். ஒரு நாள் பயணம். ஏற்கனவே நாம் மகாமகம் சென்று நீராடிவிட்டு வந்தாலும் கும்பேஸ்வரரை தரிசித்து மகாமகக் குளத்தில் நீராட வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்பியதால் இந்த திடீர் பயணம் ஏற்பாடாகியது.

magamagam

ஈசனருளால் மறுபடியும் புதன்கிழமை காலை திரும்பிவிடுவோம். ஏற்கனவே தயாரிப்பில் இருந்த பதிவுகளில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்து அளிக்க முடிந்தால் இடையே அளிக்கிறோம். நன்றி!

– ரைட்மந்த்ரா சுந்தர்

========================================================

Help Rightmantra to function without any hassles!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest or ad revenues. We are purely relying on our readers’ contribution. Donate us liberally. Small or big your contribution really matters.

Our A/c Details

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

========================================================

Also check :

சென்ற ஆண்டு அளித்த சிவராத்திரி ஸ்பெஷல் தொடர் மற்றும் இதற்கு முன்பு நாம் அளித்த சிவராத்திரி சிறப்பு பதிவுகளுக்கு….

கண்ணைக் கட்டிக்கொண்டு துவங்கிய ஒரு சிவராத்திரி பயணம்! – சிவராத்திரி ஸ்பெஷல் FINAL

மனக்கோயில் கொண்ட மாணிக்கத்துடன் ஒரு மாலை! – சிவராத்திரி ஸ்பெஷல் 6

சிவபெருமானின் அனந்த கல்யாண குணங்கள் – சிவராத்திரி ஸ்பெஷல் 5

சிவராத்திரி – செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்! சிவராத்திரி ஸ்பெஷல் 4

இறைவனிடம் கேட்கக்கூடாத கேள்வி – சிவராத்திரி ஸ்பெஷல் 3

கல் நந்தி புல் சாப்பிட்டு தண்ணீரும் குடித்த உண்மை சம்பவம் – சிவராத்திரி ஸ்பெஷல் 1

========================================================

Also check :

சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!

நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா….

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!

சிவபெருமான் கண்ணாடியில் ரசித்த தனதுருவம்… பிறகு நடந்தது என்ன?

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!

ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!

Thalaivar is always great!

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

========================================================

[END]

One thought on “பதினோறாயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்த ஏழை! அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *