அவனது கடும் தவத்துக்கு இரங்கிய சிவபெருமான், அவன் முன் பிரத்யட்சமாகி “உன் கடும் தவம் கண்டு மகிழ்ந்தோம். உனக்கு வேண்டியது என்ன கேள் மகனே” என்றார்.
“என் குலம் தழைக்க ஒரு நல்ல மகவை தந்தருள வேண்டும். அவன் யாராலும் வெல்ல முடியாதவனாக, பராக்கிரமசாலியாக, என்றும் சிரஞ்சீவியாக இருக்கவேண்டும்” என்று வேண்டினான்.
“மகனே இந்தப் பிறவியில் உனக்கு புத்திரப் பாக்கியம் கிடையாது. இருப்பினும் என் மீது நீ கொண்ட பக்தி பொய்யாகிவிடக்கூடாது என்பதால் வேறு ஒரு வரம் தருகிறேன். உனக்கு ஒரு மகள் பிறப்பாள். அவளுக்கு நீ கோரியதை போல சகல நற்குணங்களுடன் ஒரு மகன் பிறப்பான்!” என்று வாழ்த்தியருளி மறைந்தார்.
ஈசன் அனுக்கிரகத்தால், கேசரியின் மனைவி கருவுற்றாள். விரைவில் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தாள். அழகிற் சிறந்து விளங்கிய அக்குழந்தைக்கு அஞ்சனை என்று பெயரிட்டார்கள்.
அஞ்சனைக்கு இயல்பிலேயே இயற்கையுடன் நேரத்தை கழிக்கவே நாட்டம் இருந்தது. (அஞ்சனைக்கு பிற்பாடு ஒரு சாபத்தினால் வானர முகம் தோன்றியது. அது வேறு ஒரு கதை. அதை பிறிதொரு பதிவில் விளக்குகிறோம்.)
ஒரு நாள் சோலை ஒன்றில் ஆடிப் பாடி திரிந்துகொண்டிருந்த அஞ்சனையை கண்ட ஒரு வானர வீரனுக்கு அவள் மீது காதல் ஏற்பட்டது. அஞ்சனைக்கும் அவனது ஆஜானுபாகுவான தோற்றம் பிடித்துப்போயிருந்தது.
அஞ்சனையின் விருப்பத்தை அறிந்துகொண்ட அவ்வீரன், முறைப்படி நேரே சென்று கேசரியிடம் தான் அஞ்சனையை மணந்துகொள்ள விரும்புவதாக கூறி பெண் கேட்டான்.
உடனே கேசரி தனது மகளின் விருப்பத்தை கேட்டறிந்தான். அவளுக்கும் இதில் விருப்பம் இருப்பது தெரிந்தது. கேசரிக்கும் அவ்வீரனை பிடித்துவிடவே, இருவருக்கும் வெகு விமரிசையாக திருமணம் செய்து வைத்தான்.
திருமணம் ஆகி பல காலம் சென்றும் இருவருக்கும் புத்திர சம்பத்து வாய்க்கவில்லை.
ஈசன் வாக்கு பொய்க்காது என்ற நம்பிக்கையில் கேசரியும் (அஞ்சனையின் கணவன் பெயரும் கேசரி தான்) அவனை விட அதிக நம்பிக்கையில் அஞ்சனையும் இருந்து வந்தாலும், ஒரு கட்டத்தில் விரக்தி ஏற்பட்டது.
மனிதன் உட்காரும் நேரம் விதி எழுந்து நிற்கும் என்று சொல்வார்கள். ஈசன் அளித்த வரத்தை மெய்ப்பிக்கவேண்டி, தர்மதேவதை ஒரு குறத்தி போல வேடமிட்டு அஞ்சனையை நோக்கி புறப்பட்டாள்.
அஞ்சனையின் வீட்டுக்கு சென்று அவளது தோழிகளை சந்தித்து, “உங்கள் அஞ்சனைக்கு குறி சொல்லட்டுமா?” என்று கேட்டாள்.
அவர்களும் அவளை அஞ்சனையின் முன் கொண்டு சென்று நிறுத்த, அஞ்சனையின் கைகளை பற்றிய தர்மதேவதை, “அம்மா.. உனக்கு புத்திர பாக்கியம் நிச்சயம் உண்டு. நீ செய்யவேண்டுவது என்னவேன்றால் வேங்கடமலைக்கு சென்று, அங்கு கோவிந்தனை நோக்கி தியானம் செய். அவனருளால் உனக்கு ஈரேழுலகமும் போற்றும் விதம் ஒரு புத்திரன் பிறப்பான்!” என்று கூறிவிட்டு சென்றாள்.
கணவனிடமும் இதர குடும்பத்தாரிடமும் அனுமதி பெற்ற அஞ்சனை, அடுத்து திருவேங்கடம் சென்று அங்கு ஆகாச கங்கையில் நீராடி, பரந்தாமனை நோக்கி தவமியற்றலானாள்.
ஒரு கட்டத்தில் தவம் கடுமையாக, அவளைச் சுற்றி ஒருவித தேஜஸ் தோன்றியது.
இவ்விதமாக கடும் தவமியற்றி வந்த அஞ்சனையை கண்டு இரக்கமுற்ற வாயு பகவான் அவள் உண்பதற்கு கனி, கிழங்குகள் முதலியற்றை அவளது மடியில் கொண்டு வந்து தினசரி போட்டுவந்தான்.
தன்னை தேடி வந்து மடி மீது விழுந்தமையால் அஞ்சனையும் அதை இறைவனின் அருட் பிரசாதமாகவே கருதி, புசித்துவந்தாள்.
அந்நேரம் பரமேஸ்வரனும் பார்வதி தேவியும் இரு மந்திகளாக உருவெடுத்து பல்வேறு விளையாட்டுக்களில் ஈடுபட்டு வந்தார்கள். அவர்கள் அப்படி விளையாடும்போது, அஞ்சனை தவம் செய்த மரத்தின் மீது விளையாடியபடி கூடிக் குலாவ, அங்கிருந்து வெளிப்பட்ட ஈஸ்வர வீரியம் அஞ்சனையின் உடலுக்குள் வாயுவின் அருளால் புகுந்தது.
ஏற்கனவே அஞ்சனை உட்கொண்ட வாயு பகவானின் அருட்பிரசாதத்துடன் ஈஸ்வரனின் வீரியமும் சேர்ந்துகொள்ள, வாயுவின் அம்சத்துடன் மகேஸ்வரனின் அருட்சக்தியுடன் தெய்வாம்சம் மிக்க கரு உண்டாகியது.
அஞ்சனை காலக்கிரமத்தில் மிக அழகான தேஜஸ் பொருந்திய ஒரு ஆண் மகவை பெற்றெடுத்தாள். வாயுவின் அம்சத்துடனும், ஈஸ்வர கிருபையுடனும் பிறந்த குழந்தையாதலால் பால அனுமன் மகா பராக்கிரமசாலியாக விளங்கினான். மரங்களும் மலைச்சிகரங்களும் அவனுக்கு விளையாட்டு பொருட்கள் போல. அவன் விளையாடும்போது இடி இடித்து பூமி குலுங்குவது போல இருந்ததாம்.
இதுவே அனுமனின் அவதார சரிதத்தின் சுருக்கம்.
அனுமனின் அவதாரம் குறித்து பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. இருப்பினும் மேலே நாம் அளித்திருப்பது ப்ரஹ்மாண்ட புராணத்தின் படி உள்ள கதையாகும்.
அரக்கர் குலத்தை அழிக்க பரம்பொருளுக்கு துணை செய்ய பிறந்த ஸ்ரீ அனுமனின் இந்த திவ்ய ஜனனக் சரிதையை படித்த அனைவருக்கும் குறைகள் நீங்கி நிறைகள் பெருகும் என்பது உறுதி.
Also check : அபயம் தருவான் அஞ்சனை மைந்தன் – காக்களூர் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் தரிசனம் !
==========================================================
சந்தான பாக்கியம், ருண விமோசனம், உத்தியோக ப்ராப்தி குறித்த கோரிக்கைகள் நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று நிறைவேறிய சம்பவங்களுக்கு…
Success stories of our Rightmantra Prayer Club : ‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!
தொடர்புக்கு : Rightmantra Sundar | M: 9840169215 | E : editor@rightmantra.com
==========================================================
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : காக்களூர் ஆஞ்சநேயர் கோவில் முன்பாக பூக்கடை வைத்திருக்கும் திருமதி.கோகிலா அவர்கள்!
கோகிலா அவர்கள் காக்களூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் முன்பாக வெற்றிலைப் பாக்கு, பூ, பழம் உள்ளிட்டவற்றை விற்கும் கடை வைத்திருக்கிறார்.
அனுமத் ஜெயந்தி பதிவுக்காக சென்ற மாத துவக்கத்தில் நாம் காக்களூர் சென்றபோது கோகிலா அவர்களை சந்திக்க நேர்ந்தது. அவரிடம் அர்ச்சனை பொருட்களை வாங்கிக்கொண்டு ஆலயத்திற்கு சென்று அர்ச்சனை செய்தோம்.
தொடர்ந்து குருக்களிடம் பேசியபோது, ஒரு வேண்டுதலுக்காக ஆஞ்சநேயருக்கு ஆறு வாரம் வெற்றிலை மாலை சாத்தவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
ஒவ்வொரு வாரமும் நாம் காக்களூர் வந்து செல்வது இயலாத காரியம் என்பதால் என்ன செய்வதென்று கையைபிசைந்தபோது, ஆலயத்தின் டிரஸ்டி இந்திரா அவர்கள் கோகிலா அவர்களை அழைத்து நம்மிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
மாலை சாத்துவதில் நமக்குள்ள நடைமுறை சிக்கலை தெரிவித்தபோது தானே ஒவ்வொரு வாரமும் நம் சார்பாக அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்துவதாக கோகிலா கூறினார்.
அவரிடம் அட்வான்ஸாக நூறு ரூபாயை அளித்துவிட்டு பாக்கி தொகையை இடையே வந்து அளிப்பதாக கூறினோம். நமது பெயர், ராசி, நட்சத்திரம் இவற்றை அவரிடம் அளித்து ஒவ்வொரு வாரமும் சங்கல்பம் செய்துவிட்டு மாலை கொடுக்கும்படி கேட்டுக்கொண்டோம். இதை ஒரு வேண்டுகோளாகத் தான் அவரிடம் வைத்தோம். நிச்சயம் செய்வதாக கூறினார்.
(வெற்றிலையை தனியாக கட்டக்கூடாது. சீவலுடன் தான் வெற்றிலை மாலையை கட்டவேண்டும். சீவல் ரொம்பவும் பவித்திரமானது. கோகிலா அவர்களிடம் அந்த வழக்கம் இருந்ததை கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைந்தோம்)
முன்னதாக வெற்றிலை மாலை சாத்தும் பொறுப்பை கோகிலா அவர்களிடம் அளிக்கும்போது, “வெற்றிலையை கட்டும்போது ராம நாமத்தை உச்சரித்தபடியே கட்டவேண்டும். எனக்கு மட்டுமல்ல. யாருக்கு மாலை கட்டினாலும் ராம நாமத்தை உச்சரித்தபடி தான் கட்டவேண்டும். அப்படி செய்தால் அந்த மாலை அனுமனுக்கு பிரியமானதாக மட்டுமின்றி, அதற்கு தனி மகத்துவமும் வந்துவிடும்” என்று கூறியிருந்தோம்.
ஒவ்வொரு வாரமும் மாலை சாத்தியபிறகு நமக்கு போன் செய்து விபரத்தை அப்டேட் செய்தார். இப்படியே ஒவ்வொரு வாரமும் மாலை சாற்றி, சென்ற வாரம் ஆறு வாரங்கள் நிறைவு பெற்றது.
இதையடுத்து கோகிலா அவர்களை தொடர்புகொண்டு நன்றி தெரிவித்து, விரைவில் காக்களூர் வரவிருப்பதாகவும் வந்து அவருக்கு தரவேண்டிய பாக்கி தொகையை தருவதாகவும் கூறினோம்.
“அவசரமேயில்ல சார்…. நீங்க வரும்போது கொடுங்க போதும்” என்றார்.
மாலையை நாம் சொன்னது போல ராம நாமம் சொல்லியபடி கட்டினாரா என்று கேட்டோம். நாம் கூறியபிறகு நமது மாலைகள் மட்டுமல்ல, மற்றவர்களுக்கு கட்டும்போது ராம நாமம் உச்சரித்தபடியே கட்டிவருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் மற்றவர்களுக்கு கொடுக்க நேர்ந்தால் மாலையை கட்டி, கொண்டு போய் கொடுத்துவிடுவதோடு தனது கடமையும் முடித்துகொள்வார் என்றும் நமக்காக பேர், ராசி, நட்சத்திர சங்கல்பம் செய்து பிறகே கொடுத்து வந்தார் என்று தெரிந்தபோது உள்ளம் உவகையடைந்தோம்.
கோகிலாவின் குடும்பத்தினர் சுமார் 25 வருடங்களாக இங்கு கடை வைத்திருக்கின்றனர். இவருக்கு முன்பு இவரது அம்மா வைத்திருந்தார். கடந்த இரண்டு வருடங்களாகத் தான் கோகிலா இந்த கடையை நிர்வகித்து வருகிறார். இவருடைய கணவர் இவருக்கு வியாபாரத்தில் உதவியாக மார்கெட் சென்று பொருட்களை வாங்கி வருவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார். இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் இருவரும் எல்.கே.ஜி, யூ.கே.ஜி படிக்கிறார்கள்.
அனுமன் அருளால் எந்தக் குறையும் இல்லை என்றும் நல்லபடியாக வாழ்க்கை போய்க்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். இந்த ஒரு வார்த்தையே போதுமே இவரது தகுதியை பறைசாற்ற.
செய்யும் தொழிலில் உண்மையும், அர்பணிப்பும் இருந்தால் எந்தவொரு தொழிலும் உயர்வானதே. அதுவும் இவர் செய்துவருவதோ கோவில் பூஜை சார்ந்த ஒரு தொழில். அப்படியிருக்க, இவரது உயர்வை பற்றி கூறவேண்டுமா என்ன?
காக்களூர் ஆஞ்சநேயரின் மகத்துவம் பற்றி இவரது குடும்பத்தினருக்கு பலவிஷயம் தெரிந்திருக்கிறது. அனுமன் அனுக்கிரகித்த கதைகள் பல இவர்களிடம் உண்டு. நேரில் செல்லும்போது விசாரித்து அதை பின்னர் பதிவளிக்கிறோம். வியாபாரத்தில் இருப்பவரிடம் அதிகம் பேச முடியாது.
நமது பிரார்த்தனை கிளப் பற்றி கோகிலா அவர்களிடம் எடுத்துக்கூறி, இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்று, காக்களூர் ஆஞ்சநேயர் சன்னதியில் அனைவருக்காகவும் வெற்றிலை மாலை சமர்பித்து, சங்கல்பம் செய்து பிரார்த்திக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். நிச்சயம் செய்வதாக கூறியிருக்கிறார்.
காக்களூரில் அனுமன் சன்னதியிலேயே பிரார்த்தனை நடைபெறவிருப்பது நாம் செய்த பாக்கியமே அன்றி வேறில்லை.
ராம தூதன் அனுமனுக்கு நன்றி! ராம் ராம் ராம்!!
கோரிக்கை சமர்பித்துள்ள வாசகர்கள் அடுத்த 6 வாரத்துக்குள் ஒரு முறை அல்லது அதற்கு பின்னர் உங்களால் இயன்றபோது ஒரு முறை காக்களூர் சென்று ஆஞ்சநேயரை தரிசித்து அர்ச்சனை செய்யவேண்டும். 6 வாரத்துக்குள் வழக்கில் உங்களுக்கு வெற்றி கிடைத்துவிட்டால், சுவாமிக்கு வடைமாலை சாத்துங்கள்!
நல்லதே நடக்கும்!
==========================================================
இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியுள்ள வாசகர்களைப் பற்றி…
முதலில் இடம் பெற்றிருக்கும் கோரிக்கையை அனுப்பியவர் நம் தளத்திற்கு புதியவர். சென்ற மாதமே நமக்கு இந்த கோரிக்கையை அனுப்பிவிட்டார். சென்ற பிரார்த்தனை கிளப் வழக்கு தொடர்பான பிரச்னைகளில் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நடைபெற்றதால் – இவரது கோரிக்கையில் வழக்கு பிரச்னை ஒன்றும் இடம்பெற்றிருந்ததால் – சென்ற பிரார்த்தனையிலேயே இவரது பெயரும் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. விரிவாக இல்லை. அவரது பிரச்சனைகள் பன்முகத்தன்மை கொண்டவை என்பதால் இந்த வாரம் தனியாக சேர்த்திருக்கிறோம்.
அவருடைய பிரச்சனைகளை அவரே விரிவாக தெரிவித்திருக்கிறார். இத்தனை பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் தனக்கு கூட்டுப் பிரார்த்தனை நிச்சயம் கைகொடுக்கும் என்று நம்புகிறார் பாருங்கள் அந்த நம்பிக்கை வீண்போகாது.
அடுத்து கோரிக்கை அனுப்பியிருப்பவர் நம் நண்பரின் நண்பர். நண்பரிடம் தனது பிரச்னை பற்றி கூறி கண்ணீர் வடித்தபோது, அவர் நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி, இங்கே கோரிக்கை சமர்பிக்குமாறு கேட்டுக்கொண்டாராம். இதையடுத்து நம்மை தொடர்புகொண்டு பேசினார். பேசும்போதே அவரது குரல் உடைந்து அழுதுவிட்டார். இரண்டு வயது குழந்தைக்கு கண் பார்வை பாதிக்கப்படுகிறது எனும்போது எந்த பெற்றோரால் தாங்கிக்கொள்ள முடியும்?
அவருக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் ஊட்டி சில எளிய உடனடி பரிகாரங்களை செய்யச் சொல்லியிருக்கிறோம். நிச்சயம் முன்னேற்றம் ஏற்பட்டு குழந்தைக்கு பார்வை திரும்ப கிடைக்கும் என்று நம்புகிறோம்.
அடுத்த கோரிக்கை பொதுப் பிரார்த்தனை. நமது கூட்டுப் பிரார்த்தனையை உன்னதமாக்குவதே இந்த பொது பிரார்த்தனை தான். யார் எவர் என்று தெரியாமல், சம்பந்தப்பட்டவர்களின் துன்பத்தை கேள்விட்பட்டு அவர்களுக்காக நாம் செய்யும் இந்த பொதுப் பிரார்த்தனை நிச்சயம் உடனடியாக பலனளிக்க வல்லது. அதுவும் இந்த வார பொதுப் பிரார்த்தனை அவசியம் விரைவில் நிறைவேற வேண்டும்.
நல்லது நடக்கும். விரைந்தே நடக்கும். வாழ்க வளமுடன், அறமுடன், நலமுடன்.
==========================================================
இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?
(1) பாடாய்படுத்தும் நோயும் கடனும்!
தங்கள் வலைத்தளம் கண்டேன். தங்கள் சேவைக்கு தலைவணங்குகிறேன்.
என் பெயர் சங்கர நாராயணன். வயது 47. நான் கடந்த 7 வருடங்களாக மிகவும் துன்பப்படுகிறேன். வியாபாரம் நஷ்டம் 50 லக்ஷம் மேல். இது 2007ku மேல் தாய் தந்தை உடன் பிறந்தவர்களால் காப்பாற்ற பற்று ஏதோ வாழந்து கொண்டு இருக்கிறேன். 2010ல் தந்தையாரரின் திடிர் மறைவு மேலும் வாழ்க்கை மேலும் சிக்கல் ஆகிவிட்டது. அவர் இறந்த 1 மாதத்தில் என்னால் நடக்க முடியாமல் போய்விட்டது. அவருக்கு காரியங்கள் எதுவும் என்னால் பண்ண முடியவில்லை. நான் வீட்டின் மூத்த பிள்ளை. இதன் நடுவில் கடன் தொல்லை வேறு. கோர்ட் கேஸ்கள் மிகுவும் சிக்கலாக போய்கொண்டு இருக்கிறது. எனக்கு 2 மகள்கள் 1 மகன். கடந்த 4 வருடங்களாக வீட்டின் உள்ளேயே நடமாடுகிறேன். தாயும் தம்பிகளும் வீட்டு செலவுக்கு குழந்தைகள் படிப்பு கவனித்து கொள்கிறார்கள்.
மனைவி டியூஷன் எடுத்தும் மாமியார் விட்டில் கொஞ்சம் ஓடுகிறது. எனக்கு Ostero Arthiritis என்று டாக்டர் சொல்லுகிறார்கள். ஆபரேஷன் செய்தாலும் சக்சஸ் கம்மி தான். இது டாக்டரின் முடிவு. எனக்கு செலவு செய்ய பணம் இல்லை. நிறைய சித்தா ஆயுர்வேதம் அக்கு பஞ்சர் செய்தும் தாற்காலிக நிவாரணம் கிடைக்கிறது. எனக்காக தங்கள் பிரார்த்தனை செய்யவும். நோயும் கடனும் தீரவும் கடவுள் வழி தர வேண்டும்.
என்றும் நன்றியுடன்,
சங்கர நாராயணன்,
திரு.வி.க நகர், சென்னை
==========================================================
Vision to be restored for my child!
Dear Sir,
My son Master R.K Tarun Teja is suffering from Vision problem in his left eye. He is just 2 years and 11 months old and there was a two kind of surgery been done at a time for his left eye.
Doctors had suggested a contact lens to improve his vision. But to start with medication itself, my son is not able to view anything from his left eye.
I hope this eye problem can get cured with the Prayers only. I request your sincere attention towards my sons eye problem during your prayer.
Also need your guidance to us as well. If we need to follow certain prayers or formalities, kindly request your kind self to guide us.
Thanks & Regards
R Ragunath,
Bangalore
==========================================================
பொது பிரார்த்தனை
உணவு குழாய் இல்லாமல் சிறுவன் அவதி – பால் மட்டுமே குடித்து உயிர் வாழும் பரிதாபம்!
உணவு குழாய் இல்லாமல் 10 வருடமாக சிரமப்படும் சிறுவன், பால் மட்டுமே குடித்து உயிர் வாழ்கிறான். உதவி கேட்டு கலெக்டரை நாடியுள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் வசந்தகுமார்(35). டீ மாஸ்டர். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். 2வது மகன் அபினேஷ்(12)க்கு ஒருபக்கம் காது கிடையாது, வாயை திறக்க முடியாது, பேச்சும் வராது. அத்துடன் உணவுக்குழாய் இல்லை. இதனால் சிறுவன், தண்ணீரையும் பாலையும் குடித்து 12 ஆண்டுகாலமாக உயிர்வாழ்ந்து வருகிறான். தினமும் 5 லிட்டர் பால் சாப்பிடுவதால் 300 ரூபாய் செலவாகிறது. டீ மாஸ்டர் வேலை செய்து மூன்று பிள்ளைகள், மனைவி குழந்தைகளை காப்பாற்ற முடியாமல் வசந்தகுமார் சிரமப்பட்டு வருகிறார்.
சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் சொந்தமாக பால்பூத் அமைக்க பெரியமாம்பட்டு கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் கடன் கேட்டு வசந்தகுமார் விண்ணப்பித்திருந்தார். ஆனால் இந்த செய்தியை நாம் கேள்விப்படும்வரை உதவி கிடைக்கவில்லை.
தனது மகனுடன் வசந்தகுமார், விழுப்புரம் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், ‘‘மாற்றுத்திறனாளிகள் பாதுகாவலர் கடன் வழங்கும் திட்டத்தில் ரூ.50 ஆயிரம் கடன் வழங்க வேண்டும்‘ என தெரிவித்திருந்தார். பின்னர் வசந்தகுமார் கூறுகையில், ‘‘ பிறவியிலேயே பல குறைபாடுகளுடன் பிறந்த மகனை பல டாக்டர்களிடம் க காண்பித்தேன். ஆனால் அவனது நோயை குணப்படுத்த முடியவில்லை. இதற்கான சிகிச்சையும் இல்லை என்கிறார்கள். உணவு சாப்பிட்டால்தான் அறுவை சிகிச்சை செய்யமுடியும். ஆனால் பாலும், தண்ணீரும் குடித்துவருவதால் உடலில் போதிய சத்து இல்லை‘‘ என்றார்.
அரசு யார் யாருக்கோ நிவாரண உதவி வழங்குகிறது. இவர் கேட்பதோ கடன் தான். அதுவும் நியாயமான காரணத்துக்காக கேட்கிறார். இவருக்கு கடன் விரைவில் கிடைக்கவேண்டும். சிறுவன் அபிநேஷக்கு ஏற்பட்டுள்ள கோளாறு நீங்கி, அவன் மற்றவர்களை போல எந்த பிரச்னையும் இல்லாமல் வாழவேண்டும். இதுவே நம் பொது பிரார்த்தனை.
==========================================================
திரு.வி.க. நகரை சேர்ந்த திரு.சங்கர நாயராநயன் அவர்களின் பிரச்சனைகள் யாவும் தீர்ந்து, நோய் நொடி நீங்க, தேக ஆரோக்கியம் கிட்டி, அவர் குடும்பத்தினருடன் சௌக்கியமாக சந்தோஷமாக இருக்கவும், ஒரு கண்ணில் பார்வை பறிபோய் தவிக்கும் ரகுநாத் அவர்களின் மகன் குழந்தை தருண் தேஜாவுக்கு பார்வை மீண்டும் கிடைக்கவும், அவன் பெற்றோர் அகமகிழ்வும், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வசந்தகுமார் அவர்களின் மகன் அபிநேஷ்க்கு ஏற்பட்டுள்ள விசித்திரமான உடல் பாதிப்பு சரியாகி அவன் குடும்பத்தினர் கவலையின்றி இருக்கவும், அவர்கள் அரசிடம் வின்னபித்துள்ள கடனானது விரைந்து கிடைக்கவும் இறைவனை வேண்டுகிறோம்.
இந்த பிரார்த்தனைக்கு தலைமை ஏற்றுள்ள கோகிலா அவர்கள் தனது குடும்பத்தினருடன் பல்லாண்டு காலம் இன்புற்று வாழவும், அவர் தம் இல்லறம் சிறக்கவும், எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.
கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.
நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!
பிரார்த்தனை நாள் : பிப்ரவரி 28, 2016 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
==========================================================
கடன் பிரச்னைகளில் தவிப்பவர்கள் கவனத்திற்கு…
அடுத்த பிரார்த்தனை கடன் பிரச்னைகளில் சிக்கி தவிப்பவர்களுக்கு அளிக்கப்படவிருக்கிறது. அந்த பிரார்த்தனைக்கு திருச்சேறை ஸ்ரீ ருண விமோசன லிங்கேஸ்வரர் கோவில் குருக்கள் திரு.சுந்தரமூர்த்தி குருக்கள் தலைமை ஏற்கவுள்ளார். எனவே கடன் பிரச்னைகளால் இன்னல்படுபவர்கள் தங்கள் பிரார்த்தனைகளையும் இறுதியில் அவரவர் அலைபேசி எண், பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் ஆகியவற்றை அவசியம் குறிப்பிட்டு நமக்கு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பிரார்த்தனை கோரிக்கை மட்டும் அவரவர் பெயர் மற்றும் ஊருடன் தளத்தில் அளிக்கப்படும். பெயர், ராசி, நட்சத்திரம் அர்ச்சனை செய்ய பயன்படும். ராசி, நட்சத்திர விபரங்கள் தளத்தில் வெளியிடப்படாது!
சந்தேகங்களுக்கு நம்மை அலைபேசியில் தொடர்புகொள்ளவும். பெயரோ ஊரோ வெளியிட விரும்பவில்லை என்றால் அதையும் குறிப்பிட்டு அனுப்பவும். அவர்கள் பெயர்கள் இல்லாமல் பிரார்த்தனை வெளியிடப்படும்.
முக்கியமான ஒரு விஷயம் : மேற்படி பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்புபவர்கள், “இனி நான் கடன் வாங்கமாட்டேன். சுப செலவுகள் (அதுவும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே) மற்றும் எதிர்பாராத தவிர்க்க இயலாத விஷயங்கள் தவிர வேறு எதற்கும் கடன் வாங்கமாட்டேன். ஆடம்பர செலவுகள் செய்யமாட்டேன். வருவாய்க்கு ஏற்றபடி சிக்கனமாக குடும்பம் நடத்துவேன். ஒவ்வொரு ரூபாயின் அருமை உணர்ந்தே செலவு செய்வேன்!” என்று ஒரு சங்கல்பம் செய்துகொண்டு பிறகு பிரார்த்தனையை அனுப்பவும். இல்லையெனில் ஓட்டைப் பாத்திரத்தில் நீர் நிரப்புவது போலத் தான்.
For more details please check : கடன் பிரச்னைகளில் தவிப்பவர்கள் கவனத்திற்கு…
==========================================================
பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:
உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.
==========================================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
==========================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E : editor@rightmantra.com | M : 9840169215 | W:www.rightmantra.com
==========================================================
பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131
==========================================================
சென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் அர்ச்சகர் திரு.நாகராஜ குருக்கள்
சென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது?
சென்ற பிரார்த்தனை கிளப் பிரார்த்தனையை வழக்கறுத்தீஸ்வரர் கோவில் குருக்கள் திரு.நாகராஜா குருக்கள் வழக்கறுத்தீஸ்வரர் சன்னதியில் தனது கடும் அலுவல்களுக்கு இடையே நடத்தித் தந்தார். முதல்வாரம் எதிர்பாராத விதமாக நமது வாசகி திருமதி.தாமரை வெங்கட் அவர்களே நேரில் காஞ்சி சென்று பிரார்த்தனை நேரமான ஞாயிறு மாலை 5.30 – 5.45 அங்கே இருந்து அனைவருக்காகவும் பெயர், ராசி கூறி சங்கல்பம் செய்து பிரார்த்தித்தார். அடுத்த வாரம் திரு.நாகராஜா குருக்களை நாம் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. எனவே வாசகர்களின் பெயர், ராசி பட்டியலை சுவாமியிடம் வைத்தாலே போதுமானது என்று கூறினோம். அனைத்தும் நல்லபடியாக முடிந்தது. இனியும் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வாருங்கள். அனைவருக்கும் நல்ல செய்தி வரும்.
நேரடியாக வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கே சென்ற தாமரை வெங்கட் அவர்களுக்கும் தலைமேற்று பிரார்த்தித்த திரு.நாகராஜ குருக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
==========================================================
[END]